Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavya Endroru Devathai
Kavya Endroru Devathai
Kavya Endroru Devathai
Ebook210 pages3 hours

Kavya Endroru Devathai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466589
Kavya Endroru Devathai

Read more from Arnika Nasser

Related to Kavya Endroru Devathai

Related ebooks

Related categories

Reviews for Kavya Endroru Devathai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavya Endroru Devathai - Arnika Nasser

    25

    1

    வெல்வெட் சமுத்திரம்.

    ராட்சத கப்பல்.

    மேற்தளத்தில் காவ்யா நின்று கொண்டிருந்தாள். கப்பலின் கேப்டன் காவ்யாவிடம் ஏதோ கூறினான். கோபமாய் அவனை பிடித்து கீழே தள்ளி விட்டாள் காவ்யா.

    தூரச் சிதறிய கேப்டன் மண்டை சிதறி இறந்து விடுகிறார். காவ்யா பதறினாள். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. புயல் காற்று ஆவேசமாய். கப்பல் சாமியாடியதில் கப்பல் பயணிகள் அலறினர்.

    கடலுக்கும், ஆகாயத்துக்கும் கால் ஊன்றி கப்பலை அசையாமல் பிடித்து கொண்டாள் காவ்யா. கடல் இவளின் கணுக்கால் மட்டம்

    ஆகாயத்துக்கு காலைத் தூக்கிய காவ்யா கட்டிலிலிருந்து சரிந்து விழுந்தாள். மரவட்டை போல் கனவு சுருங்கி நியூரான் செல்களில் பதுங்கின.

    காவ்யா முழுவதும் விழிநிலை மீண்டாள். என்ன அற்புதமான கனவு? கம்ப்யூட்டர் அனிமேஷன் போல எத்தனை அசாத்தியமான காட்சிகள்? கனவில் வரும் கேப்டனின் முகத்தை எங்கோ சந்தித்திருக்கிறோமே - எங்கு? கனவின் அர்த்தம் என்ன? அந்தரங்க டைரி எடுத்து கனவினை குறித்துக் கொண்டாள் காவ்யா. மணியைப் பார்த்தாள். அதிகாலை 5.30. அடுத்தக் கட்டிலில் அறைத் தோழி சாரதா தூங்கிக் கொண்டிருந்தாள். தலை கேசத்தை தளர்த்தி பின்களை உதிர்த்தாள் காவ்யா. குளியலறைக்குள் புகுந்தாள். குளிர் நீரில் குளித்தாள். பல் துலக்கினாள். கேசத்தை பூத்துவாலையால் அடித்து உலர்த்தினாள். ஹீட்டர் உபயோகித்தாள். இப்போது சாரதாவும் எழுந்து விட்டாள்.

    குட்மார்னிங் காவி!

    மார்னிங் சாரு!

    என்ன இன்னிக்கி சீக்கிரமா எந்திரிச்சிட்ட? கனவைக் கூறினாள் காவ்யா.

    உனக்குத்தான்டியம்மா கலர் கலரா வித்தியாசமா கனவுகள் வருது. எங்களுக்கெல்லாம் படுத்தவுடன் தூக்கம்தான். காலைல ஏழுமணி வரைக்கும் குறட்டைதான்...

    போடி தூங்குமூஞ்சி!

    ஆமா... நேத்தைக்கி உன் பிறந்த நாள். எப்பவும் அசத்தலா பார்ட்டி குடுப்ப. ஆனா, நேத்தைக்கி நீ ‘கேக்’ கூட வெட்டல... ஏன்?

    காவ்யாவின் முகம் இறுகியது.

    எல்லாம் அந்த திருட்டுப் பயலாலே...

    யார சொல்ற?

    என் உயிர் நண்பன் நிர்மலை சொன்னேன்!

    நிர்மல் கல்யாணமானவன் தானே?

    ஆமா... அவனுக்கு ரெண்டு குழந்தைகள் கூட இருக்கு.

    மேரீட் மேனோட நட்பு எதுக்குடி?

    எங்க நட்பு எல்லா சமூகத் தளைகளையும் தாண்டியது. எனக்கு கல்யாணமானாலும் தொடரும். நாங்க பேரன், பேத்தி எடுத்தாலும் தொடரும். எங்கள் மரணத்தின் பின்னும் தொடரும்!

    ஏன்?

    அதிசயமான நட்பு போ. இவ்வளவு பேசுற... பின்ன நேத்தக்கி ஏன் அவன் வரல?

    எங்க ரோஜா ‘டிவி’ல அவனை அவசரமா மும்பை போகச் சொல்லிட்டாங்க. அங்க முளைச்ச திடீர் வேலைகள் அவனை நேத்து வரவிடாம பண்ணிருக்கும். யூ நோ ஒன் திங்! நிர்மலின் மனைவியும், குழந்தைகளும் எனக்கு வாழ்த்துத் தெரிவிச்சாங்க...

