Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணோரம் மின்சாரம்
கண்ணோரம் மின்சாரம்
கண்ணோரம் மின்சாரம்
Ebook104 pages38 minutes

கண்ணோரம் மின்சாரம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அம்மா தங்கம் வாசலில் ஆரத்தியோடு காத்திருந்தாள். காரிலிருந்து மகன் இறங்கியதும் கண் நிறையக் கண்டு வாய் நிறைய வரவேற்று ஆரத்தி காட்டினாள்.
 "அம்மா... எப்படிம்மா இருக்கே?"
 "நல்லாயிருக்கேம்ப்பா!" கண் கலங்க அம்மா சொன்னாள் "வாப்பா..."
 உள்ளே அழைத்துச் சென்றாள்.
 உள்ளே நுழையும் போதே விதவிதமான வாசனை சமையலறையிலிருந்து வந்தது. நுகர்ந்த நொடியிலேயே பசி வயிற்றைப் புரட்டியது.
 "அம்மா! நான் குளிச்சட்டு வர்றேன். ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வை."
 "வாப்பா! உனக்குப் பிடிச்ச மாதிரி எல்லாம் சமைச்சு வச்சிருக்கேன்."
 அம்மா துரிதமாகச் செயல்பட்டாள். பரபரப்பாகச் சாப்பாட்டு மேஜை மீது எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்தாள்.
 வேலைக்காரர்களை ஏவினாள். சைவம் அசைவம் அனைத்தும் மேஜையில் பரவியது நிமிடத்தில்.
 "என்னங்க... வாங்க நீங்களும். அவனோட சேர்ந்து சாப்பிடுங்க!" கணவரை நோக்கிக் குரல் கொடுத்தாள்.
 "வர்றேன்... வர்றேன். புள்ளை வர்றான்னதும் அமர்க்களப் படுத்தியிருக்கே! ம்... இனி புருஷன் ஞாபகம் எங்க இருக்கப் போகுது?" என்றவாறே வந்தார்.
 "அப்பா... என்னப்பா... அம்மாவைப் பத்தி என்ன சொல்றிங்க?"
 "அதுவா... பார், வந்து இந்த மேஜையை! நீயே புரிஞ்சுப்பே..." உட்கார்ந்தபடியே சொன்னார் சிங்கார மூர்த்திளித்துவிட்டுச் சாப்பிட வந்த சத்யன் சாப்பாட்டு மேஜையைப் பார்த்து விழிகளை அகல விரித்தான்.
 "அம்மா... நான் வர்றதை முன்னிட்டு இந்த ஊருக்கே! விருந்து கொடுக்கப் போறியா? இவ்வளவு சமைச்சு வச்சிருக்கே"
 "நீ வேணா சொல்லு. ஊருக்குச் சாப்பாடு போட்டுடுவோம். நம்ம வசதிக்கு இந்த நாட்டுக்கே சாப்பாடு போடச் சொன்னாலும் போடலாம்." சிங்கார மூர்த்தி பெருமையாகத் தோள் தட்டிச் சிரித்தார்.
 சுவரோரமாக வேலைக்காரர்கள் எஜமானியம்மாவின் சொற்களுக்காகக் காத்திருந்தனர். வாழையிலையில் வகை வகையாக மணம் வீசிய சமையல் ஐட்டங்கள் அவசர அவசரமாக ஆவலைத் தூண்டின. பிசைந்து வாயில் வைக்கப் போனவன், நினைத்துக் கொண்டதைப் போல் கேட்டான்.
 "அம்மா... பங்கஜம் பாட்டி இருந்தாங்களே... அவங்க எங்க?" பங்கஜம் பாட்டி என்பவள் அந்த வீட்டில் சமையல் காரியாக இருந்தவள்.
 "சாப்பிடுப்பா முதல்ல. சாப்பிடற நேரத்திலே எதுக்கு வீண் பேச்சு."
 அம்மா சொன்னதைக் காதில் வாங்காதவனாக, "பாட்டிக்கு என்னாச்சு?" என்று பயமாக வினவினான்.
 "பாட்டிக்கு ஒண்ணும் ஆகலை. செத்து கித்து போயிட்டாளோன்னு பயப்படறியா? அதெல்லாம் சாகாது. பூமிக்குப் பாரமா கிடக்கும் இன்னும் பல வருஷத்துக்கு."
 "அப்பறம் ஏன் நம்ம வீட்ல வேலை செய்யலை..."
 "அட... என்னப்பா நீ, சாப்பிடாம? வேலைக்காரங்களைப் பத்தி விசாரிச்சுக்கிட்டு?" அப்பா குறுக்கிட்டார்.
 "வேலைக்காரங்களாயிருந்தா என்னப்பா? அவங்களும் மனுஷங்கதானே! அதுவும் நமக்காக உழைக்கறவங்க!"
 "அது ஒண்ணுமில்லைப்பா! கிழவிக்கு வயசாயிடுச்சு. கண்ணும் தெரியலை. மண்ணும் தெரியலை. சாப்பாட்டிலே உப்புக்குப் பதிலா சர்க்கரையைக் கொட்றதும் சர்க்கரைக்குப் பதில் உப்பைக் கொட்றதுமாயிருந்தது. அதான் வேலையை விட்டு நிறுத்திட்டோம்!அதுக்காக வேலையை விட்டு நிறுத்தணுமா? வேறு ஏதாவது வேலை கொடுக்கக் கூடாதா? பாவம் பாட்டி, கூலி கொண்டு வந்து கொடுக்கும் போதே மவன் குடிச்சுட்டு வந்து சோறு போட மாட்டான். சம்பாதிக்காத காலத்துல என்ன சோற போட்டுடப் போறான்?" சத்யன் கவலையாக வினவினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223819912
கண்ணோரம் மின்சாரம்

