Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கல்யாணமாலை
கல்யாணமாலை
கல்யாணமாலை
Ebook112 pages39 minutes

கல்யாணமாலை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“ஸ்ருதி குட்டி பாட்டிகிட்டே வாடா செல்லம். நான் உனக்கு டிரஸ் பண்ணி விடறேன்.”
“மாட்டேன். போ பாட்டி... டாடி தான் எனக்கு கவுன் போடணும்.”
ஜட்டியுடன் நிற்கும் நான்கு வயது பேத்தியை இழுத்து அணைக்கிறாள் தேவகி
“டிபன் ரெடியாச்சா செல்லம்மா?”
டைனிங் ரூமிற்கு வருகிறான் மதன்.
“சாம்பார், பொங்கல் டேபிளில் இருக்கு. சூடா தோசை இரண்டு ஊத்தட்டுமா தம்பி?”
“வேண்டாம், இதுவே போதும். அம்மாவும், ஸ்ருதியும் எங்கே?”
“மாடியில் இருக்காங்க, கூப்பிடட்டுமா?”
“இல்லை. நானே போறேன். நீங்க தட்டை எடுத்து வைங்க.”
நாலு நாலு படியாக தாவி ஏறுகிறான்.
“ஏய்... குட்டிம்மா. என்ன இது ஜட்டியோடு... ஷேம்... ஷேம்... டிரஸ் போடலையா செல்லம்.”
மகளை தூக்கி முத்தமிட,
“அதை ஏன் கேட்கிற மதன், இன்னைக்கு என்னமோ எல்லா வேலையும் டாடி தான் செய்யணும்னு அடம். இன்னும் டிபன் சாப்பிடலை.”
“அப்படியா... நோ... ப்ராப்ளம். என் குட்டிம்மாவிற்கு எல்லாம் நானே செய்யறேன்.”
அம்மாவிடமிருந்த கவுனை வாங்கி மகளுக்கு போடுகிறான்.என் தங்கம்... குட்டி தேவதை மாதிரி எவ்வளவு அழகா இருக்கா. டாடியோடு டிபன் சாப்பிட வர்றியா குட்டிம்மா?”
மகளை தூக்கி கொண்டவன்,
“அம்மா நீயும் வாயேன், சாப்பிடலாம்.” அழைக்க,
“இல்லப்பா. நீங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க. நான் இன்னும் குளிக்கலை. குளிச்சுட்டு, சாமி கும்பிட்டுட்டு வரேன். எனக்கென்ன அவசரம்.’’
மகளுடன் படி இறங்குகிறான் மதன். கம்யூட்டர் இஞ்சினியராக வேலை பார்க்கும் மதன், அவனுடன் வேலை பார்க்கும் ரேவதியை காதலிக்கிறான் என்று தெரிந்ததும்... மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டினாள் தேவகி...
“உன் மனசுக்கு பிடிச்சிருக்கு. காலம் பூரா சேர்ந்து வாழப் போறவங்க நீங்க. இதிலே நான் சொல்ல என்னப்பா இருக்கு.
என் வேலையை சுலபமாக்கிட்டே... என் மருமகளை நீயே செலக்ட் பண்ணிட்டே. எனக்கு பூரண சம்மதம் மதன். நானே அவளோட அம்மா, அப்பாவை பார்த்து பேசறேன்.”
கல்யாணம் சிறப்பாக நடந்தது. எந்த குறையுமில்லாத நிம்மதியான வாழ்க்கை. கல்யாணமான அடுத்த வருஷமே பேத்தி பிறக்க, தேவகியின் மனதில் நிறைவு.
அத்தை, என் ப்ரெண்டு கல்யாணம் அடுத்த வாரம் தென்காசியில் நடக்குது... நாங்க ப்ரெண்ட்ஸ் நாலைஞ்சு பேர் ஒண்ணாசேர்ந்து போகலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். மதன் ஓ.கே. சொல்லிட்டாரு. இரண்டு நாள் தான் உங்க பேத்தியை உங்களால் சமாளிக்க முடியும் தானே... போய்ட்டு வர்றோம் அத்தை.”
“என்ன ரேவதி...! கைபிள்ளையை விட்டுட்டு போறேன்னு சொல்ற... உன்னை தேடினா... என்ன செய்யறது...?”
“நான் இல்லாமல் கூட உங்க பேத்தி இருந்துடுவா... அவளுக்கு நீங்க தான் வேணும். மதனும், நீங்களும் இருக்கீங்க...ப்ளீஸ் அத்தை போய்ட்டு வரேன்... குற்றாலத்தில் அருவியில் குளிச்சு, என்ஜாய் பண்ணிட்டு வரேன்...”சிறு குழந்தைபோல கெஞ்சும் மருமகளை புன்னகையுடன் பார்த்தாள் தேவகி.
பேத்தியை தூக்கியபடி, மருமகளுக்கு கையசைத்து விடை கொடுத்தவள். ஒரேடியாக ரேவதி விடை பெற்றுப் போகிறாள் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.
கல்யாணம் முடிந்து சிநேகிதிகளுடன் அருவியில் குளிக்க சென்றவள், வழுக்கி விழுந்து, பின் மண்டையில் பலத்த அடியோடு... உலகத்தை விட்டே பிரிந்து விட்டாள்.
இடியாய் வந்த செய்தி. நிலைகுலைந்து போனாள் தேவகி. மதனின் நிலையோ அதற்கும் மேல். கையில் ஒரு வயது குழந்தை. காதல் மனைவி போய்விட்டாள். என்ன செய்யப் போகிறேன். எப்படி வாழ்க்கையை தொடரப் போகிறேன். துடித்தான், துவண்டான்...
மகளின் முகம் பார்த்து மனம் தேறினான். தேவகியும் தன் துக்கத்தை மறந்து, மகனுக்கு ஆதரவாக இருந்தாள்.
இனி வாழ்க்கையில் எல்லாமே ஸ்ருதி தான். அவளுக்காக வாழ வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டான்.
நாட்களும், மாதங்களும் நகர, இதோ நான்கு வயது மகளாக ஸ்ருதி... வாழ்க்கை பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
கல்யாணமாலை

