Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyarntha Manithargal
Uyarntha Manithargal
Uyarntha Manithargal
Ebook147 pages54 minutes

Uyarntha Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Prema Rathnavel
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466749
Uyarntha Manithargal

Read more from Prema Rathnavel

Related to Uyarntha Manithargal

Related ebooks

Related categories

Reviews for Uyarntha Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyarntha Manithargal - Prema Rathnavel

    1

    கிழக்கு வானில் கதிரவன், ஆரஞ்சு நிற பந்து போல் தோற்றமளித்தான். அவன் வருகையை உலகுக்கு உணர்த்துவது போன்று, அந்த பகுதி முழுவதும் சிவந்து காணப்பட்டது. தாவரங்கள், தங்கள் மீது, இரவு போர்த்திவிட்ட வெள்ளை போர்வையை அதாவது பனித்துளிகளை விலக்க வந்த கதிரவனை தலையாட்டி வரவேற்றன. பறவையினங்கள் தங்கள் இரையைத் தேடி, கூட்டம் கூட்டமாக பறந்து சென்றன. அந்த காட்சி குட்டி விமானங்கள் வரிசையாக செல்வது போல் தோன்றியது.

    புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். கோவில்களில், காலை நேர பூசைகள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. வயல் வெளிக்கு செல்லும் ஆண்கள், முன்னே நடக்க, பின்னால் கையில் தூக்குச் சட்டியுடன் பெண்களும் நடந்துகொண்டிருந்தனர்.

    அந்த கிராமத்தில் விவசாயம், நன்கு செழித்து வளர்ந்தது. அங்கு நீர் வளமும், நிலவளமும் நன்கு இருந்ததால் பயிர்கள் எல்லாம் நன்கு செழித்து வளர்ந்து, எங்கும் பசுமையாக காட்சியளித்தது. அதனைக் கண்ட ஊர் மக்கள் மனதிலும் முகத்திலும், மகிழ்ச்சி பூத்திருந்தது.

    அந்த கிராமத்தில், பெரிய விவசாய குடும்பம் என பெயர் பெற்று இருந்தது பண்ணையார் ராமலிங்கம் குடும்பம். அவரின் மறைவுக்கு பிறகு அவர் மகன், திவாகரன், அந்த பெயரைப் பெற்றான். அவன் தன்னை பண்ணையார் என்று அழைப்பதை விரும்பவில்லை.

    ‘திவாகரன் எம்.எஸ்.சி. விவசாய படிப்பு படித்து, அந்த கிராமத்தில் விவசாயத்தை வளர்த்துக்கொண்டிருந்தான். அவர்களுக்கு, சொந்தமான, ஏராளமான நன்செய், புன்செய், நிலங்கள் இருந்தன. மேலும், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, என்று தோப்பு, துரவுகளும் இருந்தன.

    திவாகரனுக்கென்று, ஊரில் தனி மரியாதை இருந்தது. பண்ணையாரின் மகன், பெரிய படிப்பு படித்தவன், என்று இருந்தாலும், அவனும், அவன் அம்மா காந்திமதியும், எளிமையை விரும்புபவர்களாயிருந்தனர். அதுமட்டுமல்லாது பிறர்க்கு தன்னால் முடிந்த உதவிகளை மனமுவந்து செய்து வந்தனர்.

    திவாகரன், பார்ப்பதற்கு, ஆள் நன்றாகவே இருந்தான். உழைத்து உரமேறிய உடல். செழித்து வளர்ந்த பூமி. அதன் பயனாக நல்ல விளைச்சல், அதனால் கவலையற்ற வாழ்க்கை. மேலும், பல. நவீன முறைகளை பயன்படுத்தி, இயற்கையாக செய்ய அதிக மகசூல் விளைந்தது. அத்துடன் தன் அம்மாவின் மீதும் அளவுகடந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தான்.

