Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Odaathey Kolaikaraa
Odaathey Kolaikaraa
Odaathey Kolaikaraa
Ebook95 pages1 hour

Odaathey Kolaikaraa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466664
Odaathey Kolaikaraa

Read more from K.G.Jawahar

Related to Odaathey Kolaikaraa

Related ebooks

Related categories

Reviews for Odaathey Kolaikaraa

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Odaathey Kolaikaraa - K.G.Jawahar

    13

    1

    ஆழ்ந்த நித்திரையிலிருந்த சந்தியா படக்கென்று விழித்துக் கொண்டாள். முதலில் பின்புறம் சத்தம், பங்களாவின் நிசப்தக்தைக் கலைத்த மாதிரி. பிறகு சற்று நேரத்தில் ஏதோ ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம். மெல்லிய அழுகை ஒலி.

    திடுக்கிட்டது அவளுக்கு.

    எங்கிருந்து இந்த குழந்தை அழும் ஒலி?

    அந்த ஒலி அவள் உள்ளத்தை அப்படியே இறக்கியது ‘தன் வாழ்நாளில் இனி ஒரு ஒலி கேட்குமா எனக்கு?’ என்றிருந்த அவள் மென்மையான பெண்மை உள்ளம் கசிந்தது.

    கட்டிலைவிட்டு மெள்ள எழுந்தாள். லூசாகக்கிடந்த நைட்டியின் கயிறுகளை இறுக்கிக் கொண்டாள். தாமரைத் தண்டு மாதிரியான கால்கள் நைட்டியால் இழுத்துவிட்டு மறைத்தாள். ஜன்னல் அருகே வந்து பார்த்தாள். எங்கும் இருள். வானம் இருட்டை அப்பியிருந்தது. நட்சத்திரங்கள் மட்டும் கடமை தவறாமல் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது. தெருவில் ஏகாந்தம்.

    அந்த அழுகை ஒலி மெள்ளக் காற்றில் மிதந்து வந்தது. தெருவில் நடமாட்டம் இல்லை. தூரத்தே இருக்கும் மணி கூண்டு இரண்டு முறை அடித்து ஓய்ந்தது.

    மணி இரண்டு!

    இந்த நேரத்தில் அழுகுரல்.

    அதுவும் கூடிக்கொண்டே போயிற்று.

    மனது துடித்தது.

    எனக்கு மட்டும்தான் இந்த அழுகுரல் கேட்கிறதா?

    ஏன் மற்றவர்களுக்கு என்னாயிற்று?

    ‘ஆம்! எனக்கு மட்டும்தான் குழந்தையின் அழுகுரல் காதில் விழும். எனக்குத்தானே அதன் மகிமை தெரிகிறது. எனக்குத்தானே - குழந்தை இல்லை. எனக்குத்தான் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று அந்த ஜெயந்தி டாக்டர் கூறிவிட்டாரே.’

    அவளுக்கு அழுகை துளிர்த்தது.

    மனதைத் தேற்றினாள். குழந்தையைக் காப்பாற்ற முடிவு செய்தாள்! ஆம் ஒரு குழந்தை ஆபத்திலிருப்பது புரிந்து போயிற்று அந்தப் பெண் உள்ளத்திற்கு!

    பயப்படாமல் இறங்கினாள். கேட்டைத்திறந்தாள்.

    தெருவில் கால் வைக்கும்போது பெரிய துன்பத் தொடருக்கும் திகில் நிகழ்ச்சிகளுக்கும் வித்திடப் போகிறோம் என்று தெரியவில்லை.

    ஒரு பெண், இரவில் நடுநிசிக்கு மேல் தெருவில் நடப்பது ஆபத்து என்று பேப்பரில் தினம் தினம் வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன. ஆயினும் கண் எதிரே ஒரு கொடுமை நடக்கும்போது, ஒரு தாயுள்ளம் எப்படிப் பொறுக்கும்? அவளுக்கு விஷயத்தை யூகிக்க முடிந்தது.

    சத்தம் தெரு முனையில் இருந்து வருவது தெரிந்தது.

