Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chathura Saravedigal
Chathura Saravedigal
Chathura Saravedigal
Ebook181 pages1 hour

Chathura Saravedigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சதுரா துப்பறியும் நிறுவனம். தர்மமும் தயையும் தைரியமும் உயிர்க் கொள்கைகளாய் ஒன்று சேர்ந்த மூன்று இளைஞர்கள் நடத்தும் ஸ்தாபனம்.

Languageதமிழ்
Release dateNov 18, 2023
ISBN6580111410462
Chathura Saravedigal

Read more from Sairenu Shankar

Related to Chathura Saravedigal

Related ebooks

Reviews for Chathura Saravedigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chathura Saravedigal - Sairenu Shankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சதுரா சரவெடிகள்

    Chathura Saravedigal

    Author:

    சாய்ரேணு சங்கர்

    Sairenu Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-shankar

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. தங்கப் ‘பென்’னே!

    2. வைர நெக்லஸ்

    3. குழந்தை விளையாட்டு

    4. அடே, பயலே!

    5. யாரும் பார்க்காமல்...

    6. ஒரு கொலை நடக்கப் போகிறது!

    7. பேய், பேய் அல்ல!

    8. யார் அந்த அழகி?

    9. நட்சத்திரம்

    முன்னுரை

    சதுரா துப்பறியும் நிறுவனம்.

    தர்மமும் தயையும் தைரியமும் உயிர்க் கொள்கைகளாய் ஒன்று சேர்ந்த மூன்று இளைஞர்கள் நடத்தும் ஸ்தாபனம்.

    தர்மா

    இந்த நிறுவனத்தின் திறமையான ஆனால் எளிமையான தலைவன் தர்மபிரகாஷ் என்ற தர்மா.

    தர்மா பெயருக்கேற்ற மாதிரி. தோழர்கள் அடிதடி விளையாட்டுகள் தேடிய போது படிப்பைத் தேடியவன். அவர்கள் கேர்ள்ஃப்ரெண்டைத் தேடிய போது பிஸினஸைத் தேடியவன். பியர், சிகரெட்டை நேசியாது புத்தகங்களை நேசித்தவன். எல்லோரும் மேனேஜ்மெண்ட், லீடர்ஷிப் படிக்கச் சொன்னபோது ஆன்மீகம் பழகியவன்.

    படிப்பு முடிந்தவுடன் கோவை மண்ணையும், அப்பாவின் பணம் கொழிக்கும் மில்களையும் விட்டு விட்டுச் சென்னை வந்துவிட்டான். பாரத் பிரஸ் என்ற அச்சு நிறுவனம், பாரத புத்ரா என்ற வாரப் பத்திரிகை இவற்றோடு சதுரா துப்பறியும் நிறுவனத்தையும் நடத்துகிறான் தர்மா.

    சதுராவினால் பல வழக்குகள் வெற்றிகரமாகச் முடிக்க இயன்றதற்குத் தர்மாவின் கூர்மதியும் உள்ளுணர்வும் முக்கியக் காரணங்களாக இருந்து வருகிறது.

    தன்யா

    சமூகச் சிந்தனை வேண்டும், சாதித்து வாழ வேண்டும் என்ற கொள்கை உள்ளவள் தன்யா. தவறு நடப்பதைக் கண்டால் கண்ட இடத்தில் தட்டிக் கேட்கும் தைரியசாலி. மனதில் கருணையும் கண்களில் நெருப்பும் வாக்கில் மின்னலும் செயலில் வேகமும் உள்ள புதுமைப் பெண்.

    தர்ஷினி

    கூர்மதியும் கூர்நோக்கும் கொண்டவள் தர்ஷினி. அமைதியான டைப். அழகான ஒளிரும் பச்சைக் கண்களும், அனைத்தையும் அறிவதில் ஆர்வமும், பேச்சிலும் எழுத்திலும் துல்லியமும் இவள் ஸ்பெஷாலிட்டி.

    தன்யா தர்மாவின் தங்கை. தர்ஷினி அவர்கள் கஸின். இரண்டு இளம்புலிகள்.

    சதுரா டிடெக்டிவ் ஏஜன்சிக்குத் தர்மா பெயரளவுக்குத் தான் தலைவன். இந்த நிறுவனம் இந்த இரு பெண்களின் ஆசை, கனவு, லட்சியம்.

    பதினோரு மர்மக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. படியுங்கள். கதைகள் பற்றிய உங்கள் அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    1. தங்கப் ‘பென்’னே!

    சொல்லுங்க, என்னைத்தான் பார்க்கணும்னு சொன்னீங்களாம் என்றாள் தன்யா.

