Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tabutharan
Tabutharan
Tabutharan
Ebook193 pages1 hour

Tabutharan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும் விட அதிமுக்கியமானது. மனைவியை இழந்த ஆணுக்கு தபுதாரன் என்று பெயர். கைப்பெண்களைப் பற்றி அதிகம் பேசும் சமூகம் ஏனோ தபுதாரன்கள் பற்றி பேசுவதில்லை. இந்த கதையிலும் ஓர் தபுதாரனின் வாழ்க்கையை நாம் பார்த்து வரலாம்...

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580164309713
Tabutharan

Read more from Karthi Sounder

Related to Tabutharan

Related ebooks

Reviews for Tabutharan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tabutharan - Karthi Sounder

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தபுதாரன்

    Tabutharan

    Author:

    கார்த்தி சௌந்தர்

    Karthi Sounder

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karthi-sounder

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாழ்க்கைத்துணை என்ற பந்தம் நமது மற்ற எல்லா பந்தங்களையும்விட அதிமுக்கியமானது. மனைவியை இழந்த ஆணுக்கு தபுதாரன் என்று பெயர். கைப்பெண்களைப்பற்றி அதிகம் பேசும் சமூகம் ஏனோ தபுதாரன்கள் பற்றி பேசுவதில்லை. இந்த கதையிலும் ஓர் தபுதாரனின் வாழ்க்கையை நாம் பார்த்து வரலாம்...

    1

    நகரத்தின் சலசலப்பு இல்லாமல் கிராமத்தின் சாயலில் சில மாறியும் பல மாறாமலும் இருந்த ஊரில் கடையோரத் தெருவில் சிறுவீட்டின் உள்ளே தொலைக்காட்சி பெட்டியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. வணக்கம். இன்றைய முக்கியச் செய்திகள். பத்மஸ்ரீ விருது பெறுகிறார் நமது மாநிலத்தைச் சேர்ந்த தபுதாரன் யூடியூப் சேனல் (Youtube Channel) உரிமையாளர் திரு. தாரங்கன் அவர்கள் இந்த ஆண்டு மொத்தம் 119 பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அதில் 26 கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடம்பிடித்துள்ளனர். ஏழு பத்ம விபூஷண், 10 பத்ம பூஷண் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். நமது மாநிலத்தைச் சேர்ந்த திரு. தாரங்கன் அவர்களும் சிறந்த சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாரங்கன் என்பவர் 73 வயது... என்று செய்திகள் தொடர, தான் கொடுத்திருந்த தகவல்களை செய்திகளாக வாசித்துக் கொண்டிருந்தாள் அந்த பெண். அதில் மனது லயிக்காமல் தனது சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்தவர் சமயலறை போன்ற அறையில் அடுப்பை பற்ற வைத்து தண்ணீர் காய வைத்தார். தண்ணீர் சற்றே கொதித்து வந்ததும் அதில் தேயிலை சிறுதும் ஒரு சிறு வெல்லக்கட்டியும் போட்டவர், சில விநாடிகள் கொதிக்கவிட்டு இறக்கினார்.

    தாத்தா... என்று உள்ளே நுழைந்தான் வசந்தன்.

    வாடா வசந்தா... தேத்தண்ணி குடிக்கியா? இப்பத்தே இறக்குனேன்... என்று தாரங்கன் கேட்க,

    அதெல்லாம் வேணாம்... நியூஸ்ல எல்லாம் சொன்னானுவளா? சரியா இருந்துச்சா?

    ஆமா செய்தி வச்சேன்... ஆனா கவனிக்கல... செத்த இரு... புறக்கால போயிட்டு வாரேன்... என்று வசந்தனை விட்டுச் சென்றவர் வீட்டின் பின்புறம் இருந்த தென்னை மரத்தினால் ஆனா சிறு தடுப்பின் உள்ளே குளித்துவிட்டு புது பட்டாபட்டி அணிந்து வந்தார்.

