Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbai Thedi...
Anbai Thedi...
Anbai Thedi...
Ebook143 pages54 minutes

Anbai Thedi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனது இரண்டு மகன்களும் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் மொத்த சொத்தையும் அவர்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு மூத்தவனுடன் வாழ்கிறார் வெள்ளிங்கிரி. மாமனார், மற்றும் மாமியார் பேச்சைக் கேட்டு மனம் கெட்டு, தந்தையைத் துரத்தி விடுகிறான் மூத்தவன்.
இளைய மகனிடம் வெள்ளிங்கிரி தஞ்சம் புக, அவனும் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தந்தையை துரத்தி விடுகிறன். அனாதையாய்த் தெருத் தெருவாய் அலைந்து விட்டு, அந்த ஊரை விட்டே போய் விடும் எண்ணத்தில் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கிருந்த பெஞ்சில் அமர்கிறார். அங்கே, ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஒரு வயதான பெண்மணியைக் காப்பாற்றுகிறார். அவளும் தன்னைப் போலவே மகனால் துரத்தி விடப்பட்டவள் என்பதையறிந்து அவள் மீது இரக்கம் கொள்கிறாள்.
இருவரும் “இவர்களுக்கு பயந்து நாம் ஏன் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும்?..இங்கேயே ஒருவருக்கொருவர் ஆதரவாய் என்று முடிவெடுத்து, விகல்பமில்லாத அன்போடு, ஊருக்கு வெளியே ஒரு குடிசை போட்டு வாழ்கின்றனர்.
விஷயம் கேள்விப்பட்டு பெருத்த அவமானத்திற்குள்ளான வெள்ளிங்கிரியின் மகன்கள் கோபாவேஷமாய் வந்து, அவர் இல்லாத போது அந்தப் பெண்மணியைத் தாக்கி விட்டு, குடிசையையும் சிதைத்து விட்டுச் செல்கின்றனர்.
குடிசைக்குத் திரும்பி வந்த வெள்ளிங்கிரி அந்தப் பெண்மணியைக் கண்டாரா?...
மனதை நெகிழச் செய்யும் அந்த முடிவு இந்த நாவலின் சிறப்பு. வாசியுங்கள்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130005011
Anbai Thedi...

Read more from Mukil Dinakaran

Related to Anbai Thedi...

Related ebooks

Reviews for Anbai Thedi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbai Thedi... - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    அன்பைத் தேடி...

    Anbai Thedi…

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    அன்றைய விடியல் மற்றவர்களுக்கு எப்படியோ... குமரேசனைப் பொருத்தமட்டில் படு மோசமான விடியல். இல்லாவிட்டால் இப்படி எக்கச்சக்கமாய் சிக்கியிருப்பானா?... இண்டர்வியூ அறைக்குள் நடுங்கியபடி அமர்ந்திருக்கும் இளைஞனை அதிரடி கேள்விகளால் மிரள வைக்கும் அதிகாரிகளைப் போல் அவனைச் சுற்றி நின்று கொண்டு அதட்டலாய்க் கேள்விகள் கேட்டு அவனைக் கூனிக் குறுக வைத்துக் கொண்டிருந்தனர் அவனது மனைவி வேணியும், அவளைப் பெற்றவர்களும்.

    வேணியின் பேச்சு தேளின் கொடுக்கு. பேசும் போது அவள் காட்டும் அபிநயங்கள் அருவருப்பின் உச்சங்கள்.

    தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஏண்டா ஒரு பணக்காரக் குடும்பத்துக்கு வீட்டோட மாப்பிள்ளையா வந்தோம்? என்று நினைத்து வருந்தினான். ஒரு மனிதனின் உயர்வும் தாழ்வும் அவனுடைய செயலின் வாயிலாக மட்டுமே வெளிப்படும் என்றும், அச்செயலின் மூலவேர் மனதில் தோன்றும் எண்ணங்களாலேயே அமையும் என்றும், பெரும்பாலும் அந்த எண்ணங்கள் சூழ்நிலைகளின் தாக்கத்தாலேயே அமைகின்றன என்றும் பெரியோர் கூறுவர். அப்படியொரு சூழ்நிலை அமையப் போகத்தான் குமரேசனும் இந்த வீட்டோட மாப்பிள்ளை என்கிற விகாரமான கோட்பாட்டுக்குள் மூழ்கச் சம்மதித்தான்.

