Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தென்றலாக நீ வருவாயா
தென்றலாக நீ வருவாயா
தென்றலாக நீ வருவாயா
Ebook109 pages37 minutes

தென்றலாக நீ வருவாயா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

துர்க்கை அம்மனின் முன் விளக்கேற்றி நைவேத்திய பொங்கல் எதிரில் இருக்கிறது.
பிராத்தனையில் ஈடுபட்ட நந்தினியின் உதடுகள் ஸ்லோகங்களை முனுமுனுக்கிறது.
துர்கே ஸ்ம்ருதா கரபிதீதி அசேஷ ஜந்தோ
ஸ்வஸ்தை ஸ்த்ருதா மதிமதீப ஸுபாம் ததாஸி
தாரித்ர்ய துக்க பயஹாரிணி காத்வதன்யா
சர்வோபகார கரணாய சதா ஆர்த்ர சித்தா...
தீபம் காட்டி... கண்களில் ஒற்றிக் கொள்கிறாள்.
பூஜை அறையை விட்டு வெளியே வந்தவள், சோபாவில் புன்முறுவலுடன் பரத் உட்கார்ந்திருப்பதை பார்க்க.
“நீ எப்ப வந்தே பரத்.’’
“நீ மனசுருகி ஸ்லோகம் சொன்னியே அப்பவே வந்துட்டேன்மா... சாமி கும்பிடற அது தெரியுது... ஆனா அந்த ஸ்லோகத்திற்கான அர்த்தம் மட்டும் தெரியலை.”
“நீ துர்க்கையை நினைத்தாலே போதும் அனைத்து உயிர்களின் பயத்தை போக்கி, அபயகரம் நீட்டி, அன்போடு நம்மை காத்து நிற்பாள். இது தாம்பா அதன் அர்த்தம்.”
மகன் அருகில் உட்கார்ந்தாள்.
“எப்படிம்மா... எல்லாமே தெரிஞ்சு வச்சுருக்கே.’’
“இல்லை பரத், நான் தெரிஞ்சுக்கிட்டது கொஞ்சம் தான். என் அப்பாவுக்கு தெய்வபக்தி அதிகம். தினமும் ஒரு மணி நேரம் மனம் லயித்து சாமி கும்பிடுவார்.“அவர் மூலம் தெரிஞ்சுக்கிட்டது தான்... அதுசரி இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்டே.”
“பாங்க் வேலையா கஸ்டமரை பார்க்க போனேன். போன வேலை முடிஞ்சுது. பாங்குக்கு போன் பண்ணி சொல்லிட்டு வந்துட்டேன்.”
“காபி போட்டு கொண்டு வரட்டுமா.”
“வேண்டாம்மா... இன்னைக்கு நிறைய காபி சாப்பிட்டுட்டேன் நைட் டின்னர் மட்டும் போதும்.”
“பரத்... அப்பாவோட திதி அடுத்த வாரம் வருதுப்பா.”
“ஞாபகம் இருக்குமா. வழக்கம் போல புரோகிதரை பார்த்து சொல்லிடவா…”
“ஆமாம்பா... நாலு வருஷமாச்சு அப்பா நம்மை விட்டு போயி... அந்த நல்ல மனிதரோடு வாழ்ந்த நாட்கள் பசுமை மாறாமல் மனசில் நிறைச்சிருக்கு.”
நந்தினியின் குரலில் நெகிழ்வு. பரத்தின் மனதிலும் அப்பாவின் ஞாபகங்கள். ஆமாம்மா அப்பா ஒரு ஜெம் அவரை போல் அனுசரிச்சு போகும் மனிதரை பார்க்க முடியாது.
“ஒரு தந்தையாக மட்டுமில்லாமல், ஒரு நண்பனாக என் கை பிடிச்சு, என்னோடு வந்தவர்.”
‘‘அம்மாகிட்டே நான் பகிர்ந்துக்க முடியாத விஷயத்தை அப்பாகிட்டே பகிர்ந்துக்கணும்னு மனசு துடிக்குது. ஆனா அவர் இல்லையே.”
“அப்பா அளவுக்கு அம்மா நெருக்கம் இல்லை. அப்படிதானே பாத்”
“உன்கிட்டே சொல்லாமலா... நேரம் வரும்போது சொல்றேன்மா சரி, இன்னைக்கு என்ன டிபன்.”
பேச்சை மாற்ற.
“உனக்கு பிடிச்ச இடியாப்பம், குருமா”
“வெரிகுட்”
அம்மாவை பார்த்து சிரிக்கிறான்அழகாக பூத்து குலுங்கும் குரோட்டன்ஸ் செடிகள். கச்சிதமாக வெட்டப்பட்டு காட்சிதரும் மயிலிறகு செடிகள் நடைபாதை, நீருற்று என்று அந்த இடமே ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றிலும் அடர்ந்து நின்ற மரங்களுக்கிடையே இருந்த பெஞ்சில் பரத்துடன் உட்கார்ந்திருந்தாள் அனு.
“இன்னைக்கு பீச் போகலாம்னு சொன்னேன். நீ தான் ‘பார்க்’ன்னு டிஸைட் பண்ணிட்டே...
சுண்டலை கொறிச்சுட்டு, கடல் அலையை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கலாம்.”
“இங்கே இருக்கிற பாதுகாப்பு அங்கே இருக்காது பரத்”
“ஏன்... யாராவது பார்த்திடுவாங்கன்னு பயப்படறியா.”
“என் ஆபீஸ் ப்ரெண்ட்ஸ் பார்த்தா... தேவையில்லாமல் வம்பு.’’
“அடடா… இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கியே.”
“பார்த்தால் தான் என்ன என் லவ்வர்... இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தைரியமா சொல்லு.”
‘‘ஓ... அப்படியா... அப்ப சார் முதலில் என்னை உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போயி... அம்மாகிட்டே, இவதான்மா... நான் கட்டிக்க போறவள்னு அறிகமுபடுத்துங்களே பார்ப்போம்.’
“கொஞ்ச நாள் ஜாலியா காதலர்களாக சுத்துவோம்னு பார்த்தேன். இப்ப உன்னை அம்மாகிட்டே கூட்டிட்டு போனா அடுத்து கல்யாண பேச்சுதான்.”
“நான் ஒண்ணும் உன்னை மாதிரி கோழை இல்லை. உன்னை விரட்டி, விரட்டி காதலிச்சவன்.”
சரி புறப்படு போகலாம்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
தென்றலாக நீ வருவாயா