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to கல்யாணமாலை

Related ebooks

Reviews for கல்யாணமாலை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கல்யாணமாலை - பரிமளா ராஜேந்திரன்

    1

    சில்லென்ற பனிக் காற்று வீசும் விடியற்காலை பொழுது. குளிரில் உடல் லேசாக நடுங்கியது.

    புடவையை இழுத்துப் போர்த்தி அருகில் நடந்து வரும் அம்மாவை பார்த்தாள் மதுமதி.

    வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிக்காதவள். குடும்பத்திற்காகவே உழைப்பவள்.

    எந்த வருத்தத்தையும் முகத்தில் வெளிப்படுத்தாமல், தன்னம்பிக்கையுடன் ஆறுதல் சொல்பவள்.

    எதற்குமே அசைந்து கொடுக்காத அம்மாவை... இதோ என் வாழ்க்கை அசைத்துப் பார்க்கிறது.

    வயது இருபத்தாறை தொடப் போகிறது. கல்யாண சந்தையில் விலை போகாமல் கன்னியாக நிற்கிறேன்.

    அழகில் குறையா... இல்லை... படிப்பு... அதவும் ஒரு டிகிரி கையில் இருக்கிறது.

    அம்மாவின் வருமானத்தில் வாழும் குடும்பம். அப்பா என்ற பெயரில் ஒரு மகாராசன் இருக்கிறார்.

    உங்க மகளுக்கு செவ்வாய் தோஷம். கடுமையாக இருக்கு. ஜாதகத்தை கையில் எடுக்கிறவங்க எல்லாரும் வேண்டாம்னு சொல்றாங்க. நான் என்னம்மா செய்யறது பார்ப்போம். இவளுக்கென்று ஒருத்தன் வராமலா போவான்.

