Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidivelli
Vidivelli
Vidivelli
Ebook117 pages47 minutes

Vidivelli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகியான சங்கரி தன் தந்தையும் தாயையும் இழந்து தனியாக இருக்கிறாள். உடன் பிறந்தவர்கள் யாரும் இவளுக்கு ஆதரவாக இல்லை. தனிமையில் இருக்கும் சங்கரின் நிலை என்ன? இந்த நிலை மாறுமா? சங்கரி வாழ்க்கை விடிவெள்ளி போல் பிரகாசமாக இருக்குமா? தொடர்ந்து படியுங்கள்...

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580155610578
Vidivelli

Read more from Lakshmi

Related to Vidivelli

Related ebooks

Reviews for Vidivelli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidivelli - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விடிவெள்ளி

    Vidivelli

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    அன்று ஞாயிற்றுக்கிழமை.

    ரத்னா அம்மாள் போட்ட நிபந்தனைப்படி அவள் தன் வருகையைத் தொலைபேசி மூலம் முதல் நாளே தெரிவித்து விட்டுக் கிளம்பியிருந்தாள்.

    சங்கரி நகரத்திலிருந்த பிரபலமான நிறுவனத்தில் கணக்கு வழக்குப் பகுதியில் தலைமை கணக்கருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள். பதினெட்டு வயதிலேயே வேலைக்குப் போக ஆரம்பித்தவள். இருநூறு ரூபாய் சம்ளத்திற்கு வேலையில் அமர்ந்தவள் அயரா உழைப்பால் நல்ல பெயரை வாங்கிக் கொண்டதுடன், பதவியிலும் உயர்த்தப்பட்டு தலைமைக் கணக்கர் ஓய்வு அடைந்தவுடன் அந்த இடத்தில் அமரும் வாய்ப்பையும் பெற்றிருந்தாள். அத்துடன் அவள் சம்பளமும் எட்டுநூறு ரூபாயை எட்டிவிட்டிருந்தது.

    அப்பாவுக்கு ஓய்வு ஊதியமும், வங்கியில் சேமித்ததிலிருந்து கொஞ்சம் வட்டியும் கிட்டின. இரண்டையும் நிரவிக்கொண்டு வீட்டு வாடகையிலிருந்து எல்லா செலவுகளையும் அவர்கள் இருவரும் சமாளித்துக் கொண்டு வந்தனர். ஆனால், திடீரென்று அப்பாவின் உடல் நிலை மோசமாகி விட்டபோதுதான், சிகிச்சைக்காக ஏற்பட்டசெலவில் அவர்களது சேமிப்பில் ஓட்டை காணத் தொடங்கியது. பற்றாக்குறையினால் அவள் அவதிப்பட நேர்ந்தது. ஆனாலும் அவள் மிகவும் உறுதியான மனம் படைத்தவள். எத்தனை சிரமம் ஏற்பட்டாலும் அண்ணன்மார்களை உதவிக்கு அணுகுவதில்லை என்று தன்னுள்ளே ஒரு தீர்மானத்தை ஏற்றிருந்தாள். அம்மா விட்டுப்போன சில நகைகள் இருந்தன. அவற்றை விற்று அப்பாவை அவளால் கடைசிவரை வைத்துக் காப்பாற்ற இயலும் என்ற நம்பிக்கை. ஆனால் விடியு முன்பே எழுந்து தினமும் அப்பாவை கவனித்துவிட்டு சமைத்து தானும் சிற்றுண்டி கட்டி எடுத்துக்கொண்டு அப்பாவுக்கு தனியான பத்திய உணவையும் தயாரித்து வைத்துவிட்டு, தான் திரும்பி வரும்வரை அவரைக் கவனித்துக்கொள்ள நம்பகமான தங்கள் வீட்டு வேலைக்காரியை முழுவேலைக்கும் கூடுதலான சம்பளத்தில் ஏற்பாடு செய்து விட்டுப் போய்வந்த போதிலும், இனம் காணாத ஒரு கலவரம் அவளுள் இருந்தது. என்றாவது ஒரு நாள் அவள் வீடு திரும்புமுன் அப்பாவின் மூச்சு நின்றுவிட்டால்?

