Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஓசையின்றி மலரும்
ஓசையின்றி மலரும்
ஓசையின்றி மலரும்
Ebook86 pages29 minutes

ஓசையின்றி மலரும்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹலோ பெரியப்பா, எப்படி இருக்கீங்க?”
“என்னம்மா, கல்யாண பொண்ணு... நீ எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன் பெரியப்பா. நேத்து தான் பத்திரிகை வந்துச்சு. நாளைக்கு உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.”
“ரொம்ப சந்தோஷமாக இருக்கு மது. இதையெல்லாம் பார்க்க உங்க பெரியம்மா கொடுத்து வைக்கலை. உன் மேல் அலாதி பிரியம். சரி, சரி... நல்ல விஷயம் பேசும் போது, மனசு வருத்தப்படற விஷயங்களை நினைக்கக் கூடாது. உன் அப்பா எங்கே? வீட்டில்தான் இருக்கானா?”
“இதோ ஒரு நிமிஷம். கூப்பிடறேன் பெரியப்பா... அப்பா அமெரிக்காவிலிருந்து பெரியப்பா பேசறாரு.”
“அண்ணா, நல்லா இருக்கீங்களா. கல்யாணவேலை நடந்துட்டிருக்கு. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு. நீங்களும் கல்யாணத்தில் கலந்துகிட்டா நல்லா இருக்கும். கடல் கடந்து இருக்கீங்க. குடும்பத்துக்கு மூத்தவர், உங்க ஆசியோடு மதுமிதா கல்யாணம் நடக்கணும். உங்களால வரமுடியுமா அண்ணா?”
“எதுக்கு பரமு, தயக்கம்? நான் வரணும்... அவ்வளவுதானே? நான் இந்தியா வரப்போறேன் பரமு. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். இந்தியா வந்து - இந்த முறை ஒரு மாதத்தில் திரும்பப் போறதில்லை. உங்களோடு ஆறுமாசம் தங்கிட்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். செப். 10-ம் தேதி கிளம்பறேன். மதுமிதா கல்யாணம் என் முன்னிலையில் சிறப்பாக நடக்கும். சந்தோஷம் தானே!”ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. நீங்க வருவீங்கன்னு நான் கனவிலும் நினைக்கலை. எங்களோடு ஆறு மாதம் இருக்கேன்னு சொன்னது மனசுக்கு நிறைவா இருக்கு. நீங்க இந்தியாவில் இருக்கும் போது சேர்ந்திருந்த நாட்கள்தான் ஞாபகம் வருது.”
அவர் குரலில் உண்மையான அன்பும், பாசமும் தெரிந்தது.
“எங்க அண்ணன், நம்ப மதுமிதா கல்யாணத்தில் கலந்துக்க, அமெரிக்காவிலிருந்து வர்றாரு. இந்தியாவில் ஆறுமாதம் தங்கப் போறதாக சொன்னாரு.”
சந்தோஷ குரலில் சொல்லும் கணவனை பார்த்தாள் சரோஜா. “ம், அவருக்கென்ன தனி மனுஷன். உங்க அண்ணி இறந்து ஒரு வருடமாச்சு. மகனும், மகளும் அமெரிக்காவில் வாழ்ந்ததிலே, அந்த ஊர் பிரஜை மாதிரி, அந்த நாட்டுக் காரங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அமெரிக்க மருமகன், மருமகள். இவரை யார் திரும்பிப் பார்க்கப் போறா... அதான், தனியா பொழுதை ஓட்ட முடியாம... ஆறுமாசம் இந்த பக்கம் வரலாம்னு முடிவு பண்ணியிருப்பாரு.”
“எப்படியோ, அவர் வாழற வாழ்க்கை நமக்கு எப்படி தெரியும்! வரணும்னு பிரியப்பட்டு வர்றாரு. வந்து சந்தோஷமா இருந்துட்டு போகட்டும். நாங்க மூணு பேர். ஒண்ணா ஒரு தாய் வயிற்றில் பிறந்தோம். இப்ப ஆளுக்கொரு திசையில் இருக்கோம். அண்ணன் அந்தக் காலத்திலிருந்தே குணம் மாறாமல் அதே பிரியம், பாசத்தோடு இருக்காரு. என் தங்கச்சி தான் உள்ளூரில் இருந்தும், இப்படி பேச்சு வார்த்தை இல்லாமலே போயிடுச்சி.”
“இங்கே பாருங்க. இப்ப எதுக்கு உங்க தங்கச்சி பேச்சை எடுக்குறீங்க? அவளை, மனசிலிருந்து என்னைக்கோ தூக்கியெறிஞ்சாச்சு. சந்தோஷமான இந்த நேரத்தில் அவ பேச்சு வேண்டாம்.”
பரமுவின் மனதில் - ஐந்து வருடமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும் - அவர் தங்கை சுமித்ரா வந்து போகிறாள்.
“அப்பா, வாங்க சாப்பிடலாம். நேரமாச்சு.”
மகள் அழைக்க, தங்கையின் நினைவுகளை ஒதுக்கி வைத்தவராக எழுந்து கொள்கிறார்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
ஓசையின்றி மலரும்

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to ஓசையின்றி மலரும்

Related ebooks

Reviews for ஓசையின்றி மலரும்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஓசையின்றி மலரும் - பரிமளா ராஜேந்திரன்

    1

    கண்ணாடி முன் நின்ற அன்பு, தன் சுருளான முடியை சீவி மேலும் அழகு படுத்தினான். கண்ணாடியில் தெரிந்த பிம்பம் அவன் அழகன் என்பதை பறைசாற்றியது.

    உள் அறையில் அம்மாவும், மதுமிதாவும் சிரித்துப் பேசுவது அவனுக்கு கேட்டது. கல்யாணப்பெண். சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்!

    அன்பு... சாப்பிடவாப்பா.

    டேபிள் முன் அமர்ந்தான் அன்பரசு.

    என்ன மதுமிதா, இன்னைக்கு உன் கை வண்ணமா? உன் புருஷனுக்கு சமைச்சுபோட, சமையல் பழகி, என்னை டிரையல் பார்க்கிறீயா?

    போ அண்ணா, நல்லாதான் பூரி, உருளைக்கிழங்கு மசாலா செய்திருக்கேன். சாப்பிட்டு பாரு

    வாசல் கதவை திறந்து கொண்டு பரமானந்தம் உள்ளே நுழைந்தார். கையோடு கொண்டு வந்த அட்டை பெட்டியை டேபிள் மீது வைத்தவர்,

    சரோஜா, கல்யாண பத்திரிகை வாங்கிட்டு வந்துட்டேன். வந்து சாமிகிட்டே வச்சுட்டு, பிரிச்சு எடுத்துட்டு வா.

    கணவர் சொன்னதுபோல், சுவாமி அறையில் வைத்து கண்மூடி பிரார்த்தித்தவள், பார்சலை பிரித்து பத்திரிகையை எடுத்தாள்.

    பளபளக்கும் எழுத்துக்களில் பத்திரிகை நன்றாக இருந்தது.

    மது... இந்தாம்மா! பாரு. உன் கல்யாண பத்திரிகை பிரிண்ட் பண்ணி வந்துடுச்சு.

    மது வெட்ஸ் அரவிந்த்

    பொன்னெழுத்துக்களில் மின்னும் பெயர்களைப் பார்த்த மதுமிதாவின் கண்களில் சந்தோஷம் மின்னியது.

    அப்பா... கல்யாணபத்திரிக்கை நல்லா இருக்குப்பா. பிரிண்டிங்கும் தெளிவா இருக்கு.

    சொன்ன அன்பு, நான் கிளம்பறேன். எனக்கு நேரமாச்சு.

    அரசுடமை வங்கியில் ஃபீல்ட் ஆபிசராக வேலை பார்க்கிறான் அன்பரசு. அவன் தங்கை மதுமிதா டிகிரி முடித்து, பெற்றவர்கள் அவளுக்கு பார்த்த சாஃப்டுவேர் இன்ஜினீயரான அரவிந்தை மணக்க இருக்கிறாள். நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்று முடிய, இருவரும் கல்யாண கனவுகளுடன், போனிலும், வெளியிடங்களிலும் சந்தித்து மணிக்கணக்கில் பேசி கொண்டிருந்தார்கள்.

