Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deepavali Thaththa
Deepavali Thaththa
Deepavali Thaththa
Ebook156 pages59 minutes

Deepavali Thaththa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466589
Deepavali Thaththa

Read more from Arnika Nasser

Related to Deepavali Thaththa

Related ebooks

Related categories

Reviews for Deepavali Thaththa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deepavali Thaththa - Arnika Nasser

    15

    தீபாவளி தாத்தா

    தீபாவளிக்கு இன்னும் இரு வார அவகாசம் அட்வான்சாய் சிவகாசி தயாரிப்புகள் ஆங்காங்கே வெடிக்கப்பட்டு காகிதத்துண்டுகளாக சிதறிக் கிடந்தன. மிமி மினி ஈராக் பிரமை. ஜவுளி வாங்கச் சொல்லி விளம்பரங்கள் சுவருக்கு சுவர். ஜனகராஜின் பேனர் பொருத்தப்பட்ட வாடகை டாக்சிகள் சினிமா பாட்டுகளின் இடைஇடையே அமெச்சூர் ஹெரான் ராமசாமி குரலில் பரவியபடி நின்று நின்று தெருக்கள் சுற்றின. குடும்பம் முழுவதுக்கும் துணிமணி எடுத்தால் ஆகும் அசுர பட்ஜெட்டுக்கு எங்கு கடன் வாங்கலாம் என தந்தைக் குலங்கள் யோசனையுடன் அலைந்து கொண்டிருந்தனர்.

    பலசரக்குக் கடை, டீக்கடை, பெட்டிக்கடை, சைக்கிள் ரிப்பேர் ஷாப்புக்கு அடுத்திருந்தது ஓலைக் குடிசை. அந்தக் குடிசையினுள் பழைய மெரிட் தையல் மெஷின் அமர்ந்திருந்தது. அதன் பெயின்ட் உதிர்ந்து துரு நிறமாய் இருந்தது. மெஷினின் பக்கத்தில் பெரிய மரப்பெட்டி, அதில்தான் வாடிக்கைத் துணிகளை பிட் துணிகளால் கட்டிப்போட்டு வைத்திருந்தார் அங்குசாமி தாத்தா. அங்குசாமி தாத்தாவை அந்த ஏரியா மக்களுக்கு ‘தீபாவளி தாத்தா’ என்று தான் பரிச்சயம். காரணம் தீபாவளி அன்று பிறந்தவராம் அங்குசாமி.

    அங்குசாமி 5 அடி 7 அங்குல உயரம். மஞ்சப்பாறை கருவாடுபோல் கறுப்பு. தலையில் எண்பது சதவீத ரோமம் உதிர்ந்து சொற்ப கேசம் அரக்கு வெண்மையாய், தலையில் துண்டை ‘சுருமா’ கட்டியிருந்தார். கதர் வேட்டி. காடா துணியில் பிடிக்கப்பட்ட கைவைத்த பனியன் மாடல் சட்டை. டயர் செருப்பு. சந்திரசேகர் தாடி. வாயில் சதா புகையும் கணேஷ் பீடி. பீடி புகைத்து புகைத்து பேக்கரி புகை போக்கியான உதடுகள்.

    அங்குசாமியின் மனைவி இறந்து முப்பது தீபாவளிகள் கரைந்து விட்டன. தன்னுடைய மெரிட் தையல் மெஷினுடன் அல்லாடி அல்லாடிதான் இரு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இரு மகன்களைப் படிக்க வைத்து ஆளாக்கினார். இன்று அவர்கள் வெளியுலக ஒப்பனைக்காக அங்குசாமியைத் தங்களுடன் இருக்க அழைத்தாலும் அங்குசாமி போகத் தயாராயில்லை.

    மனைவி மரணத்துக்குப் பின் கடந்த முப்பது வருடங்களாக இந்த மெரிட் தையல் மெஷின்தான் மனைவி- சொந்த பந்தம்- நட்பு-துணை எல்லாம் எல்லாம்.

    ஆடம்பரமான இன்டீரியர் டெகோரேஷன் செய்யப்பட்ட ஏ.சி. செய்யப்பட்ட டெய்லரிங் ஷாப்புகளுடன் அங்குசாமியால போட்டி போட முடியவில்லை. இவரின் தையல் தரம்மிக்க அற்புதமாய் இருந்தாலும் ஓலைக் குடிசை-இமேஜைத் தரைமட்டமாக்கியருந்தது. இவரிடம் காஜா எடுத்தவர்கள் எல்லாம் இன்று டவுனில் பெரிய டெய்லரிங் ஷாப்புகள் வைக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டனர். இவர் மட்டும் ஏணிபோல, தோணி போல, வாழை மரம் போல ஏதோ விரும்பி வரும் வேலைகளை மட்டும் செய்து தன்னுடைய வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொண்டார்.

    அங்குசாமியின் ஓலைக் குடிசையை காலி செய்து விட்டு புதுக்கடை கட்ட பகீரத முயற்சியாய் உச்ச விலைக்கு கிரயம் பண்ணிக் கேட்டனர் பலர். அங்குசாமியோ ஆணித்தரமாய் மறுத்துவிட்டார்.