    உங்க நட்பை நிர்மலின் மனைவி அங்கீகரிக்கிறாங்களா?

    சங்தேகமில்லாம... நான் அவங்க குடும்ப அங்கத்தினர்களில் ஒருத்தி போல... முறுவலித்தாள் காவ்யா.

    காலை டிபனாக கெல்லாக் கார்ன் பிளேக்ஸ் சாப்பிட்டாள். நைட்டியிலிருந்து புத்தாடைக்கு மாறினாள் காவ்யா.

    காவ்யா வயது 28. உயரம் 165 செ.மீ., காட்பரீஸ் நிறம். ஒழுங்கீனமான நடுவகிடு கொண்ட தலைகேசம். இரு காதுகள் பக்கமும் கொத்து கேசத்தை தப்ப விட்டிருந்தாள். காதுகளில் மிளகு சைஸ் ஸ்டட் வரைமுறைபடுத்தப்பட்ட மேல் வளைவு புருவங்கள். உணர்வுப்பூர்வமான கண்கள். பழுப்பு கருவிழிகள். ஆழ இறங்கிய மூக்கு. இடது நாசித் துவாரம் உள்ளடங்கியும், வலது நாசித் துவாரம் கண்காட்சியாயும் மூக்கின் முன் நுனி அமுங்கி சீனத் தோற்றம் தந்தது. மேல் உதடு மெலிதாயும், கீழ் உதடு அழுத்தந்திருத்தமாய். மொத்தத்தில் நீள் வட்ட முகம். கம்பீர கழுத்து. அழகிய நீண்ட இறக்கைகள் போல கைகள். நீள நீள விரல்கள். இடது கட்டை விரலில் மட்டும் நகம் வளர்த்திருந்தாள்.

    ரோஜா நிற முக்கால் கை ஜாக்கட்டும், தரை வரை புரளும் பூக்கள் பிரின்ட் செய்யப்பட்ட ஸ்கர்ட்டும் அணிந்து கொண்டாள் காவ்யா. கால்களில் தங்க நிற ஹை ஹீல்ஸ்.

    காவ்யா ரோஜா ‘டிவி’ நிறுவனத்தில் அறிவிப்பாளராக பணிபுரிபவள். இவள் தொகுத்து வழங்கும் திரை இசை பாடல் நிகழ்ச்சியில் வரும் பாட்டுக்களை விட காவ்யாவின் டெலிபோன் கொஞ்சல் கூடுதல் இனிமையானது. இன்ன பணிதான் என்று கிடையாது. செய்திகள் வாசிக்கச் சொன்னால் வாசிப்பாள். சிறுவர் நிகழ்ச்சி நடத்தச் சொன்னால் நடத்துவாள். ‘புலன் விசாரணை’ போகச் சொன்னாள் போவாள்.

    காவ்யாவின் நண்பன் நிர்மல், அதே ‘டிவி’ நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளன். இருவரும் கைகோர்த்து விட்டால் ‘ரோஜா டிவி’யின் எந்த நிகழ்ச்சியும் மெஹா வெற்றிதான்.

    குளிர் கண்ணாடியை முகத்தில் பொருத்திக் கொண்டு கைனடிக் பிரைடில் கிளம்பினாள் காவ்யா.

    கோடம்பாக்கம். சக்ரா அபார்ட்மென்ட்ஸ். மும்பையிலிருந்து அப்போதுதான் திரும்பி இருந்தான் நிர்மல்.

    அவனின் முகம் முழுவதும் காவ்யாவின் பிறந்தநாளை கொண்டாட முடியாத கவலை வழிந்தது.

    நிர்மல். வயது 35, உயரம் 172 செ.மீ., வகிடு இல்லாத முரட்டு கேசம், அடர் புருவம், சூரியக்கண்கள், பாரதிராஜா மூக்கு, ரோஜா நிற உதடுகள். கராத்தே ஹுஸைனி போல் உடல் ஆகிருதி. திருமணமானவன் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

    நிர்மலின் மனைவி அர்ச்சனா, ஹோம் சயின்ஸ் படித்தவள். நடிகை சங்கீதா சாயல் கொண்டவள்.

    நிர்மலுக்கு ஆறுவயதில், நான்கு வயதில் இரு பெண் குழந்தைகள். வயதான விதவை அம்மா, ஒரு தம்பி, ஒரு தங்கை.

    நிர்மலை சமாதானப்படுத்தினாள், அர்ச்சனா.

    கவலைப்படாதப்பா. நானும் குழந்தைகளும் காவ்யாவுக்கு வாழ்த்து சொல்லிட்டோம்!

    குட்டிம்மா! என்னை அவ ரொம்பத் திட்டினாளோ?

