Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idi Minnal Naatkal
Idi Minnal Naatkal
Idi Minnal Naatkal
Ebook108 pages1 hour

Idi Minnal Naatkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நகைச்சுவை சூப்பர் ஸ்டார் சந்துரு பழைய நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவைகளை காப்பியடித்து ட்ராக் பண்ணி பணமும் புகழும் சம்பாதிக்கிறான். 1950களின் தமிழ் நகைச்சுவை நடிகனின் ஆவி ஓ.ஆர்.மாயன் தன் பழி வாங்கும் படலத்தை ஆரம்பிக்கிறது. சந்துரு ட்ராக் செய்ய போகும் ஒரு பட ஆபரேட்டர் அமான்ஷ்யமாய் கொல்லப்படுகிறார். சந்துருவின் காப்பி அடித்த ஸ்கிரிபட்டில் இரத்த எழுத்துகள் பூத்தன. சந்துருவுக்கு சின்னக்கலை கடவுள் பட்டம் கொடுப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சந்துருவுக்கு பழைய நகைச்சுவைகளை திருடி தரும் யூசுப் கொல்லப்படுகிறான். சந்துருவுக்கு எதிராக திரண்டிருக்கும் நகைச்சுவை ஆவிகளை விரட்ட தாமோதர நம்பூதிரி வரவழைக்கப்படுகிறார். நம்பூதிரி ஆவிகளால் கொல்லப்படுகிறார். சிக்கந்தர் பாவா என்பவரை வைத்து ஜின்களை வைத்து சந்துருவுக்கு தொந்திரவு கொடுத்த ஒன்பது ஆவிகளும் வரவழைக்கப்படுகின்றன. அவை இறந்துபோன நகைசுவை நடிகர்களின் ஒப்பனையில் வந்த டூப்ளிகேட் ஆவிகள். இவ்வளவு சதிவேலைகளையும் செய்வது யார்? மீதி நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு ட்ரன்டி அமான்ஷ்ய நாவல்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580111006384
Idi Minnal Naatkal

Read more from Arnika Nasser

Related to Idi Minnal Naatkal

Related ebooks

Related categories

Reviews for Idi Minnal Naatkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idi Minnal Naatkal - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    இடி மின்னல் நாட்கள்

    Idi Minnal Naatkal

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    முகப்பேர். கிரஸ்ண்ட் அவின்யூ.

    அலங்கார தாவரங்கள் சூழ்ந்த பங்களா.

    பங்களாவின் ஒவ்வொரு செங்கல்லிலும் ஆர்க்கிடெக்சர் புரட்சி நடத்தப்பட்டிருந்தது.

    பங்களாவுடன் இணைந்த அதிநவீன உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து நடிகர் சந்துரு வெளிப்பட்டான்.

    சந்துரு வயது 43. உயரம் 5'-6', வகிடு எடுக்காமல் தலைகேசத்தை தூக்கிச் சீவியிருந்தான். ரோஜா நிறம். குறும்பு கொப்பளிக்கும் பவர் கிளாஸ் கண்கள். எதிராளியுடன் கத்தி சண்டையிடும் மூக்கு. ஹீரோஸத்துக்கும் வில்லனிஸத்துக்கும் இடைப்பட்ட நகைச்சுவையிஸத்தை வெளிப்படுத்தும் மீசை. கோடி நகைச்சுவை வார்த்தைகளை ஒளித்து வைத்திருக்கும் பியர் உதடுகள்.

    சந்துரு தமிழ்த்திரை உலகின் நகைச்சுவை சூப்பர் ஸ்டார்.

    தமிழ் சினிமா எடுக்க பிலிம் தேவைப்படுகிறதோ இல்லையோ சந்துரு தேவைப்படுகிறான்.

    சந்துரு கொட்டாவி விட வாய் திறந்தால் தமிழன் சிரிக்கிறான்.

    சந்துரு வாத்துநடை நடந்தால் தமிழன் சிரிக்கிறான்.,

    சந்துருவின் மீது ஆறு முதல் அறுபது வயதான ஆடவர் பெண்டிருக்கு ஒரு நகைச்சுவை மயக்கம் மயக்கம்.

    கடந்த அறுபது வருடங்களில் ஆயிரம் நகைச்சுவை நடிகர்கள் வந்து போயிருக்கின்றனர். அவர்களில் கீழ்கண்டோர் தான் வாழும் சரித்திரமாக பிரகாசிக்கின்றனர்.

    1. 'கலைக்கடவுள்' சி.எஸ்.என். சூரியமூர்த்தி

    2. 'நடிகஅம்பு' ஓ.ஆர். மாயன்

    3. 'அஷ்டவதானி' ஜி.ஜே. தினேஷ் பாபு

    4. 'படார்' ருத்ரவேலு

    5. 'தமிழ்நாட்டு ஜெர்ரி லூயிஸ்' - சுந்தரேஷ்

    6. 'வெங்காயம்' வெங்கடேசன்

    7. குமுளி நட்ராஜ்

    8. கதராடை கார்த்தி

    9. கனகராஜ்

    10. சித்திரமணி - முத்துப்பாண்டி ஜோடி

    - தற்சமயமோ சந்துருவும் வைகைச்சூறாவளி ஞானவேலுவும் காமெடி ரகளை பண்ணிக் கொண்டிருக்கின்றனர். Neck to neck race between Chandru and Gnanavelu. ஆடும் பத்து ரவுண்டுகளில் ஆறு ரவுண்டுகள் சந்துரு வெற்றி பெறுகிறான். நான்கு ரவுண்டுகள் ஞானவேலு வெற்றி பெறுகிறான்.

