Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மகரந்த மலர்கள்
மகரந்த மலர்கள்
மகரந்த மலர்கள்
Ebook91 pages30 minutes

மகரந்த மலர்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கீழ்வானில் சூரியன் மெல்ல உதயமாக...
“பலமே, அம்பலமே
பொன்னம்பழ சிவமே... சிவமே...”
சிவன் கோவிலில் போடும் பாட்டு, கிராமத்தின் எல்லா வீதிகளிலும் கேட்கிறது.
தூக்கம் கலைந்த வேதா, மெல்ல எழுந்து வந்து வாசலில் நின்று- கோபுரத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறாள்.
“சிவபெருமானே... உன் அருளால இன்றைய பொழுது நல்லவிதமா போகணும். உலகத்து ஜனங்க எல்லாரும் நிம்மதியா இருக்கணும்.”
“என்ன வேதா... எழுந்தாச்சா?”
“.....”
“எழுந்தாச்சா வேதா...?”
வாசலுக்கு வருகிறார் சபாபதி.
“நாலு மணிக்கே முழிப்பு வந்துடுச்சு. விடியட்டுமேன்னு படுத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கந்தன் வந்துடுவான். பால் கறக்கட்டும். காப்பி போட்டுத் தரேன்.”
“ஒண்ணும் அவசரமில்லை. நான் காலார சித்த நேரம் நடந்துட்டு வரேன். ஆற்றங்கரை காத்தை சுவாசிச்ச மாதிரியும் இருக்கும்.”
கால்களை செருப்பில் நுழைத்துக்கொண்டு, தெருவில் இறங்கி நடக்கும் கணவரைப் பார்க்கிறாள்வயது எண்பதை நெருங்குகிறது என்று சொன்னால், யாரும் சத்தியமாக நம்ப மாட்டார்கள். வயல் வெளியில் உழைத்து உரமேறிய உடம்பு. கம்பும், கேப்பையுமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த தேகம்.
இன்று வரை மகிழ்ச்சி குறையாமல்தான் இருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மனம் நிறைகிறது வேதாவுக்கு.
“பெரியம்மா... என்ன யோசனை?”
எதிரில் கந்தன்.
“வா... வா... உன்னைத்தான் எதிர்பார்த்தேன். உனக்காக மங்களம் காத்திருக்கு. போய் பால் கறந்துட்டு வா.”
பசு மாட்டுக்கு அவர்கள் வைத்த பெயர் மங்களம்.
“குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா.”
‘அவருடைய செல்போன் அல்லவா பாடுகிறது. யாராக இருக்கும்...?’- பச்சைப் பொத்தானை அழுத்தியவள்,
“ஹலோ... யாரது... நான்தான் வேதா பேசறேன். அவரு வெளியே போயிருக்காரு” என்றாள்.
எதிர்முனையில் சிரிப்பொலி கேட்க,
“அம்மா, நான் மாது... மாதவன் பேசறேன்.”
“மாது... நீதானா? நான் யாரோன்னு நினைச்சேன். எப்படிப்பா இருக்கிறீங்க? என் மருமகள், பேரன், பேத்தி எப்படி இருக்காங்க?”
“ம்... எல்லோரும் நல்லா இருக்கோம். உன் பேரன் பரணி, கோயம்புத்தூரில் பாங்கியில் ஆபீசர். அவனுக்கென்ன குறை...? பேத்தி சஹானாவுக்கு இது கடைசி வருஷம். படிப்பை முடிக்கப்போறா. மருமகள் கவிதா, கவிதையாய் வாழ்ந்துட்டு இருக்கா...”
“அறுபது வயசு நெருங்கப்போகுது. உனக்கு இன்னும் கிண்டலும், கேலியும் குறையலையே.”“முகத்தை உம்முன்னு வச்சுட்டிருந்தா வாழ்க்கையின் சுவாரசியமே போயிடும்மா. அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு வாங்கிட்டேன். உன் மருமகளுக்கு அடுப்படி வேலையில் இருந்து, தோட்ட வேலை வரைக்கும் உதவி செய்துட்டு பொழுதைக் ஓட்டிட்டு இருக்கேன்.”
“அப்படிதாம்ப்பா இருக்கணும். என் மருமக சொக்கத் தங்கம். அருமையா குடித்தனம் நடத்திட்டு இருக்கா.”
“மருமகளை இந்த அளவுக்கு தலையில் தூக்கி வச்சு புகழ்றீங்க ஆனா, இங்கே வந்து எங்களோடு இருங்கன்னு கூப்பிடுறோம். கிராமத்தைவிட்டு நகரமாட்டேங்கிறீங்களே...?”
“நாங்க வாழ்ந்த கிராமம். விட்டுட்டு வர மனசு வரலைப்பா அதுவுமில்லாம... உடம்பு ஆரோக்கியத்தோடு நல்லாவே இருக்கு... அப்புறம் என்னப்பா? நீயும், கவிதாவும் வந்து பார்த்துட்டுப் போறீங்க. நான் வராட்டியும், உன் அப்பா மாசம் ஒரு தடவை உங்களைப் பார்க்க பட்டணம் வந்துடுறாரு.
தூக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு பலகாரமும், தேவையான பொருட்களையும் வாங்கி அனுப்பிடறா மருமக கவிதா.
இந்த அன்பு பரிமாற்றம் வற்றாத ஜீவநதியா பெருகிப் பாய்கிற வரை எங்களுக்கு தனியா இருக்கிற உணர்வே இல்லைப்பா.”
“சரிம்மா! நீங்க வரவேண்டாம். சஹானாவுக்கும், பரணிக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டு... நானும், கவிதாவும் கிராமத்துக்கு வந்துடுறோம்.”
“ரொம்ப நல்லது. அதைச் செய்யுங்க. நானும், என் மருகளும் சந்தோஷமா இருக்கோம்.”
“கவிதா... அம்மா பேசுறாங்க”- குரல் கொடுக்கிறான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
மகரந்த மலர்கள்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to மகரந்த மலர்கள்

