Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Thol Sera Aasaithan
Un Thol Sera Aasaithan
Un Thol Sera Aasaithan
Ebook102 pages47 minutes

Un Thol Sera Aasaithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466473
Un Thol Sera Aasaithan

Read more from R.Sumathi

Related to Un Thol Sera Aasaithan

Related ebooks

Reviews for Un Thol Sera Aasaithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Thol Sera Aasaithan - R.Sumathi

    15

    1

    இப்படித்தான் ஆரம்பித்தது அந்த விஷயம்.

    ‘பத்தாம் நம்பர் குவார்ட்டஸுக்குக் குடி வர்ற மாதிரி தெரியுது.’

    பத்தாம் நம்பர் குவார்ட்டஸில் ஆட்கள் வேலை செய்துக்கொண்டிருந்தனர். வெள்ளையடிப்பதும் முன்பக்கத்து கட்டைச் சுவற்றில் உதிர்ந்திருந்த சிமெண்ட் இடங்களை மறுபடி பூசுவதும், கொல்லைப் புறத்தில் காடாக வளர்ந்து மிரட்டிய செடிகொடிகளை அகற்றுவதுமாக வேலைகள் துரிதகதியில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து கோமதி, சந்திராவிடம் கேட்டாள்.

    சந்திரா சகல விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பாள். அக்கம் பக்கத்து விஷயங்களென்றால் அவளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

    திண்ணையில் உட்கார்ந்து காய்கறி நறுக்கும் நேரங்கள் அவளைப் பொறுத்தவரை திரட்டி வைத்த விஷயங்களைத் தித்திக்க தித்திக்க பேசுவதுதான்.

    ஒன்றை இரண்டாக்கி, இரண்டை இருநூறாக்கும் பிசினஸ் யுக்தியையெல்லாம் சேகரித்து வைத்து விஷயங்களைத் திரித்து விடுவதில் காட்டுவாள்.

    திண்ணையில் அமர்ந்து முருங்கைக்காயை நறுக்கிக் கொண்டிருந்த சந்திரா கோமதியைப் பார்த்து சொன்னாள்.

    ஆமா... யாரோ இன்ஜினியர் வர்றாராம். நம்ம லீலா புருஷனோட டிபார்ட்மெண்ட்தானாம்.

    முன்னாடி எங்கேயிருந்தார்? மாற்றலாகி வந்திருக்காரா?

    இல்லை இல்லை. இங்கதான் இருக்காராம். ஹெச் டைப்ல இருந்தாராம்.

    ஏ முதல் ஹெச் வரை பார்க்கும் பதவிக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருந்த வீடுகள் அவை.

    இதில் ஜி டைப் ஹெச் டைப் இரண்டும் இன்ஜினியர்களுக்காக ஒதுக்கப்பட்டவை.

    எதுக்கு அங்கிருந்து இங்க வர்றார்? கோமதி இப்ப கேட்டதில் காரணம் இருக்கிறது.

    ஒவ்வொரு ஒரே மாதிரியான தகுதிக்கும் பதவிக்கும் தரப்படும் வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

    ஒரு வீட்டில் இருக்கும் அத்தனை வசதிகளும் அத்தனை வீடுகளிலும் இருக்கும்.

    ஏதாவது ஒரு குறை இருந்தால் கூட புகார் பண்ணினால் போதும் உடனே கம்பெனி ஆட்கள் வந்து சரி செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள்.

    பிறகெதற்கு ஒரு வீட்டை விட்டு இன்னொரு வீட்டிற்கு வரவேண்டும்?

    அதென்னமோ அந்த லைன்ல அக்கம் பக்கம் சண்டையாம். அதான் இங்க வர்றார்.

    அந்தாளு பொண்டாட்டி பொல்லாதவளோ? வாய் ஜாஸ்தியோ? சண்டைக்காரியோ கோமதி அடுக்கிக் கொண்டே போனாள்.

    நீ வேற! அந்த இன்ஜினியருக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.

    அப்புறம்?

    அவளோட அம்மாவும் அப்பாவும் அவன் கூட இருக்காங்க. அவங்கதான் ஏதோ பிரச்சனை பண்றாங்களோ என்னவோ கோமதியின் முகத்தில் அன்னிய ஊடுருவல் நுழைந்த மன்னனின் கலவரம் தெரிந்தது.

    எனக்கு பயமாயிருக்கு கட்டிய கணவர், மாமியார், மாமனார் என எதற்கும் பயப்படாத கோமதி இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.

    எதுக்கு பயப்படறே? அவங்க வந்து நம்மை என்ன செய்துடப் போறாங்க?