    வசந்தா டவுனுக்கு போவனும்... வேலை இருக்கு... என்று சொல்ல,

    அதென்ன நீங்க புதன் கிழமையானா டவுனுக்கு கிளம்புறீங்க... என்ன விஷயம்?

    இன்னைக்கு புதனாக்கும்? நாளு கிழம எல்லாம் யாரு கண்டா... விரசா போயிட்டு வாரேன்... என்று தனது சட்டையை அணிந்துகொண்டு கிளம்ப,

    அப்போ இன்னைக்கு அடுப்பு கூட்ட வேண்டாம்ல... நானும் உங்களோடயே வாரேன்...

    எங்கூட எதுக்குலே வர்ற... போய் பொழப்ப பாரு...

    யோவ் தாத்தா, அடுப்பு கூட்டுனாதான எனக்கு வேல... இல்லைன்னா என்ன பொழப்பு...

    சரி போய் வீட்ல இரு... நான் போயிட்டு வாரேன்... என்று அருகில் இருந்த டவுனுக்கு கிளம்பினார்.

    ***

    ஊருக்குள் இருந்த சில முக்கியத் தலைகள் சுல்தானின் முன்பு அமர்ந்திருக்க, சுல்தான் சற்றே இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான். அவனுக்கு மிகவும் நெருக்கமான தலை ஒன்று பேச்சைத் தொடங்கியது.

    இந்த தடவை சென்னை அனுப்பனும்... ?! என்று கேள்வியாக இழுக்க,

    சரக்கு நாளைக்கு சாயந்திரம் பார்ட்டி கைல இருக்கும்...

    ஒன்னும் பிரச்சனை இல்லையே...

    வேற எதுவும் பேசணுமா...?

    அந்த மினிஸ்டர் வழக்குல... என்று இன்னொரு தலை ஆரம்பிக்க,

    எந்த ஜெயில்...

    புழல்...

    வெற்றி... என்ற குரலுக்கு சுல்தானின் நாற்காலிக்குப் பின்னே நின்றவன்,

    சரிண்ணே... பாத்துக்கிறேன்... என்று மெலிதாக குரல் கொடுக்க, எவருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் தனது நாற்காலியில் இருந்து எழுந்து தனது அறைக்குள் நுழைந்துவிட்டான்.

    சுல்தானின் பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைக்கு தேதியில் ஊருக்குள் மட்டுமல்ல மாநிலத்திலும் அரசியல் வட்டத்திலும் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் ஓங்கி இருக்கும் கை சுல்தானின் கைதான் என்றால் அது மிகையாகாது. தனது 39-வது வயதில் இருக்கும் சுல்தான் அரசியல்வாதிகளின் நண்பனும், காவல்துறையின் பட்டியலில் முதல் இடம் பெற்றவனும், காவல்துறை அதிகாரிகளின் சொப்பணமுமாய் இருப்பவன். அவனுக்கென்று நிழல் உலகில் அதிகமான வியாபாரங்கள் உண்டு. நிகழ்காலத்தில் மிகவும் செல்வாக்குமிக்க மாஃபியா டான் என்று பெயர் இருந்தாலும் நடையுடையில் மிடுக்கு, சொகுசு கார்கள், விலையுயர்ந்த பொருட்கள் என ஆடம்பரமான வாழ்க்கை முறையால் ஒரு style icon போலத்தான் பார்க்கப்பட்டான். கொள்ளை, கடத்தல், ஒப்பந்தக் கொலை, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மதுபானக் கூடங்கள், சட்டவிரோத மதுபானம் தயாரித்தல் மற்றும் பூட்லெக்கிங் (சட்டவிரோத உற்பத்தி, விநியோகம் அல்லது பொருட்களின் விற்பனை, குறிப்பாக மது) என்று பெரிய சாம்ராஜ்யத்தையே ஆளுபவன் சுல்தான். குறிப்பாக சட்டவிரோதமாய் மதுபானங்களை விநியோகிப்பதில் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தான். ஊருக்குள் சுல்தானுக்கு தெரியாமல் எவரும் எதையும் வாங்கவும் விற்கவும் முடியாத அளவிற்கு அவனது அதிகாரமும் ஆதிக்கமும் இருந்தது.

