Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னிடம் மயங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன்
Ebook85 pages29 minutes

உன்னிடம் மயங்குகிறேன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரைகுறை வெளிச்சத்தில் அந்த உருவத்தை நன்றாகப் பார்த்தான் உதயகுமார்.
இந்த நேரத்தில் தோளில் மூட்டையோடு ஒருவன். ஏன்? மூட்டையில் என்ன இருக்கிறது?
ஒற்றையடிப் பாதையாதலால், அவன் இவன் நிற்கும் பாதையில்தான் வர வேண்டும்.
உதயகுமார் சட்டெனச் சவுக்கு மரங்களின் பின்னே இருளில் மறைந்து கொண்டான். அவனைப் பார்த்தான்.
அவன் இறங்கி வந்து விட்டான். நிலவொளியில் உதயகுமார் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தான்
அவன் அந்த மூட்டையோடு இவன் நின்ற இடத்திற்கு வந்து விட்டான்.
உதயகுமார் அதிரும் இதயத்துடன் பார்த்துக் கொண் டிருந்தான். அவன் - இவனை நெருங்கியதும் ‘குப்பென நாற்றம் அடித்தது. உதயகுமாருக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டான்.
அவன் இவனைக் கடந்து சென்றுவிட்டான், அவன் நடை லேசாக விந்தி விந்தி நடப்பதைப் போல் இருந்தது. எவ்வளவு முயன்றும் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அரை குறையான நிலவொளியில் முகம் இருட்டாகத் தெரிந்தது.
அவன் கடற்கரையை நோக்கிச் செல்வது தெரிந்தது. அங்கே அவன் என்ன செய்கிறான் எனக் கவனித்தான்.
அவன் மூட்டையைத் தூக்கிக் கடலில் எறிந்தான்.
‘என்னவாக இருக்கும்?’
அவன் கடந்து சென்றபோது அடித்த நாற்றம் அந்த மூட்டையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
ஒரு வித ரத்த வாடை. ஒரு வித மாமிச நாற்றம்நிச்சயம் அது மனித உடம்பு. அப்படியானால் கொலையா?
ஆமாம். யாரையோ கொலை செய்து மூட்டையாகக் கட்டிக் கடலில் தூக்கி எறிகிறான்.
‘யார் இவன்?’
முகம் தெரியவில்லை.
மூட்டையில் பிணத்தைக் கொண்டு வந்திருக்கிறான் என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு வாகனத்தில்தான் வந்திருக்க வேண்டும். என் ஊகம் சரியாக இருந்தால் இந்த மேட்டிற்கு மறுபுறம் வாகனம் இருக்க வேண்டும்.
உடனே செயல்பட்டான் உதயகுமார். மரங்களின் மறைவிலிருந்து வெளிப்பட்டான். கிடுகிடுவென அந்த மேட்டுப் பகுதியில் ஏறினான். மறுபுறம் இறங்கும் போதே கவனித்தான். சாலையோரம் ஒரு கார் நின்றிருந்தது. காரினுள் யாரும் இல்லை.
இவன் தனியாகத்தான் வந்திருக்கிறான். காரின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளோடு இருளாக இருந்தது.
வேறு யாராவது இருக்கிறார்களா எனச் சுற்று முற்றும் பார்த்தான்.
யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். தைரியமாகக் காரின் அருகில் வந்தான். காரின் பின்புறம் வந்து காரின் எண்ணைக் கவனித்தான். வெள்ளை நிற எழுத்துக்கள் நிலவொளியில் அரைகுறையான வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.
4235.
மனதில் குறித்துக் கொண்டான். காரின் முன் பக்கம் பார்த்தான். உள்ளே அழகான நாய்க்குட்டியின் பொம்மை ஒன்று தொங்கியது.
பின் சீட்டில் கதவுகள் சாத்தப்பட்டிருந்ததால் ஒரே இருட்டாகத்தான் தெரிந்தது.
சட்டென அந்த இடத்தைவிட்டு அகன்றான். அருகிலிருந்த மரத்திற்குப் பின்னே ஒளிந்து கொண்டான்.
சில நிமிடங்களில் வேக வேகமாக அந்த உருவம் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து மேடேறி வந்தது.
உதயகுமார் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்த உருவம் காரைத் திறந்து ஏறி அமர்ந்து கொண்டு இயக்கியது.கார் நகர்ந்து வேகம் பிடித்து மறைந்தது. உதயகுமார் மறைவிலிருந்து வெளிப்பட்டு ஒருவிதத் திகிலுடன் நடக்கத் தொடங்கினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
உன்னிடம் மயங்குகிறேன்