    மெஷினின் கைமிதியைத் தட்டிவிட்டு துணிமேல் கடகடகடகடவெனத் தையலிட்டுக் கொண்டிருந்த அங்குசாமி ஆரவாரத்தில் தையலை நிறுத்தி நிமிர்ந்து வாசலை உன்னித்தார்.

    பத்து வயது சுகன்யா தன் தந்தையுடன் நின்றிருந்தாள். பாப் செய்யப்பட்ட தலைமுடி. நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு. அகலப் பட்டியும் மூன்று பிரில்களும் வைக்கப்பட்ட புஷ்கை சட்டை. கழுத்தில் டாலர் கொண்ட செயின். கையில் வளையல்கள். காலில் புதுமாடல் கொலுசு. கைகால் நகங்களில் டிப்ஸ் அண்ட் டோஸ் ரத்த நிற நெயில் பாலிஷ். நான்கு அங்குல பார்டர் கொண்ட பாவாடை.

    புகைத்த பீடியை அணைத்து நசுக்கி எழுந்து வணங்கினார் அங்குசாமி.

    வாங்க வாங்க சார்! வாம்மா சுகன்யா!

    தாத்தோவ்! சுகன்யா ஓடிப்போய் அங்குசாமியைக் கட்டிக்கொண்டது அவளின் தந்தைக்கு அருவெறுப்பு கோபத்தைக் கிளப்பியது. கொண்டுவந்த துணிப்பையை வேண்டா வெறுப்பாய் தையல் மெஷின் பக்கத்தில் தொமீரினார்.

    கழுத...டவுன்ல நூறு தையக்கடை இருக்கு. தைக்கலாம்னா இவ பிடிவாதமா உம்மகிட்டத்தான் தைக்கணும்கிறா. எல்லாம் உம்ம அதிர்ஷ்டம்தான்...

    அங்குசாமி பதில் சொல்ல விரும்பாமல் சிரித்தார். துணிப்பையை எடுத்துக் கவிழ்த்தார். சிவப்பு நிறப் பட்டுப் பாவாடைக்கான துணியும் அதே நிறத்தில் பாலிஸ்டர் ஜாக்கட் பிட்டும் இருந்தன. அளவு டேப் எடுத்து துணிகளை அளந்து பார்த்தார். பாவாடைத் துணி இரண்டரை மீட்டரும் ஜாக்கட் துணி முக்கால் மீட்டரும இருந்தன.

    என்ன மாதிரி தைக்கணும்?

    பெரிய்ய சார்லஸ் டயானாவுக்கு தைக்கற டைலரு! கேக்கிறாரு... ஏதோ ஓரளவு சகிக்கிற மாதிரி தைத்துக் குடுமய்யா...

    அதற்கும் அங்குசாமி சிரித்தார்.

    இங்க வாம்மா சுகன்யா! தாத்தா அளவெடுக்கிறேன். என் பேத்திக்கு பிடிச்ச மாதிரி தைச்சுக் குடுக்கிறேன்... அளவெடுத்துக் கொண்டார். எடுத்த அளவுகளை புழுக்கை பென்சிலால் பேப்பரில் குறித்துக் கொண்டார்.

    "என்னைக்கும்மா வேணும்?

    தீபாவளிக்கு முந்தின நாளுக்கு குடுத்தா போதும் தாத்தாவ்!

    சரிம்மா...

    தாத்தோவ்!

    என்னம்மா?

    ஊருக்கெல்லாம் தீபாவளிக்கு துணி தைச்சு தர்றீங்களே, உங்களுக்கு துணி எடுத்தீங்களா? அதை நீங்களே தைப்பீங்களா? என்ன கலர்ல எடுத்தீங்க தாத்தா?

    உம்ஹும் எனக்கு என்னம்மா தீபாவளி கொண்டாட்டமெல்லாம்?

    பழைய நினைவுகள் நொடிக்கு ஆயிரம் படங்களாய் மனத்திரையில் தோன்றி வேதனையைக் கிளப்பின.

    எல்லாம் ஆச்சு. தீபாவளி பலகாரம் தின்ன பல்லு விளங்காமப் போச்சு. துணி மேல ஆச துளியுமில்லை. மானத்தை மறைக்க ஏதோ ஒண்ணு. குட்டிப் பொண்ணு நீ- நல்லா உடுத்னா சரி...

    விரக்தியா பேசுறீங்களே தாத்தா!

    ஜாக்கட் டாப்ஸ் மாடல் தைச்சிடுறேன்

    கூலி எவ்வளவுங்க?

    உங்க இஷ்டம்

    இப்ப அப்படித்தான் பேசுவீங்கய்யா. அப்புறம் தெச்சு கைல குடுக்கும்போது யானையைக் கொண்டா பூனையைக் கொண்டாம்பீங்க. கறாரா சொல்லிடுமய்யா...

    இரண்டுக்கும் சேர்த்து இருபது ரூபா குடுங்க...

    குடிசைத் தையலுக்கு இது அதிகம்...

