Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கற்பூர ஜோதி
கற்பூர ஜோதி
கற்பூர ஜோதி
Ebook138 pages47 minutes

கற்பூர ஜோதி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனக்குள் உண்டான சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தவதென தெரியாமல் திணறி நின்றாள் ரம்யா.
தன்னுடைய பிரார்த்தனை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று கனவில் கூட நினைக்கவில்லை அவள்.
சற்றுமுன் வேண்டிக் கொண்டிருந்த கடவுளுக்கு நன்றி கூறினாள்.
பிரமிப்போடு நிற்கும் அவளை அசைத்தாள் மாமியார்.
“என்ன நம்ப முடியலையா? உண்மையாத்தான் சொல்றேன். அவன் இப்பத்தான் போன் பண்ணி சொன்னான்.”
அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சிக்கிடையிலேயும் சிறு ஏமாற்றம் நிலவியது.
‘ச்சே... நான் பேச முடியாமல் போய் விட்டதே. இன்னொரு தடவை போன் பண்ணி அவர் என்னிடம் சொன்னாலென்ன?’
ஏங்கினாள்.
“இப்போ அவருக்கு லீவா? எத்தனை மாசம் லீவாம்?”
“அதெல்லாம் அவன் சொல்லலை. விஷயத்தை சொல்லிட்டு உடனே போனை வச்சுட்டான். உன்கிட்ட அப்புறம் பேசறதா சொன்னான்.”
அந்த பதில் உள்ளுக்குள்ளிருந்த ஏமாற்றத்தை சட்டென்று போக்கியது.
‘என் செல்லக்குட்டிக்கு என்னோட பேசவில்லையென்றால் தூக்கம் வராது.’ நெஞ்சுக்குள் சிலிர்த்தாள்.
எதிரே நிற்கும் மாமியான ரத்தினாம்பாளை முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சினிமாவில் வருவதைப் போல் தேவதைகள் புடைசூழ ஆடிப்பாட வேண்டும் போலிருந்தது.ரம்யா... வர்ற வெள்ளிக்கிழமை என்ன நாள்னு ஞாபகமிருக்கா?” மாமியார் குறும்பு மிளிர கேட்க மின்னலாக மூளையில் பளிச்சிட்டது.
வர்ற வெள்ளிக்கிழமை அவளுடைய கல்யாண நாள். ஒவ்வொரு கல்யாண நாளின் போதும் அவள் கணவனின் பிரிவை எண்ணி மன அழுத்தத்துடன் இருப்பாள். கோயிலுக்குப் போவாள். புதுப்புடவை உடுத்துவாள். ஆனால் மனம் நிம்மதியுடன் இருக்காது. ஏதோ சந்தோஷத்தை இழந்ததைப் போலிருக்கும்.
ரமேஷ் தொலைபேசி மூலம் பேசுவான். ஆனால் அது அவளுக்கு பூரணமானதொரு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது.
ஆனால் -
இதோ இந்த முறை அவன் நேரில் வருகிறான். இந்தக் கல்யாண நாளையும் விரக்தியாகத்தான் கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அவன் வருகிறான்.
மருமகளின் முகத்தில் தெரிந்த நாணம் கலந்த பரவசத்தை கண்ட மாமியாரின் முகத்தில் சிரிப்பு பரவியது.
“அத்தை... என்னோட கல்யாண நாள்...”
“ரெண்டு வருஷமா ஒவ்வொரு கல்யாண நாள்லேயும் நீ கண் கலங்கி நிற்பே. இந்த வருஷம் அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கல்யாண நாளை நல்லா கொண்டாடணும்...”
“அத்தை... இந்த சந்தோஷமான செய்தியை நான் உடனே எங்க அம்மா அப்பாவுக்குச் சொல்லணும்.”
உற்சாகமாக குதிக்காத குறையாக இருந்தாள்.
“தாராளமா சொல்லும்மா.”
கையிலிருந்த அர்ச்சனைக் கூடையை அத்தையின் கையில் கொடுத்துவிட்டு தொலைபேசிக்கருகே ஓடினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
கற்பூர ஜோதி

