Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaithathu Yaro... Neethaney!
Ninaithathu Yaro... Neethaney!
Ninaithathu Yaro... Neethaney!
Ebook111 pages38 minutes

Ninaithathu Yaro... Neethaney!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொறுப்பில்லா கணவனால் கைவிடப்பட்டவள் மஞ்சு. அவளுக்கு ஏற்பட்ட அவமானங்களைக் கடந்து ஒரு சிறந்த பெண்ணாக வலம் வருகிறாள். இதில் மணவாளன் என்பவன் யார்? மணவாளனுக்கு மஞ்சுவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம். மணிமாளவின் நினைத்தது யாரோ... நீதானே! என்னும் கதையில்...

Languageதமிழ்
Release dateAug 28, 2023
ISBN6580140609924
Ninaithathu Yaro... Neethaney!

Read more from R. Manimala

Related to Ninaithathu Yaro... Neethaney!

Related ebooks

Reviews for Ninaithathu Yaro... Neethaney!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaithathu Yaro... Neethaney! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நினைத்தது யாரோ... நீதானே!

    Ninaithathu Yaro... Neethaney!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    இன்னுமா கிளம்பலை? என்று எங்கிருந்தோ சேவல்... ஒன்று கூவ பரபரப்பாய் தன் போர்வையை மடித்து வைக்கத் துவங்கியது இருள்.

    செல்போனில் அலாரம் குரல் கொடுக்க மஞ்சு புரண்டு படுத்தாள். கண்களைத் திறக்க முடியாமல் இன்னும் கொஞ்சம் தூங்கேன்! என்று கெஞ்சியது.

    அந்த சனியனை கொஞ்சம் ஆஃப் பண்றியா? கட்டிலின் இன்னொரு பக்கம் உறங்கிக் கொண்டிருந்த ரஞ்சன் சலித்துக் கொண்டான் திரும்பாமலேயே!

    மஞ்சு சட்டென எழுந்து செல்போனை எடுத்து ஸ்கிப் பண்ணினாள்.

    காலங்கார்த்தால சனியன்!

    அவன் வாயில் நல்ல வார்த்தைகள் வந்து விழுந்தால்தான் ஆச்சர்யம்.

    எல்லா வேலையும் முடித்து இரவு உறங்கவே நேரமாகிவிட்டதால்... உடம்பு வலி பின்னி எடுத்தது. தலைவலியும் மண்டையைப் பிளந்தது. நேற்று ஹாஸ்பிடலிலும் ஏகப்பட்ட வேலை. குணமாகி விடுவார் என்று எதிர்பார்த்த பேஷண்ட் ஒருவர் திடீரென அட்டாக் வந்து இறக்க, அன்றைய தினம் மஞ்சுதான் அந்த பேஷண்ட்டை கவனித்துக் கொண்டிருந்ததால்... உறவினர்கள் திடீர் மரணத்தை எதிர்பார்க்காததால் களேபரம் செய்ய டாக்டர்களும், இவளுமே அவர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை. ஒருவழியாக அவர்களுக்குப் புரியவைத்து, பிரச்னையை சமாளித்து வருவதற்குள் தலை தனியே கழண்டுவிடும்போல் ஆகிவிட்டது.

    தாரா பெட்ஷீட்டிற்குள் சுருண்டு படுத்திருந்தாள். கோழிக்குஞ்சு மாதிரி முகம் மட்டும் தெரிந்தது. நேற்றுதான் பிறந்தாற்போலிருந்தது. ஆறு வயது இப்போது. ஆண் பிள்ளைகள் வளர்கிறார்களோ இல்லையோ... பெண் பிள்ளைகள், கண்ணாமூச்சி விளையாட்டுப் போல கண்மூடி திறப்பதற்குள் வளர்ந்து விடுகிறார்கள்.

    ரஞ்சனிடமிருந்து மெல்லிதாய் குறட்டையொலி.

    எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படித்தான் தூக்கம் வருகிறதோ?

    ‘தாரா பள்ளிக்குச் செல்ல இன்னும் நேரமிருக்கிறது. தூங்கட்டும்’

    அடுத்தடுத்து காத்திருந்த வேலைகளை நோக்கிச் சென்றாள். ஃப்ரிட்ஜிலிருந்து பால், மாவு, காய்கறிகளை எடுத்து வெளியே வைத்துவிட்டு வாசல் பெருக்கச் சென்றாள்.