    எதிரே அமர்ந்திருந்தவன் வியர்த்திருந்தான். வந்து... என் ‘கோல்ட் பென்’னைக் காணோம் என்றான் தடுமாறி.

    தன்யா அவனை உற்றுப் பார்த்தாள். ‘டீடெயில்ஸ் சொல்லுங்க’ என்றாள்.

    என் பேர் விஜய். நான் பழஞ்சின்னங்கள் பற்றிய, அதாவது ஹெரால்ட்ரி சப்ஜெக்ட்ல பி.ஹெச்.டி பண்ணிட்டிருக்கேன். என் கூட மூணு ஃப்ரெண்ட்ஸ் தங்கியிருக்காங்க. என் ரிஸர்ச் மேட்ஸ். வேலைக்காரன் ஒருத்தன் வீட்டோடவே இருக்கான். இந்தத் தங்கப் பேனா என் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. இதை எடுத்துப் போகவே என் வீட்டுக்காரங்க விடல. நாந்தான் பிடிவாதம் பிடிச்சு எடுத்திட்டு வந்தேன். தொலைஞ்சு போச்சுன்னு தெரிஞ்சா, என்னைத் தொலைச்சிடுவாங்க...

    பதட்டத்திற்குக் காரணம் புரிந்தது. ஆனாலும் கொஞ்சம் ஓவர் பதட்டம் போலில்லை?

    இன்றைக்கு வழக்கம்போல் எங்க ஆய்வுடைய மெண்ட்டர் வீட்டுக்குப் போயிட்டு வந்ததும், என் நண்பர்களோடு முக்கியமான ஒரு பழைய அரசுச் சின்னம் பற்றி விவாதம் பண்ணிட்டிருந்தேன். அதான் பேனாவை உள்ளே வைக்க மறந்துட்டேன். அது மேஜை மேலேயே இருந்தது.

    இடையில் என் வேலைக்காரன் வந்து, எல்லோருக்கும் காப்பியும் பிஸ்கட்களும் கொடுத்திட்டுப் போனான். என் ஃப்ரெண்ட்கள்ள பிரபு எழுந்து மேஜை மேலிருந்து ஒரு புத்தகம் எடுத்துவந்தான். கொஞ்சம் தேடினான்னு வெச்சுக்குங்க.

    அபிஷேக் நடுவில் பாத்ரூம் போயிட்டு வந்தான். வரும்போது மேஜை வழியாத்தான் வந்தான்.

    ஃபஸல் எழுந்திருக்கவே இல்லை. அவன் தான் ஆழமா விவாதம் பண்ணினவன்...

    ...அப்போ அவரை விட்டுடலாம் என்றாள் தன்யா.

    யாரையுமே சேர்க்க எனக்கு மனம் இல்லை, மிஸ் தன்யா! அவங்க மூணுபேரும் என் நெருங்கிய நண்பர்கள். வேலைக்காரனோ பல வருஷம் எங்களோட ஜமீன் மாளிகையில் வேலை செய்யறவன்... போலீஸ்க்குப் போக எனக்கு இஷ்டமில்லை... விஜய் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

    பேனா காணாமப் போச்சுன்னதும் என்ன செஞ்சீங்க?

    அறை முழுக்கத் தேடினேன். பாத்ரூமில் விழுந்திருக்கான்னு பார்த்தேன்.

    இப்போ உங்க நண்பர்கள் எல்லோரும் எங்கே இருக்காங்க?

    என் வீட்டில்தான். அங்கதானே தங்கி இருக்காங்க!

    ***

    அவன் நண்பர்களும் சற்றுப் பதட்டமாகக் காணப்பட்டாலும் யாரிடமும் பயம் தென்படவில்லை. அவர்கள் அறைகளை, அவர்களை, சதுராவின் அஸிஸ்டண்ட் டிடெக்டிவ் அச்யுத் சோதனை செய்ய அனுமதித்தார்கள்.

    தன்யா மேலோட்டமாக அந்த அறைகளைப் பார்த்தாள்.

    பிரபு. பெயருக்கேற்றார்போல் சீமான் வீட்டுப் பிள்ளை. ஆடம்பரம் தெரிந்தது அறையில்.

    ஃபஸல். பழங்கலைப் பொருட்கள் நிறைய அடைத்துத் தெரிந்தது அறை. ஹெரால்ட்ரி படிப்பில் இருந்த ஆர்வம் ஏன் என்று புரிந்தது.

