Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jaanu
Jaanu
Jaanu
Ebook149 pages53 minutes

Jaanu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்ப உறவுகள், சமூக அவலங்கள், தாம்பத்யம், கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறை, தற்கால நிகழ்வுகள் இப்படி பல்வேறு கருத்துக்கள் கொண்ட கதைகளின் தொகுப்பாகும்.

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580173810619
Jaanu

Read more from Susri

Related authors

Related to Jaanu

Related ebooks

Reviews for Jaanu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jaanu - Susri

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜானு

    Jaanu

    Author:

    சுஶ்ரீ

    Susri

    For more books

    https://www.pustaka.co.in/home/author/susri

    பொருளடக்கம்

    மதிப்புரை

    நூல் ஆசிரியர் உரை

    வாழ்த்துரை

    அவளும் குழந்தைதான்!

    எல்லாம் கனகு மயம்

    ஏன் அழுதாள் என் அபிதா?

    கண்ணான கண்ணே

    காதலுக்கும் அருள்வேன்

    குஞ்சு மோன் சரித்திரம்

    பக்க விளைவு

    பணம் படுத்தும் பாடு

    பல் வைத்தியம்

    பொய் சொல்லக் கூடாது பெண்ணே

    போதை

    ராகம் தனம் பல்லவி

    வேடதாரி

    வேலை கிடைச்சது

    இரவு விருந்தாளி

    லண்டன் போறான் என் பையன்

    காற்றில் கலந்தவன்

    ஜானு

    மதிப்புரை

    வணக்கம்,

    எழுத்தாளர்கள் பொதுவாய் ஒரே மாதிரியான நடையில், ஒரே வகையான களத்தில் கதை எழுதுவதை தான் நாம் கண்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் சுஸ்ரீ அவர்களின் கதைகள், ஒரு கதம்பம் போல், அறுசுவை கலந்த விருந்து போல், எல்லா தரப்பு மக்களுக்கும் கதை சொல்லும் விதத்தில் அமைந்துள்ளது

    பேச்சு வழக்கும் கூட, சென்னை தமிழில் தொடங்கி நெல்லை தமிழ் வரை எல்லாமும் கலந்து கட்டி எழுதிய விதம் அருமை

    இந்த தொகுப்பில் உள்ள பதினெட்டு கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் பின்னப்பட்டு இருப்பதால், படிப்பவர்களுக்கு சுவாரஷ்யம் கூட்டுவதாய் இருக்கிறது என்பது இந்த நூலின் சிறப்பு

    குடும்ப உறவுகள், சமூக அவலங்கள், தாம்பத்யம், கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறை, தற்கால நிகழ்வுகள் இப்படி பல்வேறு கருத்துக்கள் கொண்ட கதைகளை, இயல்பான நடையில், உறுத்தாத வகையில் நகைச்சுவை சேர்த்து சொன்ன விதம் அருமை. அதற்கு, இந்த நூலாசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.

    நன்றி

    நூல் ஆசிரியர் உரை

    நான் ஸ்ரீனிவாசன், மும்பை வாழ், இல்லை இல்லை இப்போது சென்னை வாழ் தமிழ்பிரியன்

    38 வருடங்கள் மும்பையில் பணிபுரிந்ததில் தமிழ்நாட்டு நடப்புகளில் அதிகம் தொடர்பு விட்டுப் போயிற்று. பதவி ஓய்வு பெற்று சென்னையில் வந்து இருக்கும் படி சூழ்நிலை

    இப்ப தான் தெரிஞ்சது நாம நம்ம தமிழ் நாட்டை எவ்வளவு மிஸ் பண்ணிட்டோம்னு. பல புஸ்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைத் தது. அப்ப தான் தோன்றியது இந்த விபரீத ஆசை, அட நாம ஏன் எழுதக் கூடாதுனு

    தமிழ்ல அவ்வளவு டச் இல்லை, இருந்தாலும் கஷ்டப்படப் போவது நம்ம வாசகர்கள் தானேனு துணிந்து செயலில் இறங்கி விட்டேன்

