Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathu Kavarchiyaanathu
Aabathu Kavarchiyaanathu
Aabathu Kavarchiyaanathu
Ebook107 pages1 hour

Aabathu Kavarchiyaanathu

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466534
Aabathu Kavarchiyaanathu

Related to Aabathu Kavarchiyaanathu

Related ebooks

Related categories

Reviews for Aabathu Kavarchiyaanathu

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabathu Kavarchiyaanathu - JDR

    20

    1

    பரபரப்பான அந்தச் சாலை அந்நேரம் அமைதியாய் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.

    அதிகாலை இரண்டு மணியின் மெல்லிய குளிர் எங்கும் பரவியிருந்தது. பனி ஒரு நீர்த்த புகைபோல அடைந்திருந்தது.

    ஷாலினி ஜ்வல்லர்ஸை அடுத்திருந்த சந்தில் அந்த வேன் வந்து நின்றது.

    உள்ளே நான்கு பேர் இருந்தார்கள்.

    அமர்நாத்.

    பழனிச்சாமி.

    கோபால்.

    நான்காவதாக இருந்தவன் அமெரிக்கன். வெளிறிய பழுப்பு நிறம், செம்பட்டைத்தனமான தலைமுடி. அவன் சிந்தனையாய் ஒரு நீளமான சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான்.

    கோபால் வயதில் சின்னவனாய் இருந்தான். இறுக்கமான கால்சட்டை, சட்டை அணிந்திருந்தான்.

    முதுசில் ஆக்ஸிஜன் சிலண்டர் கட்டியிருந்தான்.

    கோவாலு... நல்லா கவனிச்சுக்கிட்டியாடா... என்றான் அமர்நாத்.

    ம்... ம். ஆனா இந்த டின்னை முதுகில கட்டிட்டிருக்கறதுதான் என்னமோனு இருக்குன்ணே...

    அத்த முதுகுல கட்டி அதுல இருந்து வர்ற ரப்பரை மூக்குல மாட்டலைனா நீ மூச்சு முட்டி செத்துப் போயிடும். அதுல இருந்துதான் பிராணவாயு வருது.

    சரிதாண்ணே.

    கோவாலு, நீ கடைக்குள்ள போறவரைதான் இது மாட்டிக்கிடணும். அப்புறம் இதைத் திருகி அடைச்சிரணும் பிறகு மூக்குல இருக்கிறதக் கழட்டிட்டு கடையில் ஒன் திறமையைக் காட்டுற... காட்டிட்டு...

    அந்த வெவரம் எல்லாம் ஞாபகம் இருக்குன்ணே என்று சொன்ன கோபால், தயாரானான்.

    அமர்நாத் அந்த அமெரிக்கனைத் தட்டிக் கூப்பிட்டான்.

    ஹலோ... கிவ் த பாம்ஸ்.

    அந்த அமெரிக்கன் சுண்டு விரல் சைசில் இருந்த ஜெல்லட்டின் குண்டுகளை அமர்நாத்திடம் கொடுத்தான்

    அமர்நாத் அவற்றைக் கோபாலிடம் கொடுத்தான்.

    கோவாலு. இதெல்லாம் வெளிநாட்டு வெடிகுண்டு. இந்தா குண்டூசி மாதிரி இருக்குதே. இதுதான் கச்சூ நீ கடைக்கு நேர்கீழ போனதும் இந்த டேப்ப வச்சு வெடிகுண்டை உயர மோட்டுல ஒட்டிடு.

    ஒட்டிக்குமான்ணே?

    சப்புன்னு ஒட்டிக்கிடும்டா. இது அமெரிக்கா சரக்கு

    சரிண்ணே. ஒட்டிட்டு?

    ஒட்டிட்டு இந்த குண்டுசிய உருவிடு. டபுக்னு சின்ன சத்தத்தோட வெடிக்கும். ஒரு கூடை மண்ணை வாரிடும். மொத்தம் பத்து வெடிகுண்டு இருக்கு. ஒண்ணு ஒண்ணாத்தான் வைக்கணும். அவசரப்பட்டு ரெண்டு மூணு வச்சிடாத. உனக்கே ஆபத்தாயிடும்.

    அதெல்லாம் கவனமா இருப்பேண்ணே.

    சரி... இறங்கு.

    கோபால் வேனிலிருந்து இறங்கினான்.

    இந்தாடா டார்ச்சு. இந்தக் கயிறுதான் அளவு கயிறு. இத சாக்கடை மூடில கட்டிட்டு நீளமா விட்டுட்டேப் போ. இந்தக் கயிறு இந்த இடத்துல இருந்து ஷாலினி ஜ்வல்லர்ஸ் வரை நீளம் கரெக்டா இருக்கும். கயிறு முடியற இடத்துல நீ வெடி வெச்சா சரியா இருக்கும். ஷாலினி ஜ்வல்லர்ஸ் தரையில் ஓட்டை விழுந்திடும். என்று விளக்கிய அமர்நாத் டார்ச்சும் கயிறும் கொடுத்தான்.