Read more from R.Sumathi

Related to கண்ணோரம் மின்சாரம்

Related ebooks

Related categories

Reviews for கண்ணோரம் மின்சாரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணோரம் மின்சாரம் - R.Sumathi

    1

    பேருந்து இரைச்சலுடன் நின்றது. கையில் சூட்கேஸுடன் இறங்கினான் சத்தியன். மண் வாசனையை நுகர்ந்ததுமே, மனம் முழுவதும் ஊற்றெடுத்தது மகிழ்ச்சி வெள்ளம்.

    எத்தனை வருடங்கள்? சரியாக ஆறு வருடங்கள்.

    பணம் பணம் எனப் பணத்தையே குறி வைத்து, சம்பாத்யத்தில் சரணடைந்து, துபாயில் கிடந்த வருடங்கள்! ஏக்கமாக எப்பொழுதாவது எழும் ஊர் நினைவு. உற்றார் உறவினர்களை உள்ளம் நினைப்பது இயற்கை. ஆனால் வீட்டு வேலைக்காரர்களைக்கூடப் பார்க்க வேண்டும் போலொரு உணர்வை உண்டாக்கக் கூடியது இந்த வெளிநாட்டு வாசம் மட்டுமே!

    முதல் வரவேற்பைக் கொடுத்தது தென்றல்தான். ஓடிவந்து தழுவிக் கொண்டது. கன்னம் வருடித் தாய்ப் பாசத்தைக் காட்டுவதைப் போலிருந்தது.

    வயலிலும் வயல் சார்ந்த பகுதிகளிலும் வளைந்து நெளிந்து ஓடி வந்ததை வாசனையால் உணர்த்தியது இதமாய்த் தழுவிய இளந்தென்றல். இமை மூடி ஒரு கணம் நிமிர்ந்தான்.

    பின் விழி திறந்து பார்வையை நாலாபுறமும் வீசியபோது, அவனுக்குப் பெருமையாக இருந்தது.

    பார்க்கப் பார்க்க அவனுக்குப் பாரதியின் பாடல்கள் கண்ணெதிரே காட்சி கொண்டு நிற்பதைப் போல், நடப்பதைப் போல், பறப்பதைப் போலிருந்தது.

    புதுமைப் பெண்களைப் போல் தலை நிமிர்ந்து நிற்கும் தென்னை, பனை, பாக்கு மரங்கள். அந்த மரங்களே பாடுவதைப் போல் கேட்கும் குயில் பாட்டு.

    ‘ஓடி விளையாடு பாப்பா’ எங்களுக்குத்தான் சொல்லப்பட்டது எனத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டு துள்ளி விளையாடும் ஆட்டுக் குட்டிகள்.

    விடுதலைக் கும்மியைச் சிறகுகளால் அடித்துக் கொண்டு சுதந்திர வானில் சுற்றித் திரியும் பறவைகள். நந்தலாலாவை ஞாபகப்படுத்தும் காக்கைச் சிறகுகள்!

    பொன்னை நிகர்த்த மேனி கொண்டு குளம்! அதில் தீராத விளையாட்டுப் பிள்ளையாய் நீந்தி நீந்திக் களிக்கும் மீன்கள்.

    மஞ்சள் ஒளியை மாரனம்புகளாய்ப் பூமி மீது வானம் வாரி வாரி வீசிக் கொண்டிருந்தது.

    ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என மனித மனம் இயற்கையை வியக்க...

    தலை கவிழ்ந்து கிடந்த நெற்கதிர்களோ மனிதரைப் பார்த்து, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...?’ என வெட்கித் தலை குனிந்து கிடப்பதைப் போல்... தரையில் முட்டிக் கொள்வதைப் போல் தோன்றியது.

    பார்க்கும் அத்தனையும் பாரதியின் பாடல்களாகத் தோன்றியது. காசுக்காக நாடு கடந்து நகர்ந்திருந்தாலும், கவிதையும், கற்பனையும் எப்பொழுதும் ஊரையே ஞாபகப்படுத்தின.

    பின்னால் கார் ஒன்று ஹாரன் அடித்து நின்றது. நினைவுகள் கலையத் திரும்பியபோது கதவைத் திறந்து கொண்டு இறங்கியவரைக் கண்டதும் சட்டென்று அவனுடைய முகம் மலர்ந்தது. சிங்கார மூர்த்தி!