    அவன் அம்மா காந்திமதியும், அப்படியே! தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவர்கள் வீட்டின் பின்புறமும், கிணறு, சின்னதா ஒரு காய்கறித் தோட்டம், தொழுவில், இரண்டு பசு மாடுகளும் இருந்தன. வேலைக்காரர்கள் இருந்தாலும், காந்திமதியும் நன்கு உழைப்பவராகவே இருந்தார்.

    அவருடைய கணவர், ராமலிங்கமும், தன் மனைவி, மகன் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார். திவாகரன், தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வருவதற்காக காத்திருந்தது போல், இருக்க, மஞ்சள் காமாலை நோய், அவரை பலி கொண்டது. இது நடந்து இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன.

    கொஞ்சம் கொஞ்சமாக திவாகரனும், அவன் அம்மாவும் துக்கத்திலிருந்து வெளி வந்து, இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டனர். ஒருவருக்கொருவர், ஆறுதலாக இருந்தனர்.

    திவாகரனும், தன் அம்மாவின் மனம் போலவே நடந்து கொண்டான். காந்திமதியும், தன் ஒரே மகனுக்கு வர்ற மனைவி, நல்ல பெண்ணாக இருக்க வேண்டும், என்று மனதில் சதா இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். தன் கணவன் இருந்தால் இதை அவரே பார்த்துக் கொள்வார்.

    இப்போது அவருக்கு இரண்டு மடங்கு பொறுப்பு. திவாகரனும், தனக்கு வரக்கூடிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சில கற்பனைகள் செய்து வைத்திருந்தாள்.

    திவாகரனை பற்றி கேள்விப்பட்ட பக்கத்து, கிராமத்தில் உள்ள பண்ணையார், தன் மகள் மலர்விழியை, மணம் செய்து கொடுக்க, எண்ணினார். காந்திமதியும், பேசினார். அவரோ, தன் மகனை கேட்டு சொல்வதாக கூறினார். தன் மகனிடம் கேட்டதற்கு, ‘அவனோ, தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை.’ எனக்கூறி மறுத்துவிட்டான்.

    2

    சென்னையிலுள்ள, ஒரு பெண்கள் தங்கும் விடுதி அன்று ஒரே கூச்சலும், பேச்சும், சிரிப்புமாக கலகலந்து கொண்டிருந்தது. செமஸ்டர் முடிந்து அன்று முதல் விடுமுறை ஆரம்பம். மாணவிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு கேட்கணுமா? அவரவர், தங்கள் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். விடுமுறையை கொண்டாட, அந்த அறையிலிருந்த நான்கு பேரும், எம்.எஸ்.சி. பாட்டனி. முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தனர்.

    விடுமுறை முடிந்து, இரண்டாவது வருட முதல், தொடக்கத்தில்தான் மீண்டும் தாங்கள் சந்திப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி என பல ஊர்களிலிருந்தும் வந்து, அந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.

    தோழிகளை பிரிந்து போகிற துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், சொந்த ஊருக்கு, பெற்றோர்கள், உடன் பிறந்தோர்கள் ஆகியோரை பார்க்க போகிறோம், என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக கிளம்பினர். ஒருவரையொருவர், தங்கள் ஊருக்கு வருமாறு அழைப்பும் விடுத்தனர்.

    இந்த தடவை முடியாது. அடுத்த செமஸ்டர் விடுமுறையின் போது முயற்சி செய்யலாம் எனக் கூறி பிரிந்தனர். அந்த தோழியர்களில், சிறிது துடுக்குத்தனமும், குறும்பும் நிறைந்தவளாக, ரித்திகா இருந்தாள். நம் கதையின் நாயகியான அவளும், தன் பெட்டி, படுக்கைகளுடன், ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், அந்த விடுதியின் வாசலில், ஆட்டோக்கள் வந்தவண்ணமாக இருக்க, மாணவிகள், பட்டாம்பூச்சிகளென விரைந்து வந்து, ஏறினர்.