Read more from ஆர்.சுமதி

Related to கற்பூர ஜோதி

Related ebooks

Reviews for கற்பூர ஜோதி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கற்பூர ஜோதி - ஆர்.சுமதி

    1

    ரம்யாவை வலிமையான இரு கரங்கள் இழுத்தன. தூக்க கலக்கத்துடனேயே புரண்டு படுத்தவளின் முகம் ரமேஷின் பரந்த மார்பில் புதைந்தது. சில கணங்கள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கிடந்தவள் மெல்ல முகத்தை உயர்த்தி சூடான அவனுடைய கழுத்தில் வைத்துக் கொண்டாள்.

    முரட்டுத்தனமான அவனுடைய கரங்கள் விடியற்காலை நேரத்தில் பூங்கொடிபோல் துவண்டு கிடந்த அவளுடைய மேனியில் அலைந்தது.

    ம்... என்னங்கயிது? அவனுடைய காதில் சிணுங்கினாள்.

    ம்... வெளியில மழை. குளிர் காத்து வருது. சூடு தேவை...

    வெளியே மழை பொழியும் ஓசை கேட்டது. இறுக்கமாக அவனுடைய முதுகை அணைத்துக் கொண்டவள்,

    சும்மாயிருங்க. எனக்குத் தூக்க கலக்கமாயிருக்கு. என்றாள்.

    தூக்க கலக்கமெல்லாம் ஒரே நிமிஷத்துல போய்டும் பாரு அவனுடைய இதழ்கள் அழுத்தமாக அவளுடைய இதழ்களில் பதிய,

    சொன்னா கேளுங்க. நான் எழுந்து வேலை செய்யணும். உடம்பு வலிக்கும்...

    ச்சீ... போ! ரொம்பதான் பிகு பண்ணிக்கிற அவளைச் சடாரென உதறிவிட்டு அவன் புரண்டு படுக்க,

    ம்... உடனே கோபம் என அவனைத் திருப்பி தன் பக்கம் இழுத்துக் கொண்டவளின் காதில் மழை வலுக்கும் சத்தம் பெரிதாக கேட்க,

    சட்டென்று முற்றிலுமாக விழித்தாள். விழித்ததும்தான் தெரிந்தது. எல்லாம் கனவு.

    வழக்கமாக அலாரத்தின் ஓசையில் எழும் ரம்யா இன்று மழையின் ‘ச்சோ’வென்ற ஓசையில் எழுந்து கொண்டாள். வெளியே சடசடவென பெரிதாக மழை பொழிந்து கொண்டிருந்தது. சன்னல் கதவுகளின் சத்தத்தோடு சாரல் அடித்தது. உள்ளேயும் பூவாக தூவியதில் தேகம் சிலீரென்றது.

    ரம்யா எழுந்தாள். கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்து. லேசாக விடிந்தும் விடியாமலுமிருந்தது. ஆரஞ்சு கலரில் மென்மையாக சிரிப்பதைப் போல் எரிந்து கொண்டிருந்த இரவு விளக்கை அணைத்தாள். சன்னலோரம் வந்து நின்றாள். முகத்தில் சாரலடித்தது. கொஞ்ச நஞ்சமிருந்த தூக்கக் கலக்கத்தையும் அது விரட்டியது. முகத்தில் தூவப்பட்ட சாரலை இதமாக கண்களை மூடி அனுபவித்தாள்.

    சுகமாயிருந்தது! ரமேஷின் இதமான வருடலைப் போல். மென்மையான முத்தத்தைப் போல். இறுக்காமல் இழுத்தணைக்கும் அணைப்பைப் போல். சற்று முன் கண்ட கனவு மறுபடி கண்ணுக்குள் புரண்டது.

