Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Krishna Kudil
Krishna Kudil
Krishna Kudil
Ebook263 pages1 hour

Krishna Kudil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது எனது முதல் கதை...

சிறு வயதிலேயே பிரிந்த தனது அத்தை மகள் திரும்பி வரும்போது கலெக்டராக வருகிறாள் சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த நாயகன் பின்னர் அவளை எப்படி தனது வாழ்க்கையில் இணைத்துக் கொள்கிறான் என்பதை சொல்லும் நாவல்...

இன்னொரு நாயகன் போலீஸ் ஆபீஸர் அவன் கலெக்டருடன் இணைந்து நாட்டு மக்களுக்கு எப்படி பணியாற்றுகிறான் என்பதையும் இதில் காணலாம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580153908302
Krishna Kudil

Read more from Ajudhya Kanthan

Related to Krishna Kudil

Related ebooks

Reviews for Krishna Kudil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Krishna Kudil - Ajudhya Kanthan

    https://www.pustaka.co.in

    கிருஷ்ண குடில்

    Krishna Kudil

    Author:

    அஜூத்யா காந்தன்

    Ajudhya Kanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ajudhya-kanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்

    அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம்

    உன்னைச் சேரும்."

    திருச்சி மாநகரின் சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த பஸ்ஸில் இருந்து இறங்கினாள் ஒரு பெண். நேராக ஆட்டோ ஸ்டாண்ட் சென்று,

    ஆட்டோ வருமாப்பா...?

    எங்கம்மா போகணும்...?

    கலெக்டர் ஆபீஸ் போகணும்பா...! எவ்வளவுப்பா..?

    12௦ ரூபாம்மா...

    சரி போகலாம்...

    ஏறிக்கோங்கம்மா... என்று கூறி வண்டியை கிளப்பினான்.

    அந்தப் பெண் நல்ல உயரமாகவும் சிவந்த நிறமாகவும் இருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள். கண்ணாடி அவளுக்கு கம்பீரமாக இருந்தது.வெளியே பார்த்தபடி வந்தவள்,

    சார்... என்று அழைத்தாள்.

    ஆட்டோ ஓட்டுனர், ஏனுங்கம்மா, என்னையா கூப்பிடீங்க...?

    ஆமாங்க...

    மகிழ்ந்து போன ஓட்டுனர், கேளுங்கம்மா... அவன் வாழ்நாளில் அவனை ஒரு இளம்பெண், அதுவும் மிக அழகான பெண் அவனை சார் என்று அழைத்ததைக் கேட்டவுடன் விட்டால் அவன் சொத்தையே கேட்டால் கூட கொடுக்க தயாராகி விட்ட பாவனையில் கேட்டான்.

    ஏன் இந்த ஊரில் ஆட்டோவுக்கு மீட்டர் சார்ஜ் கிடையாதா...?

    அதையேம்மா, கேட்கிறீங்க..! இடையில் மீட்டர் சார்ஜ் என்று ரூல்ஸ் போட்டாங்க.. ஆனால் போலீஸ்காரங்க மாமுல் கட்டாகுதுன்னு இப்ப மீட்டர் இல்லாம போனாலும் கண்டுக்கிறதில்லம்மா..!

    ஓஓஓ... அப்படியா..? என்று கூறும்போதே கலெக்டர் ஆபீஸ் காம்பவுண்டுக்குள் வண்டி நுழைந்தது.

    நேரே மெயின் பில்டிங் போங்க... எனவும் வண்டி அங்கு சென்று நின்றது. இறங்கி பணத்தைக் கொடுத்து விட்டு, படிகளில் ஏறி நடந்தாள்.கைக்கடிகாரத்தைத் திருப்பி மணி பார்த்தாள். கரெக்ட்டாக பத்து மணி. வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை, ஆபிசில் பாதி சேர் காலியாக இருந்தது. மெல்ல எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே நடந்தாள்.

    என்னாங்கம்மா...? யாரைப் பார்க்க வேண்டும்...? எதிரில் வந்த ஒரு ஆள் விசரித்தார்; பார்க்க பியூன் மாதிரி தெரிந்தார்.

    கலெக்டர் பி.ஏ.வை பார்க்க வேண்டும்…

    அவர் இன்னும் வரவில்லையே..! வந்தாலும், பார்ப்பது கஷ்டம்... உங்களுக்கு என்ன வேலை ஆக வேண்டும்..? என்று சொல்லுங்கள், நான் பார்க்கவேண்டியவரைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து முடித்துத் தருகிறேன், என்னை மட்டும் நல்லா கவனிச்சுக்கோங்க..!

    இங்கு இதுதான் வழக்கமோ…?

    ஆமாம்...

    சரி, உங்க கலெக்டரையாவது பார்க்க முடியுமா...?

    ஏம்மா, பி.ஏவையே பார்க்க முடியாதுன்னு சொல்லிக் கிட்டு இருக்கேன், நீங்க கலெக்டரை பார்க்கணும்னு சொல்றீங்க...! அப்போ, அடுத்த வாரம் வாங்க, உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம்...

    ஏன்...?

    பழைய கலெக்டரை வேற இடத்துக்கு மாத்திட்டாங்க, புது கலெக்டர் போட்டாச்சு, ஆனால் அவங்க இன்னும் பொறுப்பு ஏத்துக்கலை..! என்னிக்கு வருவாங்கன்னு தெரியாது...

    எனக்கு இப்போ எந்த பிரிவுல பெரிய ஆபிசர் வந்திருக்கிறாரோ, அவரை மட்டும் வரசொல்லுங்க...

    கலெக்டர் ரூம் எது...?

    எதுக்குங்க...?

    ஐ யாம் நியூலி அப்பாயிண்டட் கலெக்டர் பர்வதவர்த்தினி ஐ. ஏ. எஸ்...

    2

    திருச்சியில் வி.ஐ. பி. க்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு பங்களா,

    கிச்சனில் வேலை செய்யும் காவேரி தனக்குள்ளேயே, என்ன ,இன்னும் இந்த பொன்னம்மாவைக் காணலியே?

    அம்மா வரதுக்குள்ளே வேலை முடியலேன்னா... ஐயோ நாம தொலைந்தோம், என்று புலம்பிக்கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தாள்.

    அப்பப்பா, என்னா கூட்டம்; இந்த பஸ்ஸை பிடிச்சு வரதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுது என்று புலம்பிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

    போதும், உன் புலம்பலை நிறுத்து, முதல்ல இந்த தேங்காயை துருவிக் கொடு சட்டினி அரைக்கணும், இன்னைக்குப் பார்த்து சுத்து வேலை செய்யிர பொண்ணு வராததால், நான் கோலம் போட்டுட்டு வர லேட் ஆயிடுச்சு. சீக்கிரம் கொஞ்சம் உதவி பண்ணு.அம்மா சாப்பிட வர்ற நேரம் ஆச்சு...!"

    பொன்னம்மா...

    என்ன...?

    தேங்காயை துருவிட்டேன்னா, கொஞ்சம் சின்னம்மாவுக்கு பால் கொண்டுபோய் கொடுத்துட்டு, அவங்களை எழுப்பி விட்டுட்டு வாயேன்...

    சