Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மணமகளே மருமகளே வா
மணமகளே மருமகளே வா
மணமகளே மருமகளே வா
Ebook125 pages44 minutes

மணமகளே மருமகளே வா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நம்பிக்கைங்கிற தலைப்பில் எல்லாரும் கட்டுரை எழுதி, நாளை எடுத்துட்டு வரணும், சரியா?”
ஒன்பது, பத்து வயதில் அவள் முன் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு சிறுவர், சிறுமிகள் தலையாட்டுகிறார்கள்.
“அக்கா நான் நல்லா படிச்சு பெரிய ஆபிசராக வருவேன்னு நினைக்கிறேன். அதுவும் நம்பிக்கைதானே.”
“எண்ணங்கள்தான் நம்மைசெயல்படுத்துது சுமி. மனசுக்குள் ஒன்றையே நினைத்து செயல்படும்போது அது நிறைவேறுவதற்கான வழியும் பிறக்கும். நீ விருப்பப்படி பெரியவளாகி, ஆபிசராகி, உன் அம்மா, அப்பாவை பெருமைப்படவைப்பே.”
“தாங்க்ஸ் அக்கா....”
கண்களில் ஒளிதெரிய கள்ளமில்லாமல் சிரிக்கிறாள் அந்த சிறுமி.
செருப்பை வாசலில் கழட்டிவிட்டு, ஒருக்களித்து இருந்த கதவை திறந்து உள்ளே வருகிறார் சம்பத். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தந்து கொண்டிருந்த நந்தினி...
“பெரியப்பா... வாங்க...”
வரவேற்கிறாள்...
“அப்பா இருக்கானா நந்தினி. என்ன பிள்ளைகளுக்கு டியூஷனா?” கேட்டபடி வர...
“சரி. எல்லாரும் கிளம்புங்க. நாளைக்கு வரலாம்.” புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓட...
“உட்காருங்க பெரியப்பா... இதோ அப்பாவை கூப்பிடறேன்.” அதற்குள் அண்ணனின் குரல் கேட்டு உள்ளிருந்து வேகமாக வருகிறார் சதாசிவம்.
“அண்ணா வாங்க, வாங்க... அண்ணி வரலையா... நீங்க மட்டும்தான் வந்தீங்களா... ப்ரக்யா நல்லா இருக்காளா...”அண்ணனை பார்த்த சந்தோஷம் அவர் முகத்தில் தெரிகிறது.
“எல்லாரும் நல்லா இருக்கோம். உள்ளூரில் இருக்கோம்னுதான் பேரு. பார்க்கக்கூட முடியலை. இத்தனைக்கும் இரண்டு பேரும் ரிடையர்ட் ஆயிட்டோம்.”
சிரிப்புடன் சொன்னவர்...
“ரமேஷ் ஸ்கூல் போயிட்டானா?”
“ப்ளஸ்டூ இல்லையா... ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சீக்கிரமே போயிட்டான்.”
“பெரியப்பா... காபி எடுத்துட்டு வரட்டுமா. அம்மா குளிச்சுட்டு இருக்காங்க...”
“என்னம்மா கேள்வி. போய் எடுத்துட்டு வா...” சதாசிவம் சொல்ல.
“வேண்டாம் சதா... இப்பத்தான் வீட்டில் சாப்பிட்டு வந்தேன். நீ ஏன் நிக்கிறே... உட்காரு...”
அண்ணன் முன் பவ்யமாக நிற்கும் சதாசிவம். எதிரில் இருந்த ஸ்டூலில் உட்காருகிறார்.
தம்பியை பார்க்கிறார் சம்பத். சிறு வயதிலிருந்து இன்றுவரை அண்ணன் என்ற மரியாதை குறையாமல் நடக்கிறான். இருவருக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பாசம், அன்பில் கடுகளவும் குறையாமல். அண்ணன் கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து நன்கு சம்பாதித்து வீடு வாசல் என்று சகல வசதிகளோடு இருக்கிறார் என்று பொறாமைப்படாமல். ஸ்கூல் டீச்சராக இருந்து வாடகை வீட்டில் சொற்ப வருமானத்தில் மகன், மகள் என்று செலவுகளை சமாளித்து வாழ்கிறார்.
அவரவருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ அதுதானே கிடைக்கும். அண்ணன் வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தபோது ஓடி, ஓடி உழைத்தவர் அவர்தான்.
எங்கண்ணன் நல்லா இருந்தா நான் நல்லா இருக்கிற மாதிரி.
உன்னை பார்த்தால் ஆச்சரியமாக இருக்குப்பா... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம. அண்ணன் கூப்பிட்டாருன்னு பத்து நாளா ஒரு வேலைகாரனை போல உழைக்கிறே. உன் மனசு எனக்கு கிடையாதுநானாக இருந்தால் பொறாமையிலேயே வெந்து போயிருப்பேன்... கிரகப்பிரவேசம் வீட்டில் தூரத்து உறவு முறை ஒருவர் சதாசிவத்திடம் சொல்ல...
யாரை பார்த்து யார் பொறாமைப்படறது. அவர் என் ரத்தம். எங்கண்ணன் புத்திசாலி. என்னை விட அதிகம் படித்தார். நல்ல வேலை கிடைச்சு. அண்ணியின் குடும்ப நிர்வாகத்தில் இன்னைக்கு வீடு கட்டியிருக்கிறார். அது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு தெரியுமா.
எங்க பரம்பரையில் எல்லாரும் சராசரியாக வாழ்ந்தாங்க... சொந்த வீடு இல்லை. இப்ப எங்கண்ணன் தலையெடுத்து வீடு கட்டியிருக்கிறார். பெருமைப்பட வேண்டிய விஷயத்தை பார்த்து பொறாமைப்பட முடியுமா...
தயவு செய்து என்கிட்டே இப்படி பேசாதே... அன்பு, பாசத்தில் இணைஞ்சிருக்கிற எங்களை இப்படியெல்லாம் பேசி பிரிக்க பார்க்காதீங்க...
தம்பியின் பேச்சை அங்கு எதேச்சையாக வந்த சம்பத் கேட்டு மனம் நெகிழ்ந்தார். இப்படியொரு உடன்பிறப்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
மணமகளே மருமகளே வா