Read more from ஆர்.சுமதி

Related to உன்னிடம் மயங்குகிறேன்

Related ebooks

Reviews for உன்னிடம் மயங்குகிறேன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னிடம் மயங்குகிறேன் - ஆர்.சுமதி

    1

    சூரியன் இரண்டாவது முறையாகக் கோபம் கொண்டு சிவந்த மாலை நேரம்.

    உதயகுமார் பரபரப்பான சென்னையின் சாலையில் கொஞ்சமும் பரபரப்பின்றித் தளர்வாய் நடந்தான். நெஞ்சு நிறையக் கனம் இருந்தது. உடம்பு அதைத் தாங்க முடியாமல் தளர்ந்து விட்டது.

    காலையிலிருந்து எத்தனை நிறுவனங்கள்தான் ஏறி இறங்குவது? கால்வலி வந்ததுதான் மிச்சம். மதியம் குடித்த தேநீர் வயிற்றைக் கலக்கிக் கொண்டே இருந்தது. பசி கண்களை இருட்டியது. காது அடைத்தது. கல்லூரியில் படிக்கும் போது இருந்த உடம்பு கூட இப்பொழுது இல்லை. கவர்ச்சியான முக வசீகரம் இப்பொழுது இல்லை. லேசாய்க் கன்னத்தில் ஒடுக்கு விழுவதைப் போன்று இருந்தது.

    வேலை கிடைக்காத வேதனையில் உடம்பு நாளுக்கு நாள் இளைத்தது.

    வீட்டிற்குச் செல்லவே பிடிக்கவில்லை. அப்படியே எங்காவது சென்றுவிடலாமா என்று தோன்றியது. எவ்வளவு விண்ணப்பங்கள் போடுவது! எவ்வளவு நேர்முகத் தேர்விற்குத்தான் சென்று திரும்புவது! அம்மா முதுகு ஒடியத் தையல் எந்திரத்துடன் போராடி எத்தனை காலத்திற்குத்தான் சம்பாதிப்பது! பாவம்... அவளுக்கும் வயதாகி விட்டது. உட்கார வைத்து அம்மாவுக்குச் சோறு போடும் வயதில் அவளிடம் ஒரு ப்ளேடு வாங்குவதென்றால் கூடப் பணம் கேட்க வேண்டியதாகி உள்ளது.

    என்ன செய்வது?

    அம்மா எவ்வளவு சிரமப்பட்டு எம்.காம். படிக்க வைத்தாள்! எவ்வளவு கனவு கண்டிருப்பாள்! மகன் வளர்ந்து வேலைக்குச் சென்று சம்பாதித்துப் போடுவான் என்று.

    ஆனால் -

    இப்படித் தண்டச்சோறாய் இருக்கிறேனே. அழுகை வந்தது.

    வீட்டிற்குச் செல்ல மனம் இல்லாமல் கடற்கரைக்கு வந்தான்.

    மனிதனுடைய எல்லா உணர்ச்சிகளையும் சுமக்கும் இடம் இந்தக் கடற்கரைதான்.

    இங்குதான் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை குதூகலம், எத்தனை எத்தனை சோகக் கண்ணீர்...!

    சூட்டை வெளியேற்றிய மணல் சில்லென இருந்தது. ஒரு ஒதுக்குப்புறமாய் மனித சலனமற்ற இடத்தில் வந்து அமர்ந்தான்.