    ரமேஷ்!

    ஏக்கப் பெருமூச்சில் ஏறியிறங்கியது மார்பு.

    சன்னலை சாத்திவிட்டு வந்து படுத்தாள். உறக்கம் சுத்தமாகப் போனது. கண்களை மூடி கவிழ்ந்து படுத்து தலையணையைக் கட்டிக் கொண்டாள்.

    இதே போன்ற மழைக்காலங்களில் இதே போன்ற அதிகாலைகளில் ரமேஷின் அணைப்பிற்குள் சுருண்டு கிடந்த சுகம் அவளை மோகத் தீயில் தள்ளியது.

    இரண்டு மாதங்கள் அவனோடு வாழ்ந்த வாழ்க்கை. எத்தனை இனிமையானது. திகட்ட திகட்ட அனுபவித்தாலும் தீராத மோகத்தை மேலும் மேலும் உண்டாக்கிய நாட்கள். அவனைப் பிரிந்து சரியாய் இரண்டு வருடங்கள். ரமேஷ், நீயும் இந்நேரம் சிங்கப்பூரில் உன்னுடைய படுக்கையறையில் இப்படித்தான் விழித்துக் கொண்டிருப்பாயா? ரமேஷின் உருவம் கண்ணுக்குள் தோன்றியது.

    பார்த்த உடனேயே பிடித்துப் போகும் தோற்றம். சினிமா கதாநாயகனைப் போல் ஒரு அசத்தலான கவர்ச்சி. கருமையான அளவான மீசை, அடிக்கடி சிரிக்கும் அழகு.

    பெண் பார்க்க வந்த போது அவளைப் பார்த்ததும் பார்க்காததைப் போலொரு பார்வை. அவன் பார்த்ததை இப்பொழுது நினைத்தாலும் இனம் புரியாத இன்பச் சிலிர்ப்பு உண்டானது.

    ரமேஷ் எம்.பி.ஏ. படித்து தனியார் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பாதித்தான். திருமணமான இரண்டே மாதங்களில் அவனுக்கு சிங்கப்பூரில் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. பல மடங்கு சம்பாத்யம்.

    இரண்டே மாதங்களில் அதுவும் திருமணமான புதிதில் அவனைப் பிரிய அவளுக்கு மனம் இல்லை.

    வேண்டாங்க! இங்கேயே இருந்துடுங்க. இந்த சம்பளமே போதும் அவனுடைய மார்பில் முகத்தை வைத்துக் கொண்டு கலங்கினாள்.

    பைத்தியம். வாழ்க்கையில எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு. வேண்டாங்கறியே ஆறுதலாக கேசம் வருடினான்.

    நமக்கு என்ன சொத்தா இல்லை? எவ்வளவு சொத்து இருக்கு. நீங்க ஒரே பிள்ளை. எதுக்கு வெளிநாட்டுக்குப் போகணும்?

    ரம்யா, இந்த வாய்ப்பு என் படிப்புக்கும் திறமைக்கும் கிடைச்ச பரிசு. இதை அலட்சியப்படுத்தக்கூடாது.

    உங்களைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது..

    மனசு வச்சா எல்லாம் முடியும்.

    கல்யாணமாகி ரெண்டே மாசத்துல... மோகமாக அவனை அணைத்துக் கொண்டாள்.

    ஏன் உன்னால மனசைக் கட்டுப்படுத்த முடியாதா?

    ச்சே! என்ன வார்த்தை பேசறீங்க. உங்களுக்காக எத்தனை வருஷம் வேணாலும் என்னால காத்திருக்க முடியும்...

    இது போதும். நாம திகட்ட திகட்ட அனுபவிச்ச இந்த இரண்டு மாசத்தையும் திரும்பத் திரும்ப நினைச்சாலே போதும்... நாட்கள் பறந்துடும். ரெண்டே வருஷம் ஓடி வந்துடுவேன்.

