Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannil Uthitha Vennila
Mannil Uthitha Vennila
Mannil Uthitha Vennila
Ebook130 pages51 minutes

Mannil Uthitha Vennila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203293
Mannil Uthitha Vennila

Read more from Hamsa Dhanagopal

Related to Mannil Uthitha Vennila

Related ebooks

Reviews for Mannil Uthitha Vennila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannil Uthitha Vennila - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    மண்ணில் உதித்த வெண்ணிலா

    Mannil Uthitha Vennila

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    இளம்காலை. நாற்காலியில் ஜடமாய் உட்கார்ந்திருக்கிறாள் தேன்நிலா. சுவாசத்தால் ஏறி இறங்கும் மார்பகம் மட்டுமே அவள் உயிருடன் இருக்கிறாள் என்கிறது. விழிகளின் பயணம் திக்கில்லாமல். அவள் அருகில் தரையில் பவுடர் டப்பாவைக் கொட்டி மெழுகி வாயில் வைத்து சுவைத்து துப்பி….. இரண்டு வயதுகூட நிரம்பாத குல்லு அநியாயத்திற்கு குறும்பு செய்கிறது.

    மகனின் செய்கை அவள் விழிகளின் நிழலைக்கூட தீண்டவில்லை. மறந்து உட்கார்ந்தே பசி தாகம் அற்று சமாதி ஆகிவிடுவாள் போலிருந்தது. சமையல் அறையிலிருந்து ஏதோ உருட்டும் ஒலிகள்.

    ம்...மம்மா... குல்லு, சிரிப்புடன் அண்ணாந்து தாய் முகம் பார்க்கிறது.

    புதிதாய் விழி மூடி மூடி திறக்கும் மின்விளக்கு ஒளியில் தந்தையின் புதிய புகைப்படம் அதன் கவனத்தைக் கவர்கிறது. புதிய பூமாலை, மின் விளக்கு. அதற்கு வேடிக்கை.

    மாடிப்படிகளில் சின்னச் சின்ன காலடி ஓசை. அதைத் தொடர்ந்து வீட்டுச் சொந்தக்காரனின் ஐந்து வயது பேத்தி வர்ஷா குதித்தபடி உள் நுழைகிறது.

    ஏய் குல்லு, ஏண்டா இப்படி பவுடர் வேஸ்ட் செய்யறே. ஆன்ட்டி... ஆன்ட்டி உங்களுக்கு போன்.

    அந்த பொற்சிலை மீண்டும் மானிட வடிவத்திற்கு திரும்பிற்று.

    போனா? எனக்கா... என்னடி சொல்றே வர்ஷா.

    ஆமாம் ஆன்ட்டி உங்களுக்குத்தான் போன். குயிக்கா வரச்சொன்னார் தாத்தா.

    வர்ஷாவின் வாயில் ப்ராக் கடிபட, இடக்கரம் இவள் முன் நீள்கிறது.

    பொன்வண்ணனுக்குத்தான் தொலைபேசி அழைப்புகள் அடிக்கடி வரும். அவன் அலுவலகம் நண்பர்கள் வட்டம் சில நேரம் அவன் வளர்ப்பு தந்தையிடமிருந்து….. இப்போது யாராய் இருக்கும்?

    தேன்நிலாவின் சஞ்சலம் புரியாமல் வளைந்தபடி வலக்கை நீட்டுகிறது குழந்தை. அதற்கு அர்த்தம், தொலைபேசி அழைக்கிறது என்கிற தூதை தாங்கி வருவதற்காக பொன்வண்ணன் கொடுக்கும் அன்பளிப்புக்கள் - சாக்லேட்.

    வர்ஷாக் குட்டி, அது வந்து...

    குழந்தையிடம் இல்லை என்பதை எப்படி சொல்வது எனப் புரியாமல் டப்பாவை நப்பாசையுடன் திறக்கிறாள். டப்பாவின் முலையில் பிசுபிசுத்துப் போய் ஒரு சாக்லேட். அதை வர்ஷாவின் வாயில் திணிக்கிறாள் தேன்நிலா.