    அபிஷேக். ஏழ்மை உடனே தெரிந்தது. அத்துடன் சுவற்றில் தெரிந்த சர்ட்டிஃபிகேட்களில் மேதைமையும்.

    இவர்களில் யார்?

    வேலைக்காரன் டம்ளர்களில் லெமன் டீ கொண்டுவந்து கொடுத்தான். அவனையும் தன்யா தன் ஆழமான பார்வையால் அலசினாள்.

    நாட் ஹியர், தன்யா என்றான் அச்யுத் முழுமையாகத் தேடிவிட்டு.

    ***

    பொருள் வீட்டைவிட்டு வெளியே போயிட்டது என்றாள் தன்யா.

    அப்படின்னா அது கிடைக்காதா? ப்ளீஸ் மேம். எத்தனை நாளானாலும் பரவாயில்லை. எனக்கு அதைத் தேடிக் கொடுத்திடுங்க என்றான் விஜய்.

    தர்ஷினி சிரித்தாள். மிஸ்டர் விஜய், இது நாள் பற்றிய விஷயம் இல்லை. அந்தப் பேனா விலையுயர்ந்ததுன்னு சொல்றீங்க. அது விற்கப்படலாம், அல்லது அடகு வைக்கப்படலாம்...

    அப்படின்னா? என்ன சொல்ல வரீங்க?

    அது மீட்கச் செலவாகலாம்னு சொல்ல வரேன்.

    செலவு பிரச்சனை இல்லை மேடம். எப்படியாவது அதை மீட்டுடுங்க. நான் தினம் வந்து உங்ககிட்ட அப்டேட் கேட்டுக்கறேன் என்றான் விஜய் தன்யா பக்கம் திரும்பி.

    நாட் நெசசரி. உங்க பொருளை உங்களுக்காக விலைகொடுத்து வாங்க எங்களுக்கு அதிகாரம் கொடுக்கறதா இந்த ஸ்டேட்மெண்ட்டில் ஒரு கையெழுத்துப் போட்டுடுங்க. பொருள் கைக்கு வந்ததும் இந்த ஆபீஸிலிருந்து உங்களுக்கு இன்ஃபோ வரும் என்றாள் தன்யா.

    விஜய்யின் முகம் வாடியது. அதற்குள் தர்ஷினி தன்யா குறிப்பிட்டதை ஒரு ஃபார்ம் ஆக ப்ரிண்ட்-அவுட் எடுத்து, விஜய்யிடம் கையெழுத்துக்காக நீட்டினாள்.

    விஜய் தன் பேண்ட் பாக்கெட்டிலும் சட்டைப் பாக்கெட்டிலும் தேடிவிட்டு, தலையில் லேசாய் அடித்துக் கொண்டு, மேஜை மீதிருந்த ஒரு பேனாவை எடுத்துக் கையெழுத்திட்டு நீட்டினான்.

    அவ்வளவு தானே மிஸ் தன்யா? நான் போகலாமா? நாளைக்கு வரேன் என்றான்.

    தன்யா அவனை உற்றுப் பார்த்தாள். மிஸ்டர் விஜய், என்ன காரணத்துக்காக இந்த ட்ராமா? உங்ககிட்டயே பேனாவை வெச்சுக்கிட்டு, உங்க நண்பர்கள், வேலைக்காரன்னு ஏன் பழிபோடறீங்க? என்றாள்.

    விஜய் மின்சாரத்தால் தாக்குண்டான்.

    உங்க வேலைக்காரன் எடுத்திருக்க வழியே இல்லை. உங்க நண்பர்கள்... இவ்வளவு பெரிய திருட்டைப் பண்ணிட்டு, அறையைச் சோதிக்க அனுமதிப்பாங்களா? பாத்ரூம் வழியா வெளியே போட்டிருந்தாலோ, தன் உடைகளில் மறைச்சு வெச்சிருந்தாலோ, டிடெக்டிவ்ஸோ, போலீஸோ வருகிறவரையில் அங்கேயே காத்துட்டிருப்பாங்களா? யாரிடமாவது கொடுத்திருந்தா, அது ட்ரேஸ் பண்ணப்பட்டிடும்னு இதுக்குள்ளே தெரிஞ்சிருக்காதா?

    இதெல்லாம் பெரிசு இல்லை, கையெழுத்துப் போடச் சொன்னதும் அநிச்சையா பேண்ட் பாக்கெட்டுக்குக் கை போனதுமே புரிஞ்சது, உங்க பேனா எங்கே இருக்குன்னு! அப்புறம் அசடுவழிஞ்சு சட்டைப் பாக்கெட்டில் தேடறீங்க! ஏன், ஏன் இதெல்லாம்?

