Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irul Thesaththu Sathi
Irul Thesaththu Sathi
Irul Thesaththu Sathi
Ebook168 pages1 hour

Irul Thesaththu Sathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466589
Irul Thesaththu Sathi

Read more from Arnika Nasser

Related to Irul Thesaththu Sathi

Related ebooks

Related categories

Reviews for Irul Thesaththu Sathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irul Thesaththu Sathi - Arnika Nasser

    17

    1

    ஹரிசங்கர் எதிரில் அமர்ந்திருந்த ஆசாமியை மகா ஆழமாய் உறுத்தார்.

    கமான்... சொல்லுங்க... நீங்க யார்?

    வந்தவனுக்கு வயது நாற்பது இருக்கக் கூடும். இடது கன்னத்தில் தையல் அடையாளம். மீசையை சம்மர் கிராப்பிய வினுசக்கரவர்த்தி போலிருந்தான்.

    என் பெயா மோப்பிலாஷா. இப்போது என் பெயர் முக்கியமில்லை. நான் சொல்லப்போகும் விஷயம்தான் மகா முக்கியம்.

    பீடிகை அனாவசியம். நேரடியாக விஷயத்துக்கு வாருங்கள் மிஸ்டர் மோப்பிலாஷா!

    சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் ஒரு திருட்டுக் கும்பல் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடிக்கொண்டு அடர்ந்த காட்டுக்குள் ஜீப்பில் பறந்தனர். துரத்தி வந்த போலீஸுக்குப் பயந்து நகைகளைப் புதைத்து வைத்தனர் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரே ஒரு ஆசாமி தவிர மீதிப் பேர் ஸ்பாட்டிலேயே அவுட், தப்பித்த ஒருவனைப் போலீஸ் வெகு தூரம் துரத்திச் சென்று கைது செய்தது. திருடிய நகைகள் எங்கே என்று சித்ரவதை செய்தார்கள். அவன் வாயே திறக்கவில்லை. கோர்ட்டில் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. போன வாரம்தான் விடுதலை ஆனான். நகைகளைப் புதைத்து வைத்த இடத்தை ஸ்பாட் பண்ணி மேப் வரைந்துள்ளான்.

    நீண்ட கதை. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?

    சொல்கிறேன், அந்த மேப்பை வைத்துக்கொண்டு அவனே போய் நகைகளை எடுக்க முடியும் ஆனால்... ரகசியப் போலீசார் இன்னும் அவனைக் கண்காணிகிறார்கள் பயப்படுகிறான்.

    அதனால்?

    நான் அவனுடைய புதிய கூட்டாளி. இதோ என்னிடம் இருக்கிறது அந்த மேப்! இதை உங்களிடம் தந்துவிடுகிறேன். நீங்கள் ஆட்களை வைத்தோ தனியாகவோ தோண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

    இதனால் உங்களுக்கென்ன லாபம்?

    பேரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எட்டு லட்ச ரூபாயைக் கரன்ஸியாக என்னிடம் தந்துவிடுங்கள். நான் மேப் தருகிறேன். உங்களுக்கு 92 லட்ச ரூபாய் மிஞ்சும்.

    உன்னை எப்படி நம்புவது? மரியாதை குறைத்தார்.

    அடர்ந்த காட்டில் தங்க நகைகள் ஒளிந்துள்ளன எனக்கு என்ன உத்திரவாதம்?

    தட்ஸ் கேம்ளிங். லட்ச ரூபாய்ப் பரிசுக்கு ஒரு கூலிக்கார ஆசாமி 50 சீட்டு வாங்கி அதிஷ்டம் சோதிக்கிறான். ஜாக்பாட் அடிக்க ஓடாத குதிரை மேலும் பணம் கட்டுகிறார்கள், நீங்களும் ரிஸ்க் எடுங்கள். நாங்கள் நிழலான வேலைகளைச் செய்பவர்கள்தான். ஆனால் அதிலும் நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயம் என்னை நம்பலாம்.