    இதுநேரம் தரையில் பவுடர் வழித்துக் கொண்டிருந்த குல்லு தன் சிறு கை நீட்டுகிறது.

    வர்ஷா சாக்லேட் சுவைத்தபடி போகிறாள்.

    உனக்கா, இரு. போன்ல பேசிட்டு வந்து குடுக்கறேன்.

    பவுடர் டப்பாவை எடுத்து மேசையில் வைத்துவிட்டு உள்ளே பார்த்து குரல் கொடுக்கிறாள்.

    கோவிந்தம்மா, குழந்தைய பார்த்துக்க. போன்ல யாரோ கூப்பிடுறாங்களாம். பேசிட்டு வரேன்.

    சமையல் அறை மெல்ல முணகுகிறது.

    யார்... இவளுக்குத் தொலைபேசி செய்யுமளவு யார்?

    பொன்வண்ணனின் விடுபட்டுப் போன நண்பர்கள் யாராவது இருக்குமோ.

    அன்றி அவன் அலுவலகத்தில் இவளுக்கு ஏதேனும் வேலை போட்டு கொடுக்க... உலகம் அத்தனை பெருந்தன்மையானதா.

    மெலிந்த தேகத்தில், வெளுத்த வாயில் சேலை எடுத்து தோளைப் போர்த்தியபடி படிகளில் இறங்கி, வீட்டுச் சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கிறாள் தேன்நிலா.

    வீட்டுப் பெரியவர் மெலிதாய் தலையசைத்து பேசும்படி சொல்லிப் போக, உள்ளிருந்து அவர் மனைவியின் குரல் வேண்டுமென்றே இவள் காதுகளுக்குச் செய்தி சொல்கிறது.

    வெள்ளிக்கிழமையும் அதுவும் காலங்கார்த்தால இது மூஞ்சியில முழிக்கறாப்பல ஆச்சு. விடிஞ்சாப்பலத்தான். டீ நீ உள்ளுக்குப் போ. வாயும் வயிறுமா அங்கே போய் நிக்காதே.

    தேளாய் இவள் உள்ளத்தைக் கொட்டும் சொற்கள். மங்கலங்கள் யாவும் பொன்வண்ணன் அள்ளிச் சென்றது விதியா?

    மெலிதாய் நடுங்கும் கரத்தால் தொலைபேசியை எடுத்து காதில் வைக்கிறாள்.

    ஹலோ தேன்நிலா பேசறேங்க. நீங்க யாருங்க?

    தவே நர்சிங் ஹோம் ரிசப்ஷனிஸ்ட். சீப் உங்களோட பேசணும் என்கிறார். லைன்ல இருங்கம்மா.

    காதில் தொலைபேசி உறங்கும் நேரம், உள்ளே, இவளைத் தாக்கும் சொற்கள்.

    டாக்டர் அனந்த நாராயணன் ஹியர்.

    டாக்டர், நர்சிங் ஹோம் பில்லை நான் செட்டில் செய்துட்டேன் டாக்டர்.

    தெரியும்மா. அதுவல்ல பிரச்சினை. உன்னோட ஹஸ்பெண்ட் கண்ணைத் தானம் வாங்கினவர் கட்டை இரண்டு நாள்ல பிரிக்கப் போறோம்.

    சரிங்க டாக்டர். அதுக்கும் என்னை நீங்க அழைச்சு இதைச் சொல்றதுக்கும் என்ன சம்பந்தம் டாக்டர்.

    அந்த பேஷண்ட் கட்டவிழ்த்து தனக்குப் பார்வை வந்ததும் முதன் முதல்ல உங்களைப் பார்க்கப் பிரியப் படறார்.

    என்னையா...

    ஆமாம்மா. உன்னையும் உன் குழந்தையையும்.

    ஸாரி டாக்டர். அவரோட விருப்பப்படி கண்ணைத் தானம் குடுத்தாச்சு. அதோடு சரி. அதுக்கு மேலே ஸாரி டாக்டர். நான் இருக்கிற நிலைமையில எனக்கு எங்கேயும் வர முடியாது டாக்டர்... ஸாரி.

