Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasellam Banthalitten!
Manasellam Banthalitten!
Manasellam Banthalitten!
Ebook115 pages37 minutes

Manasellam Banthalitten!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாதங்கி, கல்யாண் இருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் நின்றது ஏன்? இதனால் இவ்விருவரின் குடும்பத்தின் நிலை என்ன ஆயிற்று? ப்ரியா யார்? இறுதியில் ப்ரியா, கல்யாண் இருவரின் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது? என்பதையும் வாருங்கள் வாசித்து அறிந்துகொள்வோம்...!

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580140609934
Manasellam Banthalitten!

Read more from R. Manimala

Related to Manasellam Banthalitten!

Related ebooks

Reviews for Manasellam Banthalitten!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasellam Banthalitten! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனசெல்லாம் பந்தலிட்டேன்!

    Manasellam Banthalitten!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    தலைக்குள் ஏதோ ரீங்கரிக்க... கனவில் மூழ்கி இந்திரனின் பின்னே விரட்டிச் சென்றுக்கொண்டிருந்த சசிரேகா கனவை விட்டு வெளியே வந்தாள். சற்றே உறக்கம் கலைய தலையணை அருகில் இருந்த மொபைலை விழிதிறவாமலேயே ஸ்வைப் செய்துவிட்டு பின் திறந்தாள். ஸ்க்ரீனில் இந்திரன் இவளை விழுங்கி விடுவதுப்போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் போட்டோவினை தன் உதடுகளால் மூடினாள்.தினமும் நடக்கும் வைபவம்தான். மகளை எழுப்ப உள்ளே வந்த புனிதா அதைப் பார்த்து, சற்றே வெட்கத்துடன் சிரித்துவிட்டு வந்த சுவடேத் தெரியாமல் வெளியேறினாள்.

    இந்த காலத்துப் பொண்ணுங்களை என்னன்னு சொல்றது? எல்லாத்திலேயும் வேகம், சங்கோஜம் துளியும் கிடையாது. எங்க காலத்துல போட்டோ கைல கிடைக்கவே மாசக் கணக்குல ஆகும். கல்யாணம் ஆனபிறகும் நிமிர்ந்து பார்த்துப் பேச எங்கேயிருந்தது துணிவு? இதுங்க கல்யாணத்துக்கு முன்னாடியே வீடியோ கால்ல பேசிக்கிடுதுங்க. முருகா... எல்லாத்தையும் நல்லபடி நடத்தி முடிச்சுக்குடுப்பா!’

    குளித்து தலையை துவட்டியபடி, இடுப்பில் டவலுடன் வந்த கல்யாண், துவட்டிய துண்டை சோபாவின் முதுகில் விரித்துப் போட்டுவிட்டு பூஜையறை நோக்கிச் சென்றான்.

    இருவர் மட்டும் அமரக்கூடிய அகலத்தில் மிகச் சின்ன அறைக்குள் புகைப்படங்களில் அருள்பாலித்துக் கொண்டிருந்தனர் எல்லா கடவுள்களும். தோட்டத்தில் மலர்ந்திருந்த செம்பருத்தியும், அரளியும் சூடிக் கொண்டிருந்தனர். காமாட்சி விளக்கு ஏற்றப்பட்டு, ஊதுபத்தியின் புகை நறுமணத்தோடு நளினமாய் நடனமாடிக் கொண்டிருந்தது. காலையில் எழுந்ததும் காபி சாப்பிடுவதுப் போல் புனிதாவிற்கு விளக்கேற்றிய பின் வேலைகளில் ஈடுபடுவது இயல்பான பழக்கம். இதெல்லாம் இனி இந்தகாலத்து பெண்களிடம் கைவருமா?

    கம்ப்யூட்டர் யுகத்தில் உலகத்தை ஒரு அறைக்குள் அடக்கி... அத்தனை வேலைகளையும் பார்த்து லகரங்களில் சம்பளம் வாங்கும்போது... இதற்கென்று நேரம் ஒதுக்க... நஷ்டக் கணக்கு பார்ப்பார்கள்.

    போகிற போக்கில் கடவுளர்களைப் பார்த்து ஒரு ‘ஹாய்’ சொல்வதோடு சரி.

    ஆனால், கல்யாணுக்கு அம்மா போல கடவுள் பக்தி கொஞ்சம் அதிகம். லீவு நாட்களில் ஆற அமர அமர்ந்து சுலோகம் சொல்வதும் உண்டு.

    கண்மூடி சில கணங்கள் பிரார்த்தித்துவிட்டு தன் அறைக்கு திரும்பி நடந்தான்.

    கருப்பு நிற ஜீன்ஸீம், ப்ளூ கலர் ஷர்ட்டும் எந்த உடையும், நிறமும், கச்சிதமாய் பொருந்திப்போகும் உடற்கட்டும், முகவெட்டும், ஓரளவு நிறமுமாய் தன்னைத்தானே ரசிக்குமளவு இருந்தான்.

