Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aruvikarai Koyil
Aruvikarai Koyil
Aruvikarai Koyil
Ebook273 pages1 hour

Aruvikarai Koyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கொடுந்தொற்று ஒன்று பாண்டிய நாட்டில் பரவ, அதனை முறியடிக்க முயல்கிறான் மன்னன் ஜடாவர்மன். இந்த இரண்டாயிரத்து இருபத்தொன்றில் ஒரு பழமையான கோயிலைக் கண்டுபிடிக்க முயல்கிறான் ஆராய்ச்சியாளன் வசந்த். இந்த இரு காலகட்டங்களும் சந்திக்கும் புள்ளி - அருவிக்கரைக் கோயில். அட, நம் அபிமான துப்பறிவாளர்கள் தர்மா, தன்யா, தர்ஷினி கூட இங்கே இருக்கிறார்களே!

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580111409957
Aruvikarai Koyil

Read more from Sairenu Shankar

Related to Aruvikarai Koyil

Related ebooks

Reviews for Aruvikarai Koyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aruvikarai Koyil - Sairenu Shankar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அருவிக்கரைக் கோயில்

    Aruvikarai Koyil

    Author:

    சாய்ரேணு சங்கர்

    Sairenu Shankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அன்று…

    2. இன்று…

    3. அன்று…

    4. இன்று…

    5. அன்று…

    6. இன்று…

    7. அன்று…

    8. இன்று…

    9. அன்று…

    10. இன்று…

    11. அன்று…

    12. இன்று…

    13. அன்று…

    14. இன்று…

    15. அன்று…

    16. இன்று…

    17. அன்று…

    18. இன்று…

    19. அன்று…

    20. இன்று…

    21. அன்று…

    22. இன்று…

    23. அன்று…

    24. இன்று…

    25. அன்று…

    26. இன்று…

    27. அன்று…

    28. இன்று…

    29. அன்று…

    30. இன்று…

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கொடுந்தொற்று ஒன்று பாண்டிய நாட்டில் பரவ, அதனை முறியடிக்க முயல்கிறான் மன்னன் ஜடாவர்மன். இந்த இரண்டாயிரத்து இருபத்தொன்றில் ஒரு பழமையான கோயிலைக் கண்டுபிடிக்க முயல்கிறான் ஆராய்ச்சியாளன் வசந்த். இந்த இரு காலகட்டங்களும் சந்திக்கும் புள்ளி - அருவிக்கரைக் கோயில். அட, நம் அபிமான துப்பறிவாளர்கள் தர்மா, தன்யா, தர்ஷினி கூட இங்கே இருக்கிறார்களே!

    1. அன்று…

    அரண்மனையெங்கும் விளக்குகள் மின்ன, நிலமகள் அணிந்திருந்த தங்க நெற்றிப்பட்டம் போல் ஒளிர்ந்தது மதுரை மாநகரின் அரண்மனை.

    உனக்கு நான் சளைத்தவளா? நீ மண்ணில் மின்னினால் நான் வானில் மின்னுவேன் என்று சவால்விட்டுத் தாரைகள் புடைசூழத் தங்கவொளி வீசியது முழுநிலா.

    வைகைக் கரையெங்கும் ஜனத்திரள். குழந்தைகள். குடும்பத்தினர். காதலர்கள். முதியோர்கள். வயது வேறுபாடின்றி எல்லோரும் நிலவை ரசிக்க ஆற்றங்கரைக்கு வந்திருந்தார்கள். ஆங்காங்கு அந்தத் தூங்கா நகரமெங்கும் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதை அவ்வப்போது ஓங்கி ஒலித்த இசைக்கருவிகளின் முழக்கம் உணர்த்திக் கொண்டிருந்தது.

    இருளைத் தோற்கடித்துக் கொண்டு மதுரை மாநகர் ஜகஜ்ஜோதியாகத் தெரிய, மக்கள் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சியின் ஒளி தெரிந்தது. இருளில்லாத அந்த இரவின் இருள் முழுவதும் ஒரே ஒரு முகத்தில் குடியேறியிருந்தது.