    மனம் சற்று லேசானதைப் போலிருந்தது. எல்லோரையும் பார்த்தான். எல்லோரிடமும் மகிழ்ச்சி இருப்பதாகத் தெரிந்தது. தான் மட்டுமே வேதனைக்குரியவனாகவும், கவலைப் படுபவனாகவும் தோன்றியது.

    வானம் மாலை நேரத்து மஞ்சளாடையை உதறிவிட்டு, இருட்டுச் சேலையைக் கட்டிக் கொள்ளத் தொடங்கியது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலையத் தொடங்கியது.

    நேற்றைய இரவு அம்மா சொன்னது கடற்கரை இரைச்சலையும் மீறி இப்பொழுது காதில் ஒலித்தது.

    அம்மா உறங்காமல் சுவரில் சாய்ந்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

    வெகு நேரம்வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்த உதயகுமார் ஒரு வழியாய்ப் பதினோரு மணிக்குப் புத்தகத்தை முடிவிட்டு, படுப்பதற்காக விளக்கை அணைக்கப் போன போதுதான், ஜன்னல் வழியாக அம்மாவைப் பார்த்தான்.

    கண் மூடும் வேளையில் கவலையான முகம். அறையை விட்டு வெளியே வந்தான். அம்மாவின் அருகே அமர்ந்தான். தோள் தொட்டு அசைத்தான்.

    அம்மா...

    திடுக்கிட்டுப் பார்த்தாள் அம்மா.

    ‘என்னடா?’

    தூங்கலையா? மணி பதினொண்ணு ஆகுது.

    தூக்கம் வரலைடா.

    ஏம்மா, என்ன யோசனை?

    எல்லாம் உன் தங்கச்சி தமயந்தியைப் பத்தித்தான்.

    அவளைப் பத்தி என்னம்மா?

    என்னவா? இந்த வருஷத்தோட அவ படிப்பு முடியுது. திருச்சியிலேர்ந்து வந்துடுவா. அவளுக்கு ஒரு இடம் பாக்கணும். கல்யாணம் பண்ணணும். உனக்கும் ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குது. அவளுக்குன்னு ஒரு பொட்டு தங்கம் கூடச் சேர்த்து வைக்கலை. சம்பாதிச்சதெல்லாம் சாப்பிடறதுக்கே சரியா போயிடுச்சு. நான் என்னத்தை சேமிச்சு வைக்கறது. அந்தப் பொண்ணை எப்படிக் கட்டி குடுக்கப் போறோம்னு தெரியலை.

    அம்மா சொல்லச் சொல்ல உதயகுமாருக்கு அடி வயிற்றைக் கலக்கியது.

    அம்மா சொல்வது அனைத்தும் உண்மை.

    இளம் வயதிலேயே கட்டிய மனைவியை விட்டு விட்டு எங்கோ எவளிடமோ ஓடிப்போன அப்பா. இரண்டு குழந்தைகளோடு அனாதையான அம்மா. கையிலிருந்த தையல் தொழிலை வைத்துச் சம்பாதித்து இருவரையும் படிக்க வைத்தவள். எத்தனையோ நாள் பசி பட்டினியோடு இருக்கிறாள். ஆனால், குழந்தைகளை ஒருவேளை கூடப் பட்டினி போட்டதில்லை. எத்தனையோ கஷ்டத்திற்கிடையிலேயும் படிக்க வைத்து விட்டாள்.

    உதயகுமார், தலையெடுத்துத் தங்கையைக் கட்டிக் கொடுப்பான் என்று கனவு கண்டாள். ஆனால், அவனுக்கும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. எப்படித் திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்ற கவலை அவனை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது.

    அவளுடைய கவலைக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று: தெரியாமல் தடுமாறினான். ஆதரவாய் அவளின் தோளை அணைத்தபடி சொன்னான்.

    Enjoying the preview?
    Page 1 of 1