    ***

    ரஞ்சனுக்கும், தாராவுக்கும் மதிய உணவை பேக் பண்ணி பேகில் வைத்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள்.

    ஆட்டோ வரும் நேரம்தான்!

    நினைத்தவளுக்கு அப்போதுதான் உறைத்தது. நேற்று இரவு டிரைவர் போன் பண்ணி, ‘உறவுக்காரர் இறந்துட்டார். பங்காளி முறை போகாம இருக்க முடியாது. செங்கல்பட்டுலதான். ரெண்டுநாள் வரமுடியாது’ என்று சொன்னது நினைவிற்கு வர, பதற்றம் தொற்றிக்கொண்டது.

    எப்படி மறந்தேன்?

    ஹால் சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்,

    வைத்த இரண்டு இட்லியில், பத்து நிமிஷத்தில் பாதிதான் சாப்பிட்டு முடித்திருந்தாள் தாரா.

    இன்னுமா சாப்பிடறே? என்ன தாரா நீ? சலித்துக் கொண்டே தட்டை எடுத்து ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

    சீக்கிரம் முழுங்கு... இன்னைக்கு ஆட்டோ மேன் லீவு!

    அப்ப நான் எப்படி ஸ்கூலுக்குப் போவேன்?

    ஏங்க...

    ......!

    ஏங்க, உங்களைத்தான்!

    ப்ச் என்ன? என்றான் டி.வி.யிலிருந்த பார்வையை எடுக்காமல். ஆட்டோ மேன் ஒரு ‘டெத்’துக்குப் போயிருக்கார். ரெண்டு நாளைக்கு வரமாட்டார். இவளைக் கொஞ்சம் ஸ்கூல்ல விட்டுட்டு வாங்களேன்!

    ஏன்... எனக்கு ஆபீஸ்க்கு டைமாகலையா? டிபனுக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன்! என்றான் அமர்த்தலாக.

    நான் இன்னும் குளிக்கலே...

    விட்டுட்டு வந்து குளி!

    டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பறதுக்குள்ள டைமாயிடும்ங்க!

    "இதோ பார்... பேசிட்டிருக்காதே! எனக்கு டைம் இல்லே. டிபனை வைக்கிறியா? ஆபீஸ் கேன்டீன்ல போய் சாப்பிடவா?

    மம்மி... டைமாகுது!

    இதற்குமேல் பேசக்கூட நேரமில்லை என்பதை உணர்ந்தவள், இன்னும் இட்லி மிச்சமிருக்க போதும் வா! என்று கைகழுவச் சென்றாள் மஞ்சு.

    தாரா தன் அப்பாவை முகம் சுருங்கப் பார்த்தபடி அம்மாளின் பின்னே சென்றாள்.

    கையில் கிடைத்த சுடிதாரை அணிந்துகொண்டு தன் வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.

    சீக்கிரம் உன் பேக் எடுத்துக்க!

    ஹலோ... டிபன் கேட்டேனே!

    உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் கேட்ட கணவன் மீது எரிச்சல் வந்தது.

    தானே எடுத்துப்போட்டு சாப்பிட முடியாதா?

    வேகமாய் செயல்பட்டாள்.

    டைனிங் டேபிள் மீது தண்ணீர் உட்பட எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, மகளின் கையைப் பிடித்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

    மகளை அமரவைத்து வேகமாய் ஓட்டினாள்.

    அம்மாவை கெட்டியா பிடிச்சுக்க.

    ம்... பிடிச்சிட்டுதான் இருக்கேன்.

    இன்னும் கெட்டியா...!

    நான் விழமாட்டேன் மம்மி... உன்கூட இப்படி வர்றது ரொம்ப ஜாலியா இருக்கு!

    நாளைக்கும் நான்தான் அழைச்சிட்டுப் போவேன்!

    மம்மி...!

    ம்...

    டாடி ஏன் இப்படி இருக்கார்?

    எது...? அவர் ஒரு டைப் தாரா. யார் கூடவும் சரியாப் பேசமாட்டார்... பெரிசா நினைக்காதே!

    நான் அதைச் சொல்லலே மம்மி... நீ பாக்காத நேரம் உன்னைப் பார்த்து ஒழுங்கு காட்டறார்!

    ஒழுங்குன்னா? மஞ்சு குரலில் சுருதி இல்லை.

    "ஓங்கி குத்தற மாதிரி, தலையில அடிச்சுக்கற மாதிரி. இப்பக்கூட முகத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1