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to தென்றலாக நீ வருவாயா

Related ebooks

Reviews for தென்றலாக நீ வருவாயா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தென்றலாக நீ வருவாயா - பரிமளா ராஜேந்திரன்

    1

    ஆபீஸ் கட்டிடத்தை விட்டு கீழே இறங்கி வந்தாள் அனுராதா,

    மழை பெய்து சகதிகாடாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தாள் கருமேகங்கள் இன்னும் கலையாமல் மழை வருவேன் என பயமுறுத்திக் கொண்டிருந்தது.

    மழையின் வேகம் குறைந்து, ஒன்றிரண்டு தூரல் மட்டுமே விழுந்ததால்,

    மழையை பொருட்படுத்தாமல் ஸ்கூட்டரிலும் பைக்கிலும் ஜெர்கின், மழைகோட்டு அணிந்தபடி மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். இதில் எப்படி வண்டியில் போவது... பள்ளம் எது... மேடு எது என தெரியாமல்... யோசனையுடன் நின்றால் அனுராதா

    ‘‘ஏய் அனு... என்ன கிளம்பலையா..."

    அருகில் வந்தாள் ரேவதி

    இந்த மழையில் வெள்ளமாக தண்ணி ஓடுது. எப்படி ஸ்கூட்டியில் வீட்டுக்கு போறதுன்னு யோசனையா இருக்கு.

