Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Devathai Vanthaal
Oru Devathai Vanthaal
Oru Devathai Vanthaal
Ebook126 pages54 minutes

Oru Devathai Vanthaal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Usha
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466848
Oru Devathai Vanthaal

Read more from V.Usha

Related to Oru Devathai Vanthaal

Related ebooks

Related categories

Reviews for Oru Devathai Vanthaal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Devathai Vanthaal - V.Usha

    1

    நிவேதா கண்விழித்தாள்.

    இருள் முற்றிலும் அகலாத விடிகாலை.

    அம்மாவும், தம்பிகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எழுந்து, பின்பக்கம் நோக்கி மெல்ல நடந்தாள். சின்னஞ்சிறு தோட்டம், அடுத்ததொரு புது நாளை வரவேற்க தயாராகிக்கொண்டிருந்தது.

    ஓரத்து மாமரத்திலிருந்து ‘கிரீச்’ என்று விநோத மொழியில் இரண்டு குருவிகள் கத்திவிட்டு விருட்டென்று பறந்தன. வானம் முழுக்க சிறகடித்தாலும் இந்தப் பறவைகளின் எண்ணம் கூடுகளுக்குள்ளேதான் இருக்குமோ என்று தோன்றியது. புன்னகைதான் வந்தது.

    உள்ளே வந்து காப்பி கலந்தபோது, அம்மா ஈரமுகத்தை துடைத்தபடி வந்தாள்.

    அடடா, நீயே காப்பி கலந்துட்டியா நிவேதா? என்னை எழுப்பியிருக்கக்கூடாதா? என்று ஆதங்கப்பட்டபடி காப்பியை வாங்கிங்கொண்டாள்.

    இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமேன்னு நினைச்சேன்ம்மா... வேறு ஒண்ணுமில்லே என்றாள், புன்னகையுடன்.

    காப்பி ரொம்ப நல்லா இருக்கு... ஆமா, சரியா தூங்கினியா நிவி?

    மொதல்ல தூக்கமே இல்லம்மா, ஒரு மணி நேரத்துக்கு என்றாள், மெல்லிய பெருமூச்சுடன். அவசர ஆபரேஷன் ஒண்ணு நேத்திக்கு... வயத்துல கட்டியோடு வந்த ஆளுக்கு பெரிய ஆபரேசன். டாக்டர் தேவராஜன் ரொம்ப ரொம்ப கவனமாகத்தான் செஞ்சார்... அப்படியும் குடல் மொத்தமா வெளியில வந்துட்டுது... உள்ளே வைச்சு அழுத்தி தைக்கிறதுக்குள் கடும் போராட்டமாவே ஆகிப்போச்சும்மா... தோள்பட்டையில் லேசா வலி... இப்ப சரியாப்போச்சும்மா என்றபோது அம்மா, கவலையுடன் அவளையே பார்த்தாள்.

    பிறகு மெல்ல, மகளின் தோளில் கை வைத்து அடிக்குரலில் கேட்டாள்

    உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறோம் நாங்க... இல்லையா நிவி?

    சிரித்தாள், அவள்.

    ஆரம்பிச்சாச்சா? என்றாள்.

    காலாகாலத்துல கல்யாணம், காட்சி நடந்திருந்தா இன்னிக்கு மகாராணி மாதிரி இருந்திருப்பே... இப்படி பண்ணிட்டுப் போயிட்டாரே அப்பா... கட்சிக்கொடியை பிடிச்சுகிட்டு தொழிற்சங்கம், ஊர்வலம்னே ஓடி திரிஞ்சு கடைசியில உயிரையும் கொடுத்துட்டாரே... குருவி மாதிரி உன் தோளில் எங்க மூணு பேரையும் உக்கார வைச்சுட்டு அவரு நிம்மதியா போய்ச் சேர்ந்துட்டாரேடி நிவேதா...

    கண்கள் கலங்க, அம்மா சமையலறைச் சுவரில் தொப்பென்று சாய்ந்தபடி உட்கார்ந்தாள்.

    அரிவாள் மனையையும் கத்திரிக்காயையும் எடுத்துக்கொண்டு எதிரில் அமர்ந்தாள், நிவேதா.

    தயவுசெஞ்சு இந்த மாதிரி பேசாதேம்மான்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? கேக்கக்கூடாதுன்னு வைராக்கியமா. நம்ம குடும்பத்துக்காக வேலை செய்யுறது என்ன பாவமான காரியமா? கடமையைச் செய்யுறதுல ஆண்- பெண் பேதம் என்னம்மா இருக்கு... சொல்லு என்றாள் பாதி கோபத்துடனும், பாதி பரிவுடனும்.

    அம்மா நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். மூக்கை உறிஞ்சியபடி தலைகுனிந்துகொண்டாள்.

    நிவேதா தொடர்ந்தாள்.

    உழைப்புதான் மனிதகுலத்துக்கு ஆணிவேர்னு மனசார நம்பி உழைப்பாளிகளுக்காக தன் உயிரையே போராட்டத்துல அர்ப்பணிச்சவர், அப்பா. உண்மையான தொழிற்சங்க தலைவர். அப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதரோட அன்பு மனைவி நீ. உழைக்கிற மகளைப்பார்த்து பெருமைப்படணும்... இப்படி மடங்கி உக்காந்துகிட்டு, கண்கலங்கக்கூடாது.

    இருள் இப்போது முழுமையாக விலகி, சூரியனின் ஆட்சிக்குள் வந்துவிட்டது, பூமி.