    அப்பா...

    வாப்பா சத்யம். உன்னைக் காக்க வைக்கக் கூடாதுன்னே வேகமா காரை ஓட்டிக்கிட்டு வந்தேன். ஆனாலும்... லேட்டாயிடுச்சு. வாப்பா... வந்து வண்டியில ஏறு.

    காரில் அமர்ந்ததும் கேட்டான்.

    அப்பா... எப்படியிருக்கிங்க? அம்மா எப்படியிருக்காங்க?

    எல்லோரும் நல்லாயிருக்கோம். நீதான் இளைச்ச மாதிரி இருக்கே! உங்கம்மா பார்த்தா வேதனைப்படுவா.

    அடப்போங்கப்பா! நானே எடை ஏறிப் போய்ட்டமேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்.

    ம்... உங்கம்மாதான் ரொம்ப இளைச்சுப் போய்ட்டா!

    அப்பா! என்ன சொல்றிங்க? அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது...?

    உடம்புக்கு ஒண்ணுமில்லை. மனசுக்குத்தான் நோய்... எல்லாமே உன்னாலதான். நமக்கு ஊர் முழுக்கச் சொத்து இருக்கு. சம்பாத்யம்தான் புருஷ லட்சணம்னு சொல்லி நீ பாட்டுக்கு வெளிநாடு போய்ட்டே! பணத்தைச் சம்பாதிச்சு அனுப்பினே! ஆனா அம்மாவோட மனசுக்கு அதெல்லாம் சந்தோஷமா? நீ பக்கத்துல இல்லையேங்கற கவலையே அவளை எரிச்சு எடுத்துட்டுது!

    அதான் வந்துட்டேனே! அப்பறம் என்ன? இருவரும் பேசிக் கொண்டேயிருந்தனர். கார் போய்க் கொண்டே இருந்தது.

    சத்யம் உறவினர்கள், நண்பர்கள் என விசாரித்து கொண்டே வந்தான்.

    உன் ஃபிரண்ட் ராஜா உன்னை மாதிரியே வெளிநாடு போய்ட்டான். பிரகாஷ் சென்னையில் வேலை கிடைச் போய்ட்டான். உதவாக்கரையா சுத்திக்கிட்டிருப்பானே பாலு அவன் கூட அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமன் வச்சுக் கொடுத்த மளிகைக் கடையைப் பார்த்துக்கிட்டு இருக்கான். உன் கூட இருந்தவங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிட்டுது. நீ ஒருத்தன்தான் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கே! அம்மாவுக்கு அதுதான் கவலை.

    சத்தியன் சிரித்தான்.

    அப்பா... சுத்தி வளைச்சுக் கல்யாணப் பேச்சைத் தொட்டுட்டிங்க.

    தொட்டதாவது... கிட்டத்தட்ட முடிச்சாச்சுன்னு வை.

    ஐயோ... என்னப்பா சொல்றீங்க?

    ஆமாப்பா... உன் அம்மா உனக்குப் பொண்ணெல்லாம் பார்த்தே வச்சுட்டான்னு வச்சுக்கயேன். நீ தாலி கட்ட வேண்டியதுதான் பாக்கி. நாங்க பார்த்த பொண்ணை மறுப்பு சொல்லாம கட்டிப்பேதானே! இல்லே... பொண்ணு இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும்னு சொல்லுவியா?

    கழுதையோ குதிரையோ... நீங்க கைகாட்டறதுக்கு தாலி கட்டுவேன்.

    நீ வேணா கழுதைக்கும் குதிரைக்கும் தாலி கட்டிக் குடும்பம் நடத்தத் தயாராயிருக்கலாம். ஆனா... கழுதையை குதிரையையெல்லாம் மருமகளாக்கிக்க நாங்க தயாரா இல்லை. எங்களுக்கு வர்ற மருமக நல்ல அழகியா, நம்ம சொத்துக்களைத் திறமையா நிர்வாகம் செய்யறவளா இருக்கணும். எல்லாத்துக்கும் மேல நம்ம அந்தஸ்துக்கும், கெளரவத்துக்கும் ஏற்றவளா இருப்பா.

    சத்யன் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து வெளியே பசுமையாகப் பின்வாங்கும் வயல் வெளிகளில் பார்வையைச் செலுத்தினான்.

    தூரத்து மலைமுகட்டுக்குப் பின்னால் சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். ஆட்கள் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

    திடீரென ஞாபகம் வந்தவனாகக் கேட்டான்

    அப்பா... இந்தப் பக்கம் ஒரு குறுக்குப் பாதை இருக்கே! ஐயனார் கோவில் குளம் கூட இருக்கே! இந்தப் பக்கம் போனா சீக்கிரம் வீட்டுக்குப் போயிடலாமேப்பா...

    இல்லப்பா... வேண்டாம்!

    ஏன்ப்பா... அந்தப் பாதையில ஏதாவது பிரச்சனையா?

    "பாதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா... யாரும் அந்தப் பக்கமா

    Enjoying the preview?
    Page 1 of 1