Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Isaithaal Irappaai
Isaithaal Irappaai
Isaithaal Irappaai
Ebook99 pages50 minutes

Isaithaal Irappaai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Isaithaal Irappaai

Read more from Arnika Nasser

Related to Isaithaal Irappaai

Related ebooks

Related categories

Reviews for Isaithaal Irappaai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Isaithaal Irappaai - Arnika Nasser

    10

    1

    ஆழ்வார்பேட்டையில் அந்த ஆடம்பர பங்களா அமைந்திருந்தது. 2,500 சதுர அடியில் ஒரு கிரானைட் சாகசம். பங்களாவின் முன் பகுதியில் வண்ணமயமான பூந்தோட்டம். பின்பகுதியில் ஊஞ்சலும், சேர்களும் அமைந்திருக்கும் புல்தரை. அளவுக்கு மீறிய உயரமாய் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டிருந்தது. ராட்சச இரும்பு கேட்டை திடகாத்திர கூர்க்கா காவல் காத்தான். கேட்டில் சிறு சதுரக் கதவு.

    போர்டிகோவில் வெண்மை நிற ஸிலோ கார் நின்றிருந்தது.

    கேரேஜில் டாட்ஸன் இளைப்பாறியது.

    இந்த பங்களாவின் உரிமையாளன் நடேஷ்! ‘என்ன வாய் பிளக்கிறீர்கள்?’

    ஆம்... நடேஷ் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளன். இந்திய பாப் இசையின் மெஸய்யா. இந்த முப்பதுவயது இசைப்புயல் பாலிவுட்டையும், ஹாலி வுட்டையும் கலக்கோ கலக்கு என்று கலக்குவது நிஜமான நிஜம். நடேஷ் ஒரு கீ போர்ட் சாகசன். கம்ப்யூட்டர் இசைக் குழந்தை. இசையில் டிஜிட்டல் ரிக்கார்டிங் செய்து டால்பியில் ரசிகர் காது நிறைக்கும் மகா அற்புதன், இருபதாம் நூற்றாண்டின் வால் பகுதியில் பறந்து வந்த ட்ரண்ட் செட்டர்! இன்னும் ஒரு இருபது வருடங்களுக்குத் தமிழ் சினிமாவை ஆளப்போகும் இசைச் சக்கரவர்த்தி!

    கோடி மக்கள் தூக்கதேசம் பறந்திருக்க, அதிகாலை மூன்று மணிக்கே எழுந்திருந்தான் நடேஷ். மீசை இல்லாத க்ளாஸ்கோ முகம். மத்திய உயரம். உடல் வாகு.

    உடற்பயிற்சியும் ஆழ்நிலை தியானமும் செய்து முடித்தான்.

    குளிர் நீரில் குளித்தான்.

    அரைமணி நேரம் குரல் பயிற்சி எடுத்தான்.

    பின் கீ போர்டில் அமர்ந்து, புது மெட்டுகள் முயற்சித்தான்.

    மணி ஆறு.

    நடேஷின் அம்மா கீதா காப்பியுடன் வந்தாள். வயது ஐம்பதாகியும் யோகாவேல் கச்சிதமாக இருந்தாள். திடீரென்று பார்ப்பவர்கள் அவளை நடேஷின் அக்கா வென்றே கூப்பிடுவார்கள். கணவன் ஒரு ஸ்டண்ட் நடிகராய் இருந்து ஒரு விபத்தில் இறந்து போனார். அந்த சோகத்தை விட்டெறிந்துவிட்டு மகனை வானம் வரை உயர்த்தியிருந்தாள்.

    குட்மார்னிங் நடேஷ்!

    மார்னிங்மா! காபியை வாங்கிக்கொண்டான்.

    உன்னைப் பற்றி ஸ்டார் டி.வி.யில் மியூசிக் எக்ஸ்பர்ட்களிடம் அபிப்ராயம் கேட்டு அரைமணி நேரம் எபிஸோட் ஒளிபரப்பினார்கள் நேற்றிரவு. பாத்தியா?

    இல்லம்மா... டி.வி. யெல்லாம் பாக்க எனக்கு நேரம் எங்கம்மா? ப்ரோகிராம் எப்டியிருந்திச்சு?

    நிறைய பேர் உன்னைப் புகழ்ந்தாங்க. அந்த ஹிந்தி இசையமைப்பாளன்தான் உன்னைக் கன்னா பின்னாவென்று திட்டினான்! நீ ஒரு ஆமை வேக இசை அமைப்பாளனாம். மேற்கத்திய ஸாப்ட்வேர் மியூசித் பேக்கேஜ்களைச் சுடுகிறாயாம்!, டாக்டர் ஆல்பன், கென்னிஜி, யானி போன்றவர்களின் இசையைத் திருடுகிறாயாம்! சாஸ்திரிய சங்கீதத்தைக் கொலை செய்து விட்டாயாம்! மொத்தத்தில் இந்தியத் திரை இசைக்கு நீ ஒரு சாபக்கேடாம். அந்த நாய் சொல்லுகிறான். இரத்தம் கொதிச்சுப் போனேன் மகனே!

