Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathaanin Kavithaikal
Saathaanin Kavithaikal
Saathaanin Kavithaikal
Ebook70 pages32 minutes

Saathaanin Kavithaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Saathaanin Kavithaikal

Read more from Arnika Nasser

Related to Saathaanin Kavithaikal

Related ebooks

Related categories

Reviews for Saathaanin Kavithaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathaanin Kavithaikal - Arnika Nasser

    10

    1

    1978 நவம்பர் ஆறாம் தேதி பகல் 11 மணி - பல்லவ்பூர்

    வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த மண்டலம் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தெற்கு தமிழகத்தை நோக்கி தாக்கியது.

    சூரியன் ஏழாம் வானம் போய் ஒளிந்து கொண்டது.

    இரு தேசத்து லட்சக்கணக்கான கறுப்புக் குதிரைகள் எதிர் எதிரே வந்து முட்டிக்கொண்டன. மழை மேகங்கள்.

    ஏற்கனவே பெய்த மழையில் சாலைகளும் கட்டடங்களும் மரங்களும் நனைந்து சொதசொதத்திருந்தன.

    திறந்தவெளி சாக்கடையில் மழை நீர்கள் புரண்டோடியது.

    புனித மரியன்னை மெட்ரிக்குலேஷன் பள்ளி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் நான்கு மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது.

    மிகவும் கண்டிப்பான பள்ளி. விடுமுறைகள் மிகக் குறைவு.

    அடாது மழை பெய்து வந்தாலும் அன்றும் பள்ளி இயங்கியது.

    பள்ளியின் நான்கு பஸ்களில் குழந்தைகள் வந்திறங்கியிருந்தன.

    முதல் வகுப்பில் –

    மிஸ் ஆனி அமர்ந்திருந்தாள்.

    அவள் எதிரே நாற்பது குழந்தைகள்.

    நாற்பதில் ஆறு குழந்தைகள் நெருக்கமான நண்பர்கள்.

    சங்கர். சோடா புட்டி கண்ணாடி. நடு வகிடு கேசம். இன்னுமே மழலை மாறாத சிறுவன்.

    சந்தனு. மகா குண்டு.

    ஆனந்த். ஒற்றை நாடி, நீண்ட முகம். கோரை முடி. குளிரிலிருந்து தப்ப உல்லன் தொப்பி, உல்லன் ஸ்வெட்டர் அணிந்திருந்தான் சீருடை மீது.

    சார்லஸ், கழுத்தில் சிலுவை தொங்கும் டாலர். பளபளப்பான கறுப்பு நிறம் நொடிக்கொருதரம் ‘சேசுவே! சேசுவே!’ என்பான்.

    அன்வர். முஸ்லிம் பையன். வலது கையில் பிராஸ்லட். இடது கையில் டைட்டன் வாட்ச். ஆறாவது தேவசாமி.

    மீண்டும் பெரும் இரைச்சலுடன் மழை ஆரம்பித்திருந்தது. காற்றில் ஈரமும் குளிரும் கலந்து மிதந்தது.

    வானம் கோடிக்கணக்கான கறவை பசுக்களின் பால் காம்புகளாய் மாறியிருந்தது. அனைத்து காம்புகளிலிருந்தும் மழை சர்ரென பீய்ச்சியடித்தது.

    நேரம் ஆக ஆக காற்றின் வேகம் உக்கிரமானது.

    தலைமையாசிரியை அறையில் அவசரக்கூட்டம் நடந்தது. ஒட்டுமொத்த ஆசிரியைகளின் விருப்பப்படி அன்றும் மறுநாளும் விடுமுறையாய் அறிவிக்கப்பட்டன.

    பள்ளிப் பேருந்துகள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அவரவர் வீட்டுக்கு விட்டுவர புறப்பட்டன.

    ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளும் போயிருக்க -

    சங்கர், சந்தனு, ஆனந்த், சார்லஸ், அன்வர், தேவசாமி மட்டும் திருட்டுத்தனமாய் மாடிப்படிக்கட்டுக்கு கீழ் ஒளிந்து கொண்டனர்.

    எதுக்குடா சங்கரு எங்கள இங்க ஒளியச்சொன்ன?

    வீட்டுக்குப்போனா போரடிக்கும். எல்லாரும் போய்ட்ட பிறகு ஸ்கூலே காலியா இருக்கும். நாம் மட்டும்தான். ஜாலியா இருக்கலாம்!

    அப்புறம் எப்படி வீட்டுக்குப் போரது?

    அது பாத்துக்கலாம்டா!

    பயமாயிருக்காது!

    ம்ஹூம். சூப்பரா இருக்கும்!

    வகுப்பறைகள் பூட்டப்பட்டன.

    அட்டென்டர் கனத்த காலடி சப்தத்துடன் விலகிப் போவது கேட்டது.

    இப்போது பள்ளி வளாகத்தில் இந்த ஆறுச் சிறுவர்களைத் தவிர வேறு எந்த மாணவரும் இல்லை.

    கான்கிரீட் கூரையிலிருந்து வழியும் மழை நீரை இருகைகளில் சேகரித்து விளையாடினான் சங்கர்.

    அன்வர் காகிதக் கப்பல்கள் செய்து மழை நீரில் விட்டான். முதலில் மிதந்த கப்பல் மழைநீர் பட்டு பட்டு சொத சொதத்து கவிழ்ந்தது.

    வராண்டா முனையில் அமர்ந்து கொண்டு பூட்ஸ் காலால் தேவசாமி ஓடும் மழை நீரை சிதற்றினான்.

    ஆனந்த் மழைநீர் மீது சப்தமாக ‘ஒன் பாத் ரூம்’ போனான். சக நண்பர்கள் பலமாய் சிரித்தனர்.

    சார்லஸ், ஏண்டா சந்தனு... எப்டிடா மழை பெய்யுது?

    "எங்க பாட்டி சொல்லும்... வானத்ல உக்காந்து

    Enjoying the preview?
    Page 1 of 1