    ஆம், அரண்மனை மேலுப்பரிகையில் நடைபோட்டுக் கொண்டிருந்த பாண்டிய மன்னனின் முகத்திலும் மனத்திலும்தான் இருள் நிரம்பியிருந்தது.

    நிம்மதியின்றி நடையிட்டுக் கொண்டிருந்த மன்னன் வேறு ஒருவர் அங்கு வேகவேகமாய் வரும் அரவம் கேட்டு நின்றான்.

    பாண்டியர் புகழ் வாழ்க! பாண்டிய மன்னர் அறமும் ஆயுளும் ஓங்குக! வணக்கம் மன்னவா! என்றவாறே அருகில் வந்து வணங்கி நின்றார் தலைமை அமைச்சர் ஸ்ரீவல்லபர்.

    வணக்கம். வாருங்கள் அமைச்சரே! என்று வரவேற்ற பாண்டிய மன்னன் மீண்டும் நடையிடத் தொடங்கினான்.

    அமைச்சர் பொறுமையாக, அமைதியாக நின்றிருந்தார்.

    சிறிதுநேரத்தில் அமைச்சரே! ஒரு முக்கியக் காரணத்திற்காகத்தான் உம்மை அழைத்தேன் என்றான் பாண்டியன்.

    அமைச்சர் புன்சிரித்தார். பௌர்ணமி இரவு. பாண்டிய மன்னர் தன் மனைவிகளோடு களிக்காமல், கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு, மேல் உப்பரிகையில் நிம்மதியின்றி நடந்துகொண்டு, தன் அமைச்சரையும் அழைக்கிறார் என்றால் விஷயம் முக்கியமானது என்றே கருதுகிறேன், அது என்னவென்று தெரியாதபோதும் என்றார்.

    பாண்டியனின் கண்கள் இந்தக் கேலியில் சிவந்தன. பிறகு மெதுவே அமைதியாயின.

    சிவபாத சித்தரை இன்று சென்று கண்டிருந்தேன். அவர் கூறிய விஷயங்கள் என்னைக் கலக்கிவிட்டன. அதனாலேயே தெளிவின்றி வார்த்தைகளை உரைக்கிறேன். அமைச்சர் மன்னிக்க வேண்டும் என்றான் பாண்டிய மன்னன்.

    அமைச்சர் நடுநடுங்கிக் கைகூப்பினார். "மன்னவா! இளம் வயதில் தங்களை எடுத்து வளர்த்தவன் என்ற உரிமையைச் சில நேரம் என்னை அறியாது பாராட்டிவிடுகிறேன். மன்னர் அதற்காக என்மீது கோபப்படுதலும் தண்டித்தலும் எது செய்தாலும் நியாயமே. ஆயின் மன்னவரின் பொறுமையே என்னைக் காயப்படுத்திவிடுகிறது. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற பொய்யாமொழியின் உருவமே மன்னர்தாம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

    பாண்டிய மன்னனும் நெகிழ்ந்தான். இறுகியிருந்த கட்டுறுதியான அவன் தேகம் சற்றுத் தளர்ந்தது. அமைச்சர் குற்றம் செய்திருந்தாலன்றோ தண்டிப்பதும் மன்னிப்பதும்? என் தந்தைக்குச் சமானர். அறிவுரைப்பதற்கும் இடித்துரைப்பதற்கும் தங்களுக்குச் சகல உரிமையும் உள்ளது என்றவன் அமைச்சரே! இந்தப் பேச்சுகளெல்லாம் இருக்கட்டும். நான் உங்களை அழைத்த காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். நேரங்கடத்துவது நல்லதல்ல. தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து அதிகரிக்கிறது என்றான்.

    மன்னர் இவ்வளவு கவலைப்படுவதைக் கண்டால்… தேசத்திற்கு ஏதோ பெரிய ஆபத்து வரப் போவதாகச் சிவபாத சித்தர் கூறினார் என்று ஊகிக்கிறேன்…

    பாண்டியன் சிறிதுநேரம் மௌனமாகவிருந்தான். அமைச்சர் அவன் பேசுவதற்காகக் காத்திருந்தார்.

    ஒரு பெருமூச்சு விட்டு, மன்னன் பேசத் தொடங்கினான்.