    எழுதப் படிக்கத் தெரியாத அந்த வேலைக்காரிக்கு அவர் மாரடைப்பால் தவிக்கும் போது முதலுதவி செய்ய ஏதும் தெரியாதே. சட்டென்று வைத்தியரை அழைக்க வேண்டுமென்ற யோசனை தோன்றாது போய்விட்டால்... திடீரென்று வேலை நடுவே - கவலை ஏற்படும். கண்களில் நீர் பனிக்கும். நெஞ்சைத் துன்பம் வருடும்.

    அவளுக்கு உலகிலே சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொள்ள இருப்பவர் அப்பா ஒருவர்தான். அவருக்குப்பின்?

    வேலைக்காரி மங்களம் மிகவும் நல்லவள், அவள் திரும்பி வரும்வரை வீட்டைவிட்டு நகராது அங்கேயே இருந்து கிழவரை கவனித்துக் கொள்வதாக வாக்களித்திருந்தாள். மாதக் கடைசிநாள் அன்று அவள் போகத் தவறினால் அவள் தன் தங்கை குழந்தை மோகனைக் காண இயலாது. ரத்னா அம்மாளுக்கு தன் ஒரே மகன் செய்து கொண்ட காதல் கல்யாணம் கொஞ்சமும் பிடிக்கவில்லை மகனுக்காக தங்களது மதிப்புக்கு மிகவும் குறைந்த இடத்திலிருந்து வந்த பெண்ணை அவள் மருமகளாக ஏற்றுக்கொண்டிருந்தாள். ஆனால், அதற்காக அவளது உறவுப்படையை அவள் ஏற்று உபசரிக்க விரும்வேயில்லை. தப்பித் தவறி அவர்களில் யாரேனும் வந்து மீனாவை காண விரும்பிக் கேட்டால், வாசலிலேயே வைத்து வேலைக்காரனிடம் காப்பியை கொடுத்து அனுப்பி, மருமகளை சில நிமிடம் அவர்களுடன் பேசிவிட்டு பின் அவளை உள்ளே வரச்சொல்லி கதவை சாத்திக் கொள்ளும் கல் மனக்காரி - அகம்பாவம் பிடித்தவள், பணத்திமிரில் ஏழை எளியவர்களைத் துரும்பாக மதிப்பவள்.

    அவள் வீட்டுக்கு மாதம் ஒரு முறை போய்வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே என்று சங்கரிக்கு உள்ளூர மனக்கசப்புதான். தலைவாசலை காவல் செய்த கூர்க்காவிடம் முன்னமேயே ரத்னா சொல்லி வைத்திருப்பாள் - அவள் சொல்ல மறந்து போனால் அந்த எமகாதகன் அவளை உள்ளே விடமாட்டான். உள்ளே போய் வருவதும் அத்தனை சுலபம் அல்ல. தோட்டத்தைக் காவல் செய்த மூன்று அல்சேசியன் நாய்கள் அவள்மீது பாய்ந்து குதறிக் கொன்றுவிடும். அவற்றைக் கவனித்துக் கொண்ட வேலைக்காரனுக்கும் அந்த நாய்களை அவன் சங்கிலிகளால் பிணைத்து அவள் போகும் வரை கட்டி வைத்திருப்பான்.

    அதற்குப்பின் வாயில் வராந்தாவிலே அவள் தன் செருப்புகளைக் கழற்றி வாங்கி வந்த பிஸ்கட் பொட்டலத்துடன் மிகவும் ஆடம்பரமான அந்த வரவேற்பு அறையில் ஓர் இருக்கையில் முள்மேல் அமர்ந்திருப்பதைப் போன்று உட்கார்ந்திருக்க வேண்டும். காஷ்மீரத் தடுப்பின் பின்னால் இருந்து ஒரு வேலைக்காரி எட்டிப் பார்ப்பாள். பின்னர் சிறிது நேரத்தில் சமையல் ஆள் ஒருவர் வெள்ளித் தம்ளரில் காப்பியைக் கொண்டுவந்து வைப்பார். அவசரமாக அவள் பருகியதும் அதைத் திருப்பி பத்திரமாக உள்ளே அவர் எடுத்துப் போனபின் மாடிப்படிகளில் காலடி ஓசை கேட்கும்.

