Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suvadugalum Thadangalum
Suvadugalum Thadangalum
Suvadugalum Thadangalum
Ebook184 pages1 hour

Suvadugalum Thadangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எதிர்பார்த்த நிகழ்வுகள், நிறைவேறிய ஆசைகள், நிராசையாகிப்போன கனவுகள், வந்து சேர்ந்த உறவுகள், விட்டுச்சென்ற அன்பு என பல்வேறு விதங்களில் காலம் தனது சுவடுகளை பல விதங்களில் என்னில் பதித்துவிட்டு சென்ற, என்னை தாக்கிய அனுபவங்கள் கற்பனைகள் கலந்த சிறுகதைத் தொகுப்பு தான் "சுவடுகளும் தடங்களும்".

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580164309712
Suvadugalum Thadangalum

Read more from Karthi Sounder

Related to Suvadugalum Thadangalum

Related ebooks

Reviews for Suvadugalum Thadangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suvadugalum Thadangalum - Karthi Sounder

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    சுவடுகளும் தடங்களும்

    சிறுகதைகள்

    Suvadugalum Thadangalum

    Sirukathaigal

    Author:

    கார்த்தி சௌந்தர்

    Karthi Sounder

    For more books

    https://www.pustaka.co.in/home/author/karthi-sounder

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கடவுளின் பார்வை

    2. மகாராணி

    3. பண்டிகை நாள்

    4. ஒழுக்கமும் உரிமையும்

    5. அவன் அப்படித்தான்

    6. மிட்டாய் பெருசு

    7. பெற்றோர்

    8. கற்றுக்கொள்

    9. வாழுறேன் நான்

    10. அன்பு ஜெயிக்கும்

    11. கமலிஞமலி

    12. டைனோபார்க்

    13. தூறல் நின்னு போச்சு

    14. இருவாச்சி

    15. அழுகுரல் கேட்கிறதா?

    16. ஓயவில்லை

    17. ஏணிப்படிகள்

    18. சிவப்பு விளக்கு பகுதி

    19. அவளின் வேண்டுதல்

    20. கன்னி கழியாதவள்

    21. காதல் என்னும் பொக்கிஷம்

    22. பூவும் பொட்டும்

    23. கண்ணில் தூசி

    24. குழந்தைகள் தினம்

    25. தலையோலப் பறம்பு தங்கம்மா

    26. விபச்சாரம் செய்யாதே

    1. கடவுளின் பார்வை

    நான் கடவுள். சிலர் நான் இருப்பதாக நம்புகிறார்கள், சிலருக்கு நான் இருக்கிறேனா இல்லையா என்கிற சந்தேகம், சிலருக்கு நான் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம், சிலருக்கு நான் இல்லை என்ற ஆதங்கமும் கோபமும், சிலருக்கு நான் ஒரு கேலிப்பொருள். இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையில் என்னுடைய பாரிமாணங்கள் வெவ்வேறுதான் என்றாலும் ஏதாகிலும் ஒரு பரிமாணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நான் இருக்கிறேன்.

    உங்கள் பார்வையில் நான் என்னவாக இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு எந்த ஒரு கவலையும் இதுவரை இருந்ததில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை. உங்கள் அபிமானம் என்பது எனது தன்மையை குறைக்காது என்ற புரிதல் எனக்கிருக்கிறது என்பதால் என் பார்வையில் உங்களை இப்போது பார்க்க வைக்கலாம் என்று நினைத்தேன்.

    எனது பார்வையில் ஒரு சராசரியான குடும்பம்தான் பாண்டியனின் குடும்பம். ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன், தேவைகளுக்கு ஏற்ப புரிந்து நடந்துகொள்ளும் மனைவி என்று தன்னளவில் திருப்தியான வாழ்க்கை வாழும் ஒரு மனிதன்.

