Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பார்வைகள் புதிதா?
பார்வைகள் புதிதா?
பார்வைகள் புதிதா?
Ebook133 pages48 minutes

பார்வைகள் புதிதா?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேவஸ்ரீ வீட்டிற்கு வந்தபோது, சமைத்துக் கொண்டிருப்பது அடுப்பு புகையின் வாசனையின் மூலம் தெரிந்தது.
மதியம் அடக்கி வைத்திருந்த பசி அவளைக் கொன்று விடும் சக்தியோடு எழுந்தது. உள்ளே வந்தவள் சுவரிலிருந்த பெரிய ஆணியில் புத்தகப் பையை மாட்டினாள்.
“அம்மாடி...வந்துட்டியா...?” என்றபடியே அம்மா விறகை இழுத்துத் தீயைக் குறைத்து வைத்துவிட்டு எழுந்து வந்தாள்.
“ராஜாத்தி...மத்தியானம் எதாவது சாப்பிட்டியாடா?”
“இல்லை நீ எதுவும் தராம நான் எப்படிச் சாப்பிட முடியும்?”
“உன் சிநேகிதிங்க யாரும் உன்னைச் சாப்பிடக் கூப்பிடலையா? அந்த மீனாப் பொண்ணு உன் மேல உசிரையே விடுவாளே, அவ கூட உன்னைச் சாப்பிடக் கூப்பிடலையா?”
“கூப்பிட்டா, நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”
“ஏம்மா...? சினேகிதிங்க கிட்ட சாப்பிடறதுல என்ன தயக்கம் உனக்கு. அந்த மீனா பொண்ணு உன் மேல எவ்வளவு
அன்பு வச்சிருக்கா. நீ அடிக்கடி அவளை பத்தித்தானே பேசிக்கிட்டிருப்பே.”
“அவகிட்ட சாப்பிடறதுல எனக்கொண்ணும் தயக்கமில்லை. ஆனா...நீ பட்டினியோடு வேலை செய்துக்கிட்டிருக்கும் போது நான் மட்டும் எப்படிச் சாப்பிட முடியும்?”
கேட்கும்போதே தேவஸ்ரீயின் கண்கள் கலங்கி விட்டன.
அம்மா வேதம் அவளுடைய கைகளை பற்றினாள். விரல்கள் நடுங்கினஅம்மாடி...உங்கப்பா செத்துப் போனதுமே, என் மனசு மட்டும் இல்லைம்மா, என் வயிறும் மரத்துப் போயிடுச்சு. பசிக்கறதை உணர்ந்தே ரொம்ப நாளாயிடுச்சு. ஆனா... நீ அப்படியா? வயசுப் பொண்ணு. உன் வயித்தைப் பட்டினி போடக் கூடாதுன்னு நானும் எவ்வளவோ கஷ்டப்படறேன். ஆனா. சில நாள் இப்படி ஆயிடுது. வா...சூடா சாதம் பொங்கி வச்சிருக்கேன். சாப்பிடு!” என்று அழைத்துச் சென்றாள்.
வடித்திருந்த சோற்றை நிமிர்த்தி ஆவி பரக்கத் தட்டில் போட்டுக் கருவாட்டுக் குழம்பை ஊற்றினாள்.
“அம்மா! நீயும் சாப்பிடு.”
இன்னொரு தட்டை எடுத்து அம்மாவிடம் நீட்டினாள்.
வேதம் அந்தத் தட்டிலும் சாதத்தை போட்டுக் குழம்பை ஊற்றினாள்.
பசி மயக்கத்தில் அரக்கப் பரக்கச் சாப்பிட்டாள் தேவஸ்ரீ. அவள் பரக்கப் பரக்கச் சாப்ப்பிட்டதாக கண்ணில் நீர் வரப் பார்த்த தாய்க்கு இதயத்தைப் பிசைந்தது.
‘கடவுளே! என் குழந்தையின் பசியைக் கூட நேரா நேரத்திற்குத் தீர்க்க முடியவில்லையே!’
“அம்மாடி...டவுன்லதானே அக்கா வீடு இருக்கு. அங்க போய்ச் சாப்பிட்டிருக்கலாமே!”
“ப்ச்! அக்காவாயிருந்தா என்ன? கட்டிக் கொடுத்துட்டா வேறுதான். சாப்பாட்டுக்கெல்லாம் அக்கா வீட்ல போய் நிக்கறது நல்லதில்லை. கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னாடி தூர நிக்கறதுதான் எல்லாத்துக்கும் நல்லது.”
“அப்போ...நாளைக்கு உன்னையும் கல்யானம் பண்ணிக் கொடுத்துட்டா நான் பசின்னு உன் வீட்ல வந்து நிக்கக் கூடாதா?”
வேதம் இப்படிக் கேட்கவும் நெருப்பையள்ளிக் கொட்டியதை போல் துடித்துப் போய் விட்டாள் தேவஸ்ரீ .
“அம்மா....என்ன...என்ன பேசற நீ? அக்காவும் நானும் ஒண்ணா? என்னை அப்படியே உதறிட்டுப் போய்ட முடியுமா? இப்ப நீ படற அத்தனை கஷ்டமும் எனக்காகத் தானே. ஆண் பிள்ளை இல்லாத உன்னைக் கடைசி வரை வச்சுக் காப்பாத்த வேண்டியது என்னோட கடமை இல்லையா? ஏன்... இப்படியெல்லாம் பேசறே?சாப்பிடறது கூட உடம்புல ஒட்டாது போலிருக்கு. எனக்குச் சோறும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம்.”
சட்டென்று தேவஸ்ரீ எழ முயல, அம்மா பதறி விட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
பார்வைகள் புதிதா?