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to மணமகளே மருமகளே வா

Related ebooks

Reviews for மணமகளே மருமகளே வா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மணமகளே மருமகளே வா - பரிமளா ராஜேந்திரன்

    1

    ஓம் பாலாரூபிணி வித்மஹே

    பரமேஸ்வரி தீமஹி

    தன்னோ கஞ்யா ப்ரேசோதயாத்

    அம்மன் முன் நெய் தீபமேற்றி பயபக்தியோடு ஸ்லோகம் சொல்லி கையெடுத்து கும்பிட்டாள் கமலா. அம்மா தாயே என் வாழ்க்கையில் தேவையான வசதிகளை கொடுத்திருக்கே. எந்த குறையுமில்லை. எந்த கவலையெல்லாம் என் மகள் வாழ்க்கை நல்லவிதமாக அமையறங்கிறதுதான். உன் அருள் வேணும் தாயே...

    கற்பூரம் ஏற்றி, கால்வலியை பொருட்படுத்தாமல் மண்டியிட்டு விழுந்து கும்பிட்டவள். சாமிரூமைவிட்டு வெளியே வந்தாள்.

    எதிரில் ப்ரக்யா. அழகின் அழகு தேவதையாக... என் மகள் ஒரு பேரழகி என்ற பெருமிதம் மனதில் தோன்றினாலும், அதை வெளிக்காட்டாமல் முகத்தில் இறுக்கத்தை கொண்டு வந்து...

    இரண்டு நாளாக நானும், அப்பாவும் உன் பதிலுக்கு காத்திருக்கோம் தெரியும்தானே... என்ன முடிவெடுத்திருக்கே...

    சிம்பிள்... எனக்கு இப்ப கல்யாணம் தேவையில்லைமா... ஏதோ ஒரு ஜாதகம், போட்டோவை பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லி, பெண் பார்த்த அடுத்த நிமிஷம் கல்யாண தேதி பார்த்து, யாரு? என்ன? என்ன பழக்கவழக்கம்? அவர் குணங்கள் எதுவும் தெரியாமல் தாலி கட்டி... குடித்தனம் நடத்த நான் தயாராகயில்லை...

    கோபம் வர அடக்கியவளாய் மகளை பார்க்கிறாள்.