    நம்ம காலத்தில், பெண் பார்க்கும்போது பத்து பேர் பக்கத்தில் இருப்பாங்க. சரியாக்கூட முகத்தை பார்க்க முடியாது. தாலிகட்டிய பிறகுதான் உங்க முகத்தையே நான் நல்லா பார்த்தேன். இப்ப பார்த்தீங்களா, நிச்சயம் பண்ணின அடுத்த நாளிலிருந்து, உரிமையோடு போனில் பேசறதும், உரிமையோடு வீட்டுக்கு வந்து, ‘அங்கிள், நானும் மதுவும் வெளியே போய்ட்டு வர்றோம்’னு சொல்லி, பைக்கில் கூட்டிட்டு போறாதும்... சரோஜா கணவனிடம் சொல்ல,

    நீ இப்ப என்ன சொல்ல வர்றே? இதெல்லாம் நமக்கு கிடைக்கலையேன்னு வருத்தப்படறியா?

    பரமானந்தன் சொல்லி சிரிக்க –

    அடபோங்க, உங்களுக்கு எல்லாமே கிண்டல்தான்.

    அப்பா அம்மாவின் பேச்சை காதில் வாங்காமல்,

    அரவிந்த், கல்யாண பத்திரிகை பிரிண்ட் பண்ணி வந்தாச்சு. ரொம்ப நல்லா இருக்கு. - மதுமிதா, செல்போனில் பேசியபடி, தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.

    2

    "ஹலோ பெரியப்பா, எப்படி இருக்கீங்க?"

    என்னம்மா, கல்யாண பொண்ணு... நீ எப்படி இருக்கே?

    நல்லா இருக்கேன் பெரியப்பா. நேத்து தான் பத்திரிகை வந்துச்சு. நாளைக்கு உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

    ரொம்ப சந்தோஷமாக இருக்கு மது. இதையெல்லாம் பார்க்க உங்க பெரியம்மா கொடுத்து வைக்கலை. உன் மேல் அலாதி பிரியம். சரி, சரி... நல்ல விஷயம் பேசும் போது, மனசு வருத்தப்படற விஷயங்களை நினைக்கக் கூடாது. உன் அப்பா எங்கே? வீட்டில்தான் இருக்கானா?

    இதோ ஒரு நிமிஷம். கூப்பிடறேன் பெரியப்பா... அப்பா அமெரிக்காவிலிருந்து பெரியப்பா பேசறாரு.

    அண்ணா, நல்லா இருக்கீங்களா. கல்யாணவேலை நடந்துட்டிருக்கு. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு. நீங்களும் கல்யாணத்தில் கலந்துகிட்டா நல்லா இருக்கும். கடல் கடந்து இருக்கீங்க. குடும்பத்துக்கு மூத்தவர், உங்க ஆசியோடு மதுமிதா கல்யாணம் நடக்கணும். உங்களால வரமுடியுமா அண்ணா?

    எதுக்கு பரமு, தயக்கம்? நான் வரணும்... அவ்வளவுதானே? நான் இந்தியா வரப்போறேன் பரமு. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். இந்தியா வந்து - இந்த முறை ஒரு மாதத்தில் திரும்பப் போறதில்லை. உங்களோடு ஆறுமாசம் தங்கிட்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். செப். 10-ம் தேதி கிளம்பறேன். மதுமிதா கல்யாணம் என் முன்னிலையில் சிறப்பாக நடக்கும். சந்தோஷம் தானே!

    "ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. நீங்க வருவீங்கன்னு நான் கனவிலும் நினைக்கலை. எங்களோடு ஆறு மாதம் இருக்கேன்னு சொன்னது மனசுக்கு நிறைவா இருக்கு. நீங்க இந்தியாவில் இருக்கும் போது சேர்ந்திருந்த நாட்கள்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1