    அட... இந்த மனுஷனுக்குத் தான் ஒரு சூடு... சொரணை எதுவும் இல்லை!... அந்தப் பெரிய மனுஷனுக்காவது இருக்க வேண்டாமா?... இப்படி வருஷக்கணக்குல சம்மந்தி வீட்டுல உட்கார்ந்திட்டிருக்கோமே... அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?ன்னு ஒரு அச்சம் வேண்டாமா? குமரேசனின் மாமியார் எச்சில் தெறிக்கக் கத்தினாள்.

    அது சரி!... மூணு நேரமும் மூக்கு பிடிக்க சாப்பாடும்... ஜாலியா உட்கார்ந்து பார்க்கறதுக்கு டி.வி.யும்... ஜம்முனு படுத்துத் தூங்க வெல்வெட் சோபாவும்... எங்கே கிடைக்கும்... இந்தக் கிழவனுக்கு?... இங்க இலவசமாக் கிடைக்குதல்ல?... அதனாலதான் இங்க பர்மனெண்ட்டா டேரா போட்டுட்டான்! இது குமரேசனின் மாமனார்.

    அவர்கள் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பது தன் தந்தையைத்தான் என்பது தெரிந்தும் குமரேசனால் ஆத்திரப் பட முடியவில்லை!... கோபப்பட நாதியில்லை!... எதிர்த்துக் கேட்க தகுதியில்லை!... காரணம்?... அவன் அந்தப் பணக்காரக் குடும்பத்தில் அண்டிப் பிழைக்க வந்த அற்ப ஜீவன்... அதாவது வீட்டோட மாப்பிள்ளை!... அவன் அந்த வீட்டிற்குள் நுழையும் போதே தன்னிடமிருந்த சூடு... சொரணை... வெட்கம்... மானம்... ரோஷம்... போன்றவற்றைக் கழற்றி எறிந்து விட்டுத்தான் வந்திருந்தான்.

    அப்போதும் ஒரு சில நண்பர்கள் சொன்னர்கள், வேண்டாம்டா... வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணக்கார வீட்டுக்கு மாப்பிள்ளையா போயிடாதே... அதிலும் குறிப்பா வீட்டு மாப்பிள்ளையா போயிடாதே... அவங்க உன்னை மதிக்க மாட்டாங்க!... சம்பளமில்லாத வேலைக்காரனா வெச்சுக்கிட்டு... ரொம்பக் கேவலமா டிரீட் பண்ணுவாங்க!ன்னு

    குமரேசனின் கெட்ட நேரம் அதைக் கேட்காமல் போனான்.

    குமரேசனை நெருங்கி, அவனது சட்டைக் காலரைப் பிடித்திழுத்து தன் பக்கம் திருப்பிய அவன் மனைவி வேணி, த பாருங்க!... அம்மாவும்... அப்பாவும் சொல்லிட்டாங்க... இனிமே உங்கப்பா இங்க இருக்கக்கூடாது!... இப்பவே... இந்த நிமிஷமே வெளிய போயாகணும்! விழிகளை உருட்டிக் கொண்டு கர்ண கடூரமாய்ச் சொன்னாள்.

    எப்படி வேணி?... அவருகிட்ட நேரடியா எப்படிச் சொல்ல முடியும்? அவன் தயங்க,

    உங்களுக்கு பயமாயிருந்தா சொல்லுங்க!... நான் போய்ச் சொல்லுறேன் என்றபடி அவள் அங்கிருந்து நகர முற்பட,

    அவசரமாய் அவளைத் தடுத்தான் குமரேசன்.

    அவனுக்குத் தெரியும், தன் மனைவி வேணி சற்றும் மரியாதை தெரியாத பெண்னென்றும், அவளை தன் தந்தையுடன் பேச விட்டால் மிகவும் ரசாபாசமாகிவிடும் என்றும்.

    இல்லை வேணி... நானே சொல்லிடறேன் சொல்லிவிட்டு அவன் அங்கேயே நிற்க,

    ம்... ம்... சொல்றேன்ன்னு சொல்லிட்டு இங்கியே நின்னுட்டிருந்தா எப்படி?... போங்க... உங்கப்பா ஹால்லதான் உட்கார்ந்திட்டிருக்கார்... போய்ச் சொல்லுங்க! விரட்டினாள் வேணி.

