Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திசைமாறி பாயும் நதி
திசைமாறி பாயும் நதி
திசைமாறி பாயும் நதி
Ebook125 pages44 minutes

திசைமாறி பாயும் நதி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுஜி சந்தோஷ குரலில் ‘அம்மா... அம்மா...’’ என்று கூப்பிட்டபடி வீட்டினுள் வந்தாள்.
‘‘என்னம்மா... என்ன விஷயம்’’
சாரதா எதிர்கொண்டு வர, ‘‘அம்மா, நான் எழுதின கவிதை ‘தீப்பொறி’ இதழில் வெளிவந்திருக்கு. இங்கே பாருங்களேன்.’’
புத்தகத்தை அவளிடம் நீட்ட.
‘‘என்ன சுஜி, உன் கவிதை வந்திருக்கா, எங்கே கொடுபார்ப்போம்’’ நந்தினி அங்கே வர,
“இருங்க அண்ணி, அம்மா முதலில் படிக்கட்டும்’’
“நந்தினி, இந்தாம்மா... நீயேபடி... எல்லோரும் கேட்கலாம் கெளதமும் வந்தாச்சு’’ சாரதா சொல்ல,
“அம்மா நீங்க தான் படிக்கணும்... உங்களுக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்திருக்கேன். இப்பதான் நல்லா படிக்கிறீங்க. எழுதறீங்க, சங்கோஜபடாம படிங்கம்மா.”
சுஜி, அம்மாவின் அருகில் வந்து அவள் தோள்களை பற்றிக் கொண்டாள்.
சுஜியின் கவிதையை எழுத்துகூட்டி மெல்ல படிக்க ஆரம்பித்தாள் சாரதா. பரந்த ஆகாயம், படபடக்கும் பறவைகள்.
சில்லென்ற காற்று, சிறகடிக்கும் உணர்வுகள்,
மனதில் பூ மழையாய் நினைவுகள் அனைத்தையும் இழந்து விட்டேன் என்று
துக்கப்பட்ட நேரத்தில் கடவுள் அனுப்பிய தேவதையாய் என்னருகில் நீ, என் சோகங்களை உன் தோள்களில் சுமந்து உன் இதமான ஸ்பரிசத்தில்
மயிலறகு வருடலாய்,என் மனதில் சாமரம் வீசிய
உன்னை என் உதடுகள்
‘‘அம்மா’’ என்றழைத்தாலும்
என் மனம் தெய்வமே என்று தான் அழைக்கின்றது
படித்தவள் கண்கலங்க சுஜியை கட்டிக்கொள்கிறாள்.
‘‘உன் கவிதை ரொம்ப நல்லாருக்கு சுஜி. நம்ப அம்மாவை நினைச்சுதான் இந்த கவிதை எழுதியிருக்கேன்னு தெரியுது”
கௌதம் மனம் நெகிழ்ந்து சொல்ல,
நந்தினி அத்தையின் அருகில் வருகிறாள்.
‘‘அத்தை, என்ன இது, கண்ணை துடைங்க, உங்க மகள் எழுதின கவிதையை, உங்க வாயால படிச்சு கேட்டது, மனசுக்கு சந்தோஷமா இருக்கு. உங்க அன்பும், பாசமும் கடைசிவரை இந்த குடும்பத்தை சந்தோஷமா வழிநடத்தும்.”
‘சுஜிம்மா, இதை போல நீ எல்லா விஷயத்திலும் வெற்றி பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வரணும் இந்த அம்மாவோட ஆசிர்வாதம் என்னைக்கும் உனக்கு இருக்கு’’
‘‘அம்மா, வெறும் ஆசிர்வாதத்தோடு முடிச்சுடாதீங்க. கவிதை வெளியானதற்கு, உங்க கையால சூடா கேசரி செய்து எடுத்துட்டு வாங்க... எல்லோரும் சாப்பிடலாம்.’’
“உன் கவிதை வந்ததுக்கு அம்மாவை வேலை வாங்கறே பாத்தியா, அத்தை இருக்கட்டும். நான் போயி செஞ்சு எடுத்துட்டு வரேன்.’’
‘‘நோ அண்ணி... நீங்க செஞ்சா அது கேசரியாக இருக்காது. அதுக்கு வேற ஏதாவது பெயர் வைக்கணும் ப்ளீஸ் அண்ணி, அம்மாவே செய்யட்டும்சுஜி, கண்களில் குறும்பு மின்ன சொல்ல, நந்தினி அவளை செல்லமாக அடிக்க, அதை பார்த்து ரசித்தபடி எழுந்து அடுப்படி நோக்கி சென்றாள் சாரதா.
சாப்பிட்டு மேஜையின் முன் அமர்ந்திருந்தார் சிவராமன். வகை, வகையாக பழங்கள் வெட்கப்பட்டு தட்டுகளில் வைக்கப்பட்டிருக்க, ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ், பால் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. சூடா காபி டம்ளருடன் வந்த சமையல் ஆள் அதையும் டேபிளின் மீது வைத்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
திசைமாறி பாயும் நதி