    குடும்பமாக வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்து தனது குடும்பத்தை வார இறுதியில் வெளியே அழைத்துச் சென்றிருந்தான். காலையில் சென்றவர்கள் ஊரெல்லாம் சுற்றித் திரிந்து, பிள்ளைகளுக்கு கேட்டவை எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொடுத்து, பொழுதடையும் நேரம் கூட்டுக்கு திரும்பும் பறவைகள்போல தன் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்துவர, அவன் தாய் பிள்ளைகளுக்கு பழங்கள் வாங்கவேண்டுமென்று நினைவுபடுத்துகிறாள்.

    அப்படி நினைவுபடுத்தச் சொல்வதே அவர்களுக்குப்பின் இருந்து இயக்கும் நான்தான் என்று தெரியாமல் தன் தாயின் சொல்படி வாகனத்தை ஒரு பழக்கடையில் நிறுத்த, அவனது தந்தை,

    நான் சென்று வாங்கி வருகிறேன்... என்று சொல்லிக்கொண்டு இறங்கினார்.

    காலையிலிருந்து சுற்றித் திரிந்த அலுப்பில் பிள்ளைகள் இருவரும் பாட்டி மடியிலும் அன்னை மடியிலும் ஆளுக்கு ஒன்றாக சாய்ந்திருக்க, பழக்கடைக்கு சற்று தள்ளி ஓரமாக வண்டியை நிறுத்தியிருந்தான் பாண்டியன்.

    ஏங்க மக்கா சோளம்... என்று தங்களுக்கு முன்னே ஒரு இருபது அடி தூரத்தில் நின்ற தள்ளுவண்டியை காண்பித்து அவனது மனைவி கேட்டாள். அவளது மனதில் அப்போது அந்த ஆசையை விதைத்ததும் நான்தான். அதையும் கூட உணராமல்,

    ரோடு மேல நிக்கிறோம் சந்தியா... நான் இறங்க முடியாது... பெரிய வண்டி எதுவும் வந்தா வழி விடணும்... நீ போய் வாங்கிட்டு வரியா? என்றான்.

    சரி ஓகே... ஐம்பது ரூபாய் கொடுங்க... என்று வாங்கிக் கொண்டவள் பிள்ளையை அவனிடம் விட்டுவிட்டு நடந்து முன்னே செல்ல, பாண்டியன் மகளை மறுபடியும் தூங்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.

    சந்தியா தள்ளுவண்டி கடைக்குச் சென்று,

    அக்கா ஒரு கார்ன் கொடுங்களேன்... என்று நிற்க, ஒரு நடுத்தர வயது பெண்மணிதான் அங்கே நின்று வியாபாரம் செய்துகொண்டிருந்தாள். அவள் பெயர் சரோஜா, அவள் பற்றி சந்தியாவிற்கும் தெரியாது, சந்தியா பற்றி சரோஜாவிற்கும் தெரியாது. இவர்கள் இருவர் பற்றியும் இவர்கள் வாழ்க்கையில் ஏன் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றியும் எனக்கு முன்பே தெரியும், நீங்களும் தெரிந்துகொள்வீர்கள்.

    சந்தியா கேட்டதும் சரோஜா ஒரு மக்காச்சோளக் கதிரை எடுத்து நெகிழிப்பையில் போட்டுக்கொடுக்க,

    அக்கா ரெண்டு கொடுங்க... ஒரு கார்ன் எவ்ளோ? என்று விசாரித்தாள் கையில் இருந்த ஐம்பது ரூபாய்த் தாளை பிடித்துக்கொண்டு.

    ஒன்னு முப்பது ரூவா கண்ணு... என்று இரண்டு சோளக் கதிரை அவளிடம் நீட்ட,

    ஐயோ... ஐம்பது ரூபாய்தான் எடுத்துட்டு வந்தேன்... ஒன்னு இருபது ரூபாய் இருக்கும்னு நெனச்சேன்... என்று சிரிக்க,

    இருவது ரூவா எல்லாம் கட்டுப்படியாகாது கண்ணு... என்று புன்னகைத்தார் சரோஜா.