    அமைச்சரே! இந்த ஜடாவர்மப் பாண்டியன் பாலகனாய் இருந்தபோதே பட்டமேற்றேன். நான் மகுடம் தரிக்கையில் எத்தனைப் பிரச்சனைகள் இருந்தது என்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள். அவைகள் யாவும் ஈசனுடைய அருளாலும் சிவபாத சித்தரின் ஆசியாலும் தங்களைப் போன்ற பெரியோர்களின் வழிகாட்டுதலாலும் விலகிவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை என் செங்கோல் வளையாதிருக்க வேண்டும், பாண்டிய தேசத்திற்கு நலமும் வளமும் மிக்கதான ஆட்சியை நல்க வேண்டும், சைவ நெறி சிறக்க ஆள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்…

    இவையெல்லாம் நான் நன்கறிந்தவைதானே, அரசே! ஏன், பாண்டியநாட்டின் சிறு குழந்தையைக் கேட்டாலும் இந்த உண்மைகளை எடுத்தியம்புமே? என்றார் ஸ்ரீவல்லபர் குழம்பியவராக.

    சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்கிறது. வருகின்ற சார்வரி ஆண்டு மிகப் பெரிய சோதனை ஒன்றைக் கூடவே கொண்டு வருகிறது என்றார் சித்தர் சுவாமிகள்… ஸ்ரீவல்லபர் கூறியதை கவனிக்காதவனாய் நிலவை வெறித்தவாறே உரைத்தான் ஜடாவர்மப் பாண்டியன்.

    என்ன சோதனையோ? படையெடுப்புகள் ஏதேனும்… என்று இழுத்தார் அமைச்சர்.

    ஆம், படையெடுப்புதான். இந்த நானிலமே இதுவரை கண்டும் கேட்டுமிராத பயங்கரமான படையெடுப்பு!

    என்ன சொல்கிறீர்கள் மன்னவா? சேர சோழர்கள் சேர்ந்து படையெடுத்து வரப் போகிறார்களா? வடநாடு ஏதேனும் தென்னகத்தை நோக்கிப் படையெடுத்து வரப் போகிறதா? மேற்கிலிருந்து யவனர்கள் போருக்கு வருவார்களோ? அவர்கள் வணிகத்தை மட்டும் விரும்பி வந்திருப்பதாகச் சொன்னார்களே? அல்லது கிழக்கிலிருந்து தட்டைமூக்குச் சாதியர் போருக்கு வரப் போகிறார்களா?...

    ஜடாவர்மப் பாண்டியன் மென்மையாக, சோகமாகச் சிரித்தான்.

    இவர்களுடைய படையெடுப்புகள் கண்ணுக்குத் தெரியுமே, அமைச்சர் பெருமானே! கண்களுக்குப் புலப்படாத ஒரு படையெடுப்பு நிகழப் போகிறது! இது பல்லாண்டுகளுக்கு நீடிக்கலாம் என்றும் அறிகிறேன்! மகாபாரதப் போரைவிடக் கொடுமையாகவும் வேகமாகவும் இந்தப் படையெடுப்பு அழிவினை ஏற்படுத்தலாம்! மெலிதாக ஆரம்பித்த மன்னனின் குரல் ஆவேசத்தில் உயர்ந்துகொண்டே போனது.

    இச்சிறுமதியேனுக்குப் புரிய வேண்டி மன்னர் சற்று விளக்கமாகப் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்ரீவல்லபர்.

    வருகிற ஆண்டில் ஒரு புதுவகை நோய்க்கிருமி இந்தப் பூமியைத் தாக்கவிருக்கிறதாம். அதன் தாக்கம் பாரதத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டாலும், முக்கியமாகப் பாண்டிய நாட்டில்தான் அதிகமாகக் காணப்படுமாம்!

    என்ன சொல்கிறீர்கள் மன்னா? ஏன் நோய்த்தாக்கம் பாண்டிய நாட்டில் அதிகமாக இருக்க வேண்டும்?

