Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaney Mayiley Manjari
Maaney Mayiley Manjari
Maaney Mayiley Manjari
Ebook120 pages40 minutes

Maaney Mayiley Manjari

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு சென்சிடிவ் ஆன ஒரு மெடிக்கல் த்ரில்லரை துளி ஆபாசமில்லாமல் சொல்லியிருப்பதாக நம்புகிறேன். பிறன்மனை கவர்தல் தண்டனைக்குரிய குற்றம் என்கிற நீதியை இந்த நாவல் உரக்கக்கூறுகிறது. செயற்கை கருத்தரிப்பில் ஆங்காங்கே நடக்கும் குற்றங்களை நாவலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateJan 7, 2022
ISBN6580111009483
Maaney Mayiley Manjari

Read more from Arnika Nasser

Related to Maaney Mayiley Manjari

Related ebooks

Related categories

Reviews for Maaney Mayiley Manjari

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaney Mayiley Manjari - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மானே மயிலே மஞ்சரி

    Maaney Mayiley Manjari

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    கதை சுருக்கம்

    காண்டீபன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே மராத்தான் ஓடும் பிரம்மசாரி இளைஞன். மஞ்சரி கோடீஸ்வரனின் மனைவி. ஒரு பேரழகியை மணந்து கொள்வது ஒரு பணக்காரனின் சமூக அந்தஸ்து. என்றெண்ணி மஞ்சரியை அந்த கோடீஸ்வரன் கட்டாய திருமணம் செய்து கொண்டான்.

    வெரோனிகா ஒரு மகப்பேறு மருத்துவர் கூடுதலாய் ஒரு செயற்கை கருத்தரிப்பு நிபுணர். வெரோனிகாவும் காண்டீபனும் அக்கா-தம்பி உறவு முறையை பாராட்டும் நண்பர்கள். காண்டீபனுக்கு ஒரு விலையுயர்ந்த கார் வாங்கி தருவதாக கூறி அவனிடமிருந்து விந்துதானம் பெறுகிறாள் வெரோனிகா.

    இடையில் காண்டீபன் ஒட்டப்பயிற்சி செய்யும் போது மஞ்சரி காரில் வந்து காண்டீபனை இடித்து விடுகிறாள். மஞ்சரியை கண்ட நொடியில் அவள் மேல் காதலாகிறான் காண்டீபன்.

    தனது மலட்டுத்தன்மையை மறைக்க எதாவது ஒரு இளைஞனின் விந்தணுவை பெற்று தன் மனைவிக்கு செயற்கை கருத்தரிப்பு செய்து விட டாக்டர் வெரோனிகாவை பணிக்கிறார் மஞ்சரியின் கணவர்.

    காண்டீபனின் விந்தணுவை தானம் பெறுகிறாள் வெரோனிகா. கணவரின் விந்தணுவை வெளி எடுத்து வீரியபடுத்தி செயற்கை கருத்தரிப்பு செய்வதாக மஞ்சரியிடம் பொய் சொல்கிறாள் வெரோனிகா.

    விந்தணுதானம் செய்த காண்டீபனை கொல்ல இருமுறை கொலை முயற்சிகள் நடக்கின்றன. இரண்டிலும் தப்பிக்கிறான். தன்னை கொல்ல முயன்றவர்களை கொன்று விபத்தாய் ஜோடிக்கிறான் காண்டீபன்.

    மீண்டும் ஒரு முறை மஞ்சரியை தற்செயலாக சந்தித்து அவளின் கைபேசி எண்ணை பெறுகிறான் காண்டீபன்.

    தன்னை கொல்ல முயல்வது டாக்டர் வெரோனிகாதான் என சந்தேகப்படுகிறான் காண்டீபன். சந்தேகத்தை உறுதிபடுத்த ஆதாரங்கள் கிடைக்கின்றன. வெரோனிகாவை வலுக்கட்டாயமாக தற்கொலை பண்ண வைக்கிறான்.

    போலீஸ் விசாரணையில் டாக்டர் வெரோனிகா தற்கொலை செய்து கொண்டாள் என முடிவாகிறது.

    மஞ்சரியின் கணவரின் தகிடுதத்தங்களை மஞ்சரியிடம் கூறி அவளின் காதலை யாசிக்கிறான் காண்டீபன். அத்துடன் ஆறுமாதம் அவகாசமும் தருகிறான்.

    தான் பாஸ்டன் மராத்தான் ரேஸில் ஜெயித்து நாடு திரும்பும்போது மஞ்சரி அவளது கணவனை விவாகரத்து செய்து விட்டு அல்லது விவாகரத்துக்கான ஏற்பாடுசெய்து விட்டு தன்னுடன் வாழ வர வேண்டும் இல்லையென்றால் மஞ்சரியின் கணவரை கொன்று மஞ்சரியின் வயிற்றில் வளரும் குழந்தை தன் குழந்தை என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் நிரூபிப்பேன் என மிரட்டுகிறான்.

