Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaikka Therintha Manam
Ninaikka Therintha Manam
Ninaikka Therintha Manam
Ebook220 pages1 hour

Ninaikka Therintha Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கை என்பது எதிர்பார்ப்புகளும் திடீர்த் திருப்பங்களும் நிறைந்தது. வெற்றி தோல்விகளும், மகிழ்ச்சியும், சோகமும் ஏமாற்றங்களும் இதில் சகஜமானவை.

எல்லோருக்குமே வாழ்க்கை சுமுகமானதாய் இதமானதாய் அமைந்து விடுவதில்லை. அதற்குக் காரணம் அவரவர் தலைவிதி என்பார்கள். தங்களுடைய கஷ்டங்களுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று நினைப்பவர்களும் உண்டு, உலகத்தில் தான் மட்டுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக சிலருக்கு பிரமை இருப்பதுண்டு.

கதையில் வரும் மனோஜும் அப்படிப்பட்டவன்தான். அவனுடைய சுயநலமும் பிடிவாதமும் அவனை மட்டுமல்ல சுற்றியுள்ள மற்றவர் களையும் பாதிக்கிறது. என் தந்தையின் நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. காரணம் அந்தப் பெண் ஒரு மனநோயாளி. அதைப் பெண் வீட்டார் மறைத்து வைத்து கலியாணம் செய்து விட்டது. பிறகுதான் தெரிய வந்தது.

சில செய்திகள் என்னை வினோதமான முறையில் பாதிக்கும் இந்தக் கதையும் அதன் விளைவுதான்.

லஷ்மி ரமணன்
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580125804426
Ninaikka Therintha Manam

Read more from Lakshmi Ramanan

Related to Ninaikka Therintha Manam

Related ebooks

Reviews for Ninaikka Therintha Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaikka Therintha Manam - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    நினைக்கத் தெரிந்த மனம்

    Ninaikka Therintha Manam

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    என்னுரை

    வாழ்க்கை என்பது எதிர்பார்ப்புகளும் திடீர்த் திருப்பங்களும் நிறைந்தது. வெற்றி தோல்விகளும், மகிழ்ச்சியும், சோகமும் ஏமாற்றங்களும் இதில் சகஜமானவை.

    எல்லோருக்குமே வாழ்க்கை சுமுகமானதாய் இதமானதாய் அமைந்து விடுவதில்லை. அதற்குக் காரணம் அவரவர் தலைவிதி என்பார்கள்.

    தங்களுடைய கஷ்டங்களுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று நினைப்பவர்களும் உண்டு, உலகத்தில் தான் மட்டுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக சிலருக்கு பிரமை இருப்பதுண்டு.

    கதையில் வரும் மனோஜும் அப்படிப்பட்டவன்தான். அவனுடைய சுயநலமும் பிடிவாதமும் அவனை மட்டுமல்ல சுற்றியுள்ள மற்றவர் களையும் பாதிக்கிறது.

    என் தந்தையின் நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. காரணம் அந்தப் பெண் ஒரு மனநோயாளி. அதைப் பெண் வீட்டார் மறைத்து வைத்து கலியாணம் செய்து விட்டது. பிறகுதான் தெரிய வந்தது.

    சில செய்திகள் என்னை வினோதமான முறையில் பாதிக்கும் இந்தக் கதையும் அதன் விளைவுதான்.

    லஷ்மி ரமணன்.

    1

    தன் நண்பன் குபேரனின் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய மனோஜ், ஒரு கணம் தயங்கி நின்றான். குபேரனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவன் வீட்டுத் தோட்டத்து மரங்களெல்லாம் சரவிளக்குகளை ஏந்திய வண்ணம் அலங்காரமாக நின்றன. ஒவ்வோர் ஆண்டும் தன் பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடுவது அவன் வழக்கம். அதுவும் இன்று அவன் நாற்பதாவது பிறந்த நாள். கேட்க வேண்டுமா? உள்ளே...

