Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marainthirukkum Marmam
Marainthirukkum Marmam
Marainthirukkum Marmam
Ebook102 pages39 minutes

Marainthirukkum Marmam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விரும்பிச் செய்யும் விருந்தோம்பற்பண்பும், விரிவான பயணப் பட்டறிவுகளையும் கொண்டவர் திருமதி லக்ஷ்மி ரமணன், தன் அன்புக் கணவரின் அலுவல் பணி காரணமாகப் பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் காணும் வாய்ப்புப் பெற்றவர். அமைதி மிக்கவராயினும் எதையும் எவரையும் ஆழ்ந்து உணர்ந்து பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். உள்ளார்ந்த உணர்வுகளையும், உலகளாவிய அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் பக்குவம் கொண்டவர். மனித நேயமும் குறிப்பாக மகளிர் நேயமும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகள் நம்மை அவரது எழுத்துக்களுடன் இரண்டறக் கலந்துவிடச் செய்து விடுகின்றன.

சோர்வு தட்டாதவகையில், கதைப்போக்கினைச் சுவையுற நகர்த்தும் இவரது திறம் "மறைந்திருக்கும் மர்மம்" வழி நன்கு வெளிப்படுகிறது. விரைவும் விறுவிறுப்பும், புதிரும் புதுமையும் போட்டி போட்டுக்கொண்டு பக்கங்களைப் புரட்ட வைக்கின்றன.

பெண்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறவும், சுயமரியாதையைக் காத்துக் கொள்ளவும் எப்படியெல்லாம் எவரிடமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார் - புரிய வைத்திருக்கிறார்.

எழுத்து முயற்சியென்பது வெறும் பொழுது போக்கும் முயற்சியல்ல. எழுதுவோர்க்கும் படிப்போர்க்கும் பகிர்தல் வழியிலான பயன்பாட்டைச் செய்ய வேண்டும். திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகளில், வரலாற்றுச் செய்திகளை வாழ்விக்கும் முயற்சிகளும், பார்த்த இடங்களையும் பழகிய மனிதர்களையும் பதிவு செய்யும் முயற்சிகளும், சராசரி மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய சமுதாயச் சிந்தனைகளும் இடம் பெற்று நம்மை இன்புறுத்துகின்றன.

"வாழ்க்கை என்பது பிடிக்குள் அகப்படாமல் நழுவும் பாதரசத் துளியைப் போன்றது. சில சமயம் நாம் நினைக்கிறபடி வாழ்க்கை அமையாதது இருக்கட்டும். பல விசித்திரத் திருப்பங்கள் ஏற்பட்டுத் திசைமாறிப் போகிறது" என அமையும் சிந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டியவை. நடைமுறை வாழ்க்கையின் நலன்களையும் நளினங்களையும் எளிய சொற்களால் எடுத்துக் காட்டியிருக்கும் - எழுதிக் காட்டியிருக்கும் திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகள் தன்னிறைவு தரும் தரமான படைப்புகள் என்பதில் ஐயமில்லை.

பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் களமாகவும், இலக்கிய ஆர்வலர்களின் ஆறுதல் களமாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றன; இனிக்கின்றன. தோழமையுணர்வும் தொண்டுணர்வும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகளால் இவர் சிறக்கவும், இவரால் இவரது படைப்புகள் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புடன்,
நா. ஜெயப்பிரகாஷ்

Languageதமிழ்
Release dateDec 26, 2019
ISBN6580125804868
Marainthirukkum Marmam

Read more from Lakshmi Ramanan

Related to Marainthirukkum Marmam

Related ebooks

Reviews for Marainthirukkum Marmam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marainthirukkum Marmam - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    மறைந்திருக்கும் மர்மம்

    Marainthirukkum Marmam

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    முன்னுரை

    விரும்பிச் செய்யும் விருந்தோம்பற்பண்பும், விரிவான பயணப் பட்டறிவுகளையும் கொண்டவர் திருமதி லக்ஷ்மி ரமணன், தன் அன்புக் கணவரின் அலுவல் பணி காரணமாகப் பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் காணும் வாய்ப்புப் பெற்றவர். அமைதி மிக்கவராயினும் எதையும் எவரையும் ஆழ்ந்து உணர்ந்து பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். உள்ளார்ந்த உணர்வுகளையும், உலகளாவிய அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் பக்குவம் கொண்டவர். மனித நேயமும் குறிப்பாக மகளிர் நேயமும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகள் நம்மை அவரது எழுத்துக்களுடன் இரண்டறக் கலந்துவிடச் செய்து விடுகின்றன.

    இயல்பும் எளிமையும் இவரது எழுத்துக்களின் தனித் தன்மைகள். கதை மாந்தர்களை அப்படியே கற்பார் கண்முன் நிறுத்தும் திறம் கொண்டவை. கதை மாந்தர்களுடன் நம்மையும் சேர்த்து உலவவிடுதலும் உரையாட விடுதலும் இவரது தனித்திறம். கதைப் போக்கினை உரைக்கும் முறையிலும், உணர்த்தும் வகையிலும் இடையிடையே அமைந்திருக்கும் உரையாடல் உத்திகள் சிறிதும் செயற்கைத்தன்மை இல்லாதவை. நிறையச் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் தந்த இவரது படைப்புத் திறனுக்கும், ஆர்வத்திற்குமான இன்னொரு அழகிய அடையாளம் மாயமான்.

    சோர்வு தட்டாதவகையில், கதைப்போக்கினைச் சுவையுற நகர்த்தும் இவரது திறம் மறைந்திருக்கும் மர்மம் வழி நன்கு வெளிப்படுகிறது. விரைவும் விறுவிறுப்பும், புதிரும் புதுமையும் போட்டி போட்டுக்கொண்டு பக்கங்களைப் புரட்ட வைக்கின்றன.

