Marana Vyabari
()
About this ebook
பிளாட்டினம் தேசிய கட்சியின் மூன்று மாவட்ட செயலாளர்களும் இரு டெல்லி பார்வையாளர்களும் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர். சம்பவங்களை நேரில் பார்த்த பிறவி ஊமை செவிடு சிரித்தபடி மரிக்கிறான். வைரஸ் தாக்குதலாக இருக்குமோ என டியாரா சந்தேகப்படுகிறான். இரு போலீஸ்காரர்கள் கைபேசியில் எதோ தகவல் கேட்டு சிரித்தபடி இறக்கின்றனர். டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மணிமாலா விசாரிக்கப்படுகிறாள். மணிமாலா சிரித்தபடி மரணிக்கிறாள். கொலையாளி ஒரு பெண்ணுடன் உறவு கொண்டுவிட்டு அவளின் முதுகில் ஒரு ஜோக் எழுதி கொல்கிறான். கத்தியின்றி துப்பாக்கியின்றி கொலை. ஷீட்டிங் ஸ்பாட்டில் ஜோக் சொல்லி கொத்து கொத்தாய் கொலை. காவல்துறை தலைவர் கொலை.
கொலையாளி உபன்யாசங்கள் செய்பவன். ஒலியியல் மொழியியல் படித்தவன். கம்ப்யூட்டர் வைரஸ் போன்ற ஆணைதொடர்களை உருவாக்கி மனிதர்களுக்குள் செலுத்தி ஸ்தம்பிக்க வைத்து கொல்கிறான். கடைசியில் அவனை ஸிஜா அழித்தொழிக்கிறாள். பல்லாயிரம் க்ரைம் நாவல்களில் ஒரு நவரத்தினம் இந்த நாவல்.
Read more from Arnika Nasser
Idi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsThrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsKodaikanal Marmam Rating: 5 out of 5 stars5/5Nee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Thulla Thudikka Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Mandalam Rating: 5 out of 5 stars5/5Clydescope Mugamoodi Rating: 5 out of 5 stars5/5Thakku Minnaley Thakku Rating: 5 out of 5 stars5/5Thirumarai Nabimozhi Islamiya Neethi Kathaigal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsKaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Thimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Onbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Konjam Kollungal Rajavey Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsRatha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Santhippu Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsElipori Rating: 0 out of 5 stars0 ratingsMarana Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 10 Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rating: 1 out of 5 stars1/5Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8 Rating: 0 out of 5 stars0 ratingsPunch Dialogue Thozhirsaalai Rating: 0 out of 5 stars0 ratingsMarma Mudichukal Rating: 0 out of 5 stars0 ratingsKizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Jana Janathibathikku Rating: 0 out of 5 stars0 ratingsVetri Koottani Rating: 2 out of 5 stars2/5Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marana Vyabari
Related ebooks
Isaithaal Irappaai Rating: 5 out of 5 stars5/5Odu... Olinthukol! Rating: 0 out of 5 stars0 ratingsGram Sorkkam Rating: 4 out of 5 stars4/5Soonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsCrime Sooravali Rating: 5 out of 5 stars5/5Vanna Vanna Drogangal Rating: 0 out of 5 stars0 ratingsPoojyam Rating: 0 out of 5 stars0 ratingsThayangaathey Thakku Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Kuzhappam Enna? Rating: 0 out of 5 stars0 ratingsMoha Thee Moottu Rating: 0 out of 5 stars0 ratingsAbaaya Arivippu! Rating: 4 out of 5 stars4/5Marana Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsOonjal Rating: 0 out of 5 stars0 ratingsChathura Saravedigal Rating: 0 out of 5 stars0 ratingsTime To Murder Rating: 5 out of 5 stars5/5Mala Ennai Mannippaya? Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsElipori Rating: 0 out of 5 stars0 ratingsஇருட்டைத் தேடி! Rating: 0 out of 5 stars0 ratingsIruttai Thedi Rating: 5 out of 5 stars5/5Laser Sirippu Rating: 0 out of 5 stars0 ratingsThenkizhakku Minnal Rating: 5 out of 5 stars5/5Onbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Neeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsSikappu Tajmahal Rating: 0 out of 5 stars0 ratingsNee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Varambu Meerum Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsMuththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for Marana Vyabari
0 ratings0 reviews
Book preview
Marana Vyabari - Arnika Nasser
http://www.pustaka.co.in
மரண வியாபாரி
Marana Vyabari
Author:
ஆர்னிகா நாசர்
Arnika Nasser
For more books
http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
வெள்ளை நிற ஜீன்ஸும் கறுப்பு சாட்டின் ஜீன்ஸ் சர்ட்டும் உடுத்தியிருந்தான் டியாரா.
எதிரில் ரோஸ்நிற மார்புசட்டை இணைந்த குட்டைபாவாடை அணிந்த தேஜியும் பழுப்பு நிற க்ளோஸ்நெக் பனியனும் பெர்முடா டவுசரும் அணிந்த ஸிஜாவும்.
அப்புறம்?
என்றான் டியாரா உரையாடல் வளர்க்கும் நோக்குடன்.
வரவர இந்த உப்பிலி செய்ற லொள்ளு தாங்கல!
தேஜி.
என்ன... பேசும் போது அங்க இங்க கைய வைக்கிறானா?
இல்லையே...
கை வைக்கலைன்னு அலுத்துக்கிறியா?
முறைத்தாள்.
சரி சரி... உப்பிலி என்னதான் பண்றான்?