    ஜோசியரின் வார்த்தைகள். இந்த நிமிஷம் வரை வரவில்லை. கோவில் கோவிலாக பிரார்த்தனைகள். வேண்டுதல்கள். மாதங்களும், வருடங்களும் விடைபெற... வயது ஏறிக் கொண்டே போகிறது.

    மது, என்ன யோசனை... போய்கிட்டே இருக்கே... கோவில் வந்தாச்சு.

    அம்மாவுடன் திரும்பி இறக்கத்தில் நடக்கிறாள். சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம். ஆலயத்திலிருந்து இனிமையான பாடல் ஒலித்தது.

    "நமசிவாய, நமசிவாய ஓம் நமசிவாய

    அண்ணாமலையே போற்றி. சிவ ஓம் நமசிவாய"

    எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி. மதுமதியிடம் கொடுக்கிறாள். வாங்கியவள்,

    சாறை பிழிந்து, கைகளால் தரையில் மெழுகி, கோலமிட்டு, சந்தனம் குங்குமம் வைத்து, எலுமிச்சை தோலில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுகிறாள்.

    அர்ச்சனை கூடையை குருக்களிடம் தந்தவள்,

    மதுமதி சிம்மராசி, மகம் நட்சத்திரம் என்றாள்.

    ஈஸ்வரனுக்கு அர்ச்சனை நடக்க

    கண்மூடி பிரார்த்திக்கிறார்கள்.

    கடவுளே என் மகளுக்கு நல்ல வழிகாட்டு. என் வாழ்க்கை தான் போராட்டமாக அமைந்துவிட்டது. அவளுக்காவது நல்ல கணவனை கொடு...

    அம்மாவுக்கு என் மூலமாவது ஒரு விடியலை காட்டு இறைவா. இருவர் மனமும், கடவுளிடம் பிர்த்திக்கிறது.

    முன்புறம் இருக்கும் சிறிய இடத்தில் பவளமல்லிக் கொடி, செம்பருத்தி, முல்லை என பூச்செடிகள்.

    அழகாக மலர்ந்து ரம்மியமான நறுமணத்தை காற்றில் பரப்ப, கேட்டை திறந்து இருவரும் உள்ளே வருகிறார்கள்.

    பொழுது விடியறதுக்குள் இரண்டு பேரும் அலங்காரம் பண்ணிக்கிட்டு நகர்வலம் கிளம்பியாச்சா... இப்படி கோவில், கோவிலாக போய் சாமி கும்பிட்டு என்ன பிரயோசனம். மாப்பிள்ளைங்க வரிசை கட்டி வந்து நிற்கிறாங்களா... நேரத்திதையும், பொழுதையும் வீணாக்கிகிட்டு... நடக்கிறது தான் நடக்கும்.

    எதிரில் நந்தி மாதிரி வழிமறித்து நின்று பேசும் கணவனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.

    உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணலையே... எதுக்கு காலையில் வாக்குவாதம். வழிவிடுங்க... எனக்கு வேலை இருக்கு. ஸ்கூலுக்கு கிளம்பணும்.

    அடடா... நீ போய் சொல்லிக் கொடுத்துதான் பசங்க உருப்படப் போகுது. பெத்த மகளையே உருப்பட வைக்க முடியலை.

    ஏளனமான சிரிப்புடன் ஒதுங்கி நிற்க, கணவனை தாண்டி உள்ளே போகிறாள் ஜெயா.

    அப்பா... காபி போட்டு குடிச்சீங்களா.

    அந்த அக்கறையெல்லாம் இருக்கா? குடிச்சேன், போய் சூடாக இன்னொரு காபி போட்டு எடுத்துட்டு வா.

    "சரிப்பா.’’

    ஜெயாவுக்கும், நாதனுக்கும் திருமணமாகும் போது... மாப்பிள்ளை ரைஸ் மில்லில் மானேஜராக இருப்பதாக சொல்லி தான் திருமணம் முடித்தார்கள்.

