Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மயங்குகிறாள் ஒரு மாது
மயங்குகிறாள் ஒரு மாது
மயங்குகிறாள் ஒரு மாது
Ebook113 pages37 minutes

மயங்குகிறாள் ஒரு மாது

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“இதிலே ஐயாயிரம் இருக்கு. விஜய்க்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டு, டியூசனுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க சார். டென்த் எக்ஸாம் எழுத நான் நல்ல மார்க் எடுக்கணும். சயின்ஸ்தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறதா நினைக்கிறான்”
“உங்களோட அன்பான கவனிப்பில் அருணும், விஜய்யும் நல்லா படிக்கிறாங்க. நீங்க சொன்ன மாதிரியே ஏற்பாடு பண்றேன். அப்புறம் சொல்லுங்க சார். பிள்ளைகளை பார்த்தாச்சா”
“இல்லை. இனிமேதான் போகணும். அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு நேரா இங்கே நுழைஞ்சிட்டேன்”
சரி போய் பாருங்க, ஆபிஸ் ரூமை விட்டு வெளியே வருகிறார் குருநாதன்.
பிள்ளைகள் அங்கிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி விசிட்டர் ஹாலுக்கு வருகிறார்.
“சார் வாங்க”
அங்கிருக்கும் கண்காணிப்பாளர் குருநாதனை வரவேற்க,
“உங்க பிள்ளைகளை பார்க்க வந்திங்களா, இப்பதான் காபி குடிச்சுட்டு, ரூமுக்கு போனாங்க. இருங்க வரச் சொல்றேன்”
சிறிது நேரத்தில் இருவரும் அவரை நோக்கி வேகமாக வருகிறார்கள்.
“அப்பா” ஆளுக்கொரு பக்கம் அன்போடு பற்றிக்கொள்ள,
“என்னப்பா, எப்படியிருக்கீங்க?”
“நாங்க நல்லா இருக்கோம். அக்காவெல்லாம் வரலையா?”அருணா செமஸ்டர் எக்ஸாம். கல்பனாவுக்கு வேலை சரியா இருக்கு. நான்தான் பத்து நாளாச்சேன்னு புறப்பட்டு வந்தேன்”
“வாங்கய்யா மரத்தடியில் போய் உட்கார்ந்து பேசுவவோம்” அருண் சொல்ல.
“இந்தாப்பா இதிலே பால்கோவா இருக்கு. உங்க ப்ரெண்ட்ஸ்க்கு கொடுத்துட்டு சாப்பிடுங்க. கொண்டு போய் ரூமில் வச்சுட்டுவா அருண். நான் விஜய்யோடு வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருக்கேன்”
சொன்னவர், விஜய்யுடன் நடக்கிறார். மரத்தை சுற்றி வட்டமாக கட்டப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் அமர்ந்தவர்,
“விஜய், இந்த வருஷம் பத்தாவது. படிப்பில் அதிக கவனம் இருக்கணும். நீ இஷ்டப்பட்டபடி மெக்கானிக் லயனில் நல்லபடியா படிச்சு, பெரிய ஆளாக வரணும். ஒரு இலக்கை நோக்கி வரும்போது நம் கவனத்தை சிதற விடக்கூடாது”
