Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu
Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu
Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu
Ebook109 pages47 minutes

Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu

Read more from Arnika Nasser

Related to Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu

Related ebooks

Related categories

Reviews for Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaa Thanthuvidu Vaa Uyirai Vidu - Arnika Nasser

    19

    1

    திருவான்மியூரின் நியூ பீச் ரோட்டின் இடதுபுறம் அமைந்திருந்த மிகப்பெரிய பங்களா நெற்றியில் க்யூரடிவ் ட்ரக் ரிஸர்ச் ஸென்ட்டர் என்ற போர்டு இருந்தது. மிக உயரமான இரும்பு கிரில் கேட் வாட்டசாட்டமான கூர்க்கா துணையுடன்.

    வாசலிலிருந்து 200 மீட்டர் தூரம் வரை இருபுறமும் அலங்கார வகை தாவரங்கள் கலர் கலர்ப் பூக்களுடன். ‘பங்களா’ மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.

    இடப்புறம் அனிமல் ஹவுஸ்-நடுவில் ஆராய்ச்சிக் கூடம். வலப்புறம் ரிசர்ச் சென்டரின் ஆபீசுடன் கூடிய பங்களா. ஆராய்ச்சிக்கூடத்தின் தலைமை விஞ்ஞானி ஹரிநாத்.

    தொழுநோய்க்கு ஒரு சிறப்பான மருந்து ஹரிநாத் கண்டுபிடித்து பார்முலாவை அவரது கம்பெனிக்குக் கொடுத்து விட்டால் மருந்து விற்பனையில் 3 சதவீதம் ராயல்டி தரவும் அக்கம்பெனி தயாராயிருந்தது.

    ஹரிநாத்திடம் இரு இளம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு துணையாக இருந்தனர்.

    அவர்கள் –

    ரத்தீஷ்-வயது 28 - 5 அடி 7 அங்குல உயரம் - மாநிறம் - திருமணமாகாதவன் - விலங்கியலில் டாக்டரேட்.

    நிஸ்திமா-வயது 26-5 அடி 3 அங்குலம் உயரம் - மந்தாகினி கண்கள்- அகல சைஸ் மார்புகள் - ஹிப்போடு கட்டப்படாத ஒரிஜினல் இடுப்புப் பகுதி - வாளிப்பு தொடைக் கால் பகுதி.

    நிஸ்திமா தன் ஹை ஹீல்சால் ‘டாக் டாக் டாக்க’

    ரத்தீஷ் நிஸ்திமாவுடன் ஒரு குறிப்பிட்ட கூண்டை நெருங்கி நின்றான்.

    நிஸ்தி! அந்த வெள்ளெலியைக் கொஞ்சம் கவனி.

    கவனித்தாள். கூண்டுக்குள் துள்ளித் துள்ளிக் குதித்தபடி சுறுசுறுப்பாய் இருந்தது.

    ஏன் ரத்தீஷ்?

    நம்ம பாஸ் ரிசர்ச் பண்ணச் சொன்னது தொழுநோய்க்கு ஃபுல் க்யூர் பண்ற மாதிரி ட்ரக் தயார் பண்ணும்படி. ஆனா நான் அவருக்கே தெரியாம வேறொரு ஆராய்ச்சி இந்த அஞ்சு வருஷமா பண்ணினேன்."

    ரத்தீஷ்! கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்.

    சொல்ரேன். அந்த கூண்டுக்குள்ள துள்ளித் துள்ளி விளையாடுற அதே எலி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் எலியின் சராசரி ஆயுள் 3 வருடம் 6 மாதம் வாழ்ந்து வயோதிகம் முற்றி, சாகப் பிழைக்கக் கிடந்தது.

    ம்.

    அந்த எலியை வெளியே எடுத்து ஒரு பேப்பரின் மீது வைத்து, தானாகச் சாகட்டும். மறுநாள் டிஸ்போஸ் பண்ணிவிடலாம் என லேப்பை மூடிவிட்டு என் தங்குமிடம் போனேன். மறுநாள் காலை லேப்பை திறந்த எனக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.

    என்ன அதிசயம்?

    அந்த எலி மேஜையின் மீது துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. திகைத்துப்போன நான் மேஜையை ஆராய்ந்தேன். எலிக்கு அடியில் வைத்த காகிதத்தில் முக்கால் பகுதியை எலி தின்றிருந்தது. இந்த எலியின் திடீர் இளமைக்கு என்ன காரணம்? ஏராளமாய்ச் சிந்தித்த நான் – ஒருவேளை எலி இந்த காகிதத்தை தின்றதுக்கும் அதன் இளமைக்கும் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகப்பட்டேன்.

