Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மலர்ந்த விழிகள்
மலர்ந்த விழிகள்
மலர்ந்த விழிகள்
Ebook90 pages30 minutes

மலர்ந்த விழிகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூவாந்தல் கிராமம். செழிப்பான பூமி என்று சொல்ல முடியாவிட்டாலும், பசுமை அழகுடன் காட்சியளித்தது. கிராமத்தில் மொத்தமே அறுபது குடும்பங்கள்தான் இருக்கும். அங்கிருப்பவர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்திருந்தார்கள். பூவாந்தல் கிராமத்துக்கு அடுத்திருப்பது சதுரமங்களம். அதுவும் இதை போலவே சிறிய கிராமம்தான்.
இரண்டு கிராமத்துக்கும் பொதுவாக நிமிர்ந்து நிற்கும் அந்த சிவன் கோயில்தான். பத்து வருடமாக இரு கிராமத்துக்கும் பகை வளர காரணமாக இருந்தது.
கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் ஜென்ம பகையாளியாக பார்த்தார்கள். பேச்சுவார்த்தை கிடையாது. அந்த கிராமத்தில் விற்பனையாகும் பாலை கூட, சதுரமங்களத்தினர் வாங்க மறுத்தார்கள். மூன்று வேளை பூஜையும், அபிஷேகமும் நடந்த சிவனுக்கு இன்று... எந்த பூஜையும் இல்லாமல், கோயில் கதவு இழுத்து பூட்டப்பட்டிருந்தது.
பத்து வருடம் முன் கோயில் திருவிழாவில், யார் பெரியவர் என்று ஏற்பட்ட மோதல்... ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளும் அளவுக்கு மூர்க்கமாக மாறியது.
“கோயிலுக்கு இடம் கொடுத்தது... எங்க கிராமத்தை சேர்ந்த பெரியவர், அவர் நிலத்தை கோயிலுக்கு விட்டு கொடுத்தாரு. அப்ப திருவிழாவில் முதல் மரியாதை, பரிவட்டம் கட்டறது, எங்க கிராமத்து பெரிய மனுஷருக்குதானே இருக்கணும். எங்க உரிமையை நாங்க விட்டுத் தர முடியாது” - சதுரமங்களத்தைச் சேர்ந்தவர்கள் சொல்ல...
“அதெப்படி... நிலத்தை கொடுத்தா சரியா போச்சா. அதில் பிரம்மாண்டமாக கோயில் கட்ட, தன் சொத்து, சுகத்தை வித்தது பூவாந்தல் கிராமத்தை சேர்ந்தவங்க. அதை மறந்துடாதீங்க. இந்த சிவனே... எங்களால்தான்இன்னைக்கு இந்த கர்ப்பகிருகத்தில் காட்சியளிக்கிறாரு. அதனால முதல் மரியாதை எங்களுக்குத்தான்” - பூவாந்தல் கிராமத்தினர் எதிர்முழக்கம் செய்ய...
பெரியவர்களின் காரசாரமான பேச்சுவார்த்தை, இளைஞர்களை கோபப்படுத்த... பொங்கலிட்டு திருவிழா கொண்டாட வந்த இரு கிராமத்து பெண்களும்... தடுமாறி நிற்க... கம்பு, அரிவாள் என்று ஒருவரையொருவர் வெட்டி கொள்ள, பால் பொங்கி வழிய வேண்டிய இடத்தில் இரத்தம் ஓடியது...
கிராமத்தில் போலீஸ் நுழைந்தது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த கலெக்டர் வர, யாருடைய பேச்சுவார்த்தையும் அவர்களிடம் எடுபடவில்லை.
வேறு வழியில்லாமல், உங்களுக்குள் ஒற்றுமையும், சமாதானமும் வரும்வரை இந்த கோயிலில் எந்த பூஜையும், புனஸ்காரமும் வேண்டாம்.
கோயில் கதவுகள் இழுத்து மூடப்பட்டது. திருவிழா, கொண்டாட்டம் எல்லாம் நின்றுபோக, இரு கிராமத்தினரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்ல... பகை வளர, பேச்சுவார்த்தை நின்று... விட்டு கொடுக்க மனமில்லாத மனிதர்களுக்கிடையே கடவுளும் மௌனமாகி போனார்.
பூவாந்தல் கிராமத்தில் லட்சுமியின் ஒரே மகளான சுபத்ரா... பத்தாவது படித்து... அருகில் இருந்த ஊரில் எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்தாள். அந்த ஊரைச் சேர்ந்த விஜயாவும் அங்கு வேலைக்கு வர... இருவருக்கும் இடையில் நட்பு பலப்பட்டது.
“சுபத்ரா இன்னைக்கு என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்கே?”
“தயிர்சாதம், ஊறுகாய்...”
“என்னடி இது... சவசவன்னு. எப்படி சாப்பிடுவே. இன்னைக்கு மதியம் என்னோடு வீட்டுக்கு வர்றியா?”
“வேண்டாம்பா. எங்கம்மா பாசத்தோடு கட்டிக் கொடுத்த சாப்பாடு வீணாக்கலாமா? சாதாரண விவசாய கூலியாக இருந்து, என்னை ஆளாக்கியிருக்காங்க. அப்பாவை இழந்த எனக்கு... எல்லாமுமாக இருக்கிறவங்க எங்கம்மா. அவங்க எது கொடுத்தாலும் அது எனக்கு அமுதம்தான்...”“அப்பாடா... ஒருவேளை வீட்டுக்கு சாப்பிடவான்னு கூப்பிட்டா, இவ்வளவு சொல்ற... சரி... சரி... நீ தயிர் சாதத்தையே சாப்பிடு...” விஜயா சிரிக்க...
அங்கு வருகிறான் திவாகர்.
மெடிக்கல் காலேஜில் படிப்பை முடித்து, ஹவுஸ் சர்ஜனாக இருப்பவன். சதுரமங்களம் கிராமத்தை சேர்ந்தவன். பார்ப்பவர் மனதில் இவன் அழகான இளைஞன் என்ற எண்ணம் தோன்றும்.
சிரிக்கும் கண்கள். அடர்ந்த தலை கேசத்தை கைகளால் அடிக்கடி கட்டுபடுத்துவான். சதுரமங்களம் கிராமத்தை பொறுத்தவரை, அங்கிருக்கும் இளம் பெண்களுக்கு அவன் ஒரு ஹீரோ. ஆனால் அவன் மனதோ... விழுந்து கிடப்பது... சுபத்ராவின் கடைக்கண் பார்வையில்...
அவளை பார்ப்பதற்கென்றே அந்த எஸ்.டி.டி. பூத்தை தேடி வருவான். அவள் மனதை புரிந்துகொண்ட சுபத்ராவும்... அவன் மேல் ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்கினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
மலர்ந்த விழிகள்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to மலர்ந்த விழிகள்