    ஹாலிலிருந்தே கிச்சனில் அம்மா சமையல் செய்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

    பரபரப்பாய்... இங்குமங்கும் ஓடிக்கொண்டு... மிக்ஸியில் அரைத்துக்கொண்டும் பாத்திரத்தில் எதையோ கிளறிக்கொண்டும்...

    புருவம் மேலேற அம்மாவிடம் சென்றான்.

    என்னம்மா பண்றே?

    சசி ஆப்பத்துக்கு குருமா கேட்டிருந்தா... அதைத்தான் செஞ்சுட்டிருக்கேன் குருமா வாசனை வீடு முழுக்க மணக்குதே! நான் அதைக் கேக்கலே. நீ மட்டுமே வேலை செஞ்சுட்டிருக்கே... அதைதான் கேக்கறேன்

    எப்பவும் நான்தானே சமைக்கிறேன். புதுசா என்ன கேக்கறே? மகனை பார்த்து சிரித்தபடி சொல்லிவிட்டு ஸ்டவ்விலிருந்து... பாத்திரத்தை இறக்கி வைத்தாள். அம்மா... தெரியாத மாதிரிப் பேசாதே! சசியை இந்த வேலைக்கு பழக்கப்படுத்தும்மா! படிப்பை முடிச்சுட்டு நாலஞ்சுமாசமா கம்மாதானே இருக்கா. எந்த வேலைக்கும் போற மாதிரி மேடத்துக்கு எண்ணமே இல்லை...

    கல்யாணமாகி போகப் போறா. அப்ப வேலைய விட்டுதானே ஆகணும்? அதுக்குப் பிறகு புகுந்த வீட்டு மனுஷங்களோட விருப்பம்... வேலைக்கு அனுப்பறதா, வேணாமாங்கறதெல்லாம்?! அதுவரைக்கும் பொறந்த வீட்ல சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே!

    ஆக்சுவலி இதெல்லாம் நான் பேசணும். இங்கே டயலாக்லாம் மாறி வருது. சப்போஸ், எனக்கும் கல்யாணமாகி இந்த வீட்டுக்கு ஒரு மருமக வந்தா... அவளுக்கு சசியை மாதிரி சமைக்கவே வராதுன்னா உனக்கு பிரஷர் ஏறாது?

    அதென்ன சப்போஸ்? உனக்கும் கல்யாணம் ஆகத்தான் போகுது. நீ சொல்ற மாதிரியே என் மருமகளுக்கு சமைக்கவோ, மத்த வேலையோத் தெரியாதுன்னாலும் செஞ்சிட்டுப்போறேன். மெல்ல மெல்ல கத்துக்குடுத்தாப் போச்சு. யாராயிருந்தாலும் இந்த வீட்டுக்கு வரப்போறவ சசியை மாதிரிதானே கல்யாண்!

    இந்த மாதிரி ரொம்ப நல்ல மாமியாரா இருக்கக் கூடாதும்மா? இப்ப உள்ளப் பொண்ணுங்க படு ஸ்மார்ட்! உனக்கு கடைசி வரை இளிச்சவாயி பட்டம்தான்!

    கேட்ட அம்மாவை பெருமிதமாய் பார்த்தான். மென்மையானவள் பெண்! தாய்மை எனும் மகுடம் சூட்டப்பட்ட நாளிலிருந்து மேன்மையானவள் ஆகிறாள்.

    சரி... அப்பா எங்கேம்மா? காலைலேர்ந்து கண்லயேப் படல...

    கறிகடைக்குப் போயிருக்கார்!

    எதுக்கு?

    அவருக்கு ஆப்பத்துக்கு பாயா வேணுமாம்! அதுக்காக ஆட்டுக்கால் வாங்க...

    வயசாகுது... கொஞ்சம் நாக்கை கட்டுப்படுத்தணும்!

    சின்ன வயசிலேர்ந்தே வக்கனையா சாப்பிட்டு பழகிட்டார்... விடு!

    அதான் குருமா சமைச்சுட்டியே... அதையே சாப்பிடலாமே!

    ஏதோ ஆசைப்படறார்... விடு!

    மறுபடி அவருக்காக சமைக்கணுமில்லே!

    மசாலாவெல்லாம் அரைச்சு ரெடியாதான் வச்சிருக்கேன். நைட் உனக்கும் எடுத்து வைக்கிறேன் சாப்பிடு... அப்புறம்...?

    என்னம்மா?

    ஆபீஸ் லோன் போட்டிருந்தியே... என்னாச்சு?

    அம்...மா!

    …..?

    நான் வேலைல ஜாய்ன் பண்ணியே ஆறுமாசம்தான் ஆகுது. லோன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க!

    கவர்மென்ட் ஆபீஸ்ல கூடவா? பிரைவேட்லதான் கிடைக்கிறது கஷ்டம்?

    Enjoying the preview?
    Page 1 of 1