    ஞானவேலுவை விட சந்துரு அழகன். சந்துருவை ஆண் ரசிகர்கள் அழகிய புது மனைவியின் தம்பியாக பாவிக்கின்றனர். சந்துருவை பெண்ரசிகைகள் டீனேஜ் கொழுந்தனாக பாவிக்கின்றனர்.

    சந்துரு அடிப்படையில் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். சந்துருவின் மிகப்பெரிய பலம் அவனது உள்வாங்கும் சக்தி. எதிராளியின் நடை உடை பாவனை பேச்சுகளை நொடியில் கிரகித்துக் கொள்வான். பொதுவாக சினிமா நடிகர்கள் ஓரளவு வெற்றி பெற்றதும் வெகுஜனத்திடமிருந்து விலகிப்போய் விடுவார்கள். சந்துருவோ டிவியின் அனைத்து சானல்களிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன - லேட்டஸ்ட் பாப்புலர் ஜிங்கிள்ஸ் எது - தேசிய தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? - தமிழ்வார மாத இதழ்களின் அவ்வப்போதைய உள்ளடக்கங்கள் என்னென்ன எல்லாவற்றையும் கவனமாய் கிரகிப்பான். தன்னுடன் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின், துணை நடிகர்களின் ப்ளஸ் மைனஸ்களை மோப்பம் பிடித்து வைத்திருப்பான். சந்துரு காம்பினேஷனில் நடிக்க சகநடிகர் நடிகையர் பயப்படுவர். காரணம் அவன் நடிக்கும் பிரேம்களில் மற்ற நடிகர்கள் காணாமல் போய்விடுவர். சந்துருவைக் கண்டு டைரக்டர்கள் பதுங்குவர். தயாரிப்பாளரின் விருப்பத்தை மறுக்க முடியாமல்தான் சந்துருவையே புக் பண்ணுவர். முதல் நான்கு சீன்கள் அமைதியாக பண்ணும் சந்துரு அதன்பின் டைரக்டர்களை டாமினேட் பண்ண ஆரம்பித்து விடுவான்.

    சந்துரு மதுரைக்காரன். சந்துருவின் மனைவி பெயர் கிறிஸ்டி. சந்துருவுக்கு இருமகன்கள் பெயர்: ஆல்பர்ட் சின்னசாமி, கிறிஸ்டோபர் மருது. கிறிஸ்துவமதம் தழுவிய தேவர் இனத்தவன்.

    - சந்துரு பாத்டப்பில் குளித்தான். தலைதுவட்டினான்.

    எடை இயந்திரத்தில் ஏறி நின்றான். 64,600 என்றது. அதனை சார்ட்டில் குறித்துக் கொண்டாள் மனைவி கிறிஸ்டி.

    எடை 100 கிராம் நேத்தைய விட கூடியிருக்கீங்க சந்துரு!

    எல்லாம் உடையார் பண்ற வேலை. நேத்து நைட் ரெண்டு பியர் குடிச்சேன்ல. அதான் அதான்...

    இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் ஏன் இன்னும் பியரைக் கட்டி அழறீங்க? ஒயின்கியின் குடிக்க வேண்டியதுதானே?

    போடி... ஈஸியா சொல்லிட்ட. தொட்டில் வழக்கம். மின்சுடுகாடு மட்டும். ஒயின் குடிச்சா சனியன் இனிக்குது!

    சிரித்தாள் மனைவி.

    வரவேற்பறையில் அமர்ந்த நான்கு உதவியாளர்கள் சந்துருவைப் பார்த்ததும் எழுந்து வணங்கினர்.

    வணக்கம் தலீவா!

    வாங்கடா... வாங்க வாங்க!

    டிபன் சாப்பிடுவம். வாங்கடா!

    நாங்க வரலப்பா. டிபன்னா நம்ம ஊர்ல ஊத்தப்பம் கெட்டிசட்னி. நீ கெல்லாக் கில்லாக்குன்னு எதையோ சாப்டுற. நமக்கு ஒத்துவராது. நீ குடிக்ற பிளாக் டீ கூட நமக்கு ஒத்துவராது!

    கெல்லாக் ஊறும் பால் கிண்ணம் ஏந்தி ஸ்பூனால் உண்டான் சந்துரு.

    மென்றபடி, கேர்ள்ஸ் - படம் ரிசல்ட் என்னடாச்சு?

    "புட்டுக்கிச்சு நண்பா.

    Enjoying the preview?
    Page 1 of 1