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to திசைமாறி பாயும் நதி

Related ebooks

Reviews for திசைமாறி பாயும் நதி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திசைமாறி பாயும் நதி - பரிமளா ராஜேந்திரன்

    1

    தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அஸ்வந்த் அழ ஆரம்பிக்க, அடுப்படியில் கை வேலையாக இருந்த சாந்தா, அதை அப்படியே போட்டுவிட்டு, விரைந்து வந்து குழந்தையை தூக்கினாள்.

    ‘‘என்னடி செல்லம், எழுந்துட்டியா. அம்மா, டாடியெல்லாம் ஆபீசிலிருந்து வந்தாச்சுன்னு இந்த சின்ன கண்ணனுக்கு தெரிஞ்சுபோச்சு. அதான் எழுந்திட்டான். பால் குடிச்சுட்டு அம்மாகிட்டே போகலாமா’’

    குழந்தையை கொஞ்சியபடி, அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு, அவனுக்காக அவள் தயாராக கலந்து வைத்திருந்த பாலை, பாட்டிலில் ஊற்றி மடியில் போட்டுக்கொண்டு புகட்ட ஆரம்பித்தாள்.

    வயிறு நிரம்பிய குழந்தை பொக்கை வாய் திறந்து சிரிக்க, அவனை மார்புற அணைத்து முத்தமிட்டாள் சாரதா.

    ‘‘நந்தினி, இங்கே பாரு. உன் மகன் எழுந்துட்டான்’’ குழந்தையுடன் ஹாலில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தவனிடம் வந்தாள்.

    அஸ்வத் குட்டி... வா...வா... இன்னைக்கு பாட்டிக்கிட்டே தொந்தரவு பண்ணாம சமர்த்தா இருந்தியாடா செல்லம்

    அதற்குள் அறையிலிருந்து வெளிப்பட்ட கெளதம், குழந்தையை நந்தினியிடமிருந்து வாங்கி கொண்டான்.

    "நீ உன் வேலையை முடி, நானும் என் மகனும் ஹெலிகாப்டர் ஓட்டி விளையாட போறோம்.’’

    குழந்தையுடன் அறை நோக்கி சென்றவன்.

    "அம்மா, இன்னைக்கு செண்பகம் வேலைக்கு வந்தாளா’’

    ‘‘ம்... வந்தாப்பா’’

    "நேத்து அவ சொந்தக்காரங்க யாருக்கோ உடம்பு சரியில்லை. போய் பார்க்கணும்னு சொன்னா... அம்மாவால் அஸ்வத்தையும் வச்சுக்கிட்டு வேலைகளை பார்க்க முடியாது சனி, ஞாயிறு நந்தினிக்கு லீவு வரும் போது போய்ட்டுவான்னு சொன்னேன். அதான் வந்தாளான்னு கேட்டேன்’’

    புன்னகையுடன் மகனை பார்த்தாள் சாரதா

    "அத்தை இன்னும் என்ன அடுப்படியில் வேலை, உட்கார்ந்து கொஞ்ச நேரம் டி.வி. பாருங்க. சாப்பிடும் போது தோசை ஊத்திக்கலாம். ஆமாம் சுஜி என்ன பண்றா... வந்ததிலிருந்து ஆளையே பார்க்கலை’’

    ‘‘அவ சாயந்திரம் அஞ்சு மணிக்கே காலேஜிலிருந்து வந்துட்டா, ரிகார் எழுத வேண்டி இருக்காம். காபியை வாங்கிகிட்டு ரூமுக்கு போனவதான் இன்னும் வரலை.’’