    இடம் குடிசைன்னாலும் தையல் அதே பட்டு நூல்லதாங்க...

    பதினைஞ்சு ரூபா வாங்கிக்குமய்யா...

    சரி உங்க இஷ்டம்

    வா சுகன்யா போவலாம்...

    நீங்க போங்கப்பா. நான் தீபாவளி தாத்தாகிட்ட பேசிட்டு வரேன்...

    அப்பா போனவுடன் பெட்டி மீது அமர்ந்து கொண்டாள் சுகன்யா. அங்குசாமி தையல் மெஷினின் இழுப்பறையிலிருந்து எதையோ தேடி எடுத்தார். மிச்சம் விழுந்த துணிகளை வைத்து அழகிய பொம்மை செய்திருந்தார்.

    உனக்குத்தாம்மா. வச்சுக்கம்மா...

    குதூகலித்தாள் சுகன்யா.

    அய்யாவ்! அழகா இருக்கு பொம்ம! தாங்க்ஸ் தாத்தாவ்! தாங்க்ஸ் தாங்க்ஸ் தாங்க்ஸ்!

    தித்திப்பு சாப்பிட்டு முடித்த சில நொடிகள் பின்னும் நாக்கில் உணர்வு தங்குமே அதே போல சுகன்யாவின் அன்பு அங்குசாமி நினைவில் தித்தித்தது. நொடிகள் தாமதித்து மீண்டும் தையலில் மூழ்கினார் அங்குசாமி.

    ஒரு வாரத்திற்குப் பிறகு- நாடார் மெஸ்சில் இரவு டிபனை முடித்து விட்டு குடிசைக்குள் புகுந்தார். நாற்பது வாட்ஸ் பல்ப் சோகையாய் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பீடியை எடுத்து உதட்டில் பொருத்தி தீக்குச்சியால் உயிர்ப்பித்தார். இரண்டு பப் புகை உள்ளிழுத்தவர் லேசாய் செருமி இருமியபடி தையல் வேலையில் ஆழ்ந்தார்.

    வாசலில் அரவம்... வட்டிக்கடை நடத்தும் மனோன்மணி நின்றிருந்தாள்.

    யோவ் தீபாவளி பெருசு! உசுரோட இருக்கியா?

    இருக்கிறதுனால் தானே கேள்வியே கேக்கறீங்க! என்ன விஷயம்?

    துணி தைக்கத்தான்...

    என் கிட்ட தைக்க வரமாட்டீங்களே... என்னை நையாண்டியா கோமணத்துணி டைலர்-ஆல்ட்ரேஷன் டைலர்ன்னுவீங்களே... இன்னிக்கு எப்படி!

    நீ கேப்பய்யா கேப்ப. நீ ஊமகுசும்பு கிழவன் நல்லா கேப்ப... உன் வாயாலதான வீணாப் போற. இல்லன்னா அடக்க ஒடுக்கமா மகன் மக வீட்ல குந்தி ஓசிக்கஞ்சி குடிச்சிட்டுருப்பியே...

    எதுக்கம்மா வெட்டிப் போச்சு? என்ன துணி தைக்க வந்தீங்க?

    இந்தப் பைல என் அளவு ஜாக்கட்டும் தைக்க வேண்டிய ஜாக்கட் துணியும் இருக்கு. என் ரெண்டு பசங்களுக்கு தைக்க வேண்டிய பேன்ட் சர்ட் இருக்கு. பசங்க அளவை காலைல எடுத்துக்க. கேக்ற கூலிய வாங்கிக்க. கடைசில... காசிக்குப் போய் கழுத கால்ல விழுந்த மாதிரி உன்கிட்ட வரவேண்டியதா போச்சு!

    அலட்சியமாய் மனோன்மணியை வெறித்தார் அங்குசாமி.

    வட்டிக்காசு உங்களை இப்டி வாய் துடுக்கா பேசச் சொல்லுது. அம்மா! நீங்க வேற கடைய பாக்றது நல்லது, என் கைவசம் ஏற்கெனவே ஏராளமான துணி இதுல உங்க துணிய வாங்கி தைக்க... நம்மளால முடியாதும்மா...

    யோவ் தீபாவளி! நான் பேசறதுக்கு பழி தீக்றியா?

    பழி தீக்ற வயசு எப்பவோ போயாச்சு. மெய்யாலுமே என்னால முடியாதம்மா...

    டபுள் மடங்கா கூலி தரேன்...

    அய்யோ அம்மா! ஆத்ல தண்ணி கரைபுரண்டு ஓடினாலும் நாய் நக்கித்தானம்மா குடிச்சாகணும். தினம் வயிற்றுப் பாட்டுக்கு காசு கிடைச்சா போதும். நீங்க துணிய எடுத்துட்டுப் போங்க...

    "ரொம்பத் திமிர் உனக்கு தீபாவளி. என்னை எதுத்துட்டு நீ வாழ்ந்துருவியா? நாளைக்கு ஆத்திர அவசரத்துக்கு பணம்

    Enjoying the preview?
    Page 1 of 1