Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhruva Natchathiram
Dhruva Natchathiram
Dhruva Natchathiram
Ebook124 pages44 minutes

Dhruva Natchathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கை என்னும் நந்தவனத்தை செழிப்பானதாக்க நல்ல சிந்தனைகளாலும், எண்ணங்களாலும் உரமிட வேண்டும். அதற்கு சரியான பருவம் இந்த குழந்தைப் பருவம்தான். அனுபவத்தில் கனிந்த அறிவுரைகள் நாம் நடப்பதற்கு அவர்கள் போட்டுக் கொடுக்கும் ராஜபாட்டைகள் அல்லவா? இளம் சிறார்களின் மனங்களைப் பக்குவப்படுத்தும் நோக்கத்துடன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இச்சிறுகதைத் தொகுப்பினை அவர்கள் முன் வைக்கிறேன்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580160509400
Dhruva Natchathiram

Related to Dhruva Natchathiram

Related ebooks

Reviews for Dhruva Natchathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dhruva Natchathiram - W.R. Vasanthan

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    துருவ நட்சத்திரம்

    சிறுகதைகள்

    Dhruva Natchathiram

    Sirukadhaigal

    Author :

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. ஊற்றுத் தண்ணீர்

    2. மலை நகர்ந்தது

    3. வைரமும், பூதக்கண்ணாடியும்

    4. குருவே, வணக்கம்!

    5. வெற்றிக் கனி

    6. ஏற்றி விடும் ஏணி

    7. துருவ நட்சத்திரம்

    8. துலாக்கோல்

    9. அன்புக் கற்கள்

    10. தாமத மன்னன்

    என்னுரை

    வாழ்க்கை என்பது ஒரு நந்தவனம். அது செழிப்பானதாக இருக்க வேண்டுமாயின், நம் மனம் என்ற பூமி வளம் மிக்கதாய் இருந்திடல் வேண்டும். அப்போதுதான் அதில் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும். அந்தப் பூந்தோட்டம் வளம் மிக்கதாய் ஆவதற்கு நல்ல சிந்தனைகளாலும், எண்ணங்களாலும் உரமிட வேண்டும். அதற்கு சரியான பருவம் இந்த குழந்தைப் பருவம்தான்.

    நல்லெண்ணங்களை சிறுவர்களுக்கு ஊட்டுகிற பெரும் பொறுப்பு பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், சமுதாய உணர்வுடைய நல்லறிவாளர்களையும் சார்ந்துள்ளது. அவர்கள் இன்று எடுக்கிற முயற்சிகளிலேயே எதிர்கால சமுதாயத்தின் மன ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது. வெறும் செங்கல் குவியல் கட்டிடமாகி விடாது அல்லவா? அறிவும், அனுபவமும், ஆற்றலும் ஒன்று சேரும்போதுதான், அது கண்ணைக் கவரும் கட்டிடமாக எழுந்து நிற்கும். அது போன்றதுதான் சிறார்களின் வாழ்க்கையை கட்டி எழுப்புவதும்.

    இன்றைய தலைமுறையில் காணும் சுயபோக்கும், அடங்காமையும் கவலையுற வைப்பதாக இருக்கிறது. குறிப்பாக தங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர்களையே அலட்சியம் செய்கிற மனவோட்டம் பெருகி வருவது வருந்தத்தக்கது.

    தங்கள் குறிக்கோள்களை அடைவதில் வெற்றி பெற்ற எந்தவொரு மனிதரின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலும், அவர் தனக்கு வழிகாட்டியாக யாராவது ஒரு மாமனிதரைக் கொண்டிருப்பார்.

    அந்த இலட்சியவாதியின் வாழ்க்கை அனுபவங்கள், ஏற்றத் தாழ்வுகள், விடாமுயற்சி, உழைப்பு எல்லாம் இவருக்கு ஊக்கமாக, உரமாக அமைந்திருப்பதைக் காணலாம்.

    அனுபவத்தில் கனிந்த அறிவுரைகள் நாம் நடப்பதற்கு அவர்கள் போட்டுக் கொடுக்கும் ராஜபாட்டைகள் அல்லவா? அதை அலட்சியம் செய்வது அறிவுடைமை ஆகாது.

    இளம் சிறார்களின் மனங்களைப் பக்குவப்படுத்தும் நோக்கத்துடன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற இச்சிறுகதைத் தொகுப்பினை அவர்கள் முன் வைக்கிறேன்.

    இந்த நூல் 1998-ம் வருடம், சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், கவிஞர் செல்ல கணபதி அவர்கள் வழங்கும் செல்லப்பன் அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.

    என் கற்பனையில் செதுக்கிய கதாபாத்திரங்களையும், கதை நிகழ்ச்சிகளையும் சித்திரமாக வடிவமைக்கும் பொறுப்பினையும் நானே ஏற்றுக் கொண்டேன்.