    பெரியம்மா வந்திருக்காங்களா? மழலையில் தொனிக்கும் அந்தக் குரலைக் கேட்டதும், உடல் இன்பத்திலே சிலிர்த்துப் போகும். நெஞ்சிலே ஒரு படபடப்பு ஏற்பட, அவள் எழுந்து நிற்பாள். ரத்த பாசத்தின் திடீர் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளங்கையும் உடலும் வியர்த்துக் கொட்டுவதை உணர்வாள்.

    ரத்னா அம்மாள் தன் வாட்டசாட்டமான உடலில் ஒரு காஞ்சிபுரம் பட்டுச் சேலையை சுற்றிக்கொண்டு, நரை ஓடிய தலைமுடியை இறுக்கமாகக் கொண்டை போட்டுக் கொண்டு, நெற்றியில் திருநீறும் கழுத்திலே ஒற்றைவடத் தங்கசங்கிலியும் மினுக்க மெல்ல இறங்கி வருவாள் குழந்தை இப்பத்தான் எழுந்தான். குளிப்பாட்டி, உடை அணிவித்து, உணவளித்துக் கொண்டு வந்திருக்கேன். ரொம்ப தூக்கி அவனைக் குலுக்கிக் கொஞ்சாதே பத்து நிமிடத்தில் டியூஷன் வாத்தியார் வந்திடுவார்...

    மூன்று வயதுக் குழந்தைக்கு டியூஷன் எதற்கு? கேட்க நாக்குத் துடிக்கும். பணக்காரர்கள் தங்களது வசதிகளை எப்படி வேண்டுமானாலும் பெருக்கிக் கொள்ளலாமே? பிரகலாதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே கதை கேட்டுத் தெரிந்து கொண்டதாக புராண வரலாறு இருக்கிறதே. அதனாலோ என்னவோ அந்த சின்னஞ்சிறு பிஞ்சிற்கு பள்ளிக்கூடம் என்பது என்ன என்று விளையாட்டுக்குக்கூடப் புரியுமுன் அவசரப்பட்டுச்கொண்டு அறிவைத் திணிக்க முயலுகிறாங்களே? என்ன மதியீனம்! எண்ணியபடி, ஓடிவரும் குழந்தையை ஆசையுடன் அள்ளிக் கன்னத்தில் முத்தமிட்டுக் கண்கலங்கிப் போவாள்.

    அழகான - அறிவான பிள்ளையாகத் தன் மகன் ஆரோக்கியமாக வளரும் அற்புதத்தைப் பார்க்க முடியாது மறைந்து போன தங்கையின் ஞாபகம் வந்து நெஞ்சை அடைக்கும்.

    குழந்தையைக் கீழே விடு. பெட்டி போட்டு உடுத்திய உடையைக் கலைக்காதே.

    கன்னத்திலும் தலையிலும் முத்தமிட்டால் போதும்.

    முத்தமிடாதே! நோய்க்கிருமிகள் உன்னிடமிருந்து குழந்தைக்கு ஓட்டிக் கொள்ளும் ஒரு டாக்டரைப் போல ரத்னா உத்திரவிடும்போது அவள் பதைத்துப் போவாள்.

    குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது எனக்குத் தெரியும். நான் ஓரளவு படித்தவள்தான் என்று பட்டென்று பதில் சொல்ல மனம் விரும்பும். ஆனால் அத்துடன் அந்த அம்மாள் குழந்தையை வந்து மாதந்தோறும் அவள் பார்க்கும் வாய்ப்பையும்

    Enjoying the preview?
    Page 1 of 1