Read more from ஆர்.சுமதி

Related to பார்வைகள் புதிதா?

Related ebooks

Reviews for பார்வைகள் புதிதா?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பார்வைகள் புதிதா? - ஆர்.சுமதி

    1

    உணவு இடைவேளைக்கான நேரம். நீண்ட மணியொலி மாணவர்களை வகுப்பறையிலிருந்து விடுவித்தது.

    கையில் டிபன் பாக்ஸுடன் மாணவ மாணவிகள் வெளியே வந்தனர்.

    சிலர் வகுப்பறையிலேயே அமர்ந்து டப்பாவைத் திறந்தனர்.

    வகை வகையான உணவுகளின் மனம் காற்றில் கலந்தது.

    கலவையான சிரிப்பொலியும் அந்த மணத்தோடு கலந்து எங்கும் நிறைந்திருந்தது.

    மரத்துக்கு மேல் பறவைக் கூட்டங்களைப் போல் மரத்தடியில் மாணவ, மாணவிகளின் கூட்டம்.

    சென்ற வகுப்பில் பாடம் நடத்திய டீச்சரைப் பற்றி, இன்றைக்கு உள்ளூர் தியேட்டரில் ரிலீஸாகியிருக்கும் படத்தைப் பற்றி, புத்தகம், கவிதை, விளையாட்டு இப்படி எதையெதையோ பற்றி ஏதேதோ பேசிச் சிரித்தபடி சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.

    தனது புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு எழுந்தாள் தேவஸ்ரீ. பார்வைகள் புதிதா?

    தேவஸ்ரீ... வாடி... சீக்கிரம். பசிக்குது! என டிபன் பாக்ஸுடன் வந்தாள் மீனா.

    மீனா... நான் சாப்பாடு கொண்டு வரலை. நீ போய்ச் சாப்பிடு... என்றாள் தேவஸ்ரீ.

    சாப்பாடு கொண்டு வரலையா, ஏன்?

    அது...இன்னைக்கு விரதம்.

    அருகே வந்தாள் மீனா. விரதமா?

    என்ன விரதம்?

    வெள்ளிக்கிழமை விரதம்.

    மீனா சிரித்தாள். என்னவோ லட்சியம் அது இதுன்னு பேசுவே. இப்ப என்னடான்னா விரதம் அது இதுங்கறே! கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாயிடலாம்னு முடிவு பண்ணிட்டியா?

    ச்சீ...புத்தியைப் பாரு! கல்யாணம் பண்ணிக்கறவங்க தான் விரதம் எடுப்பாங்களா? மத்தவங்க எடுக்க மாட்டாங்களா?

    மத்தவங்க எடுக்கறது இருக்கட்டும். நீ எதுக்கு இப்ப விரதம் எடுக்கறேன்னு சொல்லு.

    சொல்றேன். ப்ளஸ் டூவ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும். அதுக்காகத்தான்.

    இதைக் கேட்டு மீனா கலகலவெனச் சிரித்தாள்.

    எந்தச் சாமிக்கு விரதம் எடுக்கறே?

    ம்...வந்து முருகனுக்கு."

    அப்படியா...அப்ப ஒண்ணு பண்ணு. பேசாம மொட்டை போட்டுக்கயேன். ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்ன? ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர்றதுக்கே முருகன் அருள் கொடுப்பார்.