    குனிந்த தலை நிமிராமல் எங்க வீட்டில் பார்த்த உன் அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப குணநலன்களில் என்ன குறைஞ்சு போயிட்டோம். ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமாக வாழலையா... அதுதான் தாம்பத்யம்...

    அது அந்த காலம்மா... இப்படி ஒத்துவராமல் வீட்டில் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு சேர்ந்து வாழ இஷ்டமில்லாமல் டைவர்ஸ் வாங்கறவங்கதான் அதிகம். அதனால் என் கல்யாணம் என் மனசுக்கு பிடிச்சவரோடுதான் நடக்கணும். நீயும், அப்பாவும் கை காட்டறவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு, புதியவரோடு என் வாழ்க்கையை இணைச்சுக்க விரும்பலை. என்னுடன் பழகி, என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவரைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்...

    இதுக்கென்ன அர்த்தம்...

    புரியலையா... என் கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜ் ஆக இருக்காது. லவ் மேரேஜ் ஆகத்தான் இருக்கும். இன்னும் என் மனசுக்கு பிடிச்சவரை நான் பார்க்கலை. பார்த்து. பழகி ஒரு வருஷம், ஆறு மாசம் கழிச்சுதான் என் கல்யாணம். அதனால் பொறுமையாக இரு. இப்ப போய் எனக்கு டிபன் எடுத்து வை. நான் வேலைக்கு கிளம்பணும்.

    ஹாலில் உட்கார்ந்து பேப்பரில் முகத்தை நுழைத்து இவர்கள் பேசுவதை கேட்டபடி இருக்கும் கணவரை பார்க்கிறாள்.

    பார்த்தீங்களா... என்ன பேச்சு பேசறா. அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்ததன் பலனை அனுபவிக்கிறோம்.

    சரி சரி புலம்பாமல் அவளுக்கு வேண்டியதை செய்து கொடு

    கிச்சனுக்குள் நுழைகிறாள்.

    ப்ரக்யா இங்கே வாம்மா...

    அப்பா, ப்ளீஸ் அம்மாகிட்டே சொன்னதுதான் உங்களுக்கும். என்னை கொஞ்சம் ஃபீரியாக விடுங்கப்பா. கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்...

    மகளை பார்த்தபடி செய்தித்தாளை மடித்து டீபாயில் வைக்கிறார் சம்பத்.

    உங்கம்மா சொன்னது உண்மைதான்மா. கல்யாணத்துக்கு முன்னால என் முகத்தை கூட அவ சரியாக பார்க்கலை. சாதாரண குமாஸ்தாவாக இருந்தேன். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவன்மா. என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்ததே உன் அம்மாதான். என் மனசு புரிஞ்சு நடந்துக்கிட்டா. கல்யாணமாகி அஞ்சு வருஷம் எங்களுக்கு குழந்தை பிறக்கலை. நான் மனசு வருந்தும் போதெல்லாம், நம்பிக்கையோடு எனக்கு ஆறுதல் சொல்லி... நிச்சயம் நமக்கு குழந்தை பாக்கியம் இருக்குங்க... பார்த்துட்டே இருங்க... மடியிலிருந்து இறக்காமல் குழந்தையை கொஞ்சத்தான் போறோம்னு சொல்லுவா.

    அவ நம்பிக்கை பலித்தது. நீ பிறந்தே... வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம். இதோ இப்ப ரிடையர் ஆகி வீட்டில் இருக்கேன். என் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாசல், கார்ன்னு சௌகரியமாக இருக்கேன். வாழ்க்கை நாம் ஒத்துக்கிற விதத்தில்தான்மா இருக்கு. எங்க ஒரே மகள் உன் வாழ்க்கை நல்லபடியாக அமையணும்னு நானும் அம்மாவும் விரும்பறோம்மா...

    சரிப்பா... உங்க விருப்பப்படி அமையும். அதுக்காக அம்மாவ போல. நீங்க கொண்டு வர மாப்பிள்ளைக்கு கண்ணை மூடி கழுத்தை நீட்ட நான் தயாராக இல்லைப்பா...

    எங்க மேல் நம்பிக்கையில்லையா ப்ரக்யா. தப்பானவனை தேர்ந்தெடுத்துடுவோம்னு நினைக்கிறியா...