    ஹரிசங்கர் யோசித்தார். அடச்சீ! கைகளில் ஊருகிறது ரயில் வண்டிப் பூச்சி என்று விட்டு உதற மனம் வந்தாலும் வரப்போகும் மிகைப் பணம் ‘காரட்’ காட்டியது. பெரும்பாலான பணக்காரனுக்கும் உள்ள வியாதி அது. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிறு குழந்தைகள் தீப்பெட்டி லேபிள்களை ஆசையாய்ச் சேகரிப்பது போலப் பணத்தை மேலும் மேலும் சேர்க்க அபிலாஷிப்பார்கள்.

    இதில் ஒரு சிக்கல் கூட வராதே?

    வராது. வராது. நிச்சயம் வராது. நம்புங்கள்

    கொஞ்சம் இருங்கள் பணத்துடன் வருகிறேன். எழுந்தார் ஹரிசங்கர். மாடிக்கு நடந்தார்.

    ஹரிசங்கர் மாடிக்கு நிதானமாய் நடப்பதையும் நடந்தவர் ஓர் அறைக்குள் நுழைந்ததையும்- நுழைத்தவர் பீரோ திறந்து ஏற்படுத்தும் சப்தத்தையும் - பார்த்தான். உன்னித்துக் கேட்டான் மோப்பிலாஷா தன் இடத்திலேயே அமர்ந்தபடி-

    ஐந்து நிமிட தாமதத்தில் திரும்பினார் ஹரிசங்கர் கையில் ‘அல்ஃபா’ சூட்கேஸ். மேஜை மேல் வைத்து சூட்கேஸைத் திறந்தார். உள்ளே நாசிக் அடித்த காகிதப் பணம் வாசனை மாறாமல்,

    மேப்பைக் குடு மிஸ்டர்.

    மோப்பிலாஷா மேப்பை தன் சூட்கேஸிலிருந்து எடுத்தான். பழையதாய் நைந்து போயிருந்தது.

    வாங்கிப் பார்த்தார் ஹரிசங்கர். அம்புக்குறிகள், கட்டங்கள் பொம்மைகள்.

    பணத்தை எண்ணிக்கொள் மிஸ்டர்...

    தேவையில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை.

    சரி புறப்படு.

    நன்றி வருகிறேன்... எழுந்தான் மோப்பிலாஷா.

    அவன் புறப்பட்டுப் போன பிறகு வெகு நேரம் மேப்பையே உன்னித்துக் கொண்டிருந்தார் ஹரிசங்கர்.

    பங்களாவை விட்டு வெளியே வந்த மோப்பிலாஷா இடமும் வலமும் பார்த்தான். சட்டென்று காற்றில் கரைந்து மறைந்தான்.

    வானப் பெண்ணின் இரவுக் கூந்தலில் நட்சத்திரப் பேன்கள். நிலவு, மாத ஓய்வில் மறைந்திருந்தது. பகலின் கோடை வெப்பம் கொண்ட பூமி-- தங்கக் கடற்கரையின் ராட்சச தோசை சுட்டெடுத்த தோசைச் சட்டிபோல் மெது மெதுவாக வெப்பம் தணிந்துகொண்டிருந்தது.

    ஹரிசங்கர் கார் ஸ்டியரிங்கைக் கையாண்டபடி மேப்பைக் கவனித்தார். இடப்பக்கம் வளையச் சொன்னது. வளைத்தார். தொடர்ந்து நேராகப் போகச் சொன்னது. போனார்,

    மேப்பில் குறிப்பிட்ட அடர்ந்த காடு வந்து சேர்ந்தது. காரை மேடேற்றி நிறுத்தினார். முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். கதவை லாக் செய்தார். டிக்கியிலிருந்து மண்வெட்டியும் சிறு கடப்பாறையும் எடுத்துக் கொண்டார்.