    வரவேற்பறையில் குழல் விளக்குகள் ‘பளிச்’ என்று ஒளியைப் பரப்பின.

    தினுசு தினுசான அத்தர்களின் மணம் காற்றில் கலந்து வந்தது.

    அதன் பின்னணியில் பங்கஜ் உதாஸின் கஜல் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. குபேரனின் மனைவி சோனம் வசதி படைத்த வட இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், கொடுத்து வைத்தவன். சோனம் சகல ஐஸ்வர்யத்தையும் தன்னுடன் கொண்டு வந்து தன் நண்பனை உண்மையிலேயே குபேரனாக்கி விட்டாள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களுடையது காதல் திருமணம்.

    இவ்வளவிற்கும் குபேரனிடம் பணமும் கிடையாது. பர்ஸனாலிடியும் கிடையாது! எதைக் கண்டு இவனிடம் சோனம் மயங்கினாள் என்று மனோஜ் வியந்ததுண்டு...

    ம்... எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும்.

    மனோஜ் தன் நண்பனைப் பார்த்துப் பொருமினாலும் அந்த உணர்வு அவர்கள் நட்பைப் பாதிக்கவில்லை. காரிலிருந்து தான் நண்பனுக்காக வாங்கி வைத்திருந்த மலர்ச் செண்டை எடுத்துக்கொண்டு மனோஜ் மெல்ல அறைக்குள் நுழைந்தான்.

    சின்னக் கிணுகிணுப்பாய் ஓசையுடன் உராய்ந்த மதுக் கோப்பைகளின் சப்தம்.

    உயரே எழும்பி வளையங்களாய் மாறி அறையை ஆக்கிரமித்த சிகரெட் புகை... நட்புறவுகள் சின்ன வட்டங்களில் சேர்ந்து நின்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்த சப்தம். இவற்றின் ஆக்கிரமிப்பில் கிறங்கிப் போனவனாய் மதுவைத் தன் கிளாசில் ஊற்றிக்கொண்டு மனோஜ் நிமிர்ந்தபோது - தூரத்தில் அவள் தெரிந்தாள்!

    சீமா... ஆம், அது அவளேதான்!

    மனோஜ் திகைத்தான்.

    தன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை!

    அது சீமாதானா...? இல்லை, வீண் பிரமையா என்கிற சந்தேகம் எழுந்தது.

    அவளை அவன் பார்த்துப் பல ஆண்டுகளாகிவிட்டன.

    அவள் எப்படி அங்கு வந்தாள்?

    அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அருகில் சென்று... பார்த்து அது சீமாதான் என்று நிச்சயித்துக் கொள்வதற்காக அவன் முன்னேறியவன் சட்டென்று பின்வாங்கி, கையிலிருந்த டம்ளரை அங்கிருந்த அழகு மேஜை மீது வைத்துவிட்டு, பழரசம் நிறைந்த கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அவளை நோக்கி நடந்தான்.

    அவனைத் தூரத்திலிருந்து பார்த்த உடனே அடையாளம் கண்டுகொண்டுவிட்ட சீமா, தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்பட்டுச் சிரித்தபோது அவளது முத்துப் பல்வரிசை மின்னியது.

    அவள்... முன்பைவிட அழகாயிருக்கிறாளோ?

    கண்களில் அவனைக் கவர்ந்திழுத்த அதே காந்த சக்தி... கொடி போன்ற உடல்வாகு. தந்தத்தில் செதுக்கிய சிலை போன்று நின்றிருந்த அவளைக் கண்டதும் அவன் மனதில் ஒரு தாபம்...

    அவள் அவனுடையவளாகி இருக்கவேண்டும். அதாவது திருமதி சீமா மனோஜ் கந்தசாமியாகியிருந்தால்... அந்த நினைப்புக்கே இடமில்லாமல் வாழ்க்கை திசைமாறிப் போய்விட்டது.