    அமைச்சர் பெருமானே! பாரதத்தின் மிக அதிகமான போக்குவரத்துடைய துறைமுகம் நம் கொற்கைத் துறைமுகம். மிக அதிகமாக வடநாடுகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் வணிகர்கள் புழங்கும் தலைநகர் நம் மதுரை. தினந்தோறும் சேர, சோழ, நடு நாடுகளிலிருந்தும், வட நாடுகளிலிருந்தும், ஏன் அயல் நாடுகளிலிருந்தும்கூட, அரசாங்கத் தூதர்களும், பக்தர்களும், உல்லாசப் பயணிகளும் நம் பாண்டிய நாட்டிற்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள்… என்றான் ஜடாவர்மன் கவலையாய்.

    அப்படியானால் இந்த நோய், தொற்று வகையைச் சேர்ந்ததா? வெளிநாடுகளிலிருந்து இங்கே பரவப் போகிறதா? என்று கேட்டார் அமைச்சர்.

    ஜடாவர்மப் பாண்டியன் பெருமூச்செறிந்தான்.

    கலங்காதீர்கள் மன்னவா! நம் மருத்துவக் குழுக்களைத் தயார்நிலையில் வைப்போம். ஆதுரசாலைகளில் எல்லாம் மருந்துகளைச் சேமித்து வைத்துக் கொள்வோம். எப்போதுமே ஆபத்துகளைக் கண்டு அஞ்சுவதைவிட, தைரியமாக எதிர்கொள்வதே நல்லது. சிவபாத சித்தருக்கு நன்றி! வரப்போகும் ஆபத்து முன்பே தெரிந்துவிட்டது. இனி நாம் தயாராக இருக்கவேண்டியதே அவசியம் என்றார் அமைச்சர் ஆறுதலாக.

    ஜடாவர்மனிடமிருந்து மற்றொரு பெருமூச்சே பிறந்தது. நிலவை வெறித்தவாறே யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன்.

    அரசே… என்ற ஸ்ரீவல்லபரின் அழைப்பில் கலைந்த பாண்டியன் அமைச்சரே! தாங்கள் உண்மை நிலையை அறிய மாட்டீர்கள். இப்போது வரவிருக்கும் நோய்த்தொற்று மருத்துவர்களுக்கு அடங்கக்கூடியதல்ல! தற்போதிருக்கும் நம் மருத்துவ ஞானத்தில் இவ்வகைத் தொற்றைக் குணப்படுத்த மருந்துகளே இல்லை! என்று கூறினான்.

    மன்னவா! என்று அலறினார் அமைச்சர். தாங்கள் கூறுவதைக் கேட்டால்… உலகம் அழியும் யுகப்ரளயம் போன்ற ஆபத்தாகவன்றோ காணுகிறது!

    ஜடாவர்மன் சோகத்துடன் புன்னகைத்தான். பௌர்ணமி நாளன்று நான் மனைவியரோடு களிக்காமல், கலைகளில் ரமிக்காமல் இங்கே நடைபோட்டுக் கொண்டு, என் அமைச்சரையும் அழைத்ததற்கான காரணம் இப்போதாவது முக்கியமென்று தோன்றுகிறதா அமைச்சரே? என்ன விஷயம் என்று தெரிகிறதா? என்றான். அவன் குரலில் கேலியில்லை, குத்திக்காட்டுதலுமில்லை. வருத்தமே நிறைந்திருந்தது.

    அமைச்சர் ஜடாவர்மனை நெருங்கினார். ஜடாவர்மா! இதற்கு என்ன செய்யலாம் என்று யோசி. பழுத்த அனுபவசாலிகளான மருத்துவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். நோய்த்தன்மையை அவர்களிடம் விளக்கினால் அவர்கள் மருந்து கண்டுபிடிக்கக் கூடும். நீ வீரன். இந்தப் பெருமைமிகு தேசத்தின் தலைவன். துன்பங்கள் வரும்போது துவண்டுவிடக் கூடாது. அவற்றை எதிர்கொண்டு வெல்ல என்ன வழி என்று பார்க்கக் வேண்டும் என்றார் ஆதரவாக.

    தாங்கள் கற்றுத்தந்த முக்கியப் பாடமாயிற்றே இது, மாமா! என் கவலையெல்லாம் வரப்போகும் ஆபத்தைக் குறித்தல்ல, அதனை வெல்லும் வழியைக் குறித்துத்தான் என்றான் ஜடாவர்மன்.

