Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தள்ளி போகச் சொல்லாதே
தள்ளி போகச் சொல்லாதே
தள்ளி போகச் சொல்லாதே
Ebook115 pages44 minutes

தள்ளி போகச் சொல்லாதே

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூடியிருந்த ஜன்னல் திரைகளை விலக்கி, வெளிச்சத்தை உண்டாக்கினாள் வேதா.
அந்த விசாலமான அறையின் நடுவே போடப்பட் டிருந்த கட்டிலில் கண் விழித்து படுத்திருந்த ராஜம், மருமகளை பார்த்தாள். முகத்தில் நிரந்தரமாக தங்கி விட்ட புன்னகை. இளமையில் அவளிடமிருந்த அழகு, வயது அறுபதை நெருங்கும் சமயத்திலும் அவளை விட்டு விலக மனசில்லாமல் ஒட்டிக் கொண்டிருந்தது. கோபாலனை கை பிடித்து மருமகளாய் வந்த நாளிலிருந்து இந்த குடும்பத்துக்காக முகம் சுளிக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறாள்...
“அப்ப சின்ன வயசு சமையல் வேலை, அது, இதுன்னு இழுத்து போட்டு செய்தே. உனக்கும் வயசாயிட்டு வருது வேதா. ராம, லட்சுமணன் மாதிரி அழகாக இரண்டு பிள்ளைகளை பெத்து வச்சுருக்கே... அப்பாவுக்கு மேலே கம்பெனியை திறமையாக நடத்தறாங்க... வருமானமும் எக்கசக்கமாக வருது. அப்புறம் என்னம்மா, மேல் வேலைக்கு ஆள் வச்சுக்கே, என்னை பார்க்க தனி ஆள். அதே போல் சமையலுக்கும் ஆள் வச்சுக்க வேதா...”
அன்போடு சொல்லும் மாமியாரை புன்னகையோடு பார்ப்பாள்...
“என்னால் முடியும் அத்தை. என் பிள்ளைகளுக்கு, என் புருஷனுக்கு... என் மாமியாருக்கு நான் பார்த்து, பார்த்து செய்யற மாதிரி ஆகுமா அத்தை. வயது என் உடம்பில் தளர்ச்சியை கொண்டு வரலாம். மனசு அன்னைக்கு இருந்தது போல் இன்றும் இளமையாக தான் இருக்கு அத்தை.”
இவளை பேசி ஜெயிக்க முடியாது. அன்பாலேயே எல்லாரையும் கட்டி போட்டு விடுவாள்.
மருமகளை நினைத்து பெருமிதம் கொள்வாள்.
அருகில் வருகிறாள் வேதாராத்திரி நல்லாதூங்கினிங்களா அத்தை?”
“ராத்திரியும், பகலும் படுக்கையிலேயே இருக்கிற எனக்கு தூங்கறது தானே வேலை.”
“என்ன பண்றது அத்தை. நல்லா நடமாட்டிட்டு இருந்த உங்களை அந்த கடவுள் நாலு வருஷமாக படுக்கையில் போட்டுட்டாரு. இந்த குடும்பத்தை ஆணிவேராக இருந்து நீங்களும், மாமாவும் உருவாக்கினீங்க... மாமா தெய்வமாகிட்டாரு. நீங்க எங்க கண்முன்னே இருக்கிறது எங்களுக்கு எவ்வளவு பெரிய பலம் தெரியுமா... உங்க பேரன்களுக்கு கல்யாணம் பண்ணனும், கொள்ளு பேரன்களை பார்க்கணும். இந்த பூமியில் நீங்க அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்கள் நிறைய இருக்கு அத்தை. அதனால் உங்க மனசில் எந்த கவலையும் நெருங்க கூடாது. உங்க மலர்ந்த முகத்தை தான் நாங்க பார்க்கணும். நான் சொல்றது சரிதானே அத்தை.”
மனதை தொட எவ்வளவு தன்மையாக பேசுகிறாள்.
“அம்மா வேதா... உன்னோடு இருக்கும் எனக்கு எந்த குறையும் இல்லம்மா... மனசுக்குள் அப்பப்ப எட்டி பார்க்கும் விரக்தி சமயத்தில் இப்படி பேச வைக்குது. இனி இப்படி பேச மாட்டேன் போதுமா...”
“ம்... அப்படி சொல்லுங்க...”
மலர்ந்து சிரிக்கிறாள்.
“கோபால் வாக்கிங் போய்ட்டு வந்துட்டானா...”
“இன்னும் வரலை. வந்ததும் நேராக உங்களை பார்க்க தானே வருவாரு.”
ரூம் கதவை திறந்து உள்ளே வருகிறாள் சாந்தி.
“பெரியம்மா... எழுந்தாச்சா... வெந்நீர் எடுத்துட்டு வரட்டுமா... உடம்பை துடைச்சு டிரஸ் மாத்தலாமா...”
“இதோ வந்துட்டா என்னோட சேவகி. நீ போய் வேலையை பாரு வேதா... வா சாந்தி... நீ வரட்டும்னு தான் இருந்தேன்.”
ஒரு கையும், காலும் செயலிழந்து கிடக்க, இடது கையை மெல்ல ஊன்றி, தலை தூக்க, அவளுக்கு உதவி செய்து படுக்கையில் உட்கார வைக்கிறாள் சாந்தி.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
தள்ளி போகச் சொல்லாதே

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to தள்ளி போகச் சொல்லாதே

Related ebooks

Reviews for தள்ளி போகச் சொல்லாதே

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தள்ளி போகச் சொல்லாதே - பரிமளா ராஜேந்திரன்

    1

    வானத்தில் மழை மேகம் சூழ்ந்திருக்க, ஒன்றிரண்டு தூறல்கள் மொட்டை மாடியில் முழங்கால்களை கட்டிய கால் படி தலைகவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் மதுராவின் மீது விழுகிறது.

