Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விழியிலே மலர்ந்தது
விழியிலே மலர்ந்தது
விழியிலே மலர்ந்தது
Ebook128 pages45 minutes

விழியிலே மலர்ந்தது

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“அண்ணே...”
தாடை முழுவதும் நுரை வெண்தாடி போல் சிரிக்க ஷேவ் செய்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் வசந்தன் வந்து நிற்பதை உணர்ந்து “ம்...” என்றான்.
வசந்தன் இடது கையால் கேசத்தை சரி செய்தவாறே தயக்கமாக கேட்டான்.
“அண்ணே... ஒரு இருபது ரூபா பணம் வேணும்.”
கண்ணாடியில் இருந்த பார்வையை எடுத்து வசந்தன் மேல் போட்டான் கார்த்திகேயன்.
அண்ணனுடைய பார்வையை சந்தித்ததும் வசந்தனின் தலை கல்யாண பெண்ணைப் போல சட்டென்று கவிழ்ந்தது.
“எதுக்குப் பணம்?”
“இன்னைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. போகணும்.”
குரல் ரப்பராக இருந்தது.
“நீயும்ன் எத்தனை. இன்டர்வியூவிற்கு போவே? எதிலேயாவது செலக்ட் ஆகியிருக்கியா? உனக்கு பஸ்ஸுக்கு நான் கொடுத்த பணத்துல உருப்படியாக ஏதாவது வாங்கியிருந்தா கூட உபயோகமாக இருக்கும். உனக்கு அழிச்சதெல்லாம் வேஸ்ட்.”
கார்த்திகேயனின் முகத்தில் கடுமை நிலவியது.
“அண்ணே... இந்த தடவை எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும். நம்பிக்கை இருக்கு.”
“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்ன நம்பிக்கையோ என்ன இழவோ?” என்றவன் உள் நோக்கி குரல் கொடுத்தான்“ரேவதி... ஏய் ரேவதி.”
ரேவதி உள்ளிருந்து வந்தாள். கார்த்திகேயனின் மனைவி.
“அயர்ன் பண்ணி கொடுக்கச் சொன்னீங்க. சட்டையை அயர்ன் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்குள்ளே ரேவதிக்கு என்ன வேலை வச்சிருக்கீங்க?” என எரிச்சலுடன் கேட்டாள்.
“ஒரு வேலையும் இல்லை. என் பேண்ட் பாக்கெட்ல இருபது ரூபா பணம் எடுத்து இவன்கிட்ட கொடு.”
“ஏன்? எதுக்கு பணம்?” கேள்வியே மிகவும் கடுமையாக வந்தது. பார்வை வசந்தனை தாக்கியது.
வசந்தனின் தலை மறுபடியும் கவிழ்ந்தது.
“இன்டர்வியூவுக்குப் போறானாம்.”லைப் பாதையை
“ஆமா! போனாலும் வேலையை தூக்கி கையில கொடுத்துடப் போறாங்க தண்டச் செலவு.”
“சரி... சரி. குடு.”
அண்ணி ரேவதி முறைப்புடன் சென்று எரிச்சலுடன் எடுத்து வந்து வசந்தனின் கையில் திணித்துவிட்டு நின்றாள்.
பணத்தை வாங்கிக் கொண்ட வசந்தன் அறையை விட்டு வெளியே வந்ததும் உள்ளே ரேவதியின் குரல் எரிச்சலுடன் தொடர்ந்தது.
“இதப் பாருங்க... இந்த மாதிரி வெட்டி செலவு செய்யறதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.”
“என்ன பண்ணச் சொல்றே. செய்ய வேண்டிய செலவையெல்லாம் செய்து தானே ஆகணும்.”
“நல்லா செய்தீங்க. போடற சோறுதான் தண்டம்ன்னா இதுங்களுக்கு செலவுக்கு வேற கொட்டி அழணும். உங்க அம்மாவுக்கும் உங்க தம்பிக்கும் செய்யற செலவை சேர்த்துவச்சா நம்ம புள்ளைங்களுக்கு உதவும். இதப்பாருங்க. இதுவரைக்கும் செய்த செலவு போதும். உங்க தம்பியை ஒரு வேலையை தேடிக்கிட்டு உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு போகச் சொல்லுங்க. நமக்கும் புள்ளையும் குட்டியுமா ஆயிடுச்சு. இனியும் நாம அனாவசிய செலவையெல்லாம் செய்துகிட்டு இருக்கக்கூடாது. உங்க தம்பிக்கு வேலை கிடைச்சதும் உங்கம்மாஇங்க இருக்கக்கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்.” ரேவதியின் பேச்சுக்கு கார்த்திகேயன் அடங்கிப் போனான்.
கேட்டுக் கொண்டிருந்த வசந்தனுக்கு ரத்தம் கொதித்தது. பெற்ற தாய்க்கு சோறு போடுவதை பாரமாக நினைக்கும் மனிதர்களைக் கண்டு வேதனை பெருகியது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
விழியிலே மலர்ந்தது

