Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - March 2019
Kanaiyazhi - March 2019
Kanaiyazhi - March 2019
Ebook220 pages1 hour

Kanaiyazhi - March 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

March 2019 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109504195
Kanaiyazhi - March 2019

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - March 2019

Related ebooks

Reviews for Kanaiyazhi - March 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - March 2019 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, மார்ச் 2019

    மலர்: 53 இதழ்: 12 மார்ச் 2019

    Kanaiyazhi March 2019

    Malar: 53 Idhazh: 12 March 2019

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, மார்ச் 2019
    தலையங்கம் - ம.ரா.

    காவல் சாமிகளின் உயிர்ப்படையல்!

    தெரியும் உங்களுக்குத்

    தேர்தல் வருகிறது!

    எழுபது வயதான

    இந்திய ஜனநாயகத்துக்கு

    வழிபாடு நடக்கப் போகிறது!

    அதிகாரப் பங்கில்

    கட்சிகளுக்கு இடையே

    தொகுதிப் படையல்!

    வாக்குகளைப் பலிகேட்கும்

    விளம்பரப் படையல்!

    செல்பேசி உடுக்கில்

    குத்தாட்டப் படையல்!

    கட்சி அலுவலகங்களில்

    சட்டையில் படம் குத்தி

    அலகு குத்த அலையும்

    தொண்டர்களின் படையல்!

    தீமிதிக்கும் பூக்குழியாய்ச்

    சாலைகளில் கொடிப்படையல்!

    மைக்கில் குறிசொல்ல

    தெருவெங்கும் பூசாரிகள்!

    உடுக்கு அடிக்கவும் உரத்துக் கூவவும்

    உள்ளுர் வெளியூர்க் கோமாளிகள்!

    குடை பிடிக்கவும் விளக்கு ஏந்தவும்

    சிறுசிறு கட்சிகளின் பிடிவாதங்கள்!

    உற்சவ மூர்த்திகள் ஊர்வலத்தில்

    ஜனநாயக சாமி தூக்கக்

    கட்சிகள் இடையே கூட்டணிகள்!

    திருவிழாவில் கடை விரிக்க

    இட ஒதுக்கீடுகள்!

    சொல்கிறார்கள்!

    கொள்கை வேறு கூட்டணி வேறாம்!

    எதைக் கொடுத்தாலும் வாங்கினாலும்

    கொள்கையை மட்டும்

    கொடுக்க மாட்டார்களாம்!

    அவரவர்க் கடையில்

    அவரவர் வியாபாரம்!

    கடந்த காலத்தில்

    சண்டை போட்டார்கள்!

    காரசாரமான சொற்களில்

    கட்டிப் புரண்டார்கள்!

    மக்கள் பிரச்சினையில்

    சண்டை போட்டுக் கொள்வதாக

    நம்ப வைத்தார்கள்.

    இப்போது எல்லோருக்கும் தெரிகிறது

    அவர்கள் மக்களுக்காக

    சண்டை போடவில்லை!

    பேரம் உயரப் பேசி இருக்கிறார்கள்!

    கட்சிக்குச் சின்னம்பெற

    கட்சியைக் காப்பாற்ற

    தேர்தல் கால வளத்தில்

    அடுத்தத் தேர்தல்வரை

    கட்சி நடத்த

    ஆட்சியைக் காப்பாற்ற

    சொத்தைக் காப்பாற்ற

    சிறைக்குப் போகாமல் தப்பிக்க

    உயிரைக் காப்பாற்ற

    ஊரை மிரட்டி ஊழல் செய்ய என்று

    எத்தனையோ காரணங்கள்

    தேர்தலில் போட்டியிட…

    அவர்களுக்குத் தெரிகிறது

    சண்டை போடுகிற

    சிங்கமும் புலியும்

    பொறிக்குள் மாட்டிவிடும் என்பதும்

    எப்போதும் பொறிக்குள் நரிகள்

    மாட்டாது என்பதும்!

    அவர்கள்

    நிஜங்களைக் காயப்படுத்தி

    பிம்பங்களைக்

    காப்பாற்றிக் கொள்கிறார்கள்!

    கண்வலிக்கப் பொய்குத்திக்

    காதுவலிக்கப் பேசுகிறார்கள்

    தெரிந்தும் திட்டமிட்டுமே

    தவறுகளைச் செய்கிறார்கள்!

    அவர்கள்

    வேறு கிரகத்திலிருந்து

    தேர்தல் காலத்தில் மட்டும்

    பூமியில் வந்து குதிப்பதில்லை.

    நம்மோடு இருப்பவர்கள்தாம்.

    பசியெடுக்கிறவரை

    ஆடுகள் கூட

    ஓநாய்களின் கூட்டாளிதாம்!

    பெற்ற தந்தையோடும் போரிடத் துணிந்த

    மகனை எதிர்க்காமல் வடக்கிருந்த தந்தை

    கோப்பெரும் சோழனையும்

    கடையெழு வள்ளல் பாரியை வீழ்த்திய

    மூவேந்தர் கூட்டணியையும்

    புறநானூறு காட்டுகிறது!