    மராத்தான் ஓட்டபயிற்சிக்கு பாஸ்டன் போகிறான் காண்டீபன். அவனுக்கு உடன்படுவது போல நடித்து ரேஸில் ஓடும் அவனை ஆள் வைத்து கொல்கிறாள் மஞ்சரி.

    தான் தாலி சென்டிமென்ட் உள்ள பழைமைவாதி. அதனால்தான் திருமணத்தை விட்டு வெளியே வர சொன்ன காண்டீபனை கொன்றேன் என தனக்கு தானே சமாதானம் கூறிக் கொள்கிறாள் மஞ்சரி.

    பிறக்கும் ஆண் குழந்தைக்கு காண்டீபன் என பெயர் வைக்கிறாள்.

    ஒரு சென்சிடிவ் ஆன ஒரு மெடிக்கல் த்ரில்லரை துளி ஆபாசமில்லாமல் சொல்லியிருப்பதாக நம்புகிறேன். பிறன்மனை கவர்தல் தண்டனைக்குரிய குற்றம் என்கிற நீதியை இந்த நாவல் உரக்கக்கூறுகிறது. செயற்கை கருத்தரிப்பில் ஆங்காங்கே நடக்கும் குற்றங்களை நாவலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன் மாலைமதியில் எழுதுவது என் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளது நன்றி.

    வணக்கம்

    மாலைமதி நாவலுக்காக 01.10.2022 எழுத ஆரம்பிக்கப்பட்டது

    1

    ஒற்றைப் பார்வையில்

    என்னைத் தீண்டினாய்

    கற்றையாயென் உயிரைத்

    திருகினாய்

    விட்டு விலகினால்

    வெட்டவெளியில்

    அற்றைத்திங்கள் அந்நிலவில்

    அங்கேயே நின்று

    கொண்டிருக்கிறேன்

    நீ திரும்பி வருவாயென

    - தேஜஸ் சுப்பு

    சுவர்க்கா ஆடம்பர அடுக்குமாடிக்குடியிருப்பு.

    நான்காவது தளத்தில் 16வது பிளாட்

    அந்த 2000 சதுரஅடி பிளாட்டில் மூன்று படுக்கையறைகளும் ஒரு அழகான பால்கனியும் ஒரு மாடுலர் சமையலறையும் அமைந்திருந்தன.

    பிரதான படுக்கையறையில் படுத்திருந்தான் காண்டீபன். சர்ப்பச்சீறல் போல் இருந்தது அவன் சுவாசம்.

    காண்டீபனுக்கு வயது 26. ஒரு கார்பரேட் கட்டுமான நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட்டாக பணிபுரிகிறான். குடித்தலோ புகைப்பிடித்தலோ வெற்றிலை பாக்கு போடுதலோ இல்லாத ஆரோக்கியன். உயரம்180செமீ. மினுமினுக்கும் பளபளக்கும் திராவிட நிறம். ஏறுநெற்றி கொண்ட சம்மர் கிராப்பிய கேசம். கிருஷ்ணக்கண்கள். முத்தம் யாசிக்க சொல்லும் உதடுகள்

    அலாரம் சிணுங்கியது.

    எழுந்தான் காண்டீபன். பல்துலக்கி காலைக்கடன்களை முடித்தான். குறும்டவுசரும் டி சர்ட்டும் உடுத்தினான். கால்களில் ஸாக்கோனி என்டார்பின் ஸ்பீட் 2 ஷு அணிந்து கொண்டான். கைகளில் கையுறை தலைக்கு தொப்பி. இடது மணிக்கட்டில் சாம்சங் கேலக்ஸியன் ஸ்மார்ட் வாட்ச் கட்டிக் கொண்டான்.

    பிளாட் கதவை மூடிவிட்டு வராண்டாவில் ஓட ஆராம்பித்தான்.

    காண்டீபன் மாதம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும் பணியில் இருந்தாலும் மராத்தான் ஓட்டத்தின் மீது தீராக் காதல் கொண்டவன்.

    இந்தியாவின் நம்பர் ஒன் மராத்தான் ஓட்டவீரன் காண்டீபன் தான். அவன் 42.2கிமீ தூரத்தை இரண்டுமணி பத்து நிமிடத்தில் கடப்பான். உலக சாதனை கென்யாவை சேர்ந்த எலூட் கில்ஸோகேவால் ஏற்படுத்தப் பட்டிருந்தது. 1:59:40:2 நொடிகளில் மராத்தான் தூரத்தை கென்யவீரர்

    Enjoying the preview?
    Page 1 of 1