Read more from ஆர்.சுமதி

Related to விழியிலே மலர்ந்தது

Related ebooks

Reviews for விழியிலே மலர்ந்தது

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விழியிலே மலர்ந்தது - ஆர்.சுமதி

    1

    வெகு நேரமாக அவளையே போர்த்துக் கொண்டிருந்தான் வசந்தன்.

    ராதிகா!

    அழகான கோல மயில்.

    அந்தக் கோல மயில் கோலம் இழைத்துக் கொண்டிருந்தது. எதிர் வீட்டு வாசலில் அந்த எழிலோவியம் ஒரு அழகோவியத்தை வரைந்துக் கொண்டிருந்தது. விடிந்ததும் விடியாத காலை பொழுதில் வாசலில் ஏற்றி வைத்த தீபமாய் ராதிகாவின் அழகு பளிச்சிட்டது. காலைப் பொழுதிலேயே தலைகுளித்திருந்தாள். உச்சி எடுத்து முடிந்து கூந்தலை விரித்து விட்டிருந்தாள். இருபுறமும் விழுந்த விரிந்த கூந்தலின் நுனியில் சொட்டும் நீர்த்துளி பனித்துளியாய் மின்னியது. குனிந்து அமர்ந்து குத்துக் காலிட்டு கோலம் போடும் அவளழகை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டிருந்தான் வசந்தன்.

    எதிரே விரித்து வைத்திருந்த புத்தகத்தில் கவனம் இல்லை. கவனமெல்லாம் இந்த கன்னியின் மேல்.

    வர்ணிக்கவோ வகைப்படுத்தவோ முடியாத கண்கள். ஒற்றை முத்தை சுமந்து ஒளிரும் நாசி. சிமிழாய் சிவந்த இதழ்கள். நடு நெற்றியில் தீட்டிய திலகம் நிலம் நோக்கி கவிழ்ந்த இமைகள் நிமிர்ந்தால் யாரையும் அசைய செய்யும். அந்த விழிகளின் சந்திப்பிற்காக இங்கும் அவனுடைய விழிகள். நளினமான விரல்களில் கோலப் பொடியை எடுத்து எடுத்து கோடிழுத்துக் கொண்டிருந்தாள்.

    இந்த தரிசனத்தை காணவே தினமும் அதிகாலையில் எழுந்து இந்த ஜன்னலோரம் அமர்ந்துக் கொண்டு படிப்பதாக பாவனை செய்து கொண்டிருக்கிறான்...

    ‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை.’

    நெஞ்சுக்குள் ரகசியமாக யாரோ பாடுவதைப் போலிருந்தது.

    தேகம் சிலிர்த்தது.

    பாடுவது நின்று போய் ஒரு குரல் பேசியது.

    ‘இப்படி - எத்தனை நாள் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பாய்? உன் மனதில் உள்ளதை என்றைக்கு சொல்லப் போகிறாய்? நெஞ்சுக்குள்ளே போட்டு பூட்டி வைப்பதினால் என்ன லாபம்?

