Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tyagathin Marupakkam
Tyagathin Marupakkam
Tyagathin Marupakkam
Ebook106 pages47 minutes

Tyagathin Marupakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித வாழ்வில் தியாகம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் நிறமிழந்து வரும் காலமிது. எனது குடும்பத்தினருக்காக உறவினருக்காக நண்பர்களுக்காக தியாகம் செய்தேன் என்று சொல்லும் தலைமுறையை... இன்றைய தலைமுறை வினோதமாக தான் பார்க்கிறது.

தியாக உணர்வுடன் இருப்பவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அண்ணன் தங்கை பாசத்தை மையக் கருவாகக் கொண்டு காதல் கொண்ட உள்ளங்களை சேர்த்து வைக்க அவர்கள் எடுக்கும் முயற்சி... தங்கையின் தியாக உணர்வு இவற்றை மையப்படுத்தி உருவானது தான் ‘தியாகத்தின் மறுபக்கம்’ என்ற நாவல்...

வாசகர்களின் உள்ளத்தில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580137806148
Tyagathin Marupakkam

Read more from Parimala Rajendran

Related to Tyagathin Marupakkam

Related ebooks

Reviews for Tyagathin Marupakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tyagathin Marupakkam - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    தியாகத்தின் மறுபக்கம்

    Tyagathin Marupakkam

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    நிர்மலா... நிர்மலா...

    பக்கத்து வீட்டு பார்வதி அம்மா அழைக்கும் சப்தம் வெளியே வருகிறாள் நிர்மலா.

    நிர்மலாவை பார்க்கிறாள் பார்வதி. வயது நாற்பத்தைந்தை நெருங்குகிறது. லட்சணமான முகம். கணவனை இழந்த அவள் நெற்றியில் கடுகளவு கருப்பு ஸ்டிக்கர். ஸ்கூல் டீச்சர். கணிசமான சம்பளம். ஒரே மகன் சூர்யா. படிப்பு முடித்து, இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கிறான்.

    கோவிலுக்கு போக தயாராக வந்து நிற்கும் பார்வதியை பார்க்கிறாள்.

    உள்ளே வந்து உட்காருங்கம்மா, கொஞ்சம் லேட்டாயிடுச்சு. இதோ அஞ்சே நிமிஷத்துலே வரேன்.

    அவசரமில்லை நிர்மலா. மெதுவா வா.

    சொன்னவள் உள்ளே வந்து உட்காருகிறாள்.

    சூர்யாவை இன்னும் காணோம்.

    காலையில் கிளம்பும் போதே லேட்டாகும்னு சொல்லிட்டு போயிட்டான்மா. ப்ரெண்டு வீட்டில் பர்த்டே பார்டியாம். நைட் டிபன் கூட வேண்டாம்னு சொல்லிட்டான்.

    சொன்னபடி காட்டன் புடவையில் எளிமையான அலங்காரத்தில் வருகிறாள் நிர்மலா.

    கடவுள் உனக்கு தங்கமான பிள்ளையை கொடுத்திருக்காரு. நல்ல மருமகள் வந்து உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும் நிர்மலா, சின்ன வயசிலேயே உன் மாங்கல்யத்தை பறிச்சுக்கிட்ட கடவுள், உனக்கு இந்த விதத்தில் நல்லது செய்யட்டும்.

    பார்வதி எழுந்திருக்க... வாசல் கதவை பூட்டியவள், அவளுடன் தெருவில் இறங்கி நடக்கிறாள்.

    கோவிலில் அவ்வளவாக கூட்டமில்லை. கோவில் வாசலில் இருந்த கடையில் அர்ச்சனை தட்டை வாங்கிய நிர்மலா.

    அம்மா, உங்களுக்கு ஏதும் அர்ச்சனை இருக்கா?

    வெளிநாட்டில் இருக்கும் என் பிள்ளைகள் நல்லாயிருக்கணும். அது மட்டும்தான் என் வேண்டுதல், முடிஞ்சவரைக்கும் நடந்து வந்து பெருமாளை பார்த்துட்டுப் போறேன். இன்னைக்கு என்ன விசேஷம் நிர்மலா. அர்ச்சனை தட்டு வாங்கியிருக்கே

    என் அண்ணனின் அனுஷ நட்சத்திரம் இன்னைக்கு, அதனால அவர் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப் போறேன், நிர்மலாவை பார்த்து சிரித்தவள்...