    அதுக்கில்லை. நம்ம லைன்ல இதுவரைக்கும் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. எல்லாரும் தாயாப் புள்ளையா பழகிக்கிட்டிருக்கோம். இந்த மாதிரி வாய் நீளமுள்ளதுங்க வந்து நம்ம ஒற்றுமையைக் கலைச்சுடக்கூடாது பாரு.

    ஆ... அவ என்ன பெரிய இவளா? ஏதாவது கசாமுசாண்னா கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுத்தா இங்கிருந்து போயிடராங்க. சந்திரா சிரித்தாள்.

    மறுநாள் அதே சந்திரா சொன்ன விஷயம் கோமதியைத் தூக்கிவாரிப்போட வைத்தது.

    கோமதி, உனக்கு விஷயம் தெரியுமா? அந்த குவார்ட்டர்ஸுக்கு வரப்போறாரே இன்ஜினியர் அவரோட அப்பாவுக்கு எய்ட்ஸாம். கோமதி தனக்கே எய்ட்ஸ் வந்ததைப் போல் அலறினாள்.

    ஐய்யய்யோ என்றவள் அடுத்தகணம் அருவெறுப் படைந்தாள்.

    ச்சீ... கருமம்.

    அதனாலதான் அங்க இருக்கறவங்களெல்லாம் ஏதேதோ காரணம் சொல்லி கம்ப்ளைண்ட் பண்ணி காலிபண்ணிட்டாங்க. இங்க வர்றாங்களாம்.

    ஐய்யோ... நாம என்ன பண்றது? நடுவில் அந்த எய்ட்ஸ் குடும்பம் வந்து உட்கார்ந்துக்கும். நாமெல்லாம் எப்படி இருக்கறது? நாம இப்ப எவ்வளவு ஒத்துமையா இருக்கோம். அந்த குடும்பத்தோட எப்படிப் பேசறது பழகறது? நினைச்சாலே அருவெறுப்பாயிருக்கு. எவக்கிட்ட போய்ட்டு வந்தானோ... இன்ஜினியருக்கு அப்பன்னா கிழவனால்ல இருப்பான். கிழட்டு வயசுல கொழுப்பெடுத்து அலைஞ்சா இதான்... செயற்கையாக வாந்தியெடுத்தாள் கோமதி. செய்தி காட்டுத்தீ போல் பரவியதில் அந்தக் காலனியில் பேச்சு அதுவாகத்தான் இருந்தது.

    வரவிருக்கும் அந்தக் குடும்பத்தைப் பற்றி வாய் ஓயாது பேசியது.

    என்னங்க... உங்களுக்கு விஷயம் தெரியுமா? என்று ஆரம்பித்து எல்லா விஷயத்தையும் சொன்னாள் கோமதி. கேட்டுக் கொண்டிருந்த ஜனார்த்தனன்,

    ம்... நானும் கேள்விப்பட்டேன். அதுக்கென்ன இப்போ? என்றவாறு தன் பேப்பர் படிக்கும் வேலையிலிருந்து விலகாமல் இருந்தார்.

    என்ன இப்படி சொல்றீங்க. இப்படி ஒரு குடும்பம் வந்தா நாம் எப்படிப் பேசறது பழகறது? காலையில எழுந்தா எதிர் வீட்லதான் முழிக்கணும்.

    உன்னை யார் பேசி பழகச் சொன்னது? இந்தக் காலனியில உனக்குப் பேசி பழக ஆளே இல்லையா? பிடிக்கலைன்னா எதுக்கு கிட்ட போகணும்? உன் வேலையைப் பார்த்துக்கிட்டு கம்முன்னு கிட...

    உங்கக்கிட்ட போய் சொன்னேன் பாரு. நீங்க ஒரு புத்தகப் புழு. எப்பப்பாரு பேப்பரும் புத்தகமும் இருந்தா போதும். நாலுபேர்க்கிட்ட பேசறதில்லை. பழகறதில்லை. என்ன ஜென்மமோ? தலையிலடித்துக் கொண்டாள்.

    ஆமா நீ நாட்டு நடப்பைப்பத்தி நாலுபேர்க்கிட்ட பேசறே. அதுல நான் வந்து கலந்துக்கலைன்னு உனக்கு வருத்தம். பேசறதெல்லாம் ஊர்கதையும், ஊறுகா போடற கதையும். பொம்பளைங்க நாலு பேர் சேர்ந்தா என்ன பேசுவீங்கன்னு எனக்குத் தெரியாது? போய் வேலையைப் பார். சூடா காபி கொண்டா.

    க்கும்! எவன்குடி எங்கக் கெட்டாலும் இவருக்கு ஒரு நாளைக்கு பத்து காபி குடிச்சிடணும் முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு எரிச்சலுடன் உள்ளே சென்றாள்.

    அதே சமயம், "அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1