Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjil Pathintha Nilavu
Nenjil Pathintha Nilavu
Nenjil Pathintha Nilavu
Ebook132 pages39 minutes

Nenjil Pathintha Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் மனைவியுடன் அன்பாகவும், பாசமாகவும் வாழ்ந்தாலும், அவன் மனைவிக்கு உடல் ரீதியான தொந்தரவு ஏற்பட அவள் தங்கையை திருமணம் செய்ய விரும்புகிறான்.

இந்நிலையில் அவன் மனைவி எப்படி இறக்கிறாள், அவள் தங்கையை மணந்தானா ரகு.

இறுதியில் ரகுவின் நிலை என்னானது? படிக்கலாமா... நெஞ்சில் பதிந்த நிலவை...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606475
Nenjil Pathintha Nilavu

Read more from R. Manimala

Related to Nenjil Pathintha Nilavu

Related ebooks

Reviews for Nenjil Pathintha Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjil Pathintha Nilavu - R. Manimala

    https://www.pustaka.co.in

    நெஞ்சில் பதிந்த நிலவு

    Nenjil Pathintha Nilavu

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    மனசைக் கொத்திய காட்சி, அது!

    எதிர்வீட்டு கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இரண்டு புறாக்கள்... அலகால் உரசியபடி காதல் பண்ணின.

    உடல்பயிற்சி செய்துக்கொண்டிருந்த அஸ்வின், சற்று நேரம் நிறுத்திவிட்டு... அந்தப் புறாக்களையே பார்த்தான்.

    'கொடுத்து வைத்த புறாக்கள். எந்தவித இடர்ப்பாடும் இல்லாமல் காதலிக்கின்றன. சாதி வந்துப் பிரித்துவிடும், பணம் வந்து தடுத்துவிடும் என்ற பயமில்லை. பிறந்தால் பறவையாய், விலங்காய்ப் பிறக்க வேண்டும்.

    இன்னுமா முடியலே? என்றபடி மொட்டைமாடிக்கு வந்தாள், அன்னம்மாள்.

    வாளி நிறைய துவைத்ததுணிகள். காயப்போட வந்திருந்தாள்.

    முடிச்சாச்சு! இன்னைக்கு என்ன சாப்பாடு பாட்டி? குளிச்சிட்டு அவசரமா வெளியே போகவேண்டிய வேலை இருக்கு!

    நேற்றிரவுதானேப்பா பெங்களூரிலேருந்து வந்தே? ஓய்வெடுக்காம வெளியே போறேங்கிறியே?

    ஆபீஸ் வேலை பாட்டி! ஒரு மணி நேரம்தான். முடிச்சிட்டு, மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு படுக்கப் போறேன். அதோடு நாளைக் காலையில்தான் எந்திரிப்பேன். சரி, என்ன சாப்பாடுன்னு கேட்டேனே?

    சேமியா கிச்சடி!

    அய்யோ பாட்டி... கிச்சடியா? இது, உப்புமாவுக்கு அக்கா தானே? வேணாம்...

    பார்த்தியா... உனக்காகத்தானே சமைச்சேன்? வேண்டாங்கிறியே...!

    போ... பாட்டி! உன் சமையலே எனக்குப் பிடிக்கலே... தாத்தாவுக்கு காரம் ஆகாது, புளிப்பு ஆகாதுன்னு உப்பு சப்பில்லாம சமைக்கிறே! அம்மா சமைச்சாங்கன்னா... கண்ணுல தண்ணி வரும். அவ்வளவு காரமா சமைப்பாங்க!

    தாத்தாவுக்கு தனியா, உனக்குத் தனியா சமைக்கிற அளவுக்கு எனக்கு உடம்புல பலமில்லே, அஸ்வின். உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா... அவகிட்டே உன்னை ஒப்படைச்சிட்டு அக்கடான்னு உக்காருவேன். நீதான் விடாப்பிடியா பொண்ணெல்லாம் பார்க்காதேங்கிறே?

    உன்னைதான் பார்க்க வேணாம்னு சொன்னேன். நானே பார்த்துக்கிறேன்!

    கலி முத்திடுச்சு... இந்த காலத்துப் புள்ளைங்க எவ்வளவு தைரியமா பேசதுங்க, கூச்ச நாச்சமில்லாம? எங்க காலத்துல...

    தாத்தா உன்னை முதலிரவுலதான் முதன்முதலா பார்த்தாருன்னு ஆயிரத்தெட்டாவது முறையா சொல்லப்போறே! அதானே? போரடிக்குது... விட்ரு பாட்டி! நான் முடிவே பண்ணிட்டேன்... காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிப்பேன்!

    அந்த கருமத்தையாவது சீக்கிரம் பண்ணித்தொலை!

    எங்கே பாட்டி... எனக்காகவே படைச்சவளை பிரம்மன் இன்னும் என் கண்ணுலே காட்டலியே!

    உலக அழகிப் போல தேடுறியாக்கும்!

    ஊகூம்... மனசு அழகா இருக்கிற... என் தாத்தா, பாட்டியைப் பாரமா நினைக்காத, அன்பான உள்ளூர் அழகியைத்தான் தேடுறேன். நேரமாச்சு... நான் குளிக்கப்போறேன்! மாடிப்படியில் தடதடத்து கீழிறங்கி ஓடிய பேரனை சின்ன சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள், பாட்டி.