    சை... இந்த சுந்தர் என்னை முட்டாளாக்கி விட்டானே... இந்த இரண்டு வருட காதலில் அவனை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் போய் விட்டனே... அவனின் காதல் மொழிகளில்... காதல் கவிதைகள்... வசீகரிக்கும் அவன் முகம், ஆளை மயக்கும் அவனின் கம்பீரத் தோற்றம் எல்லாம்... என்னை மயக்கி விட்டதே... படிப்பில் கவனமில்லாமல், அவன் காதலை உண்மை என்று நம்பி அவன் பின் சுற்றி வந்தது எத்தனை பெரிய முட்டாள் தனம்...

    அவளை அறியாமலேயே கண்களில் கண்ணீர் பெருகுகிறது.

    என் காதல் கல்யாணத்தில் முடிய போகிறது என்று எவ்வளவு கனவுகளுடன் காத்திருந்தேன்.

    சுந்தர்... என் படிப்பு முடிஞ்சாச்சு... என் அம்மா, அப்பா என் மீது அளவுகடந்த அன்பு வச்சுருக்காங்க... நான் அவங்களுக்கு ஒரே பெண் என்பதால், நிச்சயம் என் விருப்பத்துக்கு தடை சொல்ல மாட்டாங்க... அடுத்து நம் கல்யாணம் தான் சுந்தர்.

    நீ சுலபமாக சொல்லிட்டே... என் பக்கம் அவ்வளவு சீக்கிரம் சம்மதம் வாங்க முடியாதுன்னு தோணுது மதுரா...

    ஐயோ… என்ன சொல்றீங்க சுந்தர்?

    பதட்டப்படாதே, என் அப்பா, அம்மா லண்டனில் இருக்காங்கன்னு சொல்லியிருக்கேனே... நீ இங்கே வேலை பார்க்க வேண்டாம். நீயும் லண்டனுக்கு வந்துடு... இங்கேயே நல்ல பெண்ணாக பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம். எங்களுக்கு இந்தியா வர விருப்ப மில்லைன்னு சொல்றாங்க, மதுரா...

    நீங்க இதையெல்லாம், இதுவரை ஏன் சொல்லலை. என்னை பெத்தவங்க லண்டனின் இருந்தாலும், நான் போக மாட்டேன்... நமக்கு கல்யாணம் ஆனதும், இங்கேயே செட்டில் ஆயிடுவோம்னு தானே சொன்னீங்க… இப்ப இப்படி சொல்றீங்களே சுந்தர்?

    இது அவங்க விருப்பம் மதுரா. நான் அதுக்கு என்னைக்கும் உடன்பட மாட்டேன். இருந்தாலும் அவங்களை சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும். அடுத்த வாரம் லண்டன் போகலாம்னு இருக்கேன். வரும்போது நல்ல செய்தியோடு வருவேன். பயப்படாதே...

    அவளை பார்த்து வசீகரமாக சிரிக்கிறான்.

    சுந்தர் என்னை ஏமாத்திட மாட்டீங்களே?

    நீயில்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை மதுரா. இதை நீ புரிஞ்சுக் கலையா... இப்ப கூட உன்னை பிரிஞ்சு எப்படி லண்டனில் பத்து நாள் இருக்க போறேன்னு எவ்வளவு வருத்தமாக இருக்கு தெரியுமா... ‘உன்னை பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடியாது மதுரா... இனிக்க, இனிக்க பேசுகிறான்.

    நாளைக்கு நாம் பிக்னிக் ப்ளான் பண்ணி இருக்கோமே ஞாபகம் இருக்கா... கரெக்டா எட்டு மணிக்கு வந்துடு மதுரா...

    ம்... அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கிட்டேன். என் ப்ரெண்டோடு போறதாக சொல்லியிருக்கேன். இந்த காதலுக்காக பெத்தவங்க கிட்டே எவ்வளவு பொய் சொல்ல வேண்டியிருக்கு பார்த்தீங்களா...

    எல்லாம் கொஞ்சம் நாளைக்கு தான். உன் கழுத்தில் தாலி கட்டிய பிறகு உரிமையுடன் போகலாம்.

    கண்களில் காதல் தெரிய அவனை பார்த்து சிரிக்கிறாள் மதுரா.

    வீட்டிற்கு வந்ததும், வாசலில் பரபரப்பாக நிற்கும் அம்மாவை பார்க்கிறாள் மதுரா.