    இதோ. முழுதாக இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. லீவு கிடைக்கவில்லை. இதோ வருகிறேன். அதோ வருகிறேன் என்று சொல்கிறானே தவிர வந்தபாடில்லை.

    பெருமூச்சுடன் எழுந்தாள்.

    தன்னுடைய அறையிலிருந்து கீழே இறங்கி வந்தாள்.

    கீழே –

    மாமியார் ரத்னாம்பாள் அடுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

    அத்தை, நீங்க எதுக்கு வேலை செய்யறீங்க? நான் செய்யறேன் நகருங்க...

    அத்தை நிமிர்ந்தாள்.

    களையான முகம். கட்டுக் குலையாத தேகம். ரமேஷ் ஒரே பிள்ளை. கணவனை இளம் வயதிலேயே பறி கொடுத்தவள். அடுத்தடுத்து பிள்ளைகளை பெறாததாலோ என்னவோ வயதாகியும் கட்டுக் குலையாமலிருந்தாள்.

    ரம்யா, இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஞாபகம் இல்லையா? சமையல் வேலைகளையெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ தலை குளிச்சிட்டு கருமாரியம்மன் கோயிலுக்குப் போய்ட்டு வா.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ரம்யா பக்கத்திலிருக்கும் கருமாரியம்மன் கோயிலுக்குப் போய்விட்டு வருவாள். அவளே மறந்து விட்டால் கூட ரத்னாம்பாள் ஞாபகப்படுத்துவாள். அத்தை என்பது பெயருக்குத்தான். ஆனால் அவள் அன்னை போல், ரம்யாவை பெற்ற மகளைப் போல் பாவித்தாள். ஒரு வார்த்தை கடினமாகப் பேசி விட மாட்டாள். மருமகளின் அழகின் மீதும் அறிவின் மீதும் அவளுக்கு அசாத்தியப் பெருமை உண்டு.

    ரம்யா, ரமேஷ் பெயருக்கு அர்ச்சனை செய்துடு...

    ஒவ்வொரு வாரமும் அவரோட பெயருக்குத்தானே அர்ச்சனை செய்யறேன்.

    சொல்லிக் கொண்டே உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

    குளித்து முடித்து ஆகாயக் கலரில் புடவை உடுத்தி தலைநிறையப் பூ வைத்துக் கொண்டு கண்ணாடியில் தன் அழகைப் பார்த்தபோது,

    ‘ரமேஷ், மட்டும் இப்பொழுது பக்கத்தில் இருந்திருந்தால்...’ நினைத்தபோதே நெஞ்சம் சிலிர்த்தது.

    ‘ரமேஷ், என் அழகு தங்களின் ஆராதனைக்காக தவமிருக்கிறது. எப்பொழுது வருவீர்கள்?’

    சட்டென்று நினைவு கலைந்து பூஜைக் கூடையுடன் புறப்பட்டாள். கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

    ‘தாயே... என் புருஷனுக்கு சீக்கிரம் லீவு கிடைக்க வேண்டும். அவர் என்னிடம் சீக்கிரம் வர வேண்டும். அவரைக் காண என் இதயம் எப்படியெல்லாம் துடிக்கிறது என்று உனக்குத் தெரியாதா?’

    கண்கள் கலங்கி விட்டன அவளுக்கு.

    அவள் வீட்டிற்கு வந்தபோது அத்தை ரத்னாம்பாள் வாசலிலேயே நின்றாள். அவளுடைய முகம் வழக்கத்திற்கு மாறாகப் பிரகாசித்தது. படிகளில் ஏறிய ரம்யாவை ஓடி வந்து கைகளைப் பற்றிக் கொண்டாள்.

    "ரம்யா... அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரமேஷ் வர்றானாம். இப்ப போன்

    Enjoying the preview?
    Page 1 of 1