    ***

    அந்த பொறுக்கிப்பயல கட்டிக்கிட்டு நீ நாசமாதாண்டி போகப்போற... என்று மண்ணள்ளி தூவிட்டு கரித்துக்கொட்டியவர் தபுவின் தாய் சபீனா.

    எனக்கு புறந்தது செத்துருச்சுன்னு நெனைச்சுக்கிறேன்... என்று துண்டை உதறி தோளில் போட்டபடி வீட்டிற்குள் போய்விட்டார் தபுவின் தந்தை அப்துல்லா.

    அக்கம் பக்கம் இருந்த கூட்டம் எல்லாம் ஏதேதோ பேச, மாலையும் கழுத்துமாய் தனது தாய் வீட்டிற்கு வந்த தபு பெற்றோர் தன்னையும் தன் காதலையும் மறுத்ததால் அழுது வடிந்த முகத்துடன் தன் கணவன் கையை இறுக்கமாயும் உறுதியாயும் பற்றியபடி அந்த இடத்தையும் ஊரையும்விட்டு கிளம்பினாள்.

    தபு என்றழைக்கப்படும் தபஸம் பாத்திமா கல்லூரி செல்லும் வயதில் வேறு மதத்தை சார்ந்த அதிலும் அடிதடி கட்டபஞ்சாயத்து என்று பொறுக்கித்தனம் செய்யும் ரங்கனை காதலித்து மணந்து கொண்டதுதான் அவர்கள் குடும்பத்தில் இன்றைய மிகப்பெரிய கவுரவ பிரச்சனை. அதற்குமுன் இருந்த வறுமை, கடன் தொல்லை எல்லாம் இப்போது பிரச்சனையாக தெரியவில்லை. உயிரைவிட மானம் பெரிது என்று எண்ணிய குடும்பத்தில் இருக்கும் பெண், இப்படி ஒரு உதவாக்கரை மனிதனை படிக்கும் வயதில் பெற்றவர்களை மீறி மணந்ததுதான் அவர்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. தபுவிற்கு பிறகு பள்ளி செல்லும் வயதில் ஒரு தம்பி இருக்கிறான் அவர்களுக்கு.

    ***

    சுல்தான் மற்றும் அவனின் சாம்ராஜ்ஜியம், தாரங்கன் மற்றும் வசந்தன், தபுவும் அவளது காதல் கணவன் ரங்கனும் என முன்னேறும் தபுதாரன்.

    2

    நேத்துவச்ச கருவாட்டு குழம்பு இருக்கு... பழையசோறு போட்டு இரண்டு வாய் சாப்பிட்டு போ பாத்திமா... என்று சபீனா அவரது மகளிடம் சொல்லியபடியே பின்வாசலில் துணியை அலசி காய வைத்துக்கொண்டிருக்க,

    எனக்கு வேணாம்... தம்பிக்கு கொடு... என்று விரைவாக தனது கல்லூரிப் பையை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டாள். அவளைப் பொருத்தவரை தன்னால் முடிந்த அளவு தனது குடும்பத்திற்கு செலவுகளை குறைத்துத்தர வேண்டும் என்பதே. அவளது தந்தை ஊருக்குள் தேநீர்க் கடை ஒன்று வைத்துள்ளார் என்றாலும் அதில் வரும் வருமானம் குடும்பம் நடத்தவும் அவரது மருத்துவ செலவை பார்ப்பதற்கும் என மாதக் கடைசியில் இழுபறியாகத்தான் இருக்கும். இதில் பாத்திமாவிற்கும் அவளது தம்பி இக்பாருக்கும் படிப்பதற்கு பணம் என்று கேட்டால் எங்கே செல்வர். அவளது அன்னையும் வீட்டிலும் கடையிலும் உதவுவதோடு சரி, வேறு வெளி வேலை என்று செல்வது கிடையாது. அதனால் கூடுமானவரை குடும்பத்தில் தன்னால் சுமை இருக்கக்கூடாது என்று எண்ணிக்கொள்வாள். அவள் சாப்பிடவில்லை என்றால், அதை தம்பியோ அல்லது அன்னையோ ஒரு வேளை சாப்பிடுவார்கள் என்ற நல்லெண்ணம் மட்டுமே அவளுக்கு.