    அடடா... ரெண்டு பிள்ளைகளை பெத்துட்டேனே... ஒன்னு வாங்கினா ரெண்டும் சண்டை போடும்... இருங்கக்கா போய் காசு வாங்கிட்டு வரேன்... என்று வெள்ளையாக சிரித்துவிட்டு செல்ல, அவளது பேச்சில் சிரித்தவர் அவள் சென்ற திசையைப் பார்க்க, அவள் காருக்கு அருகே சென்று கார்க்கதவின் வழியே பணத்தை வாங்கிக்கொண்டு திரும்ப நடந்து வந்துகொண்டிருந்தாள்.

    இந்தாங்கக்கா பத்து ரூபாய்... சரியா போச்சா... தேங்க்ஸ்... என்று சொல்லிக்கொண்டு சோளக்கதிர்கள் இரண்டையும் எடுத்து நடந்து வர, பாண்டியன் அவளை அங்கேயே நிற்கும்படி சைகை செய்தான். பழங்கள் வாங்கி முடிந்துவிட்டதாலும், அந்த வழியில்தான் செல்ல வேண்டும் என்பதாலும் அவன் வாகனத்தைக்கொண்டு வந்து அவளருகில் நிறுத்த, சந்தியா வண்டியில் ஏறிக்கொள்ளும் நேரம், சரோஜா அவசரமாக ஒரு சோளக்கதிரை எடுத்து ஒரு நெகிழிப்பையில் போட்டவள் வாகனத்தை நெருங்கினாள்.

    சரோஜா வருவதை பார்த்து சந்தியா கேள்வியாக ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்க,

    இந்தா கண்ணு... வச்சுக்கோ... அடுத்தமுறை அக்காவுக்கு நல்ல புடவை ஒன்னு எடுத்துட்டு வா... என்று சொல்லி வெள்ளையாக சிரிக்க,

    சரிக்கா... தேங்க்ஸ் க்கா... என்று அதனை பெற்றுக்கொள்ள, பாண்டியன் வாகனத்தை அங்கிருந்து மெதுவாக நகர்த்தினான்.

    கார்ன் தான வாங்கப்போன? என்ன பேசுன அவங்ககிட்ட... என்று பாண்டியன் சிரித்தபடி கேட்க,

    ரெண்டு பிள்ளைகளை பெத்துட்டேனே... ஒன்னு வாங்கினா ரெண்டும் சண்டை போடும்னு சொன்னேன்... அவங்க என்ன நெனைச்சாங்களோ இப்போ இன்னொன்னு கொடுத்துட்டு போறாங்க... என்றாள்.

    புடவை எடுத்து கொடுக்கணும்னு சொல்றாங்க? என்று பாண்டியன் சிரிக்க,

    தெர்லயே... என்று சிரித்தாள் சந்தியாவும். அவர்கள் வீட்டிற்கு செல்லும் சாலையில் மாற்றுப்பாதை காண்பித்து தடுப்பணை வைத்திருக்க, வாகனத்தை அடுத்த சாலையில் செலுத்தி வீடு வந்து சேர்ந்தான் பாண்டியன்.

    வீட்டிற்கு வந்தபின் அவரவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, சந்தியாவை சரோஜாவும் சரோஜாவை சந்தியாவும் மறந்துவிட்டார்கள் என்றாலும் நான் அவர்கள் இருவரையும் மறக்கவில்லை.

    இரண்டு வாரங்களுக்குப்பின் வீட்டினை ஒதுக்கிய சந்தியா தனது பழைய புடவைகள் எல்லாம் கழிக்கலாம் என்று மூட்டை கட்ட, ஏனோ பெயரே தெரியாத தள்ளுவண்டிக் கடை அக்காதான் நினைவு வந்தாள். அந்த அக்காவை நினைவுபடுத்தியது நான் என்று அறியாமல் தன் கணவன் புறம் திரும்பியவள்,

    ஏங்க இப்போதான் ஞாபகம் வருது... இந்த புடவை எல்லாம் கடைல போட்டா ஒரு 500 ரூபாய் கூட வராது... பேசாம அந்த தள்ளுவண்டிக் கடை அக்காக்கு கொடுப்போமா? என்று கேட்க,

    யாருடி அது தள்ளுவண்டிக் கடை அக்கா? புரியல... என்றான் பாண்டியன்.