    என்ன, கிண்டலா?

    நான் கிண்டல் பண்றேன். நீதான் சாமியைக் கிண்டல் பண்றே?

    என்ன உளர்றே?

    விரதம்ங்கறது பக்தியோட எடுக்கறது. வயிறு பூரா பசியை வச்சிக்கிட்டு சாப்பாடு இல்லைங்கறதால பட்டினியாய் எதுக்கு கௌரவமா விரதம்னு சொல்லிக்கணும்?

    மீனா இப்படிக் கேட்கவும், தேவஸ்ரீ மௌனமாகத் தலை குனிந்தாள்.

    தேவஸ்ரீ... என்கிட்டயே எதுக்குடி பொய் பேசறே? தோழமையோடும் ஏழ்மை பேசேல்னு ஒண்ணாங்க்ளாஸ்ல படிச்சதையெல்லாம் நீ ஒருத்திதான் ஞாபகம் வச்சிருக்கறதா நினைப்பா? நானும் ஞாபகம் வச்சிருக்கேண்டி. ‘உடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு!’ நீ பசியோட பக்தி வேஷம் போடாதே. அடுப்புக்குள்ள பூனை தூங்கறதை மறைக்க ஆன்மிகம் பேசக் கூடாது.

    மீனா...

    உன் நிலைமை நல்லாத் தெரிஞ்சவள் நான். என்கிட்டயே எதுக்குப் பொய். படிக்கிற வயசுல இப்படி பட்டினி கிடந்தா எதையுமே சாதிக்க முடியாது. பசி எல்லா சக்தியையும் உறிஞ்சிடும். நான் உனக்கும் சேர்த்துத்தான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். வா... என்று தேவஸ்ரீயின் கையைப் பற்றி இழுத்து வந்தாள்.

    இருவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர்.

    தனியாக மரத்தடியில் போய் அமர்ந்தனர். மீனா டிபன் பாக்ஸைத் திறந்து அதன் மூடியில் புளிசாதத்தை அள்ளி வைத்து நீட்டினாள்.

    தேவஸ்ரீயின் வயிற்றில் பசி உணவைக் கண்டதும் அசுரனைப் போல் எழுந்து உட்கார்ந்து கொண்டது.

    கறிவேப்பிலைத் துவையலும் புளி சாதமும் மிகவும் சுவையாகயிருந்தது.

    ஒருவாய் அள்ளி வாயில் வைத்தபோது அம்மாவின் முகம் ஞாபகம் வந்தது.

    அம்மாவும் இந்நேரம் பசியோடுதானே வேலை செய்து கொண்டிருப்பாள்?

    நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சை அடைத்தது தொண்டையில் உணவு இறங்க மறுத்தது.

    உணவை அவளிடமே நீட்டினாள். மீனா...வேண்டாம் எனக்கு. நீயே சாப்பிடு.

    ஏண்டி?

    என்னமோ தெரியலை. வாந்தி வர்ற மாதிரியிருக்கு.

    இத பார். சாப்பிடாமையிருக்கறதுதான் அப்படிச் செய்யுது. கொஞ்சமா சாப்பிடு. எல்லாம் சரியா போய்டும். என்று வற்புறுத்தி மீண்டும் உணவை நீட்டினாள்.

    இல்லை மீனா. நீ சாப்பிட்டுவிட்டு வா. எனக்குப் புளி சாதம் சாப்பிட்டாலே நெஞ்சைக் கரிக்கும். வாந்தி வரும். நான் சாயந்தரம் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கறேன்.

    எழுந்து போய்விட்டாள் தேவஸ்ரீ.

    ‘இல்லாதவங்களுக்குக் கடவுள் பசியைத் தாங்கிக்கற சக்தியையும் கொடுத்திருக்கான்!’ என நினைத்த மீனா தேவஸ்ரீயையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    மதிய வகுப்பு ஆரம்பித்து விட்டது.

    முதல் வகுப்பு கணக்கு வகுப்பு, ஆசிரியை கமலாதான் கணக்கு எடுப்பார்.

    முதல் நாள் வீட்டில் செய்யச் சொல்லியிருந்த கணக்கை அவசர அவசரமாகப் பிரித்துச் சரி பார்த்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் ஆசிரியை உள்ளே நுழைந்ததும் எழுந்து வணக்கம் செய்தனர்.