    விழித்துக் கொண்டே கண்ட கனவைப் போலாகி விட்டது. அவன் அவள்மீது கொண்ட காதல்.

    அது மட்டும்தானா...?

    அடுத்தடுத்து என்ன வெல்லாமோ நடந்துவிட்டது!

    அவ்வளாவிற்கும் காரணம் சீமாதான் என்கிற எண்ணம் எழுந்து அவள் மீது அவனுக்குச் சீற்றம் ஏற்பட்டது. அவன் அவளை நெருங்குவதற்குள் குபேரன் குறுக்கிட்டான்.

    ஏய்… மனோஜ்! எப்ப வந்தே? வியப்பும் மகிழ்ச்சியும் அவன் குரலில் தொனித்தன.

    இப்பதான் குபேர்! ஹாப்பி பர்த்டே... என் வாழ்த்துக்கள்.

    தன் கையிலிருந்த மலர்ச் செண்டை அவனிடம் கொடுத்தான்.

    தேங்க்யூ... இதெல்லாம் எதுக்கு?

    உனக்கு என்ன அன்பளிப்பு வாங்கி வரதுன்னு புரியல்லே.... மலர்க்கொத்தாவது கொடுக்கலாமேன்னு. மனோஜ் தயங்கிய வண்ணம் சொல்லிவிட்டுச் சீமாவைப் பார்த்தான்.

    நீ வந்ததே எனக்குச் சந்தோஷம், பார்த்தியா... மறந்தே போயிட்டேன். இவங்களை உனக்கு அறிமுகம் செய்கிறேன். இவங்க டாக்டர் சீமா. இங்கே விஜயநகரில் புதிதாய்த் திறக்கப்பட்டிருக்கிற தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறாங்க... அதன் பெயர்கூட... என்று யோசித்த அவன், பார்த்தியா மறந்துட்டேன்… வயசு ஏறுதுல்லே, அதன் அறிகுறியாய் ஞாபக மறதியும் வருது என்று குபேரன் சிரித்தான்.

    பாலாஜி மருத்துவமனை என்றாள் சீமா புன்னகையுடன்.

    கரெக்ட்... சோனத்திற்கு இவங்க ரொம்ப ஃப்ரென்ட்.

    அப்படியா?

    ஹலோ... மிஸ்டர் மனோஜ்... சௌக்கியமா?

    சீமாவின் விசாரிப்பில் அன்னியத்தனம் கலந்திருந்தது. தெருவில் நடந்து போகையில் எதிர்ப்படுகிற யாரோ ஒருவரை விசாரிக்கிற மாதிரி.

    மிஸ். சீமா! உங்களுக்கு மனோஜைத் தெரியுமா? குபேரன் ஆச்சரியப்பட்டான்.

    தெரியுமாவாவது? சீமா என் அத்தை மகள்... என்ன சீமா... எப்போ வந்தே? என்றான் சகஜமாக.

    ரொம்ப நல்லதாப் போச்சு, நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் டின்னர் எப்போ ரெடியாகும்னு சோனம்கிட்டே கேட்டுட்டு வரேன் என்று குபேரன் புறப்பட்டான்.

    சமீபத்தில்தான்… அரசு மருத்துவ மனையில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். அதன் பிறகு...

    சீமா பேசி முடிப்பதற்குள் அவள் கையிலிருந்த கைப்பேசி ஒலித்தது.

    அதை எடுத்து எஸ்... டாக்டர் சீமா ஹியர் என்றாள்.

    மனோஜுக்கு ஒருவிதப் பொறாமையும், எரிச்சலும் அவள் மேல் எழுந்தன.