    தந்தை ஷாஜகானைச் சிறையில் அடைத்து

    ஆட்சி நடத்திய ஔரங்கசீப்பை

    வரலாறு காட்டுகிறது.

    ஏமாறக் காத்திருப்பவனே

    ஏமாற்றுகிறான் என்பதற்கும்

    ஏமாற்றியவர்கள் இறுதியில்

    என்ன ஆனார்கள் என்பதற்கும்

    கண்ணுக்கு முன்பே சாட்சிகள் இருந்தும்

    வரலாறு காட்டியும்

    ஏமாற்றத் துடிக்கிறார்கள்!

    குற்ற உணர்ச்சியே இல்லாமல்

    கூட்டணி போடுகிறார்கள்!

    கூட்டணி தேவைதான்!

    தனிநபர் அதிகாரம் அல்லது

    தனிக்கட்சி அதிகாரம்

    வளரும் ஜனநாயகத்தை வாழவிடாது.

    ஆளும் கட்சி

    மக்களுக்கு எதிரான

    கட்சிநலன் கருதிய / சுயநலம் விரும்பிய

    திட்டமிடலைத் தடுத்து நிறுத்தவும்

    ஜனநாயக வழிபாட்டிற்கு

    சாமி தூக்கக்

    கூட்டணி தேவைதான்!

    ஊரின் எல்லையில்

    காவல் சாமிகளுக்குப்

    புரவி எடுப்பார்கள்!

    ஆடு, கோழி வெட்டி

    எல்லையில் சமைத்துப்

    படையல் இடுவார்கள்!

    ஜனநாயகம் காக்கும்

    கட்சி சாமிகளின் தேர்தல் திருவிழாவில்

    கொள்கையைப் பலியிட

    கூட்டணிப் படையலா?

    கட்சி சாமிகளே!

    கண்திறந்து பாருங்கள்!

    இதோ தேசம் காக்க

    எல்லைப் பாதுகாப்பில்

    காவல் சாமிகளின் உயிர்ப்படையல்!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கவிதை - கவிஞர் ஜெயபாஸ்கரன்

    கவிதை - கே. ஸ்ரீலதா

    சிறுகதை - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

    கவிதை - தேவராஜ் விட்டலன்

    கட்டுரை - கண்ணன் ராமசாமி

    கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    சிறுகதை - எஸ்.டி.ஏ. ஜோதி

    கட்டுரை - மரியாதைக்கும் அன்புக்குமான மதிப்பீடுகள் மாறுகின்றனவா?

    உறவில் சிக்கல்கள்- தென்றல் சிவகுமார்

    சிறுகதை - தெலுங்கில் : டாக்டர் ஷோபா குரஜாட பெரிந்தேவி

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    கவிதை - தமிழ் உதயா

    நினைக்கப்படும் - மரன்

    சிறுகதை - கே.எஸ். சுதாகர்

    கவிதை - காரைக்குடி சாதிக்

    கவிதை - பிறைநிலா

    குறுநாவல் - ஸிந்துஜா

    கவிதை - ஹரணி

    கட்டுரை - கார்த்திகா பார்த்திபன், கனடா

    கட்டுரை - ராம் முரளி

    கட்டுரை - இடைமருதூர் கி. மஞ்சுளா

    கட்டுரை - கோபு ராசுவேல்

    கவிதை - வலங்கைமான் நூர்தீன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கவிதை - கவிஞர் ஜெயபாஸ்கரன்

    என்னதான் நினைக்கிறாய் நீ

    எதிரே நின்று அழுவதா?

    எதிராக நின்றெழுவதா?

    வழி நடப்பதா?

    வழிநடத்துவதா?

    கேட்டுக் கொண்டிருப்பதா?

    கேள்வி கேட்பதா?

    புதயவா?

    புதைக்கவா?

    அறிவாயுதமா?

    அலங்காரமா?

    செறிவேற்றினவா?

    சிதைத்தனவா?

    அருவறுப்பா?

    பெருமிதமா?

    உன்னைப்பற்றிய வருணனைகள்

    கரையேறவா?

    கைவிடவா?

    கல்வி.

    எதையெதைக் கைவிடுகிறாய்?

    கைப்பற்றுகிறாய்?

    கல்யாணத்திற்கு பிறகு

    கழற்றிக் கொடுத்தாயா?

    கழற்றிக் கொண்டார்களா?

    உன் நடன விருப்பங்களை.

    கொடுத்தாயா?

    பறித்துக் கொண்டார்களா?

    உன் தூரிகையை..

    வெளியேறினாயா?

    வெளியேற்றினார்களா?

    விளையாட்டில் இருந்து.

    எழுதச் சொல்கிறாயா?

    எழுதித் தள்ளுகிறார்களா?

    தசைகளின் அசைவுகளை.

    சொன்னாயா?

    சொன்னார்களா/

    பூமாதேவியென்று

    நிறுத்திக் கொண்டாயா?

    நிறுத்தச் சொன்னார்களா?