“அப்பா, நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவன். பெத்தவங்க யாருன்னு தெரியாத எனக்கு, ஒரு அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு அக்காவும், நீங்களும் என் மேல் காட்டற அன்புக்கு என்னைக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்.
நல்லா படிக்கிறேன்பா. நீங்க பாராட்டற அளவுக்கு நல்ல மார்க் எடுப்பேன்”
அருண் அவர்களை நோக்கி ஓடிவர,
“பார்த்து அருண். எதுக்கு இப்படி அவசரமா ஓடிவரே”
மூச்சிறைக்க அருகில் வந்தவன்
“அப்பா நீங்க எங்ககூட இருக்கிற இந்த கொஞ்ச நேரமும், உங்க பக்கத்திலேயே இருக்கணும். அதுக்காகதான்”
அன்பை கண்களில் தேக்கி பார்க்கும் அவனை தழுவிக்கொள்கிறார்.
“அருண், விஜய் நான் உங்களுக்கு சொல்றதெல்லாம் இதுதான். கடவுள் படைப்பில் எத்தனையோ வினோதங்கள் அன்புக்கு ஏங்கற குழந்தைகள். பிள்ளைகளின் பாசம் கிடைக்காமல் வருந்தும் வயதானவர்கள்கை, கால் இல்லாமல் சிரமப்படும் மனிதர்கள், வறுமையில் வாடும் குடும்பங்கள், இப்படி எத்தனையோ இருக்கு. நமக்கு இதிலே கிடைச்சிருக்கிற நல்லதை பார்க்கற பக்குவத்தை வளர்த்துக்கணும்.
உங்க பிறப்பு பரிதாபத்துக்குரியதாக இருக்கலாம். என் மூலமா கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை காண்பிச்சுருக்காரு. உங்களுக்கு அப்பா, இரண்டு அக்கா, உங்க நலனில் அக்கறை காட்ட இருக்கிறோம். அதனால எப்போதும் மனசை தளரவிடாம சந்தோஷமா இருக்கணும். நல்லா படிக்கணும். அடுத்தவங்ககிட்டே அன்பு பாராட்டற நல்ல மனசு இருக்கணும்.
நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் உயர்ந்து சந்தோஷமா இருக்கிறதை இந்த அப்பா பார்க்கணும், செய்வீங்களா?”
“நிச்சயம்பா. உங்க சொல் எங்களுக்கு வேதவாக்கு. நல்லா படிப்போம். எங்களை பத்தி கவலைப்படாதீங்க”
விஜய் சொல்ல,
“அப்பா, பிரஷர் இருக்குன்னு சொன்னீங்களே, ஒழுங்கா மருந்து, மாத்திரை சாப்பிடறீங்களா? டாக்டர்கிட்ட செக் அப்புக்கு போனீங்களா?”
“இல்லப்பா... போகணும்”
“என்னப்பா இது. நீங்க உடம்பை பார்த்துக்கணும். நீங்க நல்லா இருந்தாதான் எங்களால நிம்மதியா இருக்க முடியும். இனிமே தனியே வராதீங்க. அக்காவோடு வாங்க. வரமுடியலைன்னா போனில் பேசுங்கப்பா போதும்” “நீங்க முந்தி மாதிரி இல்ல. இளைச்சு போயிட்டீங்க”
கவலையாய் பேசும் அருணை அன்புடன் பார்க்கிறார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
மயங்குகிறாள் ஒரு மாது

