Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ganga Nathi Theerathile
Ganga Nathi Theerathile
Ganga Nathi Theerathile
Ebook96 pages24 minutes

Ganga Nathi Theerathile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580125804584
Ganga Nathi Theerathile

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Ganga Nathi Theerathile

Related ebooks

Reviews for Ganga Nathi Theerathile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ganga Nathi Theerathile - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    கங்கா நதி தீரத்திலே

    Ganga Nathi Theerathile

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    திடீரென்று வேகமான புழுதிக் காற்று வீசத் துவங்கியது.

    கனத்த பழுப்பும் கறுப்புமான மேகங்கள் கும்பமேளாக் கூட்டம்போல் வானத்தில் ஒன்று சேரத் தொடங்கியிருந்தன.

    கீதாஸ்ரமத்துக்கு வெளியே வந்த மது, கங்கைக் கரையில் தேங்கி விட்டிருந்த யாத்ரீகர்களின் கும்பலைக் கண்டு திகைத்துப் போனாள்.

    அன்றைக்கென்று எல்லா மோட்டார் படகுகளிலும் ஏதோ ஒரு பிரச்சினை. காற்று அடங்கும் வரையில் கங்கையைச் சாதாரணப் படகில் கடப்பது உசிதமில்லை என்று பிரயாணத்தைப் படகோட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.

    காற்று எப்போது அடங்குமோ! அதற்குள் இருட்டி விட்டால்?

    மதுவுக்கு யோசிக்க நேரம் இல்லை. இருட்டுவதற்குள் அவள் வீடு திரும்பியாக வேண்டும்.

    தன் எஜமானி கோதையம்மாளைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டுபோய், பின் முற்றத்தில் நிறுத்தி கங்காரத்தியைத் தரிசனம் செய்ய வைப்பது அவளது அன்றாடக் கடமைகளில் ஒன்று.

    மதுவுக்கு மிகவும் பிடித்தமான வேலை அது. ஆனந்த பவன் (அதுதான் அவள் வேலை பார்த்த வீட்டின் பெயர்) கங்கைக் கரையில் இருந்தது. வீட்டின் பின்னால் கங்கா நதி. கேட்கும்போதே மனம் சிலிர்க்கவில்லை?

    கீழ்த்தளத்துக்கு இறங்கிப் போகப் படிகள் இருந்தன. ஆனால் அந்த வழி பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். விருந்தினர்கள் யாராவது வந்து தங்கி கங்கையில் குளிக்க விரும்பினால் கதவைத் திறந்து விடுவார்கள். அதன் சாவி கோதையம்மாளின் அறைச் சுவரில் தொங்கியது.

    கீழே பளிங்கில் மண்டபம் இருந்தது. குளித்து வந்து உடைமாற்றிக் கொள்ள ஓர் அறையும் உட்காரச் சில சிமெண்டுத் திட்டுக்களும் இருந்தன. மண்டபத்திலிருந்து கங்கைக்குச் சில படிக்கட்டுகள் இறங்கிப்போக வேண்டும். கடைசி நான்கு படிகளை வரம்பு கட்டி இரும்புக் கம்பிகளை நிறுத்திச் சங்கிலி போட்டிருந்தார்கள். இவற்றை எல்லாம் ஒருமுறை சமையல் செய்யும் அப்பாசாமி மதுவை அழைத்துப் போய்க் காட்டினார்.

    பின்முற்றமும் பளிங்கில் கறுப்பும் வெளுப்புமாய் டிசைன் போட்டு மழுமழுப்பாய்ப் பார்க்க அழகாக இருக்கும். அதை மடக்கு இரும்புக் கதவுகள் போட்டு மூடி இருந்தார்கள். அங்கிருந்து கங்காரத்தி பார்க்கும் வேளையில் திறந்து விடுவார்கள். அப்போது கோதை அம்மாளை மது ஆரத்தி நடக்கும் காட்சியைக் காண அங்கே அழைத்துப்போவாள். அத்தகைய சந்தர்ப்பங்களில் கண்களில் பெருகும் கண்ணீரைக் கண்டு துணுக்குற்று, அழறீங்களா ஆன்ட்டி? என்று கேட்டதுண்டு.

    இல்லையே! என்றுதான் பதில் வரும்.

    கோதையம்மாளின் நெஞ்சின் ஆழத்தில் புதைந்து விட்ட சோகம்தான் இந்தக் கண்ணீருக்குக் காரணமோ என்று மது நினைத்ததுண்டு. அவள் அங்கு வேலையைப் பகிர்ந்து கொள்ளத்தான் வந்திருக்கிறாள். வேதனையைப் பங்கிட்டுக் கொள்ள அவளுக்கு அருகதை இருப்பதாகக் கோதையம்மாளாக நினைக்கும் வரையில், தான் அதைப் பற்றிப் பேசுவதற்கில்லை என்பதையும் மது உணர்ந்திருந்தாள்.

    ஆரத்தியைப் பார்த்து முடித்ததும் உடனே கோதையம்மாளை உள்ளே அழைத்துவிட வேண்டும். இல்லையேல், மது! என்று பெரிய மதனி சாம்பவியின் குரல் கர்ஜனையாகப் பின்னாலிருந்து கேட்கும். அடுத்து அவள் என்ன சொல்லுவாள் என்பது மதுவுக்குத் தெரியும்.

    கோதையம்மாளை அதிக நேரம் குளிர்காற்றில் உட்கார வைத்தால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று அதட்டுவாள் சாம்பவி. அதை அவள் அன்பினால் சொல்லுகிறாளா, இல்லை குளியலறையில் வழுக்கி விழுந்து தொடைகள் எலும்பு நொறுங்கிப் போனதால் நடக்க முடியாமல் ஒடுங்கிப் போன மாமியார் தன் அதிகாரத்துக்கு உட்பட்டவள் என்கிறதை நிலைநாட்டிக் கொள்ள விரும்புகிறாளா என்பது மதுவுக்குப் புரியாத விஷயங்களில் ஒன்று.

    அதனால் கூடுமானவரையில் சாம்பவி வருவதற்கு முன்பே மது கோதையம்மாளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றுவிடுவாள்.

    சின்ன மருமகள் கோகிலா குணத்தில் பட்டாம் பூச்சியைப் போன்றவள். தினுசு தினுசாக டிரெஸ் செய்து கொண்டு கணவன் பிரதாப்புடன் ஊர் சுற்றவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் காடாறு மாதம், நாடாறு மாதம் என்பதைப் போல் மாதத்தில் இருபது நாள் டேராடூனில் தன் பிறந்த வீட்டில் இருப்பாள். அவள் தந்தைக்கு அங்கே மர வியாபாரம் பெரிய அளவில்

    Enjoying the preview?
    Page 1 of 1