Related ebooks

Reviews for மகரந்த மலர்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மகரந்த மலர்கள் - பரிமளா ராஜேந்திரன்

    1

    அழகிப் போட்டி. அரங்கமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகள் விதம் விதமாக தங்களை அலங்கரித்து காத்திருக்க...

    நட்சத்திர கூட்டத்துக்கு இடையே பளிச்சிடும் நிலவு போல ஜொலித்தாள் லயா.

    எல்லா போட்டிகளும் நடந்து முடிய... முடிவுகள் அறிவிக்க மேடையேறினர் நீதிபதிகள்.

    இந்த பிரபஞ்சத்தின் அழகியாக ‘மிஸ்’ லயா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஆயிரம் கோடி பூக்களால் அர்ச்சித்தது போல உடல் சிலிர்த்துப் போகிறாள் அவள்.

    ‘என் அழகு... விலை மதிக்க முடியாதது.

    நான் இந்தப் பிரபஞ்சத்தின் தேவதையாக வாழப் பிறந்தவள்.’

    பெருமை பொங்கி வழிகிறது.

    ‘லயா... உன் அழகுக்கு பொருத்தமானவனை எப்படி தேட போறே?’

    வருவான் அந்த ராஜகுமாரன்... ஆயிரம் பணிப் பெண்கள் என் காலடியில் காத்திருக்க ரத்தினமும், வைரமும், வைடூரியமும் சூடி என் கை பிடிக்க வருவான்.

    இதழ்களில் புன்னகை மந்தகாசமாக விரிகிறது.

    லயா, பொழுது விடிஞ்சு எவ்வளவு நேரமாகுது? படிப்பு முடிஞ்சா என்ன... காலையில் எழுந்து கூடமாட வேலை செய்யக்கூடாதா... நாளைக்கு கல்யாணமாகி இன்னொருத்தன் வீட்டுக்கு போறவ... இப்படியா தூங்கறது?

    மகள் போர்த்தியிருந்த போர்வையை லட்சுமி இழுக்க,

    என்னம்மா... எவ்வளவு நல்ல கனவு. இப்படி எழுப்பி விட்டுட்டியே...!

    மணி எட்டாச்சு. போய் பல் தேய்ச்சுட்டு வா.

    சோம்பல் முறித்தவளாக எழுந்து படுக்கையில் உட்கார்கிறாள்.

    எதிரில் தெரியும் கண்ணாடியில் பார்க்கிறாள்.

    ‘உண்மையில் நான் பேரழகிதான்.

    கனவில் சொன்னதுபோல, எனக்கு கணவனாக ராஜகுமாரனே வந்தால் எப்படி இருக்கும்?

    ‘சாரட்’ பூட்டிய வண்டியில் வருவானா...?’

    வெட்கம் பொங்கி வர, வாய்விட்டு சிரிக்கிறாள்.