    கையிலிருந்த டார்ச்சால் ஓர் ஆரஞ்சுப் பழ ஆரமுள்ள வெளிச்ச வட்டத்தைத் தரையில் பதித்தபடி நடந்தார். அவர் நடைக்கேற்றபடி டார்ச்சின் வெளிச்ச பிம்பம் குதியாட்டம் போட்டது. பாக்கட்டில் பிஸ்டல் கனத்தது. தட்டிப் பார்த்துக்கொண்டார்.

    பெரிய பெரிய மரங்கள் தங்கள் கிளைகளையும் பச்சை நிற இலைகளையும் அடையாளம் காட்டாமல் இருட்டாய்ச் சலசலத்தன. அதில் அமர்ந்திருந்த மைனாக்களும் காகங்களும் ஹரிசங்கரின் காலடி அரவத்தில் கண் விழித்தன. ஆந்தைகள் இரண்டு தாழப் பறந்துபோயின.

    ஒவ்வொரு மரத்துக்கும் கண் முளைத்து தன் முதுகில் வெறிப்பதுபோல் பிரமை கொண்டார் ஹரிசங்கர். மனதுக்குள் பயம் ட்ரம்பெட் வாசித்தது. இருந்தாலும் பயத்தை அடக்கி வாசித்தபடி தொடர்ந்து நடந்தார்.

    மேப்பில் குறிப்பிடப்பட்ட இடம் வந்து சேர்ந்தது. சருகுகளும் குச்சிகளும் பறவை எச்சங்களும் கூட்டணி அமைத்து மேடாகியிருந்தன.

    சந்தேகமே இல்லை, இதே இடமாகத்தான் இருக்கும். தோண்டுவோம். கடப்பாரையை எடுத்து கவனமாகத் தோண்ட ஆரம்பித்தார். கற்களும் குப்பைகளும் தாக்குதலில் இறுக்கம் தவிர்த்தன. மண்வெட்டி எடுத்து அள்ளி அள்ளித் தூரமாய்க் கைவீச்சுக்கு விசிறினார்.

    நெற்றியில் வியர்வை இருநூறு புள்ளிகள் அமைத்தன. புறங்கையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

    கைக்கடிகாரத்தில் மணி 12:50:48.

    தங்க நகைகளைக் காணும் பேராசை அவசரத்துடன் வேக வேகமாய்த் தோண்ட ஆரம்பித்தார் இரண்டடி ஆழம் தோண்டியிருப்பார். ஒன்றும் கிடைக்கவில்லை குழியின் இடது மேல் மூலையில் வெண்மையாய் ஏதோ தெரிந்தது. டார்ச் அடித்துப் பார்த்தார். எப்போதோ செத்த அணிலின் எலும்புக் கூடு அது. அவசரமாய் எடுத்து வெளியே வீசினார்.

    மேலும் தோண்ட ஆரம்பித்தார் ஹரிசங்கர். அந்த அடர்ந்த இருண்ட நள்ளிரவுக் காட்டில் மண்வெட்டி தோண்டும் சப்தம் -- வானத்தைக் கோடரியால் பிளப்பது போல் சப்தப் பிரமை தந்தது.

    குழி நான்கடி ஆழம் தோண்டப்பட்டிருந்தது. நகையும் இல்லை பெட்டியும் இல்லை. ஆஹா! அந்த மோப்பிலாஷா நம்மை ஏமாற்றி விட்டானோ? திருட்டு ராஸ்கல். எட்டு லட்சம் சுளையாய் போயிற்றா? இந்தப் பேராசை தேவையா? பேசாமல் திரும்பிக் காருக்கு போவமா? அட சட்! இன்னும் கொஞ்சமே கொஞ்சம் தோண்டித்தான பார்ப்பமே!

    சக்! சக்! பரக்! பரக்! விரக்க்க்! மண்ணை எடுத்து விசிறினார். ஹரிசங்கரின் உயரத்துக்குக் குழி வந்துவிட்டது. ஒன்றும் இல்லை.

    அ.. அ... அப்போது தான் அது நடந்தது.