    சொன்னபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள் சஈரதா

    கம்ப்யூட்டரிலிருந்து கண்களை எடுக்காமல் "அத்தை அப்புறம் கேட்கணும்னு நினைச்சேன். நீங்க சாப்பிடற ப்ரஷர் மாத்திரை, வைட்டமின் மாத்திரையெல்லாம் இருக்கா... தீருவதுக்கு முன்னால் சொல்லிடுங்க... வாங்கிட்டு வந்துடறேன். அடுத்த மாதம் ஒன்னாந்தேதி டாக்டர்கிட்டே செக்அப்பிற்கு அப்பாய்ட்மெண்ட் வாங்கியிருக்கேன், அதுவரைக்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடணும்’’

    "எனக்கென்னம்மா, நான் நல்லாதான் இருக்கேன். மாத்திரையெல்லாம் இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்கும். மாத்திரைகள் மட்டும் வாங்கிட்டு வா... டாக்டர்கிட்டே இப்ப வேண்டாம்மா... அது இதுன்னு டெஸ்ட் எடுத்து காசுதான் செலவாகுது’’

    "காசு, பணம் செலவாறது பெரிய விஷயமில்லை. உங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்’’

    ‘‘என்னவோ போ. நான் சொல்றதை கேட்கவா போறீங்க’’

    ‘‘ஸாரி, அத்தை இந்த விஷயத்தில் மட்டும் நீங்க சொல்றதை கேட்க மாட்டோம்’’

    சொன்னவள் சாரதாவை பார்த்து புன்னகைக்க, என்ன அருமையான பெண் இவள், மனதில் பெருமிதம் கொண்டாள் சாரதா.

    அறையிலிருந்து வெளிவந்த சுஜி, அம்மாவின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

    ‘‘என்ன சுஜி, ரிகார்ட் எழுதணும்னு சொன்னியாம். எல்லாம் முடிஞ்சுதா.’’

    "ஆமாம் அண்ணி. அதான் வெளியே வராம, ஒரு மூச்சாக எழுதினேன். எங்கே அஸ்வத் குட்டியை காணும். அவனை நான் கொஞ்சவே இல்லை’’

    ‘‘அவங்க அப்பாகிட்டே இருக்கான். காலையிலே ஒன்பது மணியிலிருந்து, சாயந்திரம் அஞ்சுமணி வரை என் காலையே சுத்தி வருபவன். சாயந்திரத்துக்கு மேலே ரொம்ப பிஸியாயிடறான். மாத்தி, மாத்தி அம்மா, அப்பா, அத்தைன்னு இனி டைம்டேபிள் போட்டு கொஞ்ச வேண்டியது தான்’’

    சாரதா சொல்ல

    ‘‘பின்னே இருக்காதாம்மா, அண்ணிக்கு கல்யாணமாகி நாலு வருஷமாச்சு, குழந்தை பிறக்கலைன்னு, நீங்கதானே சஷ்டிவிரதம், சதுர்த்தி விரதம்னு பலவிரதங்கள் இருந்து, கோவில் கோவி லாக போய், அந்த கடவுளை தூங்கவிடாம, தொந்தரவு பண்ணி, உங்கபேரனை கொண்டு வந்திருக்கீங்க. அதான் உங்க செல்லப் பேரன், ராஜாமாதிரி பவனி வந்தான். சொன்னபடி சாரதாவின் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள் சுஜி.