    ப்ளீஸ்பா... என்னை புரிஞ்சுக்குங்க. ப்ளஸ் டூ முடிச்சேன். பி.இ. சேரச் சொன்னீங்க. எனக்கு இஷ்டமில்லை. நூற்றுக்கணக்கில் எஞ்ஜீனியரிங் காலேஜ். தடுக்கி விழுந்தா எல்லாரும் பி.இ. சேர்ந்துடறாங்க. எனக்கு அதில் இஷ்டமில்லை. பி.காம். முடிச்சுட்டு சி.ஏ. சேர்ந்து படிக்கிறேன்னு சொன்னேன். என் விருப்பத்தை புரிஞ்சு சம்மதிச்சீங்க. இதோ இப்ப பெரிய ஆடிட்டர்கிட்ட அசிஸ்டெண்டா இருக்கேன். கை நிறைய சம்பளம்... என் பிரண்டு சுதா பி.இ. முடிச்சுட்டு ஒரு பிரைவேட் கம்பெனில எட்டாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்திருக்கா... அதைபோலதான்பா இதுவும். நான் எடுக்கற முடிவு நல்லதாகதான் இருக்கும். எனக்கு நல்ல வாழ்க்கை அமையும். என் கணவரை தேர்ந்தெடுக்கிற உரிமையை என்கிட்டே கொடுத்துடுங்கப்பா...

    மகளை உறுத்து பார்க்கிறார்.

    சரிம்மா உன் இஷ்டம். ஆனா உனக்கு கல்யாண வயசு வந்தாச்சு. அடுத்த வருஷம் உனக்கு கல்யாணம் நடக்கணும்...

    நடக்கும்பா. கவலைப்படாதீங்க. இப்ப நான் போய் சாப்பிட்டு கிளம்பலாமா? அனுமதி கேட்கும் மகளை பார்த்து சிரித்தவர்.

    இப்படி சின்னச்சின்ன விஷயத்துக்குதான் எங்க அனுமதி உனக்கு தேவைப்படுது. போம்மா... அம்மா டிபன் வச்சிருப்பா...

    முந்தானையில் கையை துடைத்தபடி வந்த கமலா, சோபாவில் உட்காருகிறாள்.

    வேலைக்காரி வந்துட்டா. அதான் துணிமணி, பாத்திரங்களை எடுத்து போட்டுட்டு வந்தேன். உங்களுக்கு கொஞ்சம் காபி தரட்டுமா...

    பத்து நிமிஷம் உட்காரு. அப்புறம் போடலாம். ஏன் முகம் என்னவோ போல் இருக்கு. காலையில் உன் மகள் பேசிட்டு போனதையே நினைச்சுட்டு இருக்கியா...

    ஆமாங்க. செல்லம் கொடுத்து கெடுத்துட்டோமோன்னு தோணுது. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்ககூட விடமாட்டேங்கிறா... இவ ஒருத்தனை பார்த்து. பழகி, காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிப்பாளாம். பெத்தவங்க இதை கேட்டு வாய்திறக்காமல் இருக்க வேண்டியிருக்கு. ஆத்திரம் வர சொல்கிறாள்.

    இங்கே பாரு கமலா. நீ ஆத்திரப்படறதிலோ, கோபப்படறதிலோ அர்த்தமில்லை. உன் மகள் படிக்காதவள் இல்லை. அவளுக்கு பொறுப்பும், தகுதியும் இருக்கு. அவ வாழ்க்கையை அவளே தீர்மானிச்சிக்கிறேன்னு சொல்றா... அவ்வளவுதானே...

    "எவ்வளவு நல்ல இடம். பையன் அமெரிக்காவில் எம்.எஸ். படிச்சுட்டு வந்திருக்காரு. இங்கே பெரிய கம்பெனியில் ஜி.எம். இந்த சின்ன வயசில் எத்தனை பெரிய பதவி. குடும்பமும் கௌரவமான குடும்பம். இரண்டு தங்கைகள். அப்பா உங்களை போல கவர்ன்மெண்ட் வேலை பார்த்து ரிடையர்ட் ஆகி இப்ப இறந்துட்டாரு. சொந்த வீடு. வசதியான குடும்பம். மாப்பிள்ளை பார்க்க களையாகத்தான் இருக்காரு.

    Enjoying the preview?
    Page 1 of 1