    "அட பயந்தாங்கொள்ளி, அதுக்குன்னு இப்படியா இருக்கிறது. அங்கே பாரு எவ்வளவு பேர் போறாங்க.

    நம்ப மதுவை பாரு ஜான்சி ராணி மாதிரி பைக்கில், போறா... நீ இந்த ஸ்கூட்டியில் போறதுக்கு யோசிக்கிறே, அனு வானத்தையே பார்க்க,

    சரி, வழக்கம் போல் செக்யூரிட்டிகிட்டே சொல்லிட்டு வண்டியை ஆபீசில் வச்சுடு என்னோடு வா.

    உன்னை வீட்டில் விட்டுட்டு போறேன்,

    உனக்கு எதுக்கு சிரமம் ரேவதி, நீ தி.நகர் போக வேண்டியவ... எனக்காக வேளச்சேரி வரைக்கும் வரணும்.

    பரவாயில்லை வா. போகலாம். இந்த மழையில் ஷேர் - ஆட்டோ, பஸ்ஸெல்லாம் கதைக்கு ஆகாது.

    ரேவதி தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, பின்னால் ஏறினாள் அனுராதா.

    கூட்ட நெரிசலில், ஒடும் தண்ணீரை பொருட்படுத்தாமல் வண்டியை வேகமாக ஒட்டியபடி ரேவதி போக... எனக்கு மட்டும் ஏன் இந்த தேவையில்லாத பயம் எல்லாம் அம்மாவால் தான்...

    அனு அங்கே போகாதே, மொட்டை மாடியில் எட்டி பார்க்காதே... இருட்டில் போகாதே. சின்ன வயதிலிருந்தே. பயத்தை உண்டாக்கி விட்டாள்.

    அம்மா வளர்ப்பில், வளர்ந்ததால் தான் நீ எதுக்கெடுத்தாலும் பயப்படறே அனு.

    ஒரு முறை ரேவதி கிண்டலாக சொன்னது, உண்மைதான்... அப்பா என்றொரு ஜீவனை அவள் இதுவரை பார்த்தது இல்லை. எல்லாமே அம்மா தான். பாசத்தை, அன்பை, துக்கத்தை பங்கு போட்டுக் கொள்ள அவளுக்கான ஒரே துணை அம்மா தான். ஏன்... இப்போது எனக்காக என் பரத் இருக்கிறானே... ஆறடி உயரத்தில், கம்பீரமாக காட்சி தரும் பரத் அவள் கண்முன், சிரிக்கிறான். காதல் என்று வந்துவிட்டால் தைரியமும் தானாக வந்து விடும் போலிருக்கிறது.

    அம்மாவிடம் அவள் இதுவரை எதையுமே மறைத்ததில்லை. காதலை மட்டும் மனசுக்குள் பூட்டி வைத்து...

    அதற்கான நேரம் வரும்போது சொல்வாள்... அம்மாவின் ஆசியுடன் தானே கல்யாணம் நடக்க வேண்டும்.

    என்ன அனு எதுவுமே பேசாம வர்றே...

    "இந்த மழையிலே நீ வண்டி ஒட்டற அழகை ரசிக்கிறேன்.’’

    "பொய் சொல்லாதே. இந்த மழை நாளில், லேசான துறலில் நனைந்தபடி... பைக்கை பரத் ஒட்ட, அவன் தோளில் தொற்றிக் கொண்டு, போனால் எப்படி இருக்கும்னுதானே கற்பனை செய்துட்டு வர்றே.’’ ரேவதி வாய்விட்டு சிரிக்க,

    நீ உதை வாங்க போற, டிராபிக்கை பார்த்து ஓட்டு.