    இந்த கேள்வி அவனுடைய மனதில் தோன்றியதும் மேசை மீதிருந்த நீலநிற டைரியை அவனுடைய கைகள் எடுத்தன. ஒவ்வொரு பக்கமாய் புரட்டின.

    இந்த வீட்டிற்கு குடி வந்த அன்றையிலிருந்து நேற்று வரை ராதிகாவை பார்க்கும்போது தோன்றிய எண்ணங்களையெல்லாம் வடித்து வைத்திருக்கிறான் வாசித்து வாசித்து தன் நேசிப்பை ஆழமாக்கிக் கொள்கிறான்.

    இன்றைக்கு அழகாக அவள் கோலமிட்ட கோலத்தை வார்த்தைகளைக் கொண்டு வடிவமைக்க பேனாவை எடுத்து திறந்தன.

    அதே நேரம் அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

    திரும்பியபோது தெரிந்தாள். அம்மா, காபி மணத்தது அவளுடைய கையில்.

    என்னப்பா... இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் எழுந்திட்டே.

    ஆமாம்மா! படிக்க வேண்டியது இருந்தது. * படிச்சு முடிச்சிட்டாலும் தினமும் எழுந்து காலையிலே படிக்கறே. படிப்பு தான் முடிச்சிட்டே அப்புறம் என்ன படிக்கிறே? என்றபடி காபியை மேசை மீது வைத்தாள்.

    படிச்சு முடிச்சு பட்டம் வாங்கினா என்னம்மா? படிப்புக்கு ஏது எல்லை. இப்படியெல்லாம் படிச்சா தான் இன்டர்வியூவுக் கெல்லாம் போனா டாண் டாண்னு பதில் சொல்ல முடியும். என்று சிரித்தான் அவன். உண்மையில் அவன் அதிகாலையில் எழுந்து படிப்பதன் காரணம் புரியவில்லை அம்மாவிற்கு. பாம்

    இருந்தாலும் நீ இந்த வீட்டுக்கு வந்தபிறகு தான் இப்படி அதிகாலையில் எழுந்து படிக்கிறே. காலேஜ்ல படிக்கும் போது கூட இப்படியெல்லாம் காலையில எழுந்து படிக்க மாட்டியே.

    அது... வந்து அம்மா. இந்த ரூமோட அமைப்பு அப்படி. இந்த ஜன்னல் வழியா வர்ற காற்று மனுஷனை தட்டி எழுப்புது. தூக்கம் போய்டுது. ரொம்ப புத்துணர்வா இருக்கு. அதான் எழுந்திடறேன். இந்த ஜன்னல்கிட்ட உட்கார்ந்து படிச்சா படிக்கிறதெல்லாம் சட்ன்னு மூளையில பதிஞ்சுடுது. இந்த வீட்டுக்கு வந்ததிலேர்ந்து நிறைய படிக்கிறேன். எந்த இன்டர்வியூவிற்கு போனாலும் டக்கு டக்குன்னு பதில் சொல்லுவேன்.

    பதில் சொல்லுவே. ஆனா வேலை மட்டும் கிடைக்காது. நீயும் எத்தனையோ இன்டர்வியூவிற்கு போய்ட்டு வந்திட்டேன். வேலை கிடைச்ச பாடு இல்லை.

    அம்மா சலித்துக் கொண்டாள். அதுக்கென்னம்மா பண்றது? அதுக்குன்னு ஒரு நேரம் வரவேண்டாமா?

    என்னைக்கு நேரம் வர்றது. என்னைக்கு நீ வேலைக்குப்போறது. உங்கப்பா உங்களுக்கு சேர்த்து வச்சுட்டுப் போன சொத்து இந்த படிப்பு தான். அதை வச்சுத்தான் பிழைக்கணும். உன் அண்ணன் ஒருத்தனோட சம்பளத்தை கொண்டு குடும்பத்தைஓட்ட வேண்டியிருக்கு. நீயும் நாலு காசு சம்பாதிச்சா நல்லாயிருக்கும்.