    என்ன சொல்கிறாய் குழந்தாய்?

    ஆம் மாமா. சிவபாத சித்தரிடம் இந்த ஆபத்தை வெல்லும் வழியுண்டா என்று கேட்கவே செய்தேன். அவர் கூறியது என்னை கவலைப்பட வைத்தது ஒருபுறமிருந்தாலும், அதீத வியப்பிலாழ்த்திவிட்டதும் உண்மை!

    அது என்ன அத்தகைய வியப்பைத் தரும் வழி?

    ஜடாவர்மன் கூறிய பதிலைக் கேட்டதும் ஸ்ரீவல்லபரும் பெரும் அதிர்ச்சியடைந்து வேந்தே! என்று கூவினார்.

    2. இன்று…

    வசந்த்! ஆச்சரியத்துடன் கூவினாள் ராஜி. வர குறைஞ்சது பத்து நாள் ஆகும்னு சொன்னே! ரெண்டே நாளில் வந்துட்டியே! என்ன, தேடிப் போனது கிடைச்சதா? உற்சாக பலூனாய் வசந்தை நெருங்கிய ராஜி அவன் முகத்தைப் பார்த்ததும் சட்டென்று சுருங்கிப் போனாள். சரி, உள்ளே வா என்றாள்.

    உடலெல்லாம் புழுதி கப்பி, சுண்டிப் போன முகத்துடன் காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தான் வசந்த். ராஜியிடம் எதுவும் பேசாமல் நேராகத் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

    ராஜி? 28 வயது. அசர அடிக்கிற அழகு இல்லையென்றாலும் பாந்தமாக, குடும்பப்பாங்காக இருந்தாள். எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படித்துவிட்டுச் சில வருடங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு வருடம் முன்பு வசந்தோடு சேர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவுடனே ராஜினாமாச் செய்துவிட்டாள்.

    வசந்த்? 29 வயது. ஆர்க்கிடெக்ட். அப்பாவுடைய கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸிலேயே பார்ட்னராக இருக்கிறான். பணத்திற்குக் கவலையில்லாத வாழ்க்கை. இப்போது ஆறுமாத காலமாக ஆலயங்களில் கட்டுமானம் மற்றும் பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து வருகிறான்.

    வசந்த் முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு வந்தபோது ராஜி சுடச்சுடக் காப்பியும், ட்ரேயில் ஸ்னாக்ஸும் தயாராக வைத்திருந்தாள்.

    ஒரு க்ரீம் கேக்கை மென்று தின்றுவிட்டு மிக்ஸரை அள்ளி வாயில் போட்டுக் கொண்டபோது வசந்தின் முகத்தில் தெளிவு வந்திருந்தது. காப்பிக் கோப்பையை ஏந்திக் கொண்டவன் வாயேன் ராஜி, ஸிட்-அவுட்டில் உட்கார்ந்து காஃபியைக் குடிப்போம். கெட் அ கப் என்றான்.

    ராஜி சோகையாகப் புன்னகைத்துத் தானும் சிறிய கப் ஒன்றில் காப்பியை ஊற்றிக் கொண்டு அவனைத் தொடர்ந்தாள்.

    ராஜபாளையத்தில் அவர்கள் வீட்டின் முன்னால் ஒரு ஸிட்-அவுட் உண்டெனினும், வீட்டுக்குப் பின்னாலிருக்கும் ஸிட்-அவுட் பெரியது. பின் கேட் வழியே பிள்ளையார் கோயில் தெரியும். காற்றும் நன்றாக வரும். எனவே வசந்தும் ராஜியும் அங்குதான் அமருவார்கள்.

    சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. பிறகு ராஜியே மௌனத்தைக் கலைத்தாள். வெல், வசந்த்?

    வெல், டியர்… என்று இழுத்தான் வசந்த். இலஞ்சிக் குமரன் கோயிலை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்துவிட்டோம். நாம் தேடுவது கிடைக்கல. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் அங்கே போகணும்.

    வசந்த், ஒண்ணு கேட்கலாமா?