    உள்ளே நுழைந்ததுமே சாக்பீஸைக் கையில் எடுத்துக் கொண்டு சரசரவெனக் கரும்பலகையில் கணக்கை எழுத ஆரம்பித்து விடும் கணக்காசிரியை வழக்கத்திற்கு மாறாக மேஜைக்கு முன்னாள் வந்து நின்று கொண்டு மார்பிற்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி மாணவர்களைக் கனிவுடன் பார்த்துச் சிரித்தார்.

    உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி சொல்லப் போறேன்.

    பீடிகையோடு ஆரம்பித்த ஆசிரியையின் முகத்தையே அனைவரும் ஆவலாகப் பார்த்தனர்.

    நாளைக்கு லீவா டீச்சர்.? முந்திரிக் கொட்டையெனப் பெயர் வாங்கிய மஞ்சு எழுந்து சொல்லவும் வகுப்பு குபீரெனச் சிரித்தது.

    வர்றதே நாலு நாள் தான் நீ. இதுல லீவு வேற வேணுமா?

    கமலா டீச்சர் மஞ்சுவைக் கோபமாகப் பார்க்க, மஞ்சு பூனைக்குட்டியைப் போல் சத்தமின்றி அமர்ந்தாள்.

    ஓ.கே.! நான் சொல்றேன். நம்ம ஸ்கூல்ல டூர் போறதுக்கு ஏற்பாடாகி யிருக்கு.

    அவர் சொல்லி முடிக்கவில்லை. ஹய்யா... என மாணவர்கள் கையை உயர்த்தி கோரஸாகச் சப்தம் எழுப்பினார்.

    உற்சாக மிகுதியால் சில மாணவர்கள் டெஸ்க்கில் தாளம் போடுவதும் தட்டுவதுமாக இருந்தனர்.

    எவ்வளவு நாள் டீச்சர்?

    ஒரு வாரம். இல்லாட்டி அஞ்சு நாள் இருக்கும்.

    எந்தெந்த இடத்துக்கு டீச்சர்?

    அதையெல்லாம் இன்னும் சரியா முடிவு செய்யலை அப்பறம் சொல்றேன்.

    எவ்வளவு டீச்சர் பணம் தரணும்?

    அதையும் ஹெச்.எம். சொல்றேன்னு சொல்லியிருக்காங்க. முதல்ல யார் யாருக்கு வர இஷ்டம்னு சொன்னா போதும்.

    நான் டீச்சர்....

    நான் டீச்சர்! நிறையக் கைகள் உயர்த்தப்பட்டன.

    எல்லோரும் தேவஸ்ரீகிட்டே பெயர் கொடுங்க. தேவஸ்ரீ நீ பெயரை எழுதிக்கோ. எவ்வளவு பணம் செலவாகும்னு நான் சொன்னதும் அதையும் கலெக்ட் பண்ணி என்கிட்டே கொடுத்துடு.

    வகுப்புத் தலைவியான தேவஸ்ரீ எழுந்து நின்று, "சரி டீச்சர்!’ என்றாள்.

    அடுத்த நிமிடமே சுற்றுலா செல்வதை பற்றி ஒருவரோடு ஒருவர் வகுப்பு என்பதையும் மறந்து கிசுகிசுக்கத் தொடங்க, வகுப்பில் ஒரு கதம்பமாக பேச்சுச் சத்தம் நிலவியது.

    சரி...பேசினது போதும். எல்லோரும் ஹோம் ஒர்க் நோட்டை எடுத்துட்டு வாங்க.

    கமலா டீச்சர் உத்தரவிட்டதும் வகுப்பறை கப்சிப் பென்றானது.

    தேவஸ்ரீ எழுந்து எல்லோருடைய நோட்டுப் புத்தகங்களையும் சேகரித்து மேஜை மீது அடுக்கினாள்.

    வகுப்பு எப்பொழுது முடியும் எனக் காத்திருந்ததைப் போல் ஆசிரியை அந்த வகுப்பை முடித்துக் கொண்டு சென்றதும் அனைவரும் தேவஸ்ரீயைச் சூழ்ந்து கொண்டனர்.

    தேவஸ்ரீ! என் பெயரை எழுதிக்கோ! என் பெயரை எழுதிக்கோ...

    ஆளாளுக்குப் பெயர் சொல்ல, தேவஸ்ரீ ஒரு நோட்டை எடுத்து ஒவ்வொரு பெயராக எழுதினாள்.

    கடைசியாகத்

    Enjoying the preview?
    Page 1 of 1