    ஐந்து ஆண்டுக்கு முன் கோவிலில் எவனோ ஒரு தீவிரவாதி வைத்த வெடிகுண்டால் சிதறி சின்னாபின்னமான முப்பது பேர்களில் இவனைப் பெற்றவர்களும் அடக்கம்.

    அன்று முதல் தாத்தா, பாட்டியிடம் தஞ்சமடைந்தான். பெற்றோரின் இழப்பால் அவன் மனதில் மலையளவு சோகம் இருந்தது. அதை வயதான இவர்கள் முன் வெளிப்படுத்திக் கொள்ளமாட்டான். வேண்டுமென்றே சீண்டி, கிண்டலும், கேலியுமாய் தன்னை ஆனந்தமாய் இருப்பவனைப் போல் காட்டிக்கொள்வான். அவனது புன்னகை பூத்த முகத்தை பார்த்துதான் மகள், மருமகனின் கொடூர மரணத்தை நெஞ்சத்தின் அடியில் போட்டு பூட்டி நிம்மதியாய் இருந்தனர், பெரிசுகள்.

    அஸ்வின், ஒரு தனியார் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்தான். விரைவில் பதவி உயர்வு காத்திருக்கிறது. அலுவல் விஷயமாக மாதத்தில் பாதி நாள் பெங்களூருக்குப் போய் வருவான்.

    எந்தப் பெண்ணையுமே வசீகரிக்கக்கூடிய அழகுடன், கம்பீரமாய் இருப்பான், அஸ்வின். பேரன் அழகாய் இருப்பதில் அன்னம்மாளுக்கு ஏகப் பெருமை.

    கொடியில் வந்தமர்ந்த காக்கையை விரட்டிவிட்டு, சரிந்திருந்த முல்லைக்கொடியை இழுத்துக் கட்டினாள். மொட்டைமாடியில் பாதி இடத்தை தோட்டமாய் மாற்றியப் பெருமை அஸ்வினையே சேரும். அவனுக்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம் உண்டு. அக்கம் பக்கத்தில் இடைவெளியின்றி வீடுகள் இருந்ததால் கீழே பூமியில் செடிகள் வளர்க்கும் வாய்ப்பில்லை. அதனால் ஆசையை மொட்டைமாடியில் தீர்த்துக்கொண்டான்.

    மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி, சூரியகாந்தி, நிறம் மாறும் ரோஜா என்று பலவகை பூச்செடிகளும், வெண்டை, பாகை, புடலங்காய், கத்திரி, தக்காளி, மிளகாய் மற்றும் கீரை வகைகளுமாய்... பார்க்கவே ரம்மியமாய் இருக்கும்.

    எதுக்குப்பா இவ்வளவு செடிகொடிகளும்? நீ ஊர்ல இல்லாத நாள்ல பராமரிக்க சிரமமா இருக்கு!

    இதோ பாரு அன்னம்... என் தோட்டம் கொஞ்சம் வாடினாலும் உன்னை சும்மா விடமாட்டேன். ஆமாம்!

    காய்கறி, சமைக்கிறதுக்கு சரி... இதெல்லாம் எதுக்கு? இந்த வயசான காலத்துல பூச்சூடி அலங்காரம் பண்ணிக்கவா?

    ஆசையைப் பாரு... இங்கே பூக்கிற பூவெல்லாம் என் அப்பா அம்மா படத்துக்குப் போடுறதுக்கு... புரிஞ்சுதா?

    அவன் விளையாட்டாய் சொன்னாலும் தினமும் பூத்தொடுத்து படங்களுக்கு மாலைப் போடும்போது நெஞ்சம் கனத்துபோகும், அன்னம்மாளுக்கு.

    குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டான், அஸ்வின். அவனைப் பார்த்ததும் படித்துக்கொண்டிருந்த தினத்தந்தியுடன் எழுந்தார், பெருமாள்.

    வா... வா... உனக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தேன்.

    எனக்காக காத்திருந்தீங்களா? ஏன் தாத்தா?

    சாப்பிடுறதுக்குதான். அன்னம்... தட்டு எடுத்து வை! இன்னைக்கு கிழவி சூப்பரா கிச்சடி பண்ணி இருக்கா! என்றார், தாத்தா சப்புக்கொட்டியபடி.

    சூப்பரா... ம்... அதை நீங்களே சாப்பிடுங்க. நான் மித்ரா வீட்டுலே சாப்பிட்டுக்கிறேன் என்று புறப்பட்டான்.

    அடுத்த வீட்டு சமையல் உனக்கு உசத்தியாப் போயிடுச்சா? ரொம்ப மாறிட்டேடா...? என் பொண்ணு உயிரோடு இருந்தா... இப்படி...

    உஸ்... கணவனை அதட்டினாள், அன்னம்மாள்.

    என்னங்க நீங்க... பழசை ஞாபகப்படுத்தி பேசிக்கிட்டு...

    பின்னே என்ன? வயசான காலத்துல நீ எவ்வளவோ கஷ்டப்பட்டு சமைக்கிறே? வீணாகுதில்லையா?

    இருக்கட்டும் விடுங்க... அவன் சுவைக்கு ஏத்தமாதிரி நானும் சமைக்கிறதில்லே... பாவம் புள்ளையோட நாக்கு செத்துப் போயிருக்கும். அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவச்சிட்டா நிம்மதியா மூச்சு விடலாம்! என்றாள், அன்னம்மாள்.

    ***

    "சீக்கிரம் மாலினி... ஆபீசுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1