    கல்யாணமான பிறகு தான் ஜெயாவுக்கு தெரிந்தது. எந்த வேலையிலும் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு மேல் இருக்க மாட்டான் என்று.

    மில் ஓனர்ன்னா... பெரிய கொம்பா...? அவன்கிட்ட பணம் இருக்கு... அதுக்காக வேலை செய்யறவங்க அவன் அடிமையா...? கரெக்டா ஒன்பது மணிக்கெல்லாம் மில்லில் இருக்கணுமாம்... இவன் கொடுக்கிற சம்பளத்துக்கு இந்த அதிகாரம்... போடா நீயும் உன் வேலையும்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்.

    அதிர்ந்து போகிறாள் ஜெயா.

    என்ன முழிக்கிறே... இது இல்லாட்டி இன்னொரு வேலை. போய் சிக்கன் வாங்கிட்டு வந்து பிரியாணி பண்ணு. சாப்பிட்டு குட்டி தூக்கம் போடறேன்.

    பொறுப்பில்லாதவன்... இவனை நம்பி தான் இவள் வாழ்ககை பயணம் செல்லப் போகிறது.

    படித்த படிப்பு கைகொடுக்க, உள்ளூரிலேயே ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

    என்னங்க... தெரிஞ்சவங்க மூலம் சொல்லியிருந்தேன். ஸ்கூலில் டீச்சர் வேலை கிடைச்சிருக்கு. ஐந்தாவது படிக்கிற பிள்ளைகளுக்கு தமிழ் பாடம் சொல்லித் தரணும். நான் சம்பாதித்தால் குடும்பம் நடத்த சௌகரியமாக இருக்கும். என்ன சொல்றீங்க?

    மனைவியை முறைக்கிறான்.

    நான் கையாலாகாதவன்... குடும்பம் நடத்த வக்கில்லாதவன்னு நினைச்சியா...?

    "அப்படி இல்லைங்க... நாளைக்கு குழந்தை பிறந்தா... இரண்டு பேர் வருமானம் இருந்தா நல்லது தானே...?’’

    அப்படி சொல்றியா... சரி... வேலைக்கு போ... ஆனா ஒரு கண்டிஷன். வேலைக்கு போறேன்னு திமிர்தனமாக எனக்கு தெரியாம அதிக பிரசங்கித்தனமா எதுவும் செய்யக்கூடாது. வாங்கற சம்பளத்தை முழுசா அப்படியே என்கிட்டே தரணும் புரியுதா?

    தலையாட்டுகிறாள் ஜெயா.

    கையில் கணிசமாக பணம் கிடைக்க,

    எதற்கும் ஆசைபடாத ஜெயா... சிக்கனமாக குடும்பம் நடத்த...

    வீட்டில் உட்கார்ந்து கொண்டு கையில் பணத்தை வைத்து செலவழிப்பது சொர்க்கமாக தெரிய...

    தனக்கென்று பொறுப்பாக எந்த வேலையும் தேடாமல்... இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ளாமல் பொறுப்பற்றவனாக உலா வருகிறான் நாதன்.

    மதுமதி பிறக்க, மூச்சுவிட முடியாமல் இறுக்கமான சூழ்நிலையில் இருந்தவள், அதிலிருந்து மீள்கிறாள்.

    பேருக்கு கணவன் என்று பொறுப்பில்லாதவனாக நாதன் காலத்தை கடத்த, மகளுக்காகவே வாழத் தொடங்குகிறாள் ஜெயா.

    இதோ இன்று வரை வாழ்க்கையில் எந்த சுகத்தையும் காணாமல், கணவனையும் சகித்துக் கொண்டு, குடும்பப் பொறுப்பையும் ஏற்று... வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள்.

    "மதுமதி, நான் திவ்யா பேசறேன்."

    சொல்லு திவ்யா... எங்கிருந்து பேசற...?

    "அவர் டிரைனிங்ன்னு ஒரு வாரம் பெங்களூரு போயிருக்காரு.

    Enjoying the preview?
    Page 1 of 1