Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endrendrum Ambudan
Endrendrum Ambudan
Endrendrum Ambudan
Ebook96 pages1 hour

Endrendrum Ambudan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100904091
Endrendrum Ambudan

Read more from Pattukottai Prabakar

Related to Endrendrum Ambudan

Related ebooks

Related categories

Reviews for Endrendrum Ambudan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endrendrum Ambudan - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    என்றென்றும் அம்புடன்

    Endrendrum Ambudan

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அன்று - 1

    இன்று - 1

    அன்று - 2

    இன்று - 2

    அன்று - 3

    இன்று - 3

    அன்று - 4

    இன்று - 4

    அன்று - 5

    இன்று - 5

    அன்று - 6

    இன்று - 6

    அன்று - 7

    இன்று - 7

    அன்று - 8

    இன்று - 8

    இன்று - 9

    இன்று - 10

    இன்று - 11

    இன்று - 12

    அன்று- 1

    மழை வரும் போலிருந்தது. கறுப்பு கர்ப்ப மேகங்கள் ஆலோசனையில் இருந்தன. முதல் காரியமாக ஐந்து மணிக்கெல்லாம் சூரியனை தலைமறைறிவாக்கியாயிற்று. மரங்களை எல்லாம் கிள்ளிவிட்டு ஆர்ப்பாட்டமாக ஆட வைத்தாயிற்று.

    பத்மினி தன் சிஸ்ட்வாட்ச்சில் நேரம் பார்த்துக் கொண்டாள். மணி ஐந்து ஐந்து, நாலரை என்றுதானே சொன்னார்? இல்லை ஐந்தரை என்று சொன்னதை நான்தான் நாலரை என்று காதில் வாங்கிக் கொண்டேனா?

    அந்த பஸ் ஸ்டாப்பில் பத்மினி தவிர இரண்டு நடுத்தர வயதுப் பெண்களும், மூன்று ஜீன்ஸ் இளைஞர்களும் நின்றிருந்தார்கள். ஒரு பிரெளன் கலர் மாடு கவரில் இருந்து ஒரு கதாநாயகியைத் தின்று கொண்டிருந்தது.

    காற்று சாலையின் குப்பைகளை எல்லாம் வட்டமாக சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தது. முன்னால் செல்லும் வாகனங்கள் எலிகளாகவும், பின்னால் செல்லும் வாகனங்கள் பூனைகளாகவும் துரத்திக் கொண்டிருந்தன.

    பத்மினியை அடிக்கிற அழகில் சேர்க்க முடியாது. லட்சணமான பெண் மஞ்சள் புடவை கட்டி, பெரிய குங்குமம் வைத்து இரு கையில் தீச்சட்டியும் மறு கையில் வேப்பிலைக் கொத்தும் கொடுத்தால் கிராமம் கிராமமாக வந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஒரு தெய்வீக லட்சணம்.

    அவள் முகத்தைப் படைத்த போது பிரம்மா நிச்சயமாக காம்ப்பல் உபயோகித்திருக்க வேண்டும். அல்லது ஆர்ட்டிஸ்ட் மாருதியை மாதிரிப் படம் வரையச் சொல்லியிருக்க வேண்டும். யப்பா! எவ்வளவு பெரிய விழிகள்! பானுப்ரியா சரண்டராக வேண்டும். அடர்த்தியான கூந்தலின் பின்னல் தேர் வடம் போலத்தான் இருந்தது. நான்கு முழம் மல்லிகையை மடக்கி மடக்கி இழை பிரித்து வைத்திருக்க ஏரியாவே கும்மென்று இருந்தது. காதுகளில் குருவி உட்கார வைக்கலாம் போல பெரிய வளையங்கள். நெற்றியில் குங்கும வட்டப் பொட்டுக்கு அடியில் விபூதிக் கோடு, சற்றே தடிப்பான உதடுகள், மார்பிள் ஷிபான் புடவை, தோளில் இருந்து தொங்கும் லெதர் கைப்பை மேல் சின்னதாக ‘K’ என்று மெட்டல் இனிஷியல் ஓட்டப்பட்டிருந்தது.

    ஃபார் கதிரேஷ்.

    தற்சமயம் நூறடி தள்ளி வேண்டுமென்றே தன் நண்பனின் காரை எடுத்துக் கொண்டு வந்து நிறுத்தி கிளாஸ் ஏற்றி விடப்பட்ட காரின் ஜன்னல் வழியாக அவள் தவிப்போடு காத்திருப்பாத மெளனமாக ரசித்துக் கொண்டிருக்கும் கதிரேஷ்.

    பத்மினி மீண்டும் மணி பார்த்துக் கொண்டாள். சாலையில் இரண்டு பக்கங்களிலும் தூரமாய் அவனுடைய கார் வருகிறதா என்று பார்வையை ஓட விட்டாள். பெருமூச்சு விட்டாள். அந்தப் பெருமூச்சல் அருகாமை இளைஞர்களில் ஒருவன் சிகரெட்டை நழுவ விட்டு விட்டான். இன்னும் சற்று நேரத்தில் உதட்டை ஈரம் பண்ணிக் கொண்டு, மாமூலான ஆரம்பமாக மேடம், டைம் ப்ளீஸ்... என்று அவனோடு சிநேகம்(?) துவங்கும் உத்தேசத்திற்கு அவன் வந்து விட்டான்.

    பதமினி தன் கைப்பையிலிருந்து காச்சீப் எடுத்து மேலுதட்டிற்கு மேல் பொடித்திருந்த வியாவைப் புள்ளிகளைத் துடைத்துக் கொண்டாள்.

    ஆறரை மணிக்குப் படம். நாலரைக்கொல்லாம் நீ நம்ம மாமூல் பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்ணு ஹோட்டல் போய் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டுப் பேசிட்டிருக்கலாம். அப்புறம் தியேட்டர் போலாம் என்று தெளிவாகத்தானே சொன்னார் கதிரேஷ்?

    அவர் சொன்னதை வைத்துக் கொண்டு பேங்கில மேனேஜரிடம் ஐந்து மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக நாலேகாலுக்கேப் புறப்பட வேண்டும் என்று பர்மிஷன் வாங்கி, ரெஸ்ட ரூம் வந்து முகம் கழுவி ஓப்பனை செய்து கொண்டு, பாங்க் வாசலில் பூ வாங்கி வைத்துக் கொண்டு சரியாக நாலரைக்கொல்லம் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து விட்டாரள்.

    நின்று நின்று கால்கள் கடுக்கத் துவங்கிவிட்டன. வந்து, நின்று புறப்படும் எந்த பல்லவனிலும் ஏறாமல் அவள் நின்று கொண்டேயிருப்பதை இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அந்த செருப்பு தைப்பவன் என்னமோ சி.பி.ஐ. அதிகாரி போல நோட் செய்து கொண்டிருப்பது அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.

    அந்த மூன்று ஜீன்ஸ் இளைஞர்களும் பஸ் ஏறாமல் அவளுக்காகத்தான் நிற்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. வள்ளுவர்

    Enjoying the preview?
    Page 1 of 1