    விஜய் தலைகுனிந்தவாறே பேண்ட் பாக்கெட்டிலிருந்து தங்கப் பேனாவை எடுத்து மேஜை மீது வைத்தான்.

    போகட்டும், வீட்டில் காணாம போன பேனாவை உங்க பாக்கெட்டில் கண்டெடுக்கச் சரியான டிடெக்டிவ் யாருன்னு பரவலா விசாரிச்சிருக்கீங்க போலிருக்கே? அதுவும் அவங்க என்ன சாப்பிடுவாங்க, என்ன குடிப்பாங்க, காப்பியா டீயா லெமன் டீயா என்ற அளவுக்கு? என்றான் தர்மா புன்சிரிப்புடன்.

    இதுவரை அவன் ஒருவன் இருப்பதையே கவனித்திருக்காத விஜய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் தன்யா பக்கமே திரும்பினான்.

    ஓகே, இதுக்குள்ளே நீங்க ஊகிச்சிருப்பீங்க. ஐ லவ் யூ, தன்யா! அதான் இந்தக் கேஸைக் கற்பிச்சு, உங்களோட பழக்கதை ஏற்படுத்திக்கணும்னுதான் உங்களைத் தேடி வந்தேன். அஞ்சே நிமிஷத்தில் என் ப்ளானை உடைச்சுட்டீங்க. ஆனா நான் விட மாட்டேன். மறுபடி வருவேன்! என்றான் விஜய்.

    கோ டு ஹெல்! என்றாள் தன்யா.

    2. வைர நெக்லஸ்

    கபாலீச்வரர் கோவிலிலிருந்து வெளிவந்து காரில் ஏறப்போன சாவித்ரி அலறினாள். என் நெக்லஸ்! காணோம்! ஐயோ, யாரோ திருடிட்டாங்க! - அப்படியே மயக்கமானாள்.

    இதைப் போலீஸில் தெரிவிக்க விருப்பமில்லாத அவள் கணவர் விட்டுத் தொலை என்றார்.

    விடறதா? வைர நெக்லஸ் மாமா! என்றான் அங்கே வந்திருந்த அவர் உறவுக்காரப் பையன் விஜய்.

    பின்ன என்ன செய்யச் சொல்ற? உன் அத்தை தொலைச்சுட்டு வந்து என் தாலியை அறுக்கறா என்று எரிந்துவிழுந்தார் மாமா.

    நானே வருத்தத்தில் இருக்கேன். அபசகுனமா வேற பேசாதீங்க என்று அழுதாள் சாவித்ரி.

    மாமா, சதுரா டிடெக்டிவ் ஏஜன்சியை கூப்பிடுங்க. விஷயம் வெளியே போகாது. பொருளும் கையும் மெய்யுமா கிடைச்சிடும் என்று வற்புறுத்தினான் விஜய்.

    மேட்டர் வெளியே கசிஞ்சதோ, அவங்களையும் உன்னையும் சேர்த்துத் தொலைச்சிடுவேன் என்று மிரட்டிவிட்டு, சதுராவைத் தொலைபேசியில் அழைத்தார்.

    ***

    கோயில் உன் ஏரியா என்று சொல்லி, தர்மாவை விசாரித்துவர அனுப்பினாள் தன்யா. காலையில் போனவன் மாலை ஏழு மணிக்குத்தான் வந்து சேர்ந்தான். நெற்றியில் துலங்கிய திருநீற்றையும் முகத்தில் தெரிந்த சந்தோஷக் களையையும் பார்த்துவிட்டு இவன் ஏதாவது விசாரித்திருப்பானா? என்றே சந்தேகம் வந்துவிட்டது தன்யாவுக்கும் தர்ஷினிக்கும்.

    நல்ல தரிசனம் ஆச்சா? தன்யாவின் பேச்சிலிருக்கும் கிண்டல் புரியவே செய்தது தர்மாவுக்கு.

    தரிசனமும் ஆச்சு, விசாரணையும் ஆச்சு என்றான் ரோஷமாக. நல்ல வேளையா சாவித்ரி அம்மாவை அங்கே எல்லாருக்கும் நினைவிருக்கு. அவங்களுக்கு அர்ச்சனைத் தட்டு விற்றவன் அவங்க திரும்பி வரும்போது இல்லை, உடனே கடையை விட்டுப் போயிட்டான். எங்கே போனேன்னு கேட்டா, தம்மடிக்கப் போனேன்னு சொல்றான் தர்மா

    Enjoying the preview?
    Page 1 of 1