    விடம்மா. அவன் என்னுடைய பல ட்யூன்களைத் திருடிக்கிட்டிருந்தான். அவனைப்பத்தி ‘பெர்ஃபார்மிங் ரைட்டர்ஸ் சொஸைட்டி’ சேர்மன்ட்ட புகார் பண்ணினேன். அந்தக் கோபத்தில் புலம்புகிறான்... விடம்மா!

    காபி குடித்துவிட்டு காலிக் கோப்பையை அம்மாவிடம் நீட்டினான்.

    காலையில உனக்கு என்ன டிபன் தயார் பண்ண?

    வெள்ளைக்கரு ஊற்றப்பட்ட தோசையும், கறிவேப்பிலை சட்னியும் போதும்!

    எப்படா கல்யாணம் பண்ணிக்கப் போறே?

    ரெண்டு வருஷம் ஆகட்டுமா...

    அந்த நடிகை காஞ்சனா உன்னைக் காதலிப்பதாக பேட்டி கொடுத்துள்ளாளே?

    ஒருதலைக் காதல்ம்மா... நான் அவளை சரியா பார்த்ததுகூட இல்லை!

    சரிப்பா... நான் சமையலறைக்குப் போகிறேன்!

    அம்மா புறப்பட்டுப் போனாள்.

    நடேஷ் பெருமூச்சு விட்டான்.

    காரியதரிசி சிரிஷா வந்து சேர்ந்தரள்.

    அவள் கையில் முப்பதுக்கு மேற்பட்ட விசிட்டிங் கார்டுகள்.

    வாங்கிப் பார்த்தான் நடேஷ்.

    வரவேற்பறையில் காத்திருப்போர் காரணம் எழுதி அனுப்பியிருந்தனர்.

    மேஜிக் காஸெட் கம்பெனி முதலாளி முதலாக உள்ளே வந்தார்.

    வணக்கம்!

    வணக்கம், உக்காருங்க!

    உங்க லேட்டஸ்ட் ஹிந்திப் படத்தின் இசை உரிமையை எங்கள் கம்பெனி பெற நீங்கள் உதவ வேண்டும்!

    ஏறக்குறைய ஆறு காஸெட் கம்பெனிகள் அணுகியுள்ளன. இன்னும் இரு நாட்களில் உங்களுக்கு பதில் கூறுகிறேன்!

    அடுத்து ஒரு படத்தயாரிப்பாளர் டைரக்டருடன் நுழைந்தார்.

    ரஜினி, ரோஜா கால்ஷீட்டில் நீங்க மியூசிக் ஒத்துக்கிட்டா படத்துக்கு பூஜை போட்ரலாம்!

    காரியதரிசி சிரிஷாவை ஒரு பார்வை பார்த்தான் நடேஷ்.

    ஸாரி... 1998 வரைக்கும் கால்ஷீட் டைட்டா இருக்கு!

    இப்ப நீங்க வாங்கறதவிட ரெண்டு மடங்கு சம்பளம் குடுத்திர்ரோம்

    பத்து மடங்கு குடுத்தாலும் என்னால முடியாது!

    இப்படி ரிஜிட்டா பேசினா எப்படி... கொஞ்சம் எறங்கி வாங்க...

    என்னால் இப்படி பிஸி ஷெட்யூல்ல மியூசிக் போட முடியாது... விட்ருங்க...

    நாலு பாட்டு மட்டும் போட்டுக் குடுத்திருங்க. பின்னணி இசை யாரையாவது வச்சு பண்ணிக்கிறோம்!

    அதுவும் என்னால முடியாது!

    தயாரிப்பாளர் கடுகடுப்பானார்.

    ரொம்ப தலைக்கனம் உனக்கு. நீ இல்லேன்னா தமிழ் சினிமா செத்துடும்னு நினைக்கிறியா? வேற மியூசிக் டைரக்டர் உதவிய வச்சு இந்த படம் பண்ணிக்காட்றேன்... உன் ஸ்டைலை அப்படியே பிட்டுப்பிட்டு காப்பியடிக்கச் சொல்றேன், சட்டரீதியா என்ன கிழிச்சிடுவன்னு பாக்கறேன்!

    செய்ங்க... இப்ப மொதல்ல வெளியே போங்க!

    Enjoying the preview?
    Page 1 of 1