    பெண்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறவும், சுயமரியாதையைக் காத்துக் கொள்ளவும் எப்படியெல்லாம் எவரிடமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார் - புரிய வைத்திருக்கிறார்.

    எழுத்து முயற்சியென்பது வெறும் பொழுது போக்கும் முயற்சியல்ல. எழுதுவோர்க்கும் படிப்போர்க்கும் பகிர்தல் வழியிலான பயன்பாட்டைச் செய்ய வேண்டும். திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகளில், வரலாற்றுச் செய்திகளை வாழ்விக்கும் முயற்சிகளும், பார்த்த இடங்களையும் பழகிய மனிதர்களையும் பதிவு செய்யும் முயற்சிகளும், சராசரி மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய சமுதாயச் சிந்தனைகளும் இடம் பெற்று நம்மை இன்புறுத்துகின்றன.

    மாயமான் உலகியல் சார்ந்த உண்மைகளை இயல்பாக எடுத்துரைக்கிறது. எதையும் - எவரையும் உற்றுப் பார்ப்பதும் உணர்ந்து பார்ப்பதும் ஒரு படைப்பாளரிடம் இருக்க வேண்டிய இன்றியமையாப் பண்புகள். தன் அமைதியான அணுகுமுறைகளால் திருமதி லக்ஷ்மி ரமணன் இவ்விரு தகுதிகளுடன் பதிவு செய்து பாராட்டுக்குரியவராகிறார். இவரது எழுத்துக்களில் வெற்று ஆரவாரங்களில்லை. வீணான - வேண்டாத வெளிப்பூச்சுகள் இல்லை. போலிப் புனைவுகளும், பொருந்தாத போக்குகளும் இல்லை. சுற்றி வளைத்துச் சொல்லி, சோர்வு தட்டும் போக்கும் இல்லை.

    ... படிச்சதுக்கும் செய்யறதுக்கும் சம்பந்தம் இல்லாட்டிப் பரவாயில்லை. ஆனால், தப்பாகத்தான் எதையும் செய்யக் கூடாது. ஏமாத்தக் கூடாது. பொய் சொல்வதோ, பிறத்தியான் பொருளைக் கவர்வதோ கூடாது. செய்கிற தொழிலில் நேர்மையும் சின்சியாரிடியும் இருக்கணும். அது போதும்.

    மனிதர்கள் எல்லாரும் அடிப்படையில் நல்லவர்கள், அப்படி இருக்கையில் அவர்கள், ஜாதி மதம் என்று இனம் பிரித்து வேறுபாடுகள் என்னும் சுவர்களைப் பிரம்மாண்டமாய் எழுப்பி ஆவேசமும் துவேஷமும் தூண்டிவிடப்பட்ட அரக்கர்களாக அவர்களை மாற்றிவிடுவது யார்?

    வாழ்க்கை என்பது பிடிக்குள் அகப்படாமல் நழுவும் பாதரசத் துளியைப் போன்றது. சில சமயம் நாம் நினைக்கிறபடி வாழ்க்கை அமையாதது இருக்கட்டும். பல விசித்திரத் திருப்பங்கள் ஏற்பட்டுத் திசைமாறிப் போகிறது என அமையும் சிந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டியவை. நடைமுறை வாழ்க்கையின் நலன்களையும் நளினங்களையும் எளிய சொற்களால் எடுத்துக் காட்டியிருக்கும் - எழுதிக் காட்டியிருக்கும் திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகள் தன்னிறைவு தரும் தரமான படைப்புகள் என்பதில் ஐயமில்லை.

    பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் களமாகவும், இலக்கிய ஆர்வலர்களின் ஆறுதல் களமாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றன; இனிக்கின்றன. தோழமையுணர்வும் தொண்டுணர்வும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகளால் இவர் சிறக்கவும், இவரால் இவரது படைப்புகள் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அன்புடன்,

    நா. ஜெயப்பிரகாஷ்

    *****

    1

    அந்தத் தார்ச்சாலை பட்டையாக நீண்டு கிடந்தது. மாலை நாலரை மணி தான் இருக்கும். இருள் சூழ்ந்து பரவி அந்தப் பிராந்தியத்தையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கார்மேகங்களைக் கிழித்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது. இருட்டைத் தன் ஹெட்லைட் வெளிச்சத்தால் துடைத்து அகற்ற முயன்ற வண்ணம் அந்தச் சாலையில் நளினமாய் மிதந்து சென்றது கருநீல நிற கான்டெஸா.

    அதை ஓட்டிக் கொண்டிருக்கும் இருபத்தைந்து வயது இளைஞன் சுனில், ஆறடி உயரம். அலை அலையாய்க் கிராப்பு. சிகப்புமில்லாமல் வெளுப்புமில்லாமல் ஒருவித ரோஜா நிறம். மீசையில் ராஜபுத்ரத்தனம் எட்டிப் பார்த்தது. அவனோடு பேசிப் பழகினவர்கள் அவனுடைய துடுக்கான பேச்சையும், ஆழ்ந்த பார்வையையும் குறிப்பிடுவார்கள். ஆனால், மனசு மட்டும் பால் வெளுப்பு. அம்மாவிடம் கொள்ளைப் பிரியம். இதுதான் சுனில்.

    அவன் அருகில் முன் சீட்டில் கதவோரமாய் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அழகிய இளம்பெண் தேவிகா. அவன் தாய் சுகாசினியின் காரியதரிசி.

    Enjoying the preview?
    Page 1 of 1