ஒரு நாளைக்கு இருபத்திநாலு மணிநேரமும் எனக்கு மாஞ்சு மாஞ்சு எஸ்எம்எஸ் அனுப்ச்சிக்கிட்டே இருக்கான்!
அனுப்ற எஸ்.எம்.எஸ்.ஸெல்லாம் கடிக்குதா?
ம்ஹும்! எல்லாம் செக்ஸ்ல நனைஞ்சவை!
சாம்பிளுக்கு சிலதைச் சொல்லேன்!
"த்ரிஷா நடிக்க வந்த புதுசுல அனுபவமில்லாம பாடுன பாட்டு 'லேசா...ஸ்... லேசா' பத்து படங்கள்ல நடிச்ச பிறகு த்ரிஷா அனுபவத்தோடு பாடுன பாட்டு 'அப்டிப்போடு...ஆங்...அப்டிப்போடு!ன்றான்’
குசும்பன் குசும்பன்! வேற சொல்லு!
ஒரு லேடிக்கு எட்டு மகன்களாம். எல்லா பேரும் பீட்டராம். எதாவது ஒரு பீட்டரை கூப்டணும்னா அந்த லேடி எப்படி கூப்டுவா?
தெரியலையே...
உதடு பிதுக்கினான்.
அந்தந்த பீட்டரோட இனிஷியலை வச்சு கூப்பிடுவாளாம். இதுவும் உப்பிலி எஸ்.எம்.எஸ்!
ஒன் மோர் ப்ளீஸ்!
நாய் சாயல்ல ஒரு மிருகம் மூணு கால்ல நடக்கும். அதென்ன மிருகம்?
காமவெறி பிடித்த ஆண்?
முறைத்தாள்.
ஸாரி ஸாரி. கு.க. பண்ணிய ஆண்!
மீண்டும் முறைத்தாள்.
நீயே சொல்லு!
நொண்டி நாய்!
ஒரு சைவக்கடி ப்ளீஸ்!
பத்துப்பேரு காட்டுக்குள் போய்ட்ருக்காங்க. திடீர்னு ஒரு சிங்கம் தோணி, பத்துல எட்டுப்பேரை மட்டும் கடிச்சுக் குதறிடுது. ரெண்டு பேரை ஏன் பேசாம விட்டுது?
அந்த ரெண்டு பேரும் குளிக்கல!
ம்ஹும்!
அந்த ரெண்டு பேரும் வைரம் பாஞ்ச கட்டைகள்!
அதில்ல!
பின்ன?
அந்த மீதி ரெண்டு பேரும் லயன்ஸ் கிளப் மெம்பர்ன்றதுனால விட்ருச்சாம் சிங்கம்!
கடிபட்ட எட்டு பேரும் ரோட்டரி கிளப் மெம்பர்களோ?
உதை!
வேற எதாவது இருந்தா எடுத்து விடு!
ரெண்டு ப்ரண்டுக. ஒரு பிரண்டு இன்னொரு பிரண்டுகிட்ட 'மச்சான்! உன்னை படைச்சதுக்கு பின்னாடி கடவுள் ஏன் பில்கேட்ஸை படைச்சார்?'ன்னு கேள்வி கேக்றான். 'தெரியலையே'ன்றான் எதிர்பார்ட்டி. மொதல்ல கேள்விகேட்ட பிரண்டு 'வேற ஒண்ணுமில்லடா. கடவுள் ஒரு மாஸ்டர்பீஸை உருவாக்குறதுக்கு முன்னாடி ஒரு களிமண் மண்டையனை சாம்பிள் பீஸா உருவாக்கி பாத்திருக்கார்'ன்னு வெடச்சிருக்கான்!
நெட்டுயிர்த்தான் டியாரா. அந்த உப்பிலிக்கு உன் மேல ஒரு கண்... மெதுமெதுவா ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி அனுப்பி உன்னை கட்டில்ல கவிழ்க்கப் பாக்றான்!
சேச்சே... அவன் ஒரு பேபிபாய்!
பேபிபாய் உனக்கொரு பேபியக் குடுத்துடப் போரான்!
பொறாமை பொங்கி வழியுது உனக்கு!
தோள்களை குலுக்கிக்கொண்டான் டியாரா. உலா தொலைபேசி சந்திரமுகி இசைத்துணுக்கு (?) ஒன்றை ஒலித்தது. எடுத்து காதில் இணைத்தான். சொல்லுங்க தேவா!
ஓர் அதிரடி ந்யூஸ்!
என்ன... பரமானந்த ஸ்வாமிகளுக்கும் சந்தனக்கடத்தல் மாரப்பன் மரணத்துக்கும் தொடர்பிருக்குன்னு பரமானந்தா மேல புது கேஸ் போட்ருக்கீங்களா?
இந்த லொள்ளுதான வேணான்கிறது?
இப்ப எந்த அதிரடி ந்யூஸையும் அஸால்ட்டா ஜீரணிக்க மக்கள் தயாராய்ட்டாங்க!
ருத்ரமூர்த்தி பவன் தெரியுமில்ல உனக்கு?
ஆமா. புரசைவாக்கம் ஹைரோட்ல இருக்கு. பிளாட்டினம் தேசியக்கட்சியோட மாநில கட்சி தலைமை அலுவலகம்!
"யெஸ். அக்கட்சியின் மூன்று பிரதான கோஷ்டி தலைவர்களும் அவர்களை சமாதானப்படுத்த வந்த இரு தலைநகர் அரசியல் பார்வையாளர்களும் இறந்து கிடக்கிறாங்க. எப்படி இறந்தாங்கன்னு குழம்பிப்போய் நிக்றோம்.