    லயாவின் அறையில் எட்டிப் பார்த்த தினகர்,

    அக்கா... உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுடுச்சா...? காலையிலேயே தலையை விரிச்சு போட்டுக்கிட்டு சிரிச்சுட்டு உட்கார்ந்திருக்கே?

    போடா... நீதான் பைத்தியம். பிளஸ் 2 பரீட்சை வரப்போகுது. படிக்கிற வழியைப் பாரு.

    எல்லாம் எங்களுக்குத் தெரியும்.

    மார்க்’ வரும்போது, உன் லட்சணம் தெரியத்தான் போகுது.

    நீ ‘டிகிரி’ முடிச்சிட்டேன்னு ரொம்பதான் அலட்டாதே! உனக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. போற இடத்துல குனிய வச்சு, முதுகில் அம்மிக் குழவியைத் தூக்கி வைக்கப் போறாங்க. நல்லா ‘பெண்டு’ நிமிர்ற மாதிரி பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்ப்போம்.

    அட போடா... மடையா. நான் மகாராணி மாதிரி வாழப் பிறந்தவ. இதைவிட இன்னும் செல்வாக்கா வாழ்வேன்.

    அடடா... இப்பவே கச்சேரி ஆரம்பமாயிடுச்சா? ஏன் இப்படி வாயாடுறீங்க. அவர் பிஸினஸ், பிஸினஸ்னு மாசத்துல இருபது நாள் வெளியூர் போயிடறாரு. உங்களை வச்சு கட்டி மேய்க்க முடியலையே...

    அடுப்படியில் இருந்து குரல் கொடுத்த அம்மா,

    லயா... எழுந்து வா. தினகர் நீ போய்க் குளிடா... ஸ்கூலுக்கு நேரமாயிடப் போகுது... என்றாள்.

    நட்சத்திர ஓட்டலில் ‘குளு குளு’ அறையில் சாப்பாட்டு மேசை முன் அமர்ந்திருந்தார்கள்.

    உன் ‘பிஸினஸ்’ எப்படி போயிட்டிருக்கு குரு?

    ‘ராயல் புரமோட்டர்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பண்ணிக்கொண்டிருந்த குரு, கேள்வி கேட்கும் ராஜனைப் பார்த்தான்.

    உனக்கென்னப்பா... ஏற்றுமதி தொழில்ல கொடிகட்டிப் பறக்கிறே! மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்னு பறந்துட்டு இருக்கே. நான்... போட்டதைப் பிடிக்க நாயாக அலையறேன்.

    உண்மையைச் சொல்லமாட்டியே! லாபம் வராமலா அலையறே? அது சரி, வரன் விஷயமாக சொல்லி இருந்தேனே... விசாரிச்சியா?

    உன் மகள் லயாவுக்குத்தானே! என் மாமனார்கிட்டே சொல்லி வச்சிருக்கேன். ரெண்டு, மூணு இடம் நல்லதா இருக்கு. இன்னும் ஒரு வாரத்தில் முழு விபரத்தோடு வந்து பார்க்கிறேன்னு சொன்னாரு.

    செல்லமா வளர்ந்த பொண்ணு. பொருத்தமான இடம் நல்லதா இருக்கணும்னுதான் இப்படி தெரிஞ்சவங்க மூலமா வரன் தேடறேன்.

    கவலைப்படாதே! நல்லதா அமையும். உன் மகளுக்கு என்ன குறைச்சல்? ரதி மாதிரி அழகா இருக்கா. நீயும் குறைவில்லாமல் சீர் செனத்தி செய்வே. நிச்சயம் நல்ல மாப்பிள்ளை அமையும்.

    உன் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்.

    சரி, ‘ஆர்டர்’ பண்ணின மசால் தோசை ஆறுது. சாப்பிடு.

    சாப்பிடத் தொடங்குகிறார்கள்.

    2

    விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கீழ்வானில் சூரியன் மெல்ல உதயமாக...

    "பலமே, அம்பலமே

    பொன்னம்பழ சிவமே... சிவமே..."

    சிவன் கோவிலில் போடும் பாட்டு, கிராமத்தின் எல்லா வீதிகளிலும் கேட்கிறது.

    தூக்கம் கலைந்த வேதா, மெல்ல எழுந்து வந்து வாசலில் நின்று- கோபுரத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

    "சிவபெருமானே... உன்

    Enjoying the preview?
    Page 1 of 1