    1. ஊற்றுத் தண்ணீர்

    கடிதம் எழுதி ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் அம்மாவிடமிருந்து மணியார்டர் வந்துவிட்டது, கலைவாணியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. ஆனாலும் மனதில் இன்னொருபுறம் பெரும் குழப்பம் தோன்றி அவளை வாட்டியது.

    தபால்காரர் கொடுத்துவிட்டுச் சென்ற ஆயிரம் ரூபாயை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவள் இவ்வளவு பணத்திற்கு அம்மா என்ன செய்திருப்பாள் என்று குழம்பித் தவித்தாள்.

    யாரிடமாவது கடன் வாங்கி இருப்பாளோ? இல்லை, வீட்டிலுள்ள அண்டா குண்டா எதையாவது அடகு வைத்திருப்பாளோ? அப்படி வைத்திருந்தாலும் இவ்வளவு பணத்தைச் சுலபமாகப் புரட்டி இருக்க முடியாதே!

    தன்னை இந்த விடுதியில் சேர்ப்பதற்கும், பள்ளிக்கூட கட்டணம் மற்றும் புத்தகத்திற்காக அம்மா எவ்வளவு செலவழித்திருக்கிறாள்! அதற்குள் இப்படியொரு பெரும் செலவை தான் ஏற்படுத்தியிருக்க வேண்டாம். பாவம், என்னைப் படிக்க வைக்க அம்மா எவ்வளவு சிரமப்படுகிறாள்.

    கண்களை மூடிக்கொண்ட கலைவாணியின் மனதில் எவ்வளவு கஷ்டங்களையும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் அம்மாவின் முகம் தோன்றியது.

    தபால்காரர் கிழித்துக் கொடுத்துவிட்டுச் சென்ற மணியார்டர் அட்டையின் தகவல் அளிக்கும் பகுதி அவள் கையில் இருந்தது. அதை மீண்டும் திருப்பிப் பார்த்தாள்.

    ‘அன்பான மகளே, நீ கேட்டபடி இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன். எதற்காக இவ்வளவு பணம் தேவைப்பட்டது என்று நீ எழுதவில்லை. தகுந்த காரணம் இல்லாமல் வீண் செலவு செய்யமாட்டாய் என்று எனக்குத் தெரியும், பணத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.

    நன்றாகப் படி.

    இப்படிக்கு

    அம்மா’

    கலைவாணியின் கண்களில் கண்ணீர் திரண்டது. அம்மாவுக்கு அவளை எப்படியாவது படிக்க வைத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆர்வம். கலைவாணியும் படிப்பில் கெட்டிக்காரியாகத்தான் இருந்தாள். தங்கள் கிராமத்தில் மேற்படிப்பிற்கு வசதி இல்லாததனால் ஏழ்மை வாட்டியபோதும் அதைப் பொருட்படுத்தாமல் இங்கு பட்டணத்தில் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தாள்.

    இந்த ஆயிரம் ரூபாய்க்காக அவள் யார் யாரிடம் போய் கையேந்தி நின்றாளோ என்பதை நினைத்துப் பார்க்கவே, அவளுக்கு வேதனையாக இருந்தது.

    ஆனால், அவளது தோழி ப்ரியா சொல்வதும் ஒரு வகையில் நியாயமாகவே தோன்றியது. அன்று அப்படித்தான் அவள் தோற்றத்தை கிண்டல் செய்த ப்ரியா, என்னடி இது. பட்டணத்துல படிக்க வந்துட்டு, இப்படி கொஞ்சம்கூட நாகரீகம் தெரியாம இருக்கியே… நம்ம வகுப்புல படிக்கிறவங்க எல்லாம் எவ்வளவு அழகா டிரெஸ் பண்ணி, டீசெண்டா இருக்காங்க… இது என்னது, பழைய தாவணியும், முயல் காது ரிப்பனுமா… சே, போடி, எவ்வளவு நிலபுலன் எல்லாம் கிராமத்துல இருக்கு. கொஞ்சம் நாகரீகமா நடக்க கத்துக்கோ என்றாள்.

    ப்ரியா பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளிடம் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள் எல்லாம் இருந்தன. அவளுடைய பங்களாவில் வேலை செய்வதற்கு மட்டும் நான்கைந்து வேலையாட்கள் இருந்தனர். அவளுடைய தகப்பனாரிடம் இருந்த ஆடம்பரக் கார் வெளிநாட்டிலிருந்து வாங்கியதாகச் சொன்னாள்.

    இவ்வளவு பெரிய செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த ப்ரியாவிடம் தன் வீட்டு நிலைமையைச் சொல்வதற்கு அவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. எனவே தானும் வசதியான குடும்பத்தில் இருந்து வருவதாகச் சொல்லி வைத்தாள். தன் ஏழ்மை நிலையைச் சொன்னால் எங்கே ப்ரியா தன்னை அலட்சியமாக நினைத்து ஒதுக்கி விடுவாளோ என்ற பயம்வேறு அவளை ஆட்டி வைத்தது.

    அறைக்

    Enjoying the preview?
    Page 1 of 1