    வாவ்! அப்றம்? அப்றம்?

    மீதியிருந்த காகிதத்தை ஆராய்ந்தேன். முந்தைய நாள் சிந்திய ஒரு ரசாயனப் பொருளை எடுத்து வைத்த நியூஸ் பேப்பர் துண்டு. அந்த நியூஸ் பேப்பர் ஒரு ஆங்கில தினசரி.

    ம்.

    அந்த ஆங்கில தினசரிக்குச் சென்று அவர்கள் பத்திரிகைக்கு சப்ளை செய்யப்படும் காகிதத்தின் மூலப்பொருட்கள் என்னவென்று விசாரித்தேன்.

    பெரிய அளு நீ!

    அந்தப் பர்டிகுலர் மூலப்பொருளையும் அந்த பர்டிகுலர் லேப் கெமிக்கலையும் மிக்ஸ் பண்ணி ஒரு புது பார்முலா கண்டுபிடித்தேன்.

    பென்டாஸ்டிக்.

    நான் கண்டுபிடித்த பார்முலா பொது நோய் எதிர்ப்பு சக்தியையும் நீடித்த இளமையையும் தரக்கூடியது. அதை முழுதும் பரிசோதித்துப் பார்க்க விரும்பினேன்.

    ம்.

    என் ஆராய்ச்சி மருந்தை டெஸ்ட் பண்ண தானாக எந்த மனிதன் முன் வருவான்? வந்தாலும் என் ஆராய்ச்சி இரகசியம் ஊருக்குத் தெரிந்துவிடுமே.

    சீ போ ரத்தீஷ். உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிற நான் இல்லை. என்னைக் கூப்பிட்டிருக்கலாமே?

    உனக்கும் தெரியக் கூடாது என்று நினைத்தேன். அப்போது சரியான வழி தென்பட்டது. என் உடன் பிறந்த அக்கா, கணவனால் கைவிடப்பட்டவள் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தாள். அவளிடம் என் ஆராய்ச்சி பற்றி விளக்கமாய் கூறினேன். அவளின் பிறக்கப் போகும் குழந்தைக்கு நான் கண்டுபிடித்த மருந்தைச் செலுத்திப் பார்க்க அனுமதி கெஞ்சினேன்.

    அனுமதி தந்தாங்களா?

    முதலில் பயந்தாள். என் வாழ்க்கையில் ஒரே துணையை உன் மருந்து கொன்று விட்டால்? என பயந்தாள். பின் தேறி ஒத்துக் கொண்டாள்.

    இந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே, என சத்தியம் வாங்கினேன். குழந்தை பிறந்தவுடன் முதல் 6 மாதங்களுக்கு மாதம் ஒரு டோஸ் வீதம் ஆறு டோஸ் என ஆராய்ச்சி மருந்தைச் செலுத்தினேன்.

    பிரகாசமானால் ரத்தீஷ்.

    நிஸ்தி! என் அக்கா பையனுக்கு மூன்றரை வருஷமாக ஒரு வியாதி இல்லை. புத்தம் புது இளமையாக இருக்கான்.

    இட்ஸ் ரியலி எ கிரேட் அச்சீவ்மென்ட் ரத்தீஷ். அடுத்து என்ன செய்யப்போறே?

    அடுத்தா? ஹரிநாத் மூலமாய் பிரிட்டிஷ் ராயல் கெமிக்கல் சொசைட்டி ஜர்னலில் என் கண்டுபிடிப்பை பப்ளிஷ் பண்ணுவேன். பப்ளிஷ் ஆனா இந்த வருஷம் நோபல் பரிசு எனக்குத்தான். நோபல் பரிசு கிடைச்சவுடனே உனக்கும் எனக்கும் கல்யாணம்.

    நீ அறிவு கெட்டவன் ரத்தீஷ்.

    நிஸ்தி!

    என் முட்டாள் காதலனே! நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள். நான் வாழ்க்கையில் காதலித்தது உன்னை மட்டுமல்ல, பணத்தையும்தான். எனக்குப் பணமே பிரதானம். கோடிக்கணக்கில் பணம் மில்லி மைக்ரான் அளவு உடல் உழைப்போ மன உழைப்போ இல்லாமல் கிடைக்க வழி திறந்து கிடக்கிறது. அதை விட்டு விட்டு நோபல் பரிசு வேண்டுமா? அல்லது 5 அடி 3அங்குல சொர்க்கத்துடன் 30 கோடி பணம் வேண்டுமா? நீயே முடிவெடுத்துக் கொள்.

    ரத்தீஷ் "அடிப் பணப்பேயே! உன்னை

    Enjoying the preview?
    Page 1 of 1