    என் காதலை உன்கிட்டே சொன்னதே தப்பா போச்சு அனு செல்லமாக கோபிக்க,

    நீயாகவா சொன்னே... நான் தானே நீ உருகி, உருகி போனில் பேசறதையும், சிரிக்கிறதையும் பார்த்து கண்டுபிடிச்சேன். தப்பிக்க முடியாம உண்மையை சொல்லிட்டே,

    ஆமாம். உன் காதலை உங்கம்மா காதில் போட்டுட்டியா... கார் ஹார்ன் சப்தத்தில் காதில் சரியாக விழாமல்.

    ‘‘என்ன சொன்னே"

    அனு கேட்க

    திரும்ப சொல்கிறாள்.

    ‘‘அம்மா கிட்டேயா. ஐயையையோ... ஏண்டி இப்பவே பீதியை கிளப்பற."

    "அவங்ககிட்டே மெதுவா சொல்லலாம். அவங்க கல்யாணம் பேச்சை ஆரம்பிக்கும்போது பார்ப்போம்.’’

    ரேவதி சாலையில் கவனமாக, அனு மெளனமாகிறாள்.

    "உள்ளே வந்துட்டு போ ரேவதி. டீ சாப்பிட்டு போகலாம்."

    இல்லை அனு மழை பெரிசா வந்தாலும் வந்துடும் நான் கிளம்பறேன். காலையில் ரெடியா இரு. நானே வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்.

    ரேவதி கிளம்பி போக, கேட்டை திறந்து உள்ளே வருகிறாள்.

    அனு... மழையில் நனைஞ்சுட்டியா... வண்டியிலா வந்தே...

    பரபரப்புடன் சாரதா அவளை நோக்கி வர,

    இல்லம்மா, என் ஸ்கூட்டி ஆபீசில் இருக்கு. ரேவதியோடு வந்தேன்.

    நல்ல காரியம் பண்ணினே. இந்த மழையில் வண்டியை ஓட்டிட்டு வர்றது கஷ்டம், பயந்துட்டே இருந்தேன். சரி உள்ளே வந்து டிரஸ்ஸை மாத்து இஞ்சி தட்டி போட்டு சூடா டீ போட்டுட்டு வரேன்... தூறலில் நினைஞ்சிருக்கே... சளி பிடிக்காமல் இருக்கணும்.

    கிச்சனில் நுழைய,

    ஹாலை ஒட்டிய ரூமில் யாரோ படுத்திருப்பதை பார்த்தவள்,

    யாரும்மா அது... படுத்திருக்கிறது.

    அம்மாவை பின் தொடர்கிறாள்.

    சுந்தரி பாட்டி... வந்திருக்காங்க அனு அவங்க பையனும், மருமகளும் டூர் போறாங்களாம். ஒரு வாரம் இங்கே தான் இருப்பாங்க.

    ‘‘மதியம் வந்தாங்க வந்தத்திலிருந்து ஒரே பேச்சு இப்ப தான் தலையை சாய்ந்தாங்க."

    அம்மாவின் தூரத்து சொந்தம் இந்த வாரம் நன்றாக பொழுது போகும். ஏதாவது பழைய கதைகளை பேசிக் கொண்டிருப்பாள்.

    அனுராதா என்று முழுபெயரையும் அழைத்து பேசுவாள்.

    உங்கம்மா தைரியசாலிடி... அவளை மாதிரி நீ வரணும்.

    "உங்கப்பாவையே வேண்டாம்னு தூக்கியெறிஞ்சவ தனி ஆளா உன்னை வளர்த்து, ஆளாக்கிட்டாளே...’’

    சாமர்த்தியாசலிடி...

    அம்மாவுக்கு பாட்டி கொடுக்கும் சர்டிபிகேட்,

    ‘‘ஏன் பாட்டி... அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சனை எதனால் பிரிந்து விட்டார்கள்.’’

    பாட்டியிடம் கேட்க தோணும்... வார்த்தைகள் மனதிற்குள் மரணிக்கும்

    "இங்கே பாரு அனு

    Enjoying the preview?
    Page 1 of 1