    என்னுடைய முதல் கதை ‘ஏன் அழுதாள் என் அபிதா’. இதை எழுதினவுடன் முதலில் குடும்பத்தார்கள், நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவர்கள் உற்சாகப்படுத்தியதில் பிறந்தது என் எழுத்து பயணம்

    முதல் தொகுப்பாய் 18 கதைகளை சேர்த்து இதில் கொடுத்தி ருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டு மென முயற்சித்திருக்கேன்

    ‘வேடதாரி’ கதை, கொஞ்சம் பயத்துடன் எழுதினேன். ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது

    ‘போதை’ கதை, கொரோனா கட்டுப்பாட்டினால் சிகை திருத்தும் தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்களை பாத்ததில் தோன்றியது ‘பக்க விளைவு’, ‘பல் வைத்தியம்’ இரண்டும் கொஞ்சம் சொந்த அனுபவம்

    ‘ராகம், தனம் பல்லவி’, so called நடுத்தர மக்களின் கனவு கலைவதை பார்த்து கலங்கியதால் விளைந்தது

    ‘எல்லாம் கனகு மயம்’ கதை, சென்னை தமிழை உபயோகிக்க, மற்றும் ஏழைகளுக்கும் காதல் உணர்வு அதிகம் என காட்ட புனைந்தது

    விட்டா இங்கயே நாவல் எழுத ஆரம்பிச்சிருவேன், ஒரு கை கட்டுப்பாடு இல்லை. எல்லோரும் இந்த தொகுப்பை படியுங்கள். உங்கள் உண்மையான அபிப்ராயங்களை எனக்கு எழுதுங்கள்

    அன்புடன்,

    உங்கள் சுஸ்ரீ

    (ஸ்ரீனிவாசன்)

    வாழ்த்துரை

    நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன்

    #26, 2 ஆம்’டி’ குறுக்குத் தெரு, சர்.எம்.வி.நகர்,

    இராமையா தேங்காய்த் தோட்டம்,

    இராமமூர்த்தி நகர், பெங்களூரு – 560016

    அலைபேசி: 9845526064.

    புவியைப் புரட்டும் நெம்புகோல்!

    சங்க காலந் தொட்டு இன்று என்வரையில், காலந்தோறும் தமிழின் இலக்கியப் பரப்பில் இடைவெளியை நிரப்பும் வகையில் தொன்றுதொட்டு மரபுப்பாக்கள், புதுப்பாக்கள், ஐக்கூ, உரை வீச்சு, துணுக்குகள், கட்டுரை, சிறுகதை, புதினம், குறும்புதினம் என்று காலத்திற்கேற்ப, பருவத்திற்கேற்ப இயற்கையன்னை தன்னை மாற்றிக் கொண்டு நிகழ்காலத்தின் சூழலை ஏற்றுக் கொள்வதுபோல், தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழன்னையின் மகுடத்தில் மேலுமொரு மாணிக்கமாக இலக்கிய இடைவெளியை நிரப்பிட இதோ ‘ஜானு’ என்னும் இந்நூலினை இந்நூலாசிரியரான சுஸ்ரீ (ஸ்ரீனிவாசன்) அவர்கள் படைத்துள்ளார்.

    பாக்களோ, கதைகளோ, கட்டுரைகளோ எதுவாயினும் வீரிய முடையதாக, அரசனேயானாலும் துணிவுடன் எதிர்த்து நிற்கும் வலிமை உடையதாக, தீமைகளை எதிர்த்துப் போராடும் போராளியாக, போர்ப்படையாக, நல்வினைகளை விதைக்கும் இறையாக, வாழ்வியலை உணர்த்தும் குறள் நெறியாக, மொத்தத்தில் புவியையே புரட்டிப் போடுகின்ற நெம்புகோலாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டப் படைப்புகளைத்தாம் நூலாக வழங்கிய இந்நூலாசிரியர் சுஸ்ரீ (ஸ்ரீனிவாசன்) அவர்கள், மேலும் பல்வேறு நூல்களை இந்தக் குமுகாய மறுமலர்ச்சிக்காக வெளியிட்டு விருதுகள், பரிசுகள் பெற்று, பேரும் புகழுடன் வானளாவி உயர்ந்திடப் பாராட்டி நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    பேரன்புடன்,

    நெ ருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன்

    அவளும் குழந்தைதான்!