    ராஜி! நீ பலமுறை என்கிட்ட இப்படி ஆரம்பிச்சு ஒரே கேள்வியைக் கேட்டிட்டிருக்க. நானும் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டேன். நமக்குக் கிடைச்ச தகவலுக்கு எல்லா விதத்திலும் பொருந்திப் போவது இந்தக் கோயில்தான்!

    வசந்த்! நம்ம தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில் இருக்கு…

    ப்ளீஸ்! நம்மகிட்ட இருக்கற குறிப்புகளைப் பாரு. தமிழ்நாட்டிலுள்ள ஆலயம்னு பொதுவா சொல்லல. பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த ஆலயம்னு தெளிவா சொல்லியிருக்காங்க. ‘இளங்குமரனார் ஆலயம்’ முருகர் கோயில். விசேஷமாய் நாம பார்க்கிற இந்த ஆலயத்திற்குக் குமரன் கோயில்னே பேரு. மலைகள் சூழப்பட்ட ஆலயம்னு அடுத்த குறிப்பு. குற்றால மலையடிவாரத்தில் அமைஞ்சிருக்கு. ஆலயத்திற்கு இடப்புறம் ஆறு பிரவகிக்கிறதுன்னு அடுத்த குறிப்பு. சித்ரா நதி ஆலயத்திற்கு இடப்பக்கம் ஓடுது. அருகே சிவனார் துலங்க என்று சொல்லப்பட்டதற்கு ஏற்ப, இருவாலுக நாதர் கோயிலிலேயே குடிகொண்டிருக்கார். திருமணக் கோலந்தனில் இருமாது இலங்க அருள்செய் மணவாளா, இருமாதுங்கறது வள்ளி தெய்வானைன்னு குழந்தைகூடச் சொல்லிடும். இந்தக் கோயிலில் கருவறையிலேயே வள்ளி தேவானையோட முருகர் காட்சி தரார். சூழும் சிவகடாக்ஷ பூமிங்கறதைப் பார். குற்றாலத்தைவிடச் சிறந்த சிவக்ஷேத்திரம் உண்டா?

    அதெல்லாம் சரிதான் வசந்த், ‘ஐவர் வணங்கும் வரதராஜ பெருமாளே’ங்கிற குறிப்பு…

    அதைப்பற்றியும் ஆயிரந்தரம் சொல்லிட்டேன் வசந்தின் குரல் உயர்ந்தது. பிரம்மன், மும்முனிவர்களான காசியபர், துர்வாசர், கபிலர், அப்புறம் அகத்தியர் ஆகிய ஐவர் வணங்கிய மூர்த்தின்னு அர்த்தம். வரதராஜ குமரன் என்பது இவர் சிறப்புப் பெயர். முருகனைப் பெருமாள்னு அழைக்கிற வழக்கமுண்டு. அருணகிரிநாதர்…

    நாம் எண்ணுகிற காலத்திற்கு மிகவும் பிற்பட்டவர்!

    நடைமுறையில் உள்ளதைத்தானே அவரும் எழுதியிருக்கணும்? ஏன் இப்படி எரிச்சல் மூட்டற?

    சுதாரித்துக் கொண்டாள் ராஜி. ஓகே வசந்த். யூ ஆர் த எக்ஸ்பர்ட். இந்தத் தடவை இல்லேன்னாலும் அடுத்த முறை நாம தேடறது கிடைச்சிடும், பாரேன். அடுத்த முறை நானும் வரட்டுமா? என்று கேட்டாள்.

    நீ எதுக்கு… என்று ஆரம்பித்த வசந்தின் பேச்சு ராஜி! ராஜி! என்ற அழைப்பைக் கேட்டுத் தடைபட்டது.

    யாரது வாசல்ல? என்று குரல்மாறக் கேட்டான் வசந்த்.

    உங்க ஃப்ரெண்ட் வம்சீதரன் மாதிரி இருக்கே! என்றாள் ராஜி சற்று வியப்புடன்.

    ஏன், இதிலென்ன ஆச்சரியம்? அவன் அடிக்கடி இங்கே வந்து போகிறவன்தானே? என்றவாறே எழுந்தான் வசந்த்.

    மனைவியைச் சந்தேகிக்கிற

    Enjoying the preview?
    Page 1 of 1