    மாமரத்து கிளையிலிருந்து குருவிகள் பறந்துவிட்டிருந்தன. மொட்டு அவிழ்த்த ரோஜா செடிகள் பொன்னிற வெளிச்சத்தில் இன்னும் பளிச்சென்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

    நிவேதா...

    சொல்லும்மா.

    கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கயேன்.

    ஓய்வா? என்னம்மா?

    வீட்டுலேயும் எல்லா வேலையும் பார்க்கிறே... அருமையான நர்ஸ் என்கிறதால் ஆஸ்பத்திரியிலேயும் உன் தலையிலதான் எல்லா வேலையும் விழுது... ஒருநாள்கூட லீவுன்னு உக்கார்றதே இல்லையேம்மா, நீ. கவலையா இருக்குமா எனக்கு அம்மா மெல்ல அவள் தோளில் கை வைத்தாள்.

    நிவேதா இன்னும் சிரித்தாள்.

    நல்ல அம்மாம்மா நீ என்றாள், எழுந்து அடுப்பை பற்றவைத்து.

    அம்மா விழித்தபடி பார்க்க, அவள் தொடர்ந்தாள்.

    எது எதுக்கெல்லாம் சந்தோசப்படணுமோ அதுக்கெல்லாம் வருத்தப்படுறியே, என்ன சொல்றது உன்னை? என்று மேலும் சிரித்தாள்.

    முட்டியைப் பிடித்தபடி எழுந்தாள், அம்மா.

    பொறுப்பில்லாம ஊரை சுத்திகிட்டு வம்பை விலைக்கு வாங்குகிற பையன்னா கவலைப்படணும்... வீட்டுல இருக்காம சினிமா, அரட்டைன்னு திரிகிற பொண்ணுன்னா கவலைப்படணும். உனக்கு என்னம்மா, சமர்த்தா மூணு குழந்தைகளை பெத்திருக்கே... அதுலேயும் தம்பிங்க ரெண்டு பேரும் இரட்டையர். வகுப்புல முதல் மார்க்குக்கு போட்டி போடுற அறிவாளி பையங்க. பிளஸ்-2 பரிட்சைக்கு அவங்க தயாராகிற அழகைப் பார்க்க ரெண்டு கண்ணு போதலே, எனக்கு. நேத்து இராத்திரிகூட ஒரு மணி வரைக்கும் படிச்சிட்டிருந்தாங்கம்மா... எவ்வளவு ஆனந்தப்படணும் நீ?

    என்னமோ போ... உள்ளுக்குள் ஏதோ உறுத்திகிட்டுதான் இருக்கு என்றபடி அம்மா, தோட்டத்தின் பக்கம் போன போது, தம்பிகள் எழுந்து வந்துவிட்டார்கள்.

    வணக்கம் நிவிக்கா என்று கோரசாக சொல்லியபடி, ஆளுக்கொரு பக்கம் வந்து நின்றுகொண்டார்கள்.

    வணக்கம் கண்ணுங்களா என்று அவள் புன்னகைத்தாள். சுடச்சுட காப்பி கலந்து, நுரைபொங்க ஆற்றி, ஆளுக்கு ஒரு தம்ளர் நீட்டினாள்.

    என்னப்பா, பரிட்சைக்கு தயாராகிட்டீங்க போலிருக்கே? என்றாள் இரண்டு பேர் தோள்களிலும் கை வைத்து.

    ஆமாக்கா என்றான், சுரேஷ்.

    இதுவரைக்கும் ரெண்டு தடவை பாடங்களை முடிச்சுட்டோம்க்கா... ரமேஷ் உற்சாகமாக, சொன்னான்.

    மலர்ச்சியுடன் அவள் சிரித்தாள்.

    ரொம்ப மகிழ்ச்சி. தேவையான அளவு ஓய்வு எடுத்து மூளையை சுறுசுறுப்பாக வெச்சுக்குங்க... தினம் கீரை சமையல் பண்ணுறேன், உங்களுக்காக...

    சரி டாக்டரம்மா... என்று ரமேஷ் சொல்ல, சுரேஷ் சிரித்தான்.

    நான் வெறும் நர்ஸ்தான்ப்பா... நீங்க ரெண்டு பேரும் வேணும்னா டாக்டராகலாம்...

    டாக்டரா? அய்யோ... என்றார்கள்.

    ஏன்? வியப்புடன் அவள் கேட்டாள். நல்லா படிச்சா இடம் கிடைக்குமேப்பா...

    இல்லாக்கா டாக்டர் வேண்டாம்க்கா... அவன் கப்பல் பணி, நான் விமானப் பணி. இதுதான்க்கா எங்கள் ஆசை... என்றபோது அவள் திடுக்கிட்டாள்.

    2

    மருத்துவமனைக்கு வரும் வழி முழுக்க அவளுக்கு சிந்தனையிலேயே நேரம் கழிந்தது.

    தம்பிகள் இதுவரை இவ்வளவு தெளிவாக வாய் திறந்து தங்கள் ஆசையைச் சொன்னதில்லை.

    வெறும் ஆசையா, அது?

    இல்லை. அதன் பெயர் லட்சியம்! கொள்கை! நம்பிக்கைக் கனவு!

    வெறும் பொறுப்பான பையன்கள் மட்டுமல்ல, அவர்கள். எதிர்காலத்தில் தலைசிறந்த பொறியாளர்களாகி இந்த சமூகத்திற்காக நிச்சயம் தங்கள் பங்களிப்பைச் செய்யப் போகிறவர்கள், அவர்கள்.

    அவை, பிள்ளைப் பருவத்து ஆசையில்லை. நன்றாக யோசித்து, தங்கள் திறமைகளை

    Enjoying the preview?
    Page 1 of 1