    கிராமத்தில் தங்களின் மகள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவ்வூர் பள்ளியின், தலைமையாசிரியர் வரதராஜனும், அவர் மனைவி லட்சுமியும். சரியான நேரத்தில் வந்து சேர்ந்த தனது மகள், ரித்திகாவை, முகம் கொள்ளா, சிரிப்புடனும், மனமிகுந்த மகிழ்ச்சியுடனும், வரவேற்றனர் அவர்கள்.

    ரித்திகாவின் அப்பா வரதராஜனுக்கு, அரசாங்க பள்ளியில் வாத்தியார் உத்தியோகம். அதனால் அடிக்கடி, ஊர் மாற்றல் வந்து கொண்டிருந்தது. ரித்திகாவும் தன் பள்ளி படிப்பு முடியும் வரை தன் பெற்றோர்களுடனே தங்கி படித்தாள்.

    பின் கல்லூரி படிப்பு வரவும், படிப்பு பாழாகக்கூடாது என்று அவளை, விடுதியில் தங்கி படிக்க வைத்தனர்.

    அவள் அப்பா, தலைமையாசிரியராக, பதவி உயர்வு பெற்று, இந்த கிராமத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் வந்திருந்தார். எனவே ரித்திகா, இந்த கிராமத்திற்கு, முதல் தடவையாக வருகை புரிந்திருந்தாள்.

    வீட்டுக்கு வந்து, குளித்துவிட்டு, பயண களைப்பு தீர, சற்றே ஓய்வு எடுத்தவள், காலை டிபனை முடித்துவிட்டு, டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ரித்திகாவின் வரவை, அவளது அம்மா லட்சுமி மூலம் தெரிந்து வைத்திருந்த, பக்கத்து வீட்டு வயசுப் பெண்கள் மல்லிகா, சுசீலா, இருவரும் இவளை பார்க்க வந்தனர். லட்சுமி அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

    சம வயது உடையவர்களாக இருந்ததால், வெகு சீக்கிரமாக நட்பு கொண்டு, தோழிகளாகிவிட்டனர். சிறிது நேரம் அவளிடம், பேசிவிட்டு, தங்கள் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் சென்றதும் ரித்திகா, தன் கல்லூரியிலும், விடுதியிலும் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை, தன் பெற்றோர்களிடம் கூறி சிரிக்க, பெற்றோர்களும், அவளுடன் சேர்ந்து சிரித்தனர்.

    ஒரு நாள், ரித்திகா, தன் தோழிகளிடம் எனக்கு ரொம்ப போரடிக்கிறது. இந்த கிராமத்தை சுற்றி காண்பியுங்களேன் என்று கேட்க, அவர்களும் சம்மதித்து அவளை கூட்டிச் சென்றனர்.

    போகும்போது ரித்திகா, அவர்களின் படிப்பு பற்றிக் கேட்க, அவர்களோ, சாதாரணமாக நாங்கள் பள்ளி படிப்பை முடித்ததும், பின் தபால் மூலம் பி.ஏ. தமிழ் படிச்சிருக்கிறோம். எங்களுக்கு, உங்களைப் போல சென்னை சென்று படிக்க வசதியில்லை என்று கூற, ரித்திகா வருத்தப்பட்டாள்.

    வயல்வெளிகளை சுற்றி காண்பித்துவிட்டு, மாந்தோப்பு பக்கம், கூட்டி வந்தனர். எங்கு பார்த்தாலும் பசுமையாயிருந்ததை பார்த்து, ரித்திகா, எல்லாவற்றையும் ரசித்து பார்த்தாள். மாந்தோப்பு வந்ததும், அங்கே ஒரு மரத்தில், தாழ்வான கிளைகளில் மாங்காய்கள் காய்த்து தொங்கின.

    உடன் வந்த தோழியர்களில் ஒருத்தி, சும்மா இராமல், இந்த தோப்பு மாங்காய் ரொம்ப ருசியாய் இருக்கும் என்று கூற ரித்திகாவுக்கு உடனே சாப்பிடணும் போல் ஆசை தோன்ற சுற்று, முற்றும் பார்த்தாள். சற்று தள்ளி, ஒரு கனமான மரத்துண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1