    உன்பாடல்களை?

    முன்மாதிரிப் பெண்களோடு

    முடிந்து போய்விடுகிறதா

    முன்னேற்றம்?

    எல்லாவற்றையும் விடு

    பாட்டுக்கு ஆடப் போகிறாயா

    உன் பாட்டுக்கு ஆட போகிறாயா?

    சரி

    இதை மட்டுமாவது சொல் எனக்கு

    வேரோடு பிடுங்கி

    வேறு இடத்தில் நடக்கையில்

    என்னதான் நினைக்கிறாய் நீ?

    ***

    கவிதை - கே. ஸ்ரீலதா

    தமிழில் : ஆர். வத்ஸலா

    சினார் மஞ்சள் சாட்சியாக அவர்களை புதைக்கிறேன்

    (புதைகுழி தோண்டும், கல்லறை பராமரிக்கும் அடா முஹம்மதுக்கு)

    சினார் மஞ்சள் சாட்சியாக அவர்களை புதைக்கிறேன்

    ரத்தத்தில் தோய்ந்த சிகப்பு-நிலா முகங்கள்

    இப்போதுதான் முளைக்கத் தொடங்கியுள்ள இளந்தாடிகள்

    போலி என்கௌன்டர்கள்

    யாருக்கோ எங்கோ

    மிக முக்கியமாக இருக்கக் கூடிய உடல்கள்

    தழும்புகளுடன்

    தாய்மார்களின் தேடும் கண்களுக்கு தென்படாமலேயே

    போகப் போகும் மகன்கள்

    சிசுக்கள்

    கிழிந்த யோனிகளும் கனவேந்திய கண்களுமுடைய இளம் பெண்கள்

    புதைக்கிறேன் எல்லோரையும்

    உறைகிறது நரம்புகளில் என் ரத்தம்

    மறைந்து போன, இறந்து போன,

    எப்போதைக்குமாய் தொலைந்து போனோருக்கு

    பெயர் சூட்டியும்

    ஒவ்வொரு புதிய கல்லறையின் முன் 'துவா' ஓதியும்

    தேம்பியும்

    என் மணித் துளிகளை

    கழித்துள்ளேன்

    சினார் மரங்களும் என்னுடன் தேம்பியுள்ளன

    அதே சினார் மரத்தடியில்

    முன்னொரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்த நானும்

    புதைந்து கிடக்கிறேன்

    ஒரு நண்பன் கேலி செய்கிறான்

    "முஹம்மத், நீ இந்த புதைக்கும் தொழிலில் கை தேர்ந்து விட்டாய்

    இல்லை?"

    அவன் சொல்வது சரிதான்.

    என்னிடம் வந்து சேரும் எதையும்

    புதைத்து விடுவேன் நான்

    புதைக்க முடியாதவை

    நினைவுகள்

    vatsala06@gmail.com

    ***

    சிறுகதை - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

    இராணுவ மரியாதை

    இலேசாகப் பிரசவ வலி எடுத்ததுமே சித்தியும் வளர்ப்புத் தாயுமாகிய பொன்னம்மா சுஜாவை மருத்துவ மனைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள். அரசு மருத்துவனை சற்று தூரம்தான். சென்னைப் பெருநகரை ஒட்டி இருந்த அக்குடிசைப் பகுதி பள்ளமும் படுகுழியுமாய் இருந்தது. பாதை கரடு முரடானது. நாய்களின் நடமாட்டம் அதிகம். நாலாபுறத்திலிருந்தும் நாற்றம் அடித்துக் கொண்டே இருந்தது. அப்போது உச்சி வெயில். ஆனால் ஆட்டோ வேண்டாமென்று அடம்பிடித்தாள் சுஜா.

    பணம் இருக்குடி. கவலப்படாதே. ஆட்டோவிலேயே போயிடலாம். என்று தெரிந்த ஆட்டோ ஒன்றைக் கூப்பிட்டு, அவளைப் பிடிவாதமாக ஏறச் சொல்லி அழைத்துச் சென்றாள்.

    ஆட்டோ மருத்துவமனை நோக்கிப் பயணம் செய்ய, சுஜாவின் மனம் கடந்தகாலத்தை நோக்கிப் பயணம் செய்தது. கருணாகரன் பட்டாளத்தில் சேரப்போகும்போது பொன்னம்மாவிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு போனது நினைவுக்கு வந்தது…

    ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அவர்கள் வாழ்ந்த குடிசைப் பகுதியில் தீப்பிடித்து ஒரே இரவில் நூற்றுக் கணக்கான குடிசைகள் எரிந்து சாம்பலாயின. பல குடும்பங்கள் மடிந்தன. கருணாகரன் பெற்றோர் இருவரையும் இழந்து விட்டான். வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்கியதால் அவன் மட்டும் தப்பித்தான். அதேபோல் அன்று சுஜா தன்னுடைய சித்தி வீட்டுக்கு வந்து விட்டதால் அவளும் தப்பினாள். ஆனால் வீட்டிலேயே இருந்த அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1