    இங்கே பார்மா உன் பேர் வந்து...

    தேன்நிலா பொன்வண்ணன்.

    மிஸஸ் பொன்வண்ணன், ஆபரேஷன் செய்து மருந்து குடுக்கறதோட எங்க கடமை முடிஞ்சுடுது. ஆனா நோயாளின்னு இங்கே வந்தப்புறம் அவங்க உடம்பை மட்டுமல்ல, அவங்க மனசையும் நாங்க பார்க்க வேண்டியிருக்கு. தானம் குடுத்ததும், நான் ஆபரேஷன் செய்ததும் பெரிசில்ல. அந்த பேஷண்ட்டுக்குப் பார்வை திரும்பினாத்தான் நாம் வெற்றின்னு சொல்ல முடியும் மிஸஸ் பொன்வண்ணன்.

    ஸாரி டாக்டர். என்னால வரமுடியாது.

    மிஸஸ் பொன்வண்ணன், உன்னோட ஹஸ்பண்டோட ஆசைய நீ நிறைவேத்தணும் இல்லியா. எத்தனை உயர்ந்த மனிதர். அவர் சாகறப்ப கூட கண்ணைத் தானம் குடுக்கச் சொல்லிட்டு கண் மூடினார். அவரோட உயர்ந்த மனசை நீ புரிஞ்சுக்கணும்மா. நான் வேணா கார் அனுப்பறேன். ஒரு அரை மணியில் திரும்பப் போயிரலாம்.

    தொலைபேசி காதில் உறங்க, தேன்நிலா சிந்தித்தாள். யாருக்காக இல்லாவிட்டாலும் பொன்வண்ணனின் உயர்ந்த செய்கைக்குத் துணை போக வேண்டும். அது இவள் கடமையும் கூட.

    வரேன் டாக்டர். என்னிக்கு வரணும்.

    ஞாயிற்றுக் கிழமை காலைல பத்து மணிக்கு. கார் அனுப்பட்டுமா?

    வேணாம் டாக்டர். நானே வரேன்.

    தேங்க்யூ தேன்நிலா.

    தொலைபேசியை லேசாய்த் துடைத்து பவ்யமாய் வைத்து அதன் தொட்டிலில் விட்டு, யாரிடம் நன்றி சொல்வது என ஒரு விநாடி தயங்கி.... அடுத்த அறையில் யாரோ இவளைப் பார்த்து மறைவது புரிய... உள்ளிருந்து...

    இங்கே பாருங்க, உங்களுக்கு இத்தனை வயசாச்சே தவிர, விவஸ்தையே இல்லீங்க. யார் யாரை வீட்டுக்குள்ள சேக்கிறதுன்னு இல்லியா. ஏதோ அவனுக்காக பார்த்தம். ஆனா அவனே இல்லையின்னு ஆனப்புறம்... சரி... சரி... குயிக்கா துரத்தர வழியப் பாருங்க.

    இனி நின்றால் வீட்டுச் சொந்தக்காரி ஓடிவந்து கழுத்தைப் பிடித்து தள்ளினாலும் வியப்பதற்கில்லை என அங்கிருந்து வெளியேறுகிறாள்.

    மாடியில் இருக்கும் தங்கள் போர்ஷனுக்கு அவள் நுழைய, குல்லுவிற்குப் புதுச்சட்டைப் போட்டு, பவுடர் அடித்துக் கொண்டிருக்கிறாள் கோவிந்தம்மா.

    கோவிந்தம்மா, நீ தப்பா நினைக்கக் கூடாது.

    அடச் சொல்லு, என்னது?

    நீ வேலைலேர்ந்து நின்னுடு. நான் இனிமே எங்கே உனக்குச் சம்பளம் குடுக்கறது. இப்பவே உனக்கு சம்பள பாக்கி. அதை குடுக்கவே எப்படி சமாளிக்கறதுன்னு பார்க்கிறேன்.

    நாற்பது வயதான கோவிந்தம்மா கருப்பும், குட்டையுமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1