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to மயங்குகிறாள் ஒரு மாது

Related ebooks

Reviews for மயங்குகிறாள் ஒரு மாது

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மயங்குகிறாள் ஒரு மாது - பரிமளா ராஜேந்திரன்

    1

    "வாங்க" அழைத்தபடி தூயவெண்ணிற வேஷ்டி, கதர் சட்டை அணிந்து, பார்க்கவே பெரிய மனிதர் என்ற தோற்றத்தில் தன் முன் வந்து நின்ற குருநாதனை பார்த்ததும், சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்.

    உட்காருங்க தம்பி சொன்னவர், அவன் எதிரில் அமர்ந்தார்.

    கல்பனா உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா. என் மகளை பத்தி பெருமையா சொல்றேன்னு நினைக்காதீங்க. அவ ஒருத்தர் மேல் நல்ல அபிப்பிராயம் சொன்னா, அவங்க நிச்சயம் நல்லவங்களாகதான் இருப்பாங்க சொன்னவர் புன்னகைக்க,

    உங்க மகளும் உங்களை பத்தி என்கிட்ட நிறையவே சொல்லியிருக்காங்க

    எங்க அப்பாவை மாதிரி ஒருத்தரை இந்த உலகத்தில் பார்க்கிறதே அபூர்வம்

    அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அன்பா பேசற எங்கப்பாவை யாருக்குமே பிடிக்காம இருக்காது. சின்ன வயசிலேயே அம்மாவை பறி கொடுத்த எங்களுக்கு எல்லாமே எங்கப்பாதான்னு சொல்வா"

    அதற்குள் காபியுடன் உள்ளிருந்து வந்த கல்பனா, இருவருக்கும் கொடுத்து விட்டு அப்பாவின் அருகில் உட்கார்ந்துக் கொள்கிறாள்.

    பரஸ்பர அறிமுகம் முடிஞ்சாச்சா முன் நெற்றியில் கற்றையாக வந்து விடும் முடியை, கைகளால் பின்னுக்கு தள்ளியபடி, ரவிவர்மன் ஓவியம் போல, அழகோவியமாக காட்சி தருமம் கல்பனா, தன் வெண்பற்கள் தெரிய சிரித்தாள்.

    உன்னுடைய செலக்ஷன் பிரமாதம் கல்பனா. பார்த்த முதல் பார்வையிலேயே விக்ரம் தம்பியை எனக்கு பிடிச்சிருச்சு. ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையனா இருக்காரு. பெரிய தொழிலதிபருக்கு உரிய மிடுக்கு இல்லாம, எளிமையா இருக்காரு

    இந்த காலத்தில் இப்படியொரு பிள்ளை இருக்கிறது ஆச்சரியமான விஷயம்தான்

    தன் எதிரிலேயே தன்னை பற்றி புகழ்ந்து பேச, சற்று கூச்சத்துடன் தலைகுனிந்தான் விக்ரம்.

    ‘விக்ரம் மார்பிள்ஸ்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம். தன் சொந்த உழைப்பு, திறமையினால் இளம் வயதிலேயே சிறந்த தொழிலபதிபராக பெயரெடுத்தவன்.

    சிறு அளவில் இருந்த வியாபாரத்தை அப்பாவின் காலத்திற்கு பிறகு, விரிவுபடுத்தினான் விக்ரம்.

    தொழில் தரம், நாணயம், அவனை. உயர்வான இடத்திற்கு கொண்டு வந்திருந்தது..

    அவனுடைய பர்சனல் பி.ஏ.வாக இரண்டு வருடம் முன்பு வேலைக்கு சேர்ந்த கல்பனா, அவன் மனதில் இடம்பிடித்து, இன்று அவனை கைபிடிக்கும் நிலைக்கு வந்திருந்தாள்.

    என்ன அப்பா, விக்ரமை பார்த்து பேசணும்னு சொன்னீங்க. பேசாமல் இருக்கீங்க

    தம்பி, கல்பனா எல்லா விபரமும் சொல்லியிருக்கா. உங்கப்பா சமீபத்தில் இறந்தது, உங்க நெருங்கிய உறவுன்னு, இப்ப உங்க அத்தையும், மாமாவும்தான் இருக்காங்கன்னு சொன்னா

    கல்பனாவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க எனக்கு பூரண சம்மதம்

    என் பொண்ணுங்க கல்பனாவும், அருணாவும் கடைசி வரை சந்தோஷமா இருக்கணும்

    "நான் அந்த காலத்தில் காட்டன் மில் வச்சு, நல்லபடியா தொழில் பண்ணினவன் தான், கூட இருந்த பார்ட்னரே எனக்கு எதிரியா மாற, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, பிரிஞ்சிட்டோம்.