    ஏ வித்யா என் நீல சட்டையை எங்கே காணோம், கட்டில் மேல மடிச்சு வச்சிட்டுதானே குளிக்கப் போனேன், இந்த வீட்ல ஒருசாமான் வச்ச இடத்தில அஞ்சு நிமிஷம் இருக்காது. டீ வித்யா காது கேக்கலையா உன்னைத்தான் கேக்கறேன் அரை மணி நேரமா கத்தறேன் கேக்குதா இல்லையா?

    டே குமாரு என்னையா கேக்கறே?படுக்கையில் சாஞ்சு உக்காந்திருந்த அம்மா கேட்டார்.

    குமாருக்கு இது இன்னும் எரிச்சலை கூட்டியது, அம்மா எதுக்கெடுத்தாலும் நானு நானுன்னு மூக்கை நுழைக்காதே, பேசாம மருந்தை சாப்டுட்டு படுத்து தூங்கு.

    சிவகாமி அம்மாள், வயது போன மாசத்தோட 73 முடிஞ்சது. குமாரோட அப்பா இறந்து போய் 10 வருஷமாச்சு. அவர் இருந்த வரை அம்மா படு சுறுசுறுப்பு. உக்கார மாட்டா

    ஒரு இடத்தில, ஒரு வியாதி, காய்ச்சல்,தலைவலினு,

    டாக்டர் கிட்ட போனதில்லை. அப்பா ஶ்ரீதரனும் அப்படித்தான் ஆரோக்யமான மனிதர், 68 வயது வரை யாருக்கும் பாரமா இருந்ததில்லை, ரிடையர்டு சிவில் என்ஜினியர்., பரபோகாரி யாராவது ஒரு கஷ்டம்னு வந்தா தன்னால் முடிஞ்சதை செய்யாம அனுப்ப மாட்டார், தெய்வ நம்பிக்கை ஜாஸ்தி,

    மனைவி சிவகாமியிடம் உயிர்.

    ஒரே பையன் குமார். குமாரையும் என்ஜினியரிங் படிக்க வச்சு தெரிஞ்ச அரசாங்க அதிகாரிகளை சரி செய்து அரசாங்க வேலையில் சேத்து விட்டார், இப்ப குமார் படிப்படியாக முன்னேறி தலைமை நிர்வாக அதிகாரி.மிக பொறுப்பான உத்யோகம், முதல் அமைச்சருடன் நேரடி தொடர்பு உள்ள மிக சில அதிகாரிகளில் ஒருவர்.

    குமாருக்கு, வித்யாவை திருமணம் செய்து வைத்து பேத்தி ஶ்ரீலதாவை பாத்து விட்டுதான் போய் சேர்ந்தார்.

    சிவகாமி அம்மாளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, குமாரை எப்படி செல்லமா வளத்தோம் நானும் அவரும், ஒரு விளையாட்டு சாமான் அவன் நினைக்கும் முன்னர் வீட்டில் இருக்கும். வித விதமாய் ஆடைகள், காலணிகள். அவனை நல்ல பள்ளி,நல்ல கல்லூரி பணத்தை தண்ணீராய் செலவளித்தார்

    ஶ்ரீதரன்.அம்மா எனக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு லவ் பண்றேன்னு சொன்ன மறு நாளே ஶ்ரீதரனுடன் பேசி அவர்கள் வீட்டுக்கு போய் அடுத்த 3 மாதத்தில் கல்யாணம்.

    குமாரும் எப்பவும் அம்மா, அம்மானு சுத்தி வருவான். அவனுக்கு இப்ப நான் பேசினாலே கோவம் வருது

    ஒரு வழியா குமார் ஆபீசுக்கு பறப்பட்டாச்சு, வழக்கம் போல அம்மா போயிட்டு வரேன்னு புறப்பட்டான்.

    சிவகாமி அம்மா, டே குமாரு வரப்ப மறக்காம இந்த மாசத்துக்கு மருந்தெல்லாம் வாங்கிட்டு வந்துருடா.

    குமார், ஏம்மா நேத்துல இருந்து எத்தனை தடவை சொல்லுவே சொல்லிட்டே நடந்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1