    அவளுக்கு ஒரு கிலி ஏற்பட்டது. தெருமுனையைப் பார்த்தபோது இருளில் இரண்டு பெரிய நாய்கள் நின்று கொண்டிருந்தன. அங்கு ஒரு குப்பைத் தொட்டி உண்டு.

    அப்படியானால்?

    சந்தியா சட்டென்று தெருவோரம் தாழ்வாக இருந்த மரக்கிளையை ஓடித்துக் கையில் வைத்துக் கொண்டாள். கையில் கழியைப் பார்த்ததும் அந்த இரண்டு நாய்களும் பின் வாங்கின. அவளைப் பார்த்து முறைத்தன.

    சந்தியா குப்பைத் தொட்டியை நெருங்கி எட்டிப் பார்த்தாள். குப்பென்று வியர்த்தது. அவள் நினைத்தது சரியாய்ப் போயிற்று பயந்தது கரெக்ட்.

    ஒரு பச்சிளம் குழந்தை, கை கால்களை உதைத்துக்கொண்டு வீறிட்டுக் கொண்டிருந்தது.

    கையில் இருக்கும் கழியை எறிந்துவிட்டு, சந்தியா குனிந்து அக்குழந்தையை எடுத்தாள் நல்ல முரட்டுச் சாக்கில் சுற்றப்பட்டிருந்தது குழந்தை. அவள் எடுத்ததுதான் தாமதம் -

    சுவிட்சை ஆஃசெப் செய்த மாதிரி குழந்தையின் அழுகை சட்டென்று நின்றது.

    ஒரு பெண்ணின் கைகளுக்கு இத்தனை சக்தியா என்று அவளுக்கே வியப்பேற்பட்டது. கரம் பட்டவுடனேயே, காப்பாற்றப்பட்ட உணர்வு - அக்குழந்தைக்கு ஏற்பட்டு விட்டதால் அழுகை நின்று போனது.

    குழந்தையைக் கையில் எடுத்த பின்னர்தான் -

    அதைப் பற்றி யோசித்தாள்.

    கணவன் வீட்டில் இல்லாத நேரம், நள்ளிரவுக்கு மேல் வெளியே வந்து குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையை தூக்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் –

    பார்த்தி என்ன சொல்வான்?

    தையா தக்கா என்று குதிப்பானா?

    ‘ச்சீ தூரஎறி சனியனை’ என்பானா?

    ‘நமக்குக் குழந்தை இல்லை கல்யாணமாகி நாலுவருடமாச்சு. டாக்டர்கிட்ட போனப்ப உனக்கு ஃபெலோபியன் டியூட் வீக்னு சொல்லி, நம்ம நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைச்சிட்டாரு ஸோ, இது நமக்கு கடவுள் தந்த குழந்தை. வளர்ப்போம்’னு சொல்வானா?

    என்ன சொல்லுவான்?

    சரி, இப்போதைக்கு இதை வீட்டிற்குக் கொண்டு போவோம். டாக்டருக்கு போன் பண்ணி வரவழைத்துக் குழந்தைக்கு, வேண்டியதைக் கவனிப்போம். பார்த்தி வந்ததும் அவனிடம் கேட்டு அவன் விருப்பப்பட்டால் நாமே இந்த அழகிய ஆண் ரோஜாவை வளர்த்து...

    அவள் மெள்ள வீட்டிற்குத் திரும்பினாள்.

    திடுக்கிட்டாள்.

    வீடு உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. கதவைப் பார்த்தவள் வீலென்று அலறினாள்.

    பூட்டப்பட்ட கதவின் அடிவழியே மெல்லிய கோடாக இரத்தம் வந்து கொண்டிருந்தது!

    2

    "ஆ... இரத்தம்"

    சந்தியா அலறிய அலறலில் அந்த வட்டாரமே கிடுகிடுத்தது. கிறீச்சிட்ட அவள் ஒலியால் இருளே அதிர்ந்தது. பாவம், அந்தச் சிசு. அவளின் வீறிடலில் மறுபடியும் முழித்து கொண்டு கதறியது.

    சந்தியாவின் கைகள் நடுங்கின.

    கதவை

    Enjoying the preview?
    Page 1 of 1