    நாட்கள் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது அவள் கல்லூரி சேரும்வரை. அவளது முதலாம் ஆண்டில் அவள் தந்தைக்கு இருதய நோய் வந்த பிற்பாடுதான் குடும்பத்தில் இப்போது இத்தனை அதிகமாய் பணத்தேவை வந்துவிட்டது. மருந்து வாங்குவதற்கே அதிகம் பணம் செலவாகிறது என்று எண்ணி, இரண்டு நாட்கள் மருந்து சாப்பிடாமல் இருந்து மிகப்பெரும் தொகையை அபராதமாக மருத்துவமனைக்கு கட்டியபின் மருந்துகளை நிறுத்தாமல் உட்கொள்கிறார் பாத்திமாவின் தந்தை அப்துல்லா. பாத்திமா தன்னால் முடிந்த உதவிகளை வீட்டில் செய்தாலும், படித்துக்கொண்டே ஏதாகிலும் வேலை பார்க்க முடியுமா, அப்படியாகிலும் குடும்ப கஷ்டத்தை தன்னால் முடிந்த அளவு குறைக்க முடியுமா என்று பிரயாசப்பட்டாள். காசு சம்பாரிக்கலாம், எவ்ளோவேணா சம்பாரிக்கலாம் ஆனா நீ வேலை செய்வியா? என்ற ஒரு நெருங்கிய தோழியின் கேள்வியில் அவளை பார்த்தவள்,

    அப்படி என்ன வேலை... என்னால முடியாதா என்ன? நீ சொல்லு... என்று கேட்க, அவளது தோழி பவித்ரா அறிமுகப்படுத்திய வேலையைத்தான் அவளுக்கு திருமணம் ஆகும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது காதல் கணவன் ரங்கனை சந்தித்ததுகூட அவள் வேலை செய்யும் இடத்தில்தான். அவளை மிகவும் பிடித்துப்போய், அவளை விரும்பி திருமணம் செய்துகொண்டான் ரங்கன்.

    ***

    டவுனுக்கு சென்ற தாரங்கன் திரும்பி வருவதற்கு மதியம் 3 மணிக்கு மேல் ஆனது. வெயிலில் களைத்துப்போய் வந்தவர், தனது வீடுவரை நடக்கத் தெம்பில்லாமல், சற்று முன்னரே இருக்கும் வசந்தன் வீட்டின் திண்ணையில் சென்று அமர்ந்தபடி குரல் கொடுத்தார்.

    வசந்தா... வசந்தா...

    வாங்க தாத்தா... எங்க வெளிய போய்ட்டிங்க போலருக்கு... அவரு இன்னைக்கு வேலை இல்லனு வந்து வீட்டுக்குள்ள படுத்துட்டாரு... என்று வந்தாள் வசந்தனின் மனைவி ரேவதி.

    வசந்தனுக்கு திருமணமாகி ஒரு ஆண்டும் சில மாதங்களும் கடந்திருக்கும் என்பதாய் தாரங்கனின் நினைவு. அவருக்கு தேதிகள் எல்லாம் நினைவில் இல்லை. அவர் மனதில் அழியாமல் பதிந்துபோன விடயம் ஒன்றே ஒன்றுதான். அது எவருக்கும் தெரியாத ரகசியம். ஒரு பெருமூச்சொன்றை விட்டவர் ரேவதி கொடுத்த தண்ணீர் சொம்பை வாங்கி முகம் கழுவி அதே நீரை கொஞ்சம் பருகியவர், வழிந்த நீரை முகவாய்கட்டையில் இருந்து வழித்து உதறியபடி,

    "உனக்கு உடம்பு எப்டித்தா இருக்கு? ஆசுபத்திரி

    Enjoying the preview?
    Page 1 of 1