    இவரின் கண்களும் டார்ச்சும் அறியாமல் குழியின் அடிப்பகுதியில் ஓர் அசைவு தெரிந்தது. அந்த அசைவிலிருந்து நீண்டன விரல்கள். இரு நொடிகள் தாமதத்தில் விரல்கள் மணிக்கட்டுடன் உயர்ந்தன.

    ஒரு கறுப்பு நொடி ஒன்றில் ஹரிசங்கரை- அவரின் கால்களைப் பேய்த்தனமாய்க் குழிக்குள் இழுக்க ஆரம்பித்தன முளைத்த கைகள். முதல் கால் நொடி அதிர்ந்து ஸ்தம்பித்த ஹரிசங்கர் உதறினார் கால்களை. மண்ணின் கருவிழிகள் நட்ட நடுவில் நட்டுக்கொள்ள மூக்கு ஆக்ஸிஜன் திருட்டு மறந்து விடைத்துக்கொள்ள ஆங்கில 0 வடிவில் வாய் திறந்து கொள்ள வீரிட்டார் காட்டின் அத்தனை மரங்களும் உதிர.

    உயிராசையாய் உந்திக் குழியைவிட்டு வெளியே வந்து சொத்தேர் என்று விழுந்தார் ஹரிசங்கர். கையிலிருந்த டார்ச்சால் குழிக்குள் நடுங்க நடுங்க அடித்துப் பார்த்தார். டார்ச் வேலை செய்யவில்லை. தட்டிப் பார்த்தார். பின் பக்கத்தை இறுக்கிப் பார்த்தார். ம்ஹும். திறந்தார் டார்ச்சை. உள்ளிருந்த செல்கள், கற்பூரமாய் உருகிப் போய்கொண்டிருந்தன. பயந்து போய்த் தூரத்தில் வீசினார் டார்ச்சை. ஹோஹ்! ஹா ஹ்! ஹோஹ்!

    இப்போது குழிக்குள்ளிருந்து பிரளயச் சப்தத்துடன் அவரை இழுத்த கை-முழு உருவமாய் வெளி எழுந்தது. ஆறடி உயரத்தில் பச்சை நிற முகம் கொண்டிருந்தது. கையில் அதிநவீன வில் துப்பாக்கி வைத்திருந்தது. உடம்பில் கோயில் கரகாட்டக்காரர்கள் அணியும் மினுமினுக்கும் ஜிகினா ஆடை அணிந்திருந்தது.

    ஹரிசங்கர் அந்த அடர்ந்த காட்டுக்குள் இலக்குத் தெரியாமல் ஓட ஆரம்பித்தார். பேய்களின் குறட்டை ஒலியாய்ச் சருகுகள் மிதிபட்டன.

    ஹரிசங்கருக்குள் ஒவ்வொரு செல்லும் ‘மூஷ் மூஷ்’ தின்ற சுண்டெலிகள் போல் மரணபயத்தில் பரபரத்தன. இதயம் மார்புக் கூட்டில் மிருதங்கமாகியது.

    அதே நேரத்தில் குழிக்குள்ளிலிருந்து இன்னொரு உருவம் எழுந்தது. அ-அ- அது பச்சை நிற முகத்துடன் ‘மோப்பிலாஷா.’

    கையில் வில்துப்பாக்கி.

    கோடி ரூபாய் என்றதும் ஓடி வந்துவிட்டான் இந்தப் பைத்தியக்காரன். பிடி அவனை. உயிருடன் தின்போம்.

    இரண்டாவது உருவம் இளித்தது இரண்டு உருவங்களும் ஹரிசங்கரைத் துரத்த ஆரம்பித்தன.

    ஓடியபடியே ஹரிசங்கர் கழுத்தை மட்டும் பின்னுக்குத் திருப்பிப் பார்த்தார். பச்சை நிறக் கொடூர முகத்தில் இரத்தம் வழியும் வாய்!

    பாதை வழியில் கவனம் சிதறியது. வெட்டப்பட்ட மரத்தின் அடிவேர் பகுதி தடுக்கித் தரையில் இரண்டு மூன்று டைவ்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1