    அதுக்கு பிறகு என் மனைவி இறக்க, நாலு வயசிலும், இரண்டு வயசிலும் பெண்களை வச்சுட்டு, தொழிலும் முடங்கி நான் பட்ட சிரமங்கள் அதிகம்

    என் அக்கா, இப்ப கிராமத்தில் இருக்காங்க. அவங்கதான் எனக்கு ஆறுதலாக இருந்து, இவங்களை வளர்த்தாங்க. நானும் ஒரு கம்பெனியில் சூப்பர்வைசரா சேர்ந்தேன். கடவுளின் கருணையினால் இப்ப என் பெண்களுடன் சந்தோஷமா இருக்கேன்"

    சார் உங்க குடும்ப விபரம் ஏற்கனவே கல்பனா மூலம் எனக்கு தெரியும்

    "இந்த அன்பான குடும்பத்தில் நானும் ஒருத்தனாக மாறணும். என் அத்தை, அவங்க மகள் டெலிவரிக்காக அமெரிக்கா போயிருக்காங்க.

    கல்யாணத்தை ஆறு மாசம் கழிச்சு அவங்க வந்ததும் வச்சுக்கலாம்"

    "ரொம்ப சந்தோஷம் தம்பி. என் கல்பனாவுக்கு இப்படியொரு அருமையான பிள்ளை, கணவனாக கிடைக்க அந்த கடவுளின் கருணைதான் காரணம்.

    என் இளைய மகள் அருணாவுக்கு இதேபோல ஒரு வரன் அமைஞ்சா, என் கவலை தீர்ந்திடும்."

    என்னப்பா என்னை பத்தி பேசிட்டிருக்கீங்க.

    வாம்மா, காலேஜ் விட்டு வந்திட்டியா, விக்ரம் தம்பி வந்திருக்காரு

    வாங்க சார், என்ன உங்களை நேத்து பீச்சில் பார்த்தேன். எங்கே வீட்டில் போட்டு கொடுத்துடுவேன்னு, நல்ல பிள்ளையாக பெண் கேட்க அப்பாவை பார்க்க வந்திட்டிங்களா.

    ஏய்... என்னடி இ, அவரை கிண்டல் பண்ணிக்கிட்டு.

    கல்பனா பொய்யாக கோபிக்க,

    சரி, சரி... உன் வருங்கால கணவரை நான் ஒண்ணும் சொல்லலை போதுமா. அதுல வந்துப்பா நேத்து என் ப்ரெண்சோடு பீச்சுக்கு போனேன்னு சொன்னேன் இல்லையா. அப்ப அக்காவும், இவரும் ரொம்ப சுவாரஸ்யமா நான் வந்ததை கூட கவனிக்காம பேசிட்டிருந்தாங்க. அதைதான் சொன்னேன் -

    கல்பனா எழுந்து அவள் தலையில் குட்டு வைக்க

    அருணா எப்போதும் இப்படிதான் தம்பி. அவ இருக்கிற இடம் கலகலப்பா இருக்கும்

    உட்காருங்க மேடம். நீங்க ஒருநாள் எங்ககிட்ட மாட்டமவா போயிடுவீங்க

    விக்ரம் சொல்ல, கலகலவென சிரித்தாள் அருணா

    சார், நீங்க ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிற இரண்டு பிள்ளைகளுக்கு ஸ்பான்சர் பண்ணி படிப்பு செலவு, பராமரிப்பு செலவை ஏத்துக்கிட்டு, நாலு வருஷமா செய்திட்டிருக்கிறதா கல்பனா சொன்னா. இதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும் சார். இதுக்காகவே உங்களை நேரில் பார்க்கணும்னு நினைச்சேன்

    இங்க பாருங்க மிஸ்டர் விக்ரம். அப்பாவை சார் போடறதை நிறுத்துங்க. அழகா நீங்க மாமான்னு கூப்பிடலாம். உங்க காதலுக்குதான் பச்சை சிக்னல் காண்பிச்சாச்சே, அப்புறம் என்ன?

    அருணா இடையில் புகுந்து சொல்ல,

    "ஆமாம் தம்பி, நீங்க சார்ன்னு சொல்லும்போது, நமக்குள் ஒரு சின்ன இடைவெளி இருக்கு.

    Enjoying the preview?
    Page 1 of 1