Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Vayal
Kolai Vayal
Kolai Vayal
Ebook88 pages54 minutes

Kolai Vayal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Kolai Vayal

Read more from Arnika Nasser

Related to Kolai Vayal

Related ebooks

Related categories

Reviews for Kolai Vayal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Vayal - Arnika Nasser

    16

    1

    அந்த தங்கத்தனமான பங்களா 6500 சதுர அடியில் அமைந்திருந்தது. பங்களாவின் மூன்றாவது படுக்கை அறையில் சூர்யகேசவ் நின்றிருந்தான்.

    சூர்யகேசவ் வயது நான்கு. 52 செ.மீ. உயரம். 12 கிலோ பால் சந்தன மஞ்சள் உடல். நடுவகிடெடுக்கப்பட்ட கேசம். பெரிய கண்கள். குஷ்புவின் ஆட்காட்டி விரல் நுனி போன்ற மூக்கு. ரோஜா அடித்த உதடுகள். ஜூனியர் பிரபு போன்ற கொழுகொழு ஆகிருதி.

    அவனை பள்ளிக்கு அனுப்ப ஆறு வேலையாட்களுடன் ஆயத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள் சூர்யகேசவின் தாய் ஈஸ்வரி.

    உணவு உண்ண அவன் கழுத்தில் கட்டியிருந்த ஏப்ரனை கழற்றி வீசினாள். ஒரு வேலையாளிடமிருந்து யூனிபார்மை வாங்கி பிரித்து உடுத்தி விட்டாள். ஒரு வேலையாள் காலுக்கு ஷாக்ஸ் அணிவித்து பூட்ஸ் மாட்டிவிட்டான். முகவாயை பிடித்து நடுவகிடெடுத்து தலைவாரி விட்டாள். சந்தன பவுடர் கோட்டிங் அவன் முகத்துக்குக் கொடுத்தாள்.

    மம்மி சிணுங்கினான் சூரியகேசவ்.

    நிமிர்ந்தாள்.

    என்ன ராஜா?

    நா இன்னைக்கு ஸ்கூலுக்கு போவல போ...

    எதுக்குப் போவல? நெற்றி சுருக்கினாள்.

    எனக்குப் பிடிக்கல மம்மி

    தினம் அடம் பிடிக்காம போவ... இன்னைக்கு என்னாச்சு? கான்வென்ட் டீச்சர டாடிகிட்டச் சொல்லி மாத்திரலாமா?

    இன்னைக்கி போவமாட்டேன்... ஈஸ்வரியைக் கட்டிக்கொண்டு அழுதான் சூர்யகேசவ். அவனது பத்து நொடி அழுகை ஈஸ்வரிக்கு பத்துவருட வேதனை தந்தது. உருகினாள்.

    சரிப்பா... போவேணாம்... அழுகாதடா ராஜா... டோண்ட் க்ரை...

    கழுத்து டையை சரி செய்தபடி உள்ளே நுழைந்தார் சுந்தரவரதன். சாம்பல் நிற புல் சூட் அணிந்திருந்தார். காலில் அம்பாஸ்டர் ஷு.

    நம்ம சன் என்ன சொல்றான் ஈசு?

    இன்னைக்கி ஸ்கூல் போகமாட்டேன்னான். சரின்னேன்...

    இட்ஸ் டூ பேட் ஈஸ். பத்து வருட திருமண வாழ்வின் வெறுமைக்குப்பின் பூத்த அபூர்வ மகிழம் பூவாக இருக்கலாம் நம் மகன். நம்மின் 24 கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசாய் இருக்கலாம் நம் மகன். ஆனால் படிப்பில் மட்டும் செல்லத்தை நுழைக்காதே அது அவனின் எதிர்காலத்தை சிதைக்கும். இன்னைக்கு கேசவ் பள்ளிக்கு போவட்டும்... கேசவ் நீ கட்டாயம் புறப்படணும்...

    அப்பாவின் முகத்தில் தெறித்த கண்டிப்பு சூர்யகேசவை பயமுறுத்தியது.

    ஓகே டாட்! நான் ஸ்கூலுக்குப் போறேன்...

    குட் பாய்... கீப் இட் அப்... தட்டிக்கொடுத்தார் சுந்தரவரதன் முழங்காலில் குனிந்து முத்தமிட்டார். பதிலுக்கு முத்தம் கேட்டார். இரு கன்னத்துக்கும் தலா பத்து கொடுத்தான். கன்னத்தில் சில நொடிகளுக்கு மென்த்தால் கலந்த வெல்வெட் பூ பூத்து மறைந்தது. எழுந்தார்.

    அப்போதுதான் படுக்கையறை வாசலில் தோன்றிய டிரைவர் வணங்கினான்.

    டிரைவர்

    சார் பவ்ய மரியாதை.

    வழியில் கேசவ் கேக்கிறானே என்று ஐஸ்கிரீம் பார்லர்களில் நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்துடாதே... அது அவன் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்... ஜாக்கிரதை!

    ஓகே சார்

    மம்மி டாட்டா டாடி டாட்டா சூர்யகேசன், புறப்பட்டான். அவனின் படிப்புச் சுமையை டிரைவர் தூக்கிக் கொண்டான். கைகால் முளைத்த ரோஜா பூ பந்து போர்டிகோவில் நின்றிருக்கும் மாருதி வெள்ளை ஜிப்ஸிக்கு நடந்தது.

    ஜிப்ஸி உறுமி புறப்பட்டது. கூர்க்கா கேட்டைத் திறந்துவிட -

    ஜிப்ஸி பிரதான சாலைக்கு திரும்பியது. ஒருமணி நேரமாய் பாதுகாப்புத் தூரத்தில் காத்திருந்த நீல அம்பாஸிடர் உஷாரானது. ஜிப்ஸியைத் தொடர்ந்தது.

    டெலிபோன் ஒலித்தது. ஆழ்ந்த அலுவலில் இருந்த ஸிஸ்டர் முப்பது நொடி தாமதத்திற்கு பின் ரிசீவரை எடுத்தார். டடக்...

    ஹலோ! செயின்ட் லூத்ரன் கான்வென்ட் ஹியர் என்றார்.

    பிரிமியர் கம்ப்யூட்டர் ஷாப்ட்வேர் மேனுபாக்சரர்ஸ் சுந்தரவரதன் பேசுகிறேன் ஸிஸ்டர்!

    குட் மார்னிங்...

    குட்மார்னிங் ஸிஸ்டர்

    என்ன சார் விஷயம்?

    வீட்ல திடீர் விருந்தாளிகள். அவங்க சூர்யகேசவை உடனே பாக்க பிரியப்படுறாங்க. என் கம்பெனி காரை அனுப்புகிறேன். அவனை அனுப்பி வையுங்க வில் பூ?.

    நிச்சயமா... கார் என்ன நிறம்? டிரைவர் பெயர் என்ன சார்?

    டாட்டா ஸியாரா… பச்சை நிறம்... டிரைவரின் பெயர் தயாபரன்...

    காரை எத்தனை மணிக்கு அனுப்புவீங்க?

    இப்ப மணி பத்து நாப்பது. சரியா பதினொன்னுக்கு அனுப்பறேன்...

    ரைட் சார்... ஐ வில் ஸெண்ட் ஹிம்...

    தாங்க் யூ ஸிஸ்டர் இருமுனை ரிசீவர்களும் தொம்ரின. ஸிஸ்டர் இன்டர்காமில்

    Enjoying the preview?
    Page 1 of 1