    அவ குணம் உனக்குத் தெரியாதா? ஆலம்கட்டி மழைபோல் திட்டிட்டு ஓஞ்சா... இன்னிக்கி போய் பாரு... சரியாய் போய்டும்!

    இதோ பார்... அவளுக்காக ஆக்ஸிடைஸ்டு மெட்டலில் நெக்லஸ் வாங்கி வந்திருக்கேன் பிறந்த நாள் பரிசா...

    மூத்தப் பெண் குழந்தை மனிஷா, அம்மாவுக்கு?

    சாரி குட்டிம்மா... உனக்கு ஒண்ணும் வாங்கிட்டு வரல... இருண்டாள் அர்ச்சனா.

    இட்ஸ் ஓகேப்பா... கடைக்குட்டி அனிஷா, எனக்கு?

    ஈவினிங் வாங்கித் தரேன் டோண்ட் ஒர்ரி!

    அவசர அவசரமாய் காலைப் பணிகளை முடித்துவிட்டு கேப்பைக் கூழ் அருந்திவிட்டு, அலுவலகம் தந்த காரில் பறந்தான் நிர்மல்.

    ‘ரோஜா டிவி’ அலுவலகம் நான்கு மாடிக் கட்டிடமாய் நிமிர்ந்திருந்தது. பார்க்கிங்கில் காரை நிறுத்தினான். சூட்கேஸை கவர்ந்தான். லிப்ட் உபயோகிக்காமல் நான்காவது தளத்துக்கு ஓட்ட நடையாய் விரைந்தான். எதிர்ப்பட்டோரின் வணக்கங்களை இயந்திர கதியாய் பெற்றுக் கொண்டான். அனிச்சையாய் பதில் வணக்கம் செய்தான். அந்ததளம் முழுக்க சிறு சிறு கேபின்களாய் பிரிக்கப்பட்டிருந்தது. காவ்யாவின் கேபினுக்கு ஓடினான்.

    காவி! தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவள் முன் முழங்காலிட்டு இருகைகளையும் உயர்த்தினான்.

    நண்பனை பார்த்த குதூகலம் மனதுக்குள் வண்ணத்துப் பூச்சி தோப்பு அமைத்தது.

    நடிக்காத நிரு. எந்திரி. நேத்தைக்கி மும்பைல என்ன கிழிச்ச? இன்னும் ஒரு வாரத்துக்கு உன் கூட பேசமாட்டேன்... போய்யா உன் கேபினுக்கு...

    கண்கலங்கினான் நிர்மல்.

    தவிர்க்க முடியாத வேலை... அதான்... விளையாட்டுக்கு கூட பேசமாட்டேன்னு சொல்லாதே... என்னால தாங்க முடியாது...

    டேடேய் அழாதடா... ஆ… ஊன்னா எங்கடா அழ கத்துக்கிட்ட! அழுகையிலிருந்து சிரிப்புக்கு மாறினான் நிர்மல்.

    இதோ என் பிறந்தநாள் பரிசு! நீட்டினான்.

    இதெல்லாம் எதுக்குடா? நிரு... நிரு... டேய் நிரு... நம்ம நட்பு என்னென்னைக்கும் அடர்வு குறையாம, ஊமைத் தூக்கத்துக்கு ஓலை வாங்கும் வரை தொடர்ந்தா சரி... அதான் எனக்கு பிடிச்ச நிரந்தர பரிசு!

    உணர்ச்சிகரமாய் ஆமோதித்தான் நிர்மல். ஒரு பெரிய ஆர்ச்சீஸ் வாழ்த்து அட்டையை நீட்டினாள் காவ்யா.

    போய் உன் கேபினில் பிரிச்சுப் படி!

    கேபினுக்கு போய் பிரித்தான்.

    அதில்...

    நண்பனே!

    கடவுள் எனக்குச் செய்த உன்னத காரியம் - உன்னை படைத்து எனக்கு நண்பனாக்கியதுதான்

    நீ அருகில் இருந்தால் பூமி உருண்டையும் புறா சிறகு போல் எடையற்று மிதக்கிறது; நீ தூரப் போனால் வானவில்லும் கறுப்பு வெள்ளையில் தெரிந்து வெறுப்பூட்டுகிறது.

    எப்போதும் என் அருகில் இரு நண்பா.

    தோழி,

    காவ்யா...

    வாழ்த்து அட்டையை விரித்து முகத்தில் அப்பி ஆனந்த கண்ணீர் வடித்தான் நிர்மல்.

    மூன்றாவது கேபினிலிருந்து எட்டி பொறாமையால் புகைந்தான் ரூபன்!

    2

    அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கும் புது நிகழ்ச்சியின் மாதிரி சுருக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தான் நிர்மல்.

    தனது கேபினிலிருந்து நிர்மலை நோக்கி நடந்து வந்தான் ரூபன்.