    யோசிச்சுப் பாரு வேணி!... தானுண்டு... தன் வேலையுண்டுன்னு கிராமத்தோட இருந்த அப்பாவை, எதுக்கப்பா நீங்க இங்க தனியா இருந்து கஷ்டப்படறீங்க?... பேசாம இந்தக் கிராமத்து வீட்டை வித்துட்டு... எங்க கூடவே வந்திடுங்கப்பா!... மாமா வீடுதான் கடலாட்டம் இருக்கல்ல?... அங்க உங்களுக்கும் ஒரு இடம் இல்லாமலா போய்டும்? என்று சொல்லி விட்டு குமரேசன் வேணியைப் பார்க்க,

    வேணியின் மூளை வேறு விதமாய்த் திட்டமிட்டது. இப்ப சரின்னு சொன்னாத்தான் இந்தப் பெருசு இந்த கிராமத்து வீட்டை விற்க சம்மதிக்கும்... அப்புறம் பேசற மாதிரி பேசி... வித்த பணத்தயெல்லாம் நம்ம புருஷன் கைக்கு வர்ற மாதிரிப் பண்ணிட்டு... அதுக்கப்புறம் இதை தொலைச்சுத் தலை முழுகிடலாம்! தன் நடிப்புத் திறமையைக் காட்ட ஆரம்பித்தாள்.

    ஆமாம் மாமா... எங்களோடவே வந்திடுங்க மாமா!... நீங்க எங்களோட வந்து இருந்தா நான் மட்டுமல்ல... எங்க அப்பாவும்... அம்மாவும் கூட ரொம்ப சந்தோசப்படுவாங்க மாமா!... என்றாள்.

    ஆரம்ப காலத்தில், தங்கள் எண்ணம் நிறைவேறும் வரை பெரியவர் மீதி பீறியெழும் வெறுப்பை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருந்த சம்பந்திகளும்... மருமகளும், தங்கள் திட்டம் வெற்றியடைந்ததும், போகப் போக அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக் காட்டத் துவங்க குமரேசனின் தந்தை வெள்ளிங்கிரி நொந்து போனார்.

    நானா இங்க வந்து உங்க கூட இருக்கறேன்னு கேட்டேன்... இவங்க ரெண்டு பேரும்தான் வந்து கெஞ்சினாங்க!... சரி... சிறுசுக ஆசைப்படுதே?ன்னு வந்தேன்... ஆனா இதுக இப்பக் கொஞ்சம் கொஞ்சமாய் நிறம் மாறுதுகளே?"

    ஆனாலும், மகனை எண்ணி தன் வேதனையை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதி காத்தார். ஒரு கட்டத்தில் மருமகள் அவரை நேரடியாகவே அவமதிக்கத் துவங்க, மனம் தாளாமல் மகனிடம் குமுறினார்.

    தன் நிலைமையை தந்தையிடம் எடுத்துச் சொல்லி, அப்பா என்னைய மன்னிச்சிடுங்கப்பா!... கிராமத்துல நிம்மதியாயிருந்த உங்களை நாந்தான் இங்க கூட்டியாந்து இப்படியெல்லாம் அவமதிப்புக்கு ஆளாக்கிட்டேன்!... இவங்கெல்லாம் நல்லவங்கன்னு நெனச்சு நான் ஏமாந்துட்டேன்!... கண் கலங்கினான் குமரேசன்.

    மகன் கண் கலங்குவதைத் தாங்காத வெள்ளிங்கிரி, சேச்சே!... என்னப்பா நீ?... எதுக்காக இப்பக் கண் கலங்குறே?... அப்படியென்ன ஆகிப் போச்சு இப்ப?... வாழ்க்கைன்னா எல்லாமும்தான் இருக்கும்!... அதே மாதிரி மனுஷங்கன்னா எப்பவும் ஒரே மாதிரியாகவா இருப்பாங்க?... ஒரு சமயம் வெறுப்பாப் பேசறவங்க... மறு சமயம் சந்தோஷமாப் பேசலாம்!... இப்ப சம்மந்திக என்னைய அவமானப் படுத்தறாங்கன்னா... அதுக்காக நான் அவங்க மேல கோவிச்சுக்கறதுல அர்த்தமேயில்லையப்பா!... பாவம்... அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ?... நெஞ்சில் வாங்கிய காயங்கள் வலித்த போதும் அதை மகன் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக பூசி மெழுகினார் தந்தை.

    பெருந்தன்மையின் மொத்த உருவமாய் இருந்த அந்த தந்தையை, வேண்டாங்கப்பா... இனிமே நீங்க இங்க இருக்க வேண்டாம்... போயிடுங்கப்பா!... அவங்க உங்களை அவமானப்படுத்தறதை என்னால கண் கொண்டு பார்க்க முடியலைப்பா என்று எப்படிச் சொல்வது?"

    என்ன இன்னும் போகாம நின்னுட்டிருக்கீங்க வேணி அவன் தோளைத் தொட்டுத் தள்ளினாள்.

    குமரேசனின்

    Enjoying the preview?
    Page 1 of 1