    பழனிச்சாமி கீழே இறங்கி அங்கிருந்த பாதாளச் சாக்கடை மூடியை அகற்றினான்.

    கோபால் உள்ளே இறங்க, பழனிச்சாமி உதவினான்.

    பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி ஆக்ஸிஜன் ட்யூப்பை மூக்கில் இணைத்துக் கொண்டான்.

    கிட்டத்தட்ட இடுப்பளவு சாக்கடை ஓடியது. அந்தக் குழாய்கள் அவன் உயரம் இருந்தன. கோபால் சற்றுக் குனிந்தபடி நகர சாக்கடை மூடி மீண்டும் பொருத்தப்பட்டது.

    கோபால் உள்ளே டார்ச் அடித்துப் பார்த்தான். புது செல் போடப்பட்டிருந்த டார்ச் குபீர் ஒளியைப் பாய்ச்சியது

    கருப்புக் குழம்பாக கொழ, கொழவென சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. அது உடலில் பட்டு பெரும் அருவருப்பு தந்தது.

    கோபால் தான் வைத்திருந்த கயிற்றின் ஒரு முனையை சாக்கடை மூடியில் கட்டினான். கயிற்றை வழிநெடுக விட்டுக்கொண்டே நடந்தான்.

    சில இடங்களில் கால்கள் சேற்றுக்குள் அமிழ்ந்தன. சில சமயங்களில் காலில் எது எதுவோ தட்டுப்பட்டது.

    செத்து சாக்கடை நீரில் ஊறி அழுகிப்போன நாய்க்குட்டி ஒன்று மிதந்து வந்தது.

    உடலில் கம்பளிப் பூச்சி ஊர்வது போன்ற ஒரு அருவருப்பான உணர்ச்சி கோபாலுக்குத் தோன்றியது. சகித்துக்கொண்டு நடந்தான்.

    வழிநெடுக விட்டுக்கொண்டு வந்த கயிறு முடிந்து மறுமுனை அவன் கையில் இருந்தது.

    அப்படியானால்...

    அப்படியானால் அந்த நகைக்கடையின் நேர்கீழே வந்தாயிற்றா!

    கோபால் கயிற்றை விட்டுவிட்டு வெடிகுண்டை பொருத்தத் தயாரானான். ஒன்றை எடுத்து அதிலிருந்த டேப் உதவியுடன் அதை மேல் கூரைப் பகுதியில் பொருத்தினான்.

    அதிலிருந்த பின்னை உருவிவிட்டு நகர்ந்து நின்றான்.

    லேசாக புகை வந்தது. பிறகு அது டுப் என்ற சத்தத்துடன் வெடித்து நிறைய மண்ணை வாரிக்கொண்டு வந்தது.

    கோபால் அதே இடத்தில் அடுத்த வெடி குண்டை வைத்தான்.

    அடுத்து... அடுத்து...

    எட்டாவது வெடிகுண்டு வெடித்தபோது அது கற்களையும் கான்கிரீட் கட்டிகளையும் பெயர்த்துக் கொண்டுவர, மேலே அவள் நுழையும் அளவுக்கு ஓட்டை விழுந்திருந்தது.

    கோபால் உற்சாகமானான்.

    உயரே இருந்து விழுந்திருந்த மண் அந்த ஓட்டைக்கு நேர்கீழே விழுந்திருந்ததால் அந்த இடம் மேடாகியிருந்தது. அதன் வழியாக கோபால் மிக எளிதாக மேலே ஏறிச் சென்றான்.

    அவன் வந்த இடம் நகைக்கடை. ஷாலினி ஜ்வல்லர்ஸ்.

    கோபால் கொஞ்ச நேரம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

    அவன் உடலில் ஒட்டியிருந்த சாக்கடை வழிந்தது.

    அமர்நாத் சொல்லிக் கொடுத்திருந்தபடி வால்வைத் திருகி மூடிவிட்டு, மூக்கிலிருந்த குழாய் இணைப்பை அகற்றினான்.

    அதுவரை இல்லாமல் குமுக்கென்று சாக்கடை நாற்றம் குடலைப் புரட்டிக் குமட்டியது.

    கோபால் டார்ச்சை பெட்டிகள் அலமாரிகள் பக்கமாகத் திருப்பினான். கண்ணாடிகளுக்கு அந்தப்புறம்...

    தங்க நகைகள்...

    சங்கிலிகள், நெக்லஸ், காதணிகள், வளையல்கள், மோதிரங்கள், டாலர்கள், பதக்கங்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1