    நான் இங்கே குடிவந்து ஒரு வருஷமாக போகுது. உன் அண்ணன் மேல் நீ எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சதுதான். இருந்தாலும் இத்தனை வயசுக்கு பிறகும் இரண்டு பேரும் மாறாமல் அதே பிரியத்தோடு இருப்பது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு நிர்மலா...

    பெயர், நட்சத்திரம் சொல்லுங்க...

    கதிரவன் அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி.

    அர்ச்சனை தட்டை தொட்டு கும்பிட்டு தருகிறாள்.

    மனமுருகி நாராயணனின் நாமாவளி சொல்லி கண்மூடி பிரார்த்திக்கிறாள்.

    பெருமாளே, என் அண்ணன் உடல் நலத்தோடு என்னைக்கும் சந்தோஷமாக இருக்கணும்.

    சாமி கும்பிட்டு வெளி பிரகாரத்தில் உட்கார, பார்வதி நல்லா இருக்கியா?

    பார்வதி அம்மாவுக்கு தெரிந்தவள் அவளை பார்த்து விசாரிக்க...

    பத்து நிமிஷம் நிர்மலா. பேசிட்டு வரேன், தெரிஞ்சவங்க வந்திருக்காங்க.

    போயிட்டு வாங்கம்மா. நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன்... பார்வதி எழுந்து போக...

    மண்டபத்தின் அருகில் விளையாடும் சிறுவர், சிறுமியரை பார்க்கிறாள்.

    அண்ணா, என்னை பிடி பார்ப்போம்.

    வேண்டாம் அனு... ஓடாதே கீழே விழுந்துடப் போறே...

    நிர்மலாவின் மனம் பழைய நினைவுகளை தேடி போகிறது...

    கதிர், அம்மாவுக்கு வேலையிருக்கு. நிம்மியை கூட்டிக்கிட்டு வாசலில் போய் விளையாடுப்பா...

    தங்கையின் கைப்பிடித்து அழைத்து போகிறான் கதிர்.

    நிம்மி... பாண்டி ஆட்டம் விளையாடலாமா?

    வேண்டாம் அண்ணா. உனக்கு என்ன பிடிக்குமோ அதை விளையாடலாம்.

    சரி அப்படின்னா பந்து விளையாடலாம்.

    ஓடி போய் பெரிய பந்தை தூக்கி வருகிறாள்.

    நான் தூக்கிப் போடுவேன், நீ கரெக்டா பிடிக்கணும்.

    ம்... போடு...

    அவன் பலம் கொண்ட மட்டும் வீச, பந்து அவளை தாண்டி ஓடுகிறது. ஓடிப்போய் இரண்டு கைகளாலும் எடுத்து வந்து அண்ணனிடம் தருகிறாள். திரும்ப, திரும்ப பந்து அவள் கைகளுக்கு வராமல் போக, ஒவ்வொரு முறையும் மூச்சு வாங்க ஓடுகிறாள்.

    வெளியே வந்து பார்த்த அவர்களின் அம்மா...

    கதிர் நிம்மி பாவம் இல்லையா. அவளால் பந்தை பிடிக்க முடியாமல் தவறவிட்டு ஓடி ஓடி எடுத்து வர்றா. பாரு மூச்சு வாங்குது. உட்கார்ந்து விளையாடுங்க அம்மா சொல்ல...

    பரவாயில்லைம்மா. அண்ணனுக்கு பந்து விளையாடத்தான் பிடிக்கும். எனக்கொன்னும் கஷ்டமில்லை. நான் ஓடிப்போய் எடுத்து வருவேன். நீங்க உள்ளே போங்க. நாங்க சமர்த்தா விளையாடுவோம். ஐந்து வயதில் அண்ணனுக்கு பரிந்து பேசுவாள் நிம்மி. அவர்கள் வளர, வளர அவர்களின் நெருக்கமும், அன்பும், பாசமும் வளர ஆரம்பித்தது. கதிரை விட நிம்மியே அண்ணனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுத்தர தயாராக இருப்பாள்.

    "கதிருக்கு டாக்டர் சீட் கிடைச்சிருக்கு. நிறைய செலவாகும். நிம்மியும் க்ளாஸ் ஃபர்ஸ்ட்டாக வந்திருக்கா. அவளுக்கும் டாக்டர் ஆகணுங்கிற கனவு இருக்கு. இரண்டு பேரையும் நம்மால் டாக்டருக்கு படிக்க வைக்க முடியுமா லட்சுமி. ஒரே குழப்பமா

    Enjoying the preview?
    Page 1 of 1