    டாக்டர். சீமா. அவன் தனக்குள் ஒருமுறை அதைச் சொல்லிப் பார்த்தான். தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

    சீமா... அவனுக்கு உறவில் முறைப் பெண். அதாவது அவன் தாய் ஜானகி அவனுடைய அத்தை. தந்தை கந்தசாமியின் சொந்த சகோதரி, சுமாரான வசதி படைத்த குடும்பம்தான். சீமாவின் தந்தை முருகேசன் காலமாகும் முன் சொத்து என்று பிரமாதமாக எதையும் வைக்காவிட்டாலும், தன் மனைவியும், மகளும் வசதியாக வாழச் சென்னையில் சின்னதாக ஒரு வீட்டை மட்டும் விட்டுப் போயிருந்தார்.

    அதன் பின் மற்றும் பக்கவாட்டு போர்ஷன்களை வாடகைக்கு விட்டுக் கிடைத்த தொகையில்தான் குடும்பம் நடந்தது. அடுத்த தெருவிலேயே மனோஜின் தந்தை கந்தசாமியின் வீடு இருந்தது.

    சீமாவையும், ஜானகியையும் தங்களுடனேயே வந்து இருக்கும்படி கந்தசாமியும், மனோஜின் தாய் வள்ளியும் சொன்னார்கள். ஆனால் அதற்கு ஜானகி ஒப்புக்கொள்ளவில்லை. ஓர் ஆறையில் ஒண்டிக் கொண்டு குடும்பம் நடத்தினாலும் சொந்த வீட்டில் இருக்கிற நிம்மதி வேறு எங்கும் வராது.

    தனியாக இருக்கிறதில் உள்ள சுதந்திரமும், சுய மரியாதையும் சேர்ந்திருந்தால் கிடைக்காது என்பதை அவள் நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

    இருந்தாலும் வள்ளி தன் நாத்தனாரிடமிருந்து ஒதுங்கி வாழ்வதை விரும்பியதில்லை.

    வீட்டில், பூஜை. நாள் கிழமை, மறைந்த நீத்தாருக்குப் படையல் எல்லாவற்றுக்குமே ஜானகியையும், சீமாவையும் அவள் அழைக்கத் தவறியதில்லை.

    மனோஜ் சீமாவைவிட நான்கு வயது பெரியவன். அவனுக்கு முகுந்தன் என்கிற அணைன் இருந்தான், அண்ணன் - தம்பி இருவருமே படிப்பில் சுமார்தான். படிப்பதை ஒரு டைம்பாஸ் மாதிரி நினைத்து அவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தார்கள்.

    காலாண்டு, அரை ஆண்டு, முழு பரீட்சை முடிவுகள் வெளியானதும் ஒவ்வொரு முறையும் பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங்கில் பங்கேற்க கந்தசாமி போய் வருவார்.

    டியூஷன் போட்டாவது படிக்கவையுங்க சார்... நாங்க முயற்சி பண்ணி முடியல்லே என்று தன் மகன்களின் வகுப்பாசிரியர்கள் அலுத்துக் கொள்ளும்போது அவருக்கு அவமானமாக இருக்கும்.

    டியூஷ் னா...? அங்கேயும் நான் படிக்கணுமா? ஸ்கூல்போய்ப் படிக்கிறதே ஜாஸ்தி... அதெல்லாம் முடியாது. முகுந்தன் திட்டவட்டமாக மறுத்தான். இப்படியே போனால் நம்ம பசங்க பரீட்சையில் வாங்கற முட்டைகளை வெச்சு நாம் ஒரு கோழிப்பண்ணையே நடத்திடலாம்! என்று பாதி வேடிக்கையாகவும், பாதி ஆதங்கத்துடனும் கந்தசாமி மனைவியிடம் சொல்லிக் கொண்டதுண்டு.

    ஆனால் தன் வருத்தத்தையோ, கோபத்தையோ அவர் தன் பிள்ளைகளிடம் காட்டியதில்லை.