    புறப்படு மது என் ப்ரெண்டு புவனா வீடு வரைக்கும் போய்ட்டு வருவோம்.

    ஏன்... ஏன்னாச்சும்மா?

    அவ மகள் சுமதி தூக்கு மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கா... நல்லவேளை காப்பாத்திட்டாங்க... ஹாஸ்பிடலிலிருந்து இப்ப தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க... நாம போய் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லிட்டு வருவோம்.

    ஸ்கூலில், டீச்சராக வேலை பார்த்தாளே அந்த சுமதியா...

    ஆமாம், எல்லாம் அந்த பாழாய் போன காதலில் வந்த வினை... மனம் திடுக்கிட, மெளனமாக இருக்கிறாள் மதுரா.

    வெளியே புவனாவும், மதுராவின் அம்மா சகுந்தலாவும் பேசிக் கொண்டிருக்க,

    முகத்தை மூடி அழும் சுமதியை எப்படி சமாதானப்படுத்துவது என் தெரியாமல் திகைக்கிறாள் மதுரா...

    ப்ளீஸ்... சுமதி, அழாதே... நீ இப்படி தப்பான முடிவுக்கு போகலாமா... உன் மேல் அம்மா எவ்வளவு பாசம் வச்சுருக்காங்க...

    அவனை நல்லவன்னு நினைச்சு ஏமாந்துட்டேன் மதுரா. இனிக்க, இனிக்க பேசினான்... நீயில்லாமல் வாழ்க்கையே இல்லைன்னு உருகினான். நம்பினேன்... பெத்தவங்க லண்டனில் இருக்காங்க, அவங்க சம்மதத்தோடு உன் கழுத்தில் தாலி கட்டுவேன்று சத்தியம் செய்தான்... அவனை நம்பி...

    மனம் திக், திக் என்று அடிக்க அவளையே பார்க்கிறாள்...

    பிக்னிக் போகலாம்னு சொல்லி, என்னை தனிமைபடுத்தி... என் பெண்மையை... பறிச்சுட்டான்...

    அதிர்கிறாள் மதுரா...

    "அதுக்கு பிறகு அவன் என்னை திரும்பி பார்க்கலை... உண்மையை அம்மாகிட்டே சொன்னேன். நெஞ்சே வெடிச்சுடும் போல, அழுது தவிச்சவங்க, எப்படியோ அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சு தேடி ஓடினாங்க...’’

    பெண்ணை அடக்கம் ஒடுக்கமா வளர்க்கணும். இப்படி கல்யாணத்துக்கு முன்னாலே கெட்டு போறவ, எப்படி நல்ல குடும்பத்து பெண்ணாக இருக்க முடியும். என்னால் உங்க மகளை கல்யாணம் பண்ணிக்க முடியாது.

    அடப்பாவி உன்னை சும்மா விடமாட்டேன்... போலீசுக்கு போவேன். தரளமாக போய் சொல்லுங்க... உங்க மகள் நடத்தை சரியில்லாதவள்... நாலு பேரை நம்பி ஏமாந்தவள், காதல் வலை வீசி என்னை கவிழ்க்க பார்த்தா... நான் தப்பிச்சுட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக் சொல்லி வற்புறுத்தறாங்கன்னு சொல்வேன். என்கிட்டே இருக்கிற பணம் என்னை காப்பாத்தும். உங்க மகள் தான் பேர் கெட்டு போய் தெருவில் நிற்பாள்.

    அம்மா துடிச்சு போயிட்டாங்க... அப்பா இல்லால் என்னை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு எனக்கு தெரியும். பாழாய் போன காதலால், அவங்க மனசை நோகடிச்சுட்டேனே... எனக்கு வாழவே பிடிக்கலை மதுரா...

    குமுறி, குமுறி அழுகிறாள்.

    உனக்காக இல்லாட்டியும், உங்க அம்மாவுக்காக வாழணும் சுமதி. நடந்ததை கெட்ட கனவாக நினைச்சு மறந்துடு.

    மனசுக்குள் நெருடல் தோன்ற,

    அவன் போட்டோ எதுவும் வச்சுருக்கியா?

    எல்லாத்தையும் அழிச்சுட்டேன்... அவன் முகத்தை நினைச்சு பார்க்க கூட விரும்பலை...

    சொன்னவள்...

    என் செல்போனில் இருக்கு... அதையும் டெலிட் பண்ணனும். ஆவேசம் வந்தவள் போல சுமதி போனை எடுக்க,

    அந்த போட்டோவை அவசரமாக பார்க்கிறாள், அதில் அவள் மனம் கவர்ந்த சுந்தர் அழகாக சிரித்து கொண்டிருக்கிறான்.

    ஐயோ... எப்பேர்பட்ட அழிவிலிருந்து தப்பியிருக்கேன். எப்படி ஏமாத்தியிருக்கிறான். இவனை நல்லவன் என்று நம்பி மனதை பறி. கொடுத்தேனே...

    வா மதுரா... கரெக்டா சொன்னது போல வந்துட்டியே போகலாமா...

    கார்

    Enjoying the preview?
    Page 1 of 1