    அண்ணி, வேலைபார்த்தது போதும், ஆபீஸ் வேலையை மூட்டை கட்டி வச்சுட்டு, போய் அண்ணனையும், அஸ்வத்தையும் கூட்டிட்டுவாங்க. எல்லோரும் சாப்பிடலாம், அம்மா தோசைக்கு வெங்காய சாம்பார் வச்சுருக்காங்கன்னு நினைக்கி றேன். வாசனை மூக்கை துளைக்குது.

    ஹாலில் விளையாட்டு சாமான்களை பரப்பியபடி அஸ்வத் விளையாடிக் கொண்டிருக்க அவனை சூழ்ந்து கொண்டு, நந்தினி, கெளதம், சுஜி மூவரும் அவனுடன் சேர்ந்து சிறுபிள் ளைகளாக மாறி சிரித்து விளையாட,

    இதையெல்லாம் பார்த்தபடி, கண்களில் கண்ணீர் வழிந்தோட உட்கார்ந்திருந்தாள் சாரதா.

    அம்மாவை கவனித்த கெளதம், சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து சாரதாவின் அருகில் வந்தான்."

    ‘‘என்னம்மா இது. எதுக்கு உங்க கண்களில் கண்ணீர் வருது. பழைய ஞாபகமா... வேண்டாம்மா... அதையெல்லாம் மறந்துடுங்க. நீங்க எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருக்கணும்... அது தான் எங்களுக்கு பிடிக்கும்’’

    அம்மாவை கெளதம் சமாதானப்படுத்த, ‘‘அஸ்வத், இங்கபாரு. உன் பாட்டி அழறாங்க, இனிமே இதை மாதிரியெல்லாம் பழசை நெனைச்சு வருத்தப்பட கூடாதுன்னு சொல்லு. கண்ணை துடைச்சுவிடு’’

    குழந்தை அஸ்வத்தை தூக்கி வந்து சாரதாவின் கன்னத்தில் அவன் கைகளை வைக்க குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, அன்பு ததும்பும் அவர்களை பார்த்து மலர்ந்து சிரித்தாள் சாரதா

    2

    சுஜி சந்தோஷ குரலில் ‘அம்மா... அம்மா...’’ என்று கூப்பிட்டபடி வீட்டினுள் வந்தாள்.

    ‘‘என்னம்மா... என்ன விஷயம்’’

    சாரதா எதிர்கொண்டு வர, ‘‘அம்மா, நான் எழுதின கவிதை ‘தீப்பொறி’ இதழில் வெளிவந்திருக்கு. இங்கே பாருங்களேன்.’’

    புத்தகத்தை அவளிடம் நீட்ட.

    ‘‘என்ன சுஜி, உன் கவிதை வந்திருக்கா, எங்கே கொடுபார்ப்போம்’’ நந்தினி அங்கே வர,

    "இருங்க அண்ணி, அம்மா முதலில் படிக்கட்டும்’’

    "நந்தினி, இந்தாம்மா... நீயேபடி... எல்லோரும் கேட்கலாம் கெளதமும் வந்தாச்சு’’ சாரதா சொல்ல,

    அம்மா நீங்க தான் படிக்கணும்... உங்களுக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்திருக்கேன். இப்பதான் நல்லா படிக்கிறீங்க. எழுதறீங்க, சங்கோஜபடாம படிங்கம்மா.

    சுஜி, அம்மாவின் அருகில் வந்து அவள் தோள்களை பற்றிக் கொண்டாள்.

    சுஜியின் கவிதையை எழுத்துகூட்டி மெல்ல படிக்க ஆரம்பித்தாள் சாரதா. பரந்த ஆகாயம், படபடக்கும் பறவைகள்.

    சில்லென்ற காற்று, சிறகடிக்கும் உணர்வுகள்,

    மனதில் பூ மழையாய் நினைவுகள் அனைத்தையும் இழந்து விட்டேன் என்று

    துக்கப்பட்ட நேரத்தில் கடவுள் அனுப்பிய தேவதையாய் என்னருகில் நீ, என் சோகங்களை உன் தோள்களில் சுமந்து உன் இதமான

    Enjoying the preview?
    Page 1 of 1