    அப்படிப்பட்டவர்... முகுந்தன் பத்தாவது வகுப்புப் பரிட்சையில் தேறவில்லை என்று தெரிந்தது ம் ஏன் ருத்ரமூர்த்தியானார் என்பது அவருக்கே விளங்காத விஷயம். ஆத்திரத்தில் அவனை அடித்து, உதவாக்கரை ஜென்மம், தனக்காகவும் தெரியாது. பெரியவங்க சொன்னாலும் புரியாது. எங்காச்சும் போய்த் தொலை... என் கண்முன்னே நிக்காதே என்று அவர் சொன்னதைக் காரணமாக்கி, அவன் தன் முடிவைத் தேடிக் கொள்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    அன்று இரவிலிருந்தே முகுந்தன் காணாமல் போனான், தங்களுக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் தேடி, முகுந்தனின் நண்பர்களிடம் விசாரித்து, போலீஸில் புகார் கொடுத்து என்று நாட்கள் நழுவிக் கொண்டிருந்தன.

    ஐந்தாவது நாள் முகுந்தனின் உயிரற்ற உடல் கடற்கரை ஓரமாக ஒதுக்கப்பட்டுக்கிடந்தது. பெற்றோர்களுக்கு அது எத்தனை பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று விளக்கத் தேவையில்லை.

    சின்னவன் மனோஜுக்குக் கந்தசாமியு ம், வள்ளியும் அளவுக்கு மீறிய சுதந்திரத்தையும், சலுகைகளையும் கொடுத்து வளர்க்க முற்பட்டதும் அதனால்தான். அவன் படித்துப் பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்தா விட்டாலும், தங்கள் வாரிசாக உயிருடன் இருந்தால் அதுவே போதுமானது என்று அவர்கள் நினைத்தார்கள்.

    மனோஜ் எப்படியோ கஷ்டப்பட்டு, ஆசிரியர்களையும் கஷ்டப்படுத்திப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்தது அவனுக்குப் படிப்பின்மீது ஏற்பட்ட ஈடுபாட்டினால் அல்ல.

    அவனுக்கு என்று ஏற்பட்ட நண்பர்கள் வட்டமும் அப்படித்தான் இருந்தது. அவர்களோடு சேர்ந்து சீட்டாடவும், சினிமா பார்க்கவும், சிகரெட் பிடிக்கவும், மாணவிகளைப் பார்த்து ஜொள்ளுவிடவும் ஏன் சில சமயங்களில் ரகசியமாகச் சரக்கு வாங்கி அடிக்கவும் வசதியான சூழ்நிலையை அது ஏற்படுத்திக் கொடுத்தது.

    கைச்செலவுக்கு என்று அப்பாவிடமும், அம்மாவிடமும் தனித் தனியாகப் பணம் கேட்டு வாங்குவான். அது போதாமல் அவர்களுக்குத் தெரியாமல் அலமாரியிலிருந்து பணம் திருடியதும் உண்டு. இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்புவான் காரணம் கேட்டால் சுள்ளென்று விழுவான். அவனைக் தண்டிக்கவே கந்தசாமி தயங்கினார்.

    ஏற்கனவே பட்ட கசப்பான அனுபவம் அவரைப் பாதித்திருந்தது. அந்த முறை தேர்வை மனோஜ் சரியாக எழுதவில்லை. தொடர்ந்து படிக்கவும் அவன் விரும்பவில்லை. திருமணம் நடந்து அவன் குடும்பஸ்தனாகும் போது சரியாகிவிடுவான் என்று அம்மா வள்ளி நினைத்தாள்.

    அவள் எதிர்பார்ப்பை உண்மையாக்குவதுபோல் தன் அத்தைப் பெண் சீமாவின்மீது மனோஜூக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவளைப் பார்க்க அடிக்கடி அத்தை ஜானகியின் வீட்டுக்குப் போவான். அவளைப் பார்க்கும்போது அவனிடம் ஏற்படும் மகிழ்ச்சி, மலர்ச்சி, அதற்குப் பெயர்தான் காதலா என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

    ஆனால்... அவர்கள் வாழ்க்கையில் இணைய முடியாமல் போனதன்

    Enjoying the preview?
    Page 1 of 1