    ரூபன் வயது 30. உயரம் 165 செ.மீ., சதைத்த உடல்வாகு, நடுவகிடு தலைகேசம். பேராசைக் கண்கள், பேகிஸ் பேன்ட் ‘டக் இன்’ பண்ணிய முழுக்கை சட்டை. மூக்கில் பவர் கிளாஸ். இடுப்பில் பேஜர்.

    ரூபன் பதவியில், நிர்மலைவிட உயர்ந்தவன். ‘ரோஜா டிவி’ யின் மேனேஜிங் டைரக்டருக்கு மிக நெருக்கமானவன் ‘டிவி’ ஆரம்பிக்க எம்.டி.,க்கு மிக உதவி செய்தவன். தொழில் நுட்ப மேலாளர் எனும் பதவியில் இருப்பவன்.

    வந்தவன் மேஜையில் இரு கைகளை ஊன்றி நிர்மலை ஆழமாய் பார்த்தான். ஹாய் நிர்மல்!

    ஹாய் ரூபன் சாலமோன்!

    மும்பை வேலை பிரமாதமா முடிச்சிட்டு வந்துட்ட போல...

    யெஸ்!

    நீ இல்லாம வேற யார் துடிச்சுப் போறாங்களோ என்னவோ - காவ்யா செம பேஜார் ஆய்ட்டாப்பா.

    நிர்மல் மவுனித்தான்.

    நீ ஏதோ குடுக்க - பதிலுக்கு அவ ஏதோ குடுத்தா போலிருக்கு!

    அது எங்க நட்பு சார்ந்த விஷயம்... வேற பேசுவோமா ரூபன்?

    ரூபன் இறுகினான்.

    எனக்காக சிறிது நேரம் என் ரூமுக்கு வந்துட்டுப் போ...

    ஈவினிங் வரேன்...

    நோ நோ... இப்பவே...

    ரூபன் நடக்கத் தொடர்ந்தான் நிர்மல்.

    ரூபனுக்கு தனியாக குளிர்பதனமூட்டப்பட்ட அறை. நிர்மல் உள்ளே வந்ததும் அறையை உட்புறமாக தாளிட்டான் ரூபன்.

    உக்காரு... ப்ளீஸ் உக்காரு! அமர்ந்தான் நிர்மல்.

    சொல்லு ரூபன்... என்ன விஷயம் பேசணும்?

    நிர்மல்! உனக்கு திருமணமாய்ருச்சு தானே?

    ஆமா... என்றான்.

    அதுல சந்தேகமென்ன?

    எனக்கு?

    வெளிப்படையா ஆகல... அவ்வளவுதான் எனக்கு தெரியும்!

    குட்... ஒரு சுதந்திர இந்தியாவின் குடிமகன் சோஷலிஸ்ட்டா நீ நடந்துக்கணும்... கேபிட்டலிஸ்ட்டா மாறிடக் கூடாது! ஏற்கனவே திருமணமான நீ இன்னொரு பெண்ணுக்கு தூண்டில் போடலாமா? சிரித்தான் ரூபன்.

    காவ்யாவ சொல்றியா ரூபன்? நீ மனப்பக்குவமும், நாகரிகமும் இல்லாம பேசுற... நட்பா பழகிற பெண்களையெல்லாம் திருமணம் செஞ்சிட முடியுமா? எங்க நட்பை கொச்சைப்படுத்தாத... நாங்க அற்புதமான நண்பர்கள்!

    என்கிட்ட கதை சொல்ற பாரு... நான் எத்தனை பெண்களை சகோதரி - நண்பினு பழகி கட்டில் வரைக்கும் கொண்டு போயிருக்கேன் தெரியுமா?

    ஆபாசமா பேசுற... இடைமறித்தான்.

    ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் செக்ஸ் சாராத நட்பு இருக்கவே முடியாது நிர்மல். ஆரம்பம் எப்படியிருந்தாலும் முடிவு செக்ஸ்தான்.

    நா இந்த உரையாடலை வெறுக்கிறேன்... எழ முயற்சித்தான்.

    நிர்மல்! உனக்குன்னு அழகிய மனைவி, இரு குழந்தைகள், தம்பி, தங்கை, ஒரு தாய். உன் உலகம் தனி உலகம். கட்டுப் பெட்டியான கணவனாய், ‘ரோஜா டிவி’யின் நல்ல ஊழியனாய் இருந்துட்டுப் போ... நீ சுத்தம்னு சொல்லிக்கிட்டு காவ்யாவின் மனசை ஏன் கெடுக்கற?

    என்ன கெடுத்தேன்? பதட்டம்.

    "உன் நட்பை அவ காதல்னு நம்பிக்கிட்டு இருக்கக் கூடும். நாளைக்கி உண்மை தெரிஞ்சா லட்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1