    ஐயோ... சண்டே கார்ன் வாங்குனோமே... அந்த அக்காகூட எக்ஸ்ட்ரா ஒரு கார்ன் கொடுத்துட்டு எனக்கு புடவை கொண்டுவான்னு சொன்னாங்களே... என்று பாண்டியனுக்கு நினைவுபடுத்தினாள்.

    ஆங்... ஓகே ஓகே... சரி பேக் பண்ணு... கொடுத்துட்டு வரலாம்... என்றான்.

    இருவரும் இந்த வார இறுதியில் அந்த பெயர் தெரியாத அக்காவை நோக்கிச் செல்ல, அவர் எப்போதும்போல மக்காச் சோள கதிர்கள் மரவள்ளிக்கிழங்கு என்று வேக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்.

    அக்கா... என்று சந்தியா தனது பையை எடுத்துக்கொண்டு அவரிடம் நெருங்க,

    சொல்லு கண்ணு... என்ன வேணும்... சோளமா கப்பையா? என்றார்.

    இல்லக்கா... போன வாரம் வந்தேனே... நீங்ககூட புடவை வேணும்னு கேட்டீங்களே... அதான் கொண்டு வந்துருக்கேன்... என்று பையை அவரிடம் கண்களால் காண்பிக்க, அவருக்கு அப்போதுதான் அவள் முகம் நினைவு வந்தது.

    ஏங்கண்ணு நான் ஒரு வார்த்தை சொன்னேன்னு இம்புட்டு தூரம் வந்துட்டியே... என்று மனதார மகிழ்ந்தார்.

    இல்லக்கா... நான் புடவை அவ்வளவா கட்டுறது இல்ல... இதெல்லாம் எப்போவாச்சும் ஒரு தரம் ரெண்டு தரம்தான் கட்டிருப்பேன்... நீங்க புடவைதான் கட்டுறீங்க... நீங்க யூஸ் பண்ணுங்க... பண்டிகை வருதுல... அப்போ புதுப்புடவையோட வர்றேன்... என்று சொல்ல,

    உன் பேரு என்ன கண்ணு? என்று கேட்டார் அவர்.

    சந்தியா... சந்தியா பாண்டியன்... பசங்கபேரு விக்ரம் வித்யா... உங்க பேருக்கா? என்று கேட்டாள் அவள்.

    சரோசா கண்ணு... நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும்... என்று வாழ்த்தியவர் நான்கு சோளக்கதிர்களையும் இரண்டு மரவள்ளிக்கிழங்குகளையும் அவளுக்கு ஒரு பையில் போட்டுக் கொடுத்தார்.

    எவ்ளோ அக்கா... இத்தனை இருக்கு... நீங்க சும்மா தரவேண்டாம்... காசு வாங்கிக்கோங்க... என்று சந்தியா கேட்க,

    உன் பசங்களுக்கு பெரியம்மா கொடுத்ததா இருக்கட்டும் கண்ணு... போயிட்டு வா... என்று அனுப்பி வைத்தார்.

    சந்தியாவும் பாண்டியனும் புன்னகை முகத்தோடு அவரிடமிருந்து விடைபெற, அவர்கள் சென்றபின் பையைப் பார்த்த சரோஜா மிரண்டு போனார். எல்லாமே விலை உயர்ந்த புடவைகள், மற்றும் பட்டுப்புடவைகள்தான் இருந்தன. நிச்சயம் பழைய புடவைகள் என்று யாரும் சொல்ல முடியாது.

    தனக்கு உடுத்திக்கொள்ள ஒரு நல்ல புடவைகூட இல்லையே என்று வருந்திய சரோஜாவிற்கு இந்த புடவைகள் மிகப்பெரிய வரமே. தன் வாழ்நாளில் கடைகளில்கூட இத்தனை விலை உயர்ந்த புடவைகள் இருக்கும் பிரிவிற்கு சென்று பார்க்கமாட்டார் என்பது உண்மையே.

    சரோஜாவின் பார்வையில் சந்தியா மிகவும் உன்னதமானவள், எண்ணங்களால் உயர்ந்தவள். ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1