Related ebooks

Reviews for மலர்ந்த விழிகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மலர்ந்த விழிகள் - பரிமளா ராஜேந்திரன்

    1

    வெண்புகை கிளம்ப அருவி சோவென இரைச்சலுடன் ஆர்ப்பரித்து விழுகிறது. மேலிருந்து விழும்போது இருந்த ஆங்காரமும், கோபமும் குறைந்தது போல பூமியில் வந்தவுடன் நிதானமாக ஓடும் தண்ணீரை கண் இமைக்காமல் பார்த்தாள் சுபத்ரா. சில்லென்ற தண்ணீரின் குளுமை, சிதறலாய் மேலே பட உடல் சிலிர்த்தது. இரண்டு குழந்தைகளை தன் இரு கைகளில் பிடித்து, பாறைகளில் அடிபடாமல், லாவகமாக அழைத்து வரும் தாயை பார்த்தாள். மழலை மாறாமல் அந்த குழந்தைகள் அவளிடம் பேச, சந்தோஷத்துடன் பதிலளிக்கும் அவள் முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது. அதை பார்த்த சுபத்ராவின் முகம் வாடியது.

    அருகில் நின்ற விஜயா அவள் தோளை தொட்டாள்.

    சுபத்ரா நாலு நாள் உன் ஹஸ்பெண்ட் டாக்டர்ஸ் கான்பரன்ஸ் போயிருக்காருன்னு என்னை தேடி வந்தே. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிநேகிதி வந்த சந்தோஷம், உன்னோடு என் பொழுதுகள் நல்லாவே போகுது. ஆனா... நீ திடீர், திடீர்னு இப்படி மூட் அவுட் ஆகிறது சரியில்லை சுபத்ரா...

    பழைய நாட்கள்... நடந்த நிகழ்வுகள் எல்லாத்தையும் மறக்கணும்னுதான் நினைக்கிறேன். முடியலை விஜயா. மனசுக்குள் ஆறாத வடுவாக உறுத்திட்டுதான் இருக்கு

    கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கிறது.

    நீ ரொம்ப கொடுத்து வச்சவ சுபத்ரா. இல்லாட்டா... இரண்டு வருஷம் கழிச்சு உன்னை தேடி வந்து திவாகர், உன்னை அழைச்சுட்டு வந்திருப்பாரா... உன் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறின நிலையில், திரும்பவும் மலர்ச்சியை கொண்டு வந்தாரு. இப்ப நீ டாக்டரோட மனைவியாக, கௌரவமாக வாழ்ந்துட்டு இருக்கே. அதை நினைச்சு சந்தோஷப்படு...

