Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Mattum Kol
Indru Mattum Kol
Indru Mattum Kol
Ebook101 pages37 minutes

Indru Mattum Kol

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856268
Indru Mattum Kol

Read more from Hamsa Dhanagopal

Related to Indru Mattum Kol

Related ebooks

Reviews for Indru Mattum Kol

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Mattum Kol - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    இன்று மட்டும் கொல்!

    Indru Mattum Kol!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    இன்று மட்டும் கொல்!

    1

    கமலேஸ்வரி சமையல் அறைக்குள் இருக்க, அவள் கணவன் சூர்ய கிரண் பேண்ட் ஷர்ட் அணிந்து படு டிரிம்மாய் கண்ணாடி முன் நின்று மேக்கப் செய்து கொண்டிருந்தான். பார்த்துப் பார்த்து ஒரு பெண்ணைப் போல தன்னை அலங்கரிப்பது வழக்கம்.

    அன்றும் அப்படித்தான். ஃபங்க் கிராப்பை கழுத்துப் புறம் படிய வாரி மீசையை டூத் பிரஷ்ஷால் டிரிம் செய்து, சடக்கென பார்க்கும்போது மீசை வைத்த சஞ்சய் தத் போல கண்கள் மட்டும் கொஞ்சம் சிறியதாய் மின்னலாய் மிளிரும்.

    சூர்யா, மேக்கப் ஆச்சா?

    கேலியா பண்றே, நீதான் கிச்சன்ல ஏதோ உருட்டிட்டு இருக்கே, அதனால் நான் இங்கே இருக்கேன். ஏய், கமல், என் பீராவைத் தொடாதேன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன். ஒழுங்கு பண்றேன் பேர்வழின்னு அதைக் கெடுக்காதே. தொட்டே அப்புறம் பாரு… அது எப்படி இருந்தாலும் நீ ஒன்றும் செய்யாதே.

    அவன் அடிக்கடி சொல்லும் அதே வாசகத்தைச் சொல்ல கமலேஷ்வரி அதைக் காதில் வாங்காதவள் போல இருந்தாள். ஈரக் கைகளைத் துணியில் துடைத்தபடி வந்தாள். எடுத்து செருகின சேலையை எடுத்துவிட்டு கொசுவத்தைச் சரி செய்தாள்.

    அவன் பக்கத்தில் ஒட்டின்படி நின்று கண்ணாடி பார்த் தாள். அவனுக்கும் அவளுக்கும் நிறைய ஏற்றத் தாழ்வுகள். கமலேஷ்வரி மாநிறம், காந்தக் கண்கள், எடுப்பான மார்பகம் மற்றவரைச் சுண்டும் என்பது நிஜம். ஆனால் அவனோடு ஒப்பிட்டால்… பூஜ்யம் மதிப்பெண் பெறக் கூடத் தகுதியற்றவள் என்றே சொல்லலாம்.

    சூர்யா தன் அருகே ஒட்டி நிற்கும் மனைவியை அணைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தவனாய் கண்ணாடி பார்த்தான். அவன் தோளுக்குக்கூட வரவில்லை கமலேஷ்வரி

    அவன் எச்சில் பட்ட கன்னத்தைத் துடைத்தபடி வெட்கத்துடன் கேட்டாள்.

    சூர்யா நீங்க ரொம்ப அழகு. உயரம். எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு. ஆனா எனக்கு…

    அவள் பின்புறம் நின்று அவளை அணைத்திருந்தவன் அவள் தோளில் முகம் புதைத்தாள்.

    என் கண்ணம்மா என்னைவிட அழகு. இந்த உலகத்தில் இருக்கிற செல்வம், செல்வாக்கு வேணுமா இல்லை இந்த கமலேஷ்வரி வேணுமான்னா கேட்டா, நான் என்ன கேட்பேன் தெரியுமா?

    அதில் என்ன சந்தேகம் பணம்தான் கேட்கணும். என்னை மாதிரி எத்தனை ஆயிரம் கமலிகளை வாங்கலாம். ஏன் என்னைவிட பலமடங்கு அழகிகளைக் கூட…

    சில்லி… என் கண்ணம்மாவைத்தான் கேட்பேன். அவ என்னோட இருந்துட்டா, இந்த உலகமே என் அடிமைபோல…

    போங்கப்பா, இது… இது பொய்யில்லையே…

    என் கமல்கிட்ட நான் பொய் சொல்வேனா…

    உங்க ஸ்மார்ட்டையும் அழகையும் பார்த்தா ஈஸியா காலேஜ் கர்ள்ஸ்கூட லவ் பண்ணுவாங்க போலிருக்கு சூர்யா.

    ப்ச்சு... என் கமல் குட்டியைவிட எந்த இளவரசி என் முன்னாடி வந்து நின்னாலும் மயங்கிருவேனா என்ன?

    சூர்யா எனக்குப் பயமா இருக்கு. டாக்டரம்மா ஏதாச்சும் சொல்லிருவாங்களா?

    என்ன சொல்லிருவாங்க. நமக்கு ஒரு குட்டி கமலி வரப்போறான்னு சொல்லப் போறாங்க. என் ப்ரீப் கேஸைத்’ திறந்து பாரேன்.

    அவள் ஆர்வத்துடன் அவன் குட்டி ப்ரீப் கேஸ் திறந்தாள். ஒரு கிலோ ‘லாக்டோ கிங்’ சாக்லெட் கண்ணாடிப் பையில்.

    எதுக்குப்பா சூர்யா...

    என் கமல் குட்டிக்கு ஒரு குட்டி வரப் போறான்னு டாக்டரம்மா சொன்னவுடனே அவங்களுக்குக் குடுக்கணும் இல்ல.

    "உண்மையா அப்படி இருக்குமா? இப்ப அடிக்கடி எனக்கு வயித்த வலின்னு...’’

    உஷ். சும்மாயிரு. நல்லதாத்தான் நினைக்கணும். டாக்டரம்மா கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கியிருக்கோம் இல்ல…

    நேத்தே போன்ல கன்பார்ம் பண்ணிட்டேன். இன்னிக்கு பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்க

    ஓ.கே.

    அவன் புத்தம் புதிய சிகப்பு ஹோண்டாவில் அவன் முதுகில் குரங்குக் குட்டியாய் பதுங்கி பயணித்தாள் கமலேஷ்வரி.

    அவர்கள் வண்டி நர்ஸிங் ஹோமில் நுழைந்து நின்றது.

    பயத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள் கமலேஷ்வரி.

    ரிசப்ஷன் அறையில் பெரிய போர்டில் பல டாக்டர்களின் பெயர்கள் அவர்கள் எதில் ஸ்பெஷலிஸ்ட், அவர்கள் கவனிக்கும் நேரம் யாவும் பெரிதாய் போடப்பட்டிருந்தன.

    மிடியில் சிக்கென கவர்ச்சிப் புன்னகை காட்டின ரிசப்ஷனிஸ்ட்டிடம் விவரம் சொன்னான். அவனைப் பார்த்து அவன் அழகில் லயித்தபடியே புன்னகையுடன் மூன்றாவது மாடிக்குப் போகச் சொன்னாள் ரிசப்ஷனிஸ்ட்.

    லிஃப்டில் ஏறும்போதும் கமலேஷ்வரி சிணுங்கினாள்.

    உஷ், உனக்குக் குழந்தைத்தான் பிறக்கப் போகுது. வயித்த வலிக்கும் அதுக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. பேசாம இரு.

    டாக்டர் மதுமாலினி, சைகாலஜிஸ்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1