    அம்மாவின் சொற்கள் காதில்விழ விழ கைகள் அனிச்சையாக டைரியை மூடின.

    யதார்த்த உலகம் உறைத்தது. மனம் விறைத்தது. தன்னுடைய நிலையை அம்மா அடிக்கடி உணர்த்தும் போதெல்லாம் பறந்துக் கொண்டிருக்கும் பறவை ஒன்று திடீரென சிறகொடிந்து தரையில் விழுந்ததைப் போன்றிருந்தது. துடித்தது.

    அவனுடைய எண்ணப் பறவை மிதந்துக் கொண்டிருப்பது காதல் உலகில்.

    காதல் உலகம் ரம்மியமானது. எண்ணங்கள் வண்ணம் பூசிக் கொள்ளும் நளினமாக நடக்கும். உணர்வு கடலில் நீந்தும். ஆசை எனும் காற்றில் உலாவும் கற்பனை வானில் பறக்கும். எண்ணங்கள் நடைபோடும் பாதை போதையானது. அந்த போதையில் துன்பங்களின் முகவரி தொலைந்து போகின்றன. கவலைகளின் சுவடுகள் கரைந்து போகின்றன.

    யதார்த்தத்தின் நிலையை தூண்டிவிட்டு விட்டு அம்மா போய் விட்டாள்.

    நீண்டதொரு பெருமூச்சுடன் ஜன்னல் வழியே தன் காதல் உலகை தேடினான்.

    அவனுடைய காதல் உலகம் காணாமல் போயிருந்தது. ராதிகா உள்ளே போய்விட்டிருந்தாள்.

    2

    "அண்ணே..."

    தாடை முழுவதும் நுரை வெண்தாடி போல் சிரிக்க ஷேவ் செய்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் வசந்தன் வந்து நிற்பதை உணர்ந்து ம்... என்றான்.

    வசந்தன் இடது கையால் கேசத்தை சரி செய்தவாறே தயக்கமாக கேட்டான்.

    அண்ணே... ஒரு இருபது ரூபா பணம் வேணும்.

    கண்ணாடியில் இருந்த பார்வையை எடுத்து வசந்தன் மேல் போட்டான் கார்த்திகேயன்.

    அண்ணனுடைய பார்வையை சந்தித்ததும் வசந்தனின் தலை கல்யாண பெண்ணைப் போல சட்டென்று கவிழ்ந்தது.

    எதுக்குப் பணம்?

    இன்னைக்கு ஒரு இன்டர்வியூ இருக்கு. போகணும்.

    குரல் ரப்பராக இருந்தது.

    நீயும்ன் எத்தனை. இன்டர்வியூவிற்கு போவே? எதிலேயாவது செலக்ட் ஆகியிருக்கியா? உனக்கு பஸ்ஸுக்கு நான் கொடுத்த பணத்துல உருப்படியாக ஏதாவது வாங்கியிருந்தா கூட உபயோகமாக இருக்கும். உனக்கு அழிச்சதெல்லாம் வேஸ்ட்.

    கார்த்திகேயனின் முகத்தில் கடுமை நிலவியது.

    அண்ணே... இந்த தடவை எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும். நம்பிக்கை இருக்கு.

    இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்ன நம்பிக்கையோ என்ன இழவோ? என்றவன் உள் நோக்கி குரல் கொடுத்தான்.

    ரேவதி... ஏய் ரேவதி.

    ரேவதி உள்ளிருந்து வந்தாள். கார்த்திகேயனின் மனைவி.

    அயர்ன் பண்ணி கொடுக்கச் சொன்னீங்க. சட்டையை அயர்ன் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்குள்ளே ரேவதிக்கு என்ன வேலை வச்சிருக்கீங்க? என எரிச்சலுடன் கேட்டாள்.

    "ஒரு வேலையும் இல்லை. என் பேண்ட் பாக்கெட்ல

    Enjoying the preview?
    Page 1 of 1