    திவாகர் என் மேல் வச்ச காதல் உண்மையானதுன்னு நிருபிச்சுட்டாரு. ஆனா நான் அவருக்கு உரிமையானதை அவர்கிட்டே சேர்க்காம தொலைச்சுட்டு நிற்கிறேனே - குரல் உடைகிறது.

    சுபத்ரா... என்ன இது... பழைய விஷயங்களை மறக்க முயற்சி பண்ணு. நீ தனியா இருந்தா எதையாவது யோசிச்சுட்டு இருப்பேன்னுதான், திவாகர் இங்கே கொண்டு வந்து விட்டாரு.

    வா... கிளம்பலாம்.

    வீட்டுக்கு போயிட்டு, சீரடி பாபா கோயிலுக்கு போவோம். கலங்கின உன் மனசுக்கு அவர் ஆறுதல் கொடுப்பாரு...

    அமைதி ததும்பும் முகம். கண்களில் கருணை. ரோஜா மாலைகளுக்கிடையே, தன்னையே அருள்கூர்ந்து பார்க்கும் பாபாவை... விழிநீர் திரையிட பார்க்கிறாள்.

    பாபா... பெத்த மகளை தொலைச்சுட்டு நிக்கிற இந்த தாயைப் பாரு. இந்த உலகத்தில் என் மகள் எங்கேயோ இருக்கா... என் மகளை என்கிட்டே சேர்த்துவை பாபா... கருணை கடலான நீ, நிச்சயம் என் கவலைகளை தீர்ப்பேன்னு நம்பிக்கையோடு வாழ்ந்திட்டிருக்கேன்.

    அவர் காலடியில் விழுந்து வணங்குகிறாள்.

    கண்மூடி பாபாவின் முன் அமர்ந்தவளின் மனது... கடந்த காலத்தை நோக்கி செல்கிறது...

    2

    பூவாந்தல் கிராமம். செழிப்பான பூமி என்று சொல்ல முடியாவிட்டாலும், பசுமை அழகுடன் காட்சியளித்தது. கிராமத்தில் மொத்தமே அறுபது குடும்பங்கள்தான் இருக்கும். அங்கிருப்பவர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்திருந்தார்கள். பூவாந்தல் கிராமத்துக்கு அடுத்திருப்பது சதுரமங்களம். அதுவும் இதை போலவே சிறிய கிராமம்தான்.

    இரண்டு கிராமத்துக்கும் பொதுவாக நிமிர்ந்து நிற்கும் அந்த சிவன் கோயில்தான். பத்து வருடமாக இரு கிராமத்துக்கும் பகை வளர காரணமாக இருந்தது.

    கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் ஜென்ம பகையாளியாக பார்த்தார்கள். பேச்சுவார்த்தை கிடையாது. அந்த கிராமத்தில் விற்பனையாகும் பாலை கூட, சதுரமங்களத்தினர் வாங்க மறுத்தார்கள். மூன்று வேளை பூஜையும், அபிஷேகமும் நடந்த சிவனுக்கு இன்று... எந்த பூஜையும் இல்லாமல், கோயில் கதவு இழுத்து பூட்டப்பட்டிருந்தது.

    பத்து வருடம் முன் கோயில் திருவிழாவில், யார் பெரியவர் என்று ஏற்பட்ட மோதல்... ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளும் அளவுக்கு மூர்க்கமாக மாறியது.

    கோயிலுக்கு இடம் கொடுத்தது... எங்க கிராமத்தை சேர்ந்த பெரியவர், அவர் நிலத்தை கோயிலுக்கு விட்டு கொடுத்தாரு. அப்ப திருவிழாவில் முதல் மரியாதை, பரிவட்டம் கட்டறது, எங்க கிராமத்து பெரிய மனுஷருக்குதானே இருக்கணும். எங்க உரிமையை நாங்க விட்டுத் தர முடியாது - சதுரமங்களத்தைச் சேர்ந்தவர்கள் சொல்ல...

    அதெப்படி... நிலத்தை கொடுத்தா சரியா போச்சா. அதில் பிரம்மாண்டமாக கோயில் கட்ட, தன் சொத்து, சுகத்தை வித்தது பூவாந்தல் கிராமத்தை சேர்ந்தவங்க. அதை மறந்துடாதீங்க. இந்த சிவனே... எங்களால்தான் இன்னைக்கு இந்த கர்ப்பகிருகத்தில் காட்சியளிக்கிறாரு. அதனால முதல் மரியாதை எங்களுக்குத்தான் - பூவாந்தல் கிராமத்தினர் எதிர்முழக்கம் செய்ய...

    பெரியவர்களின் காரசாரமான பேச்சுவார்த்தை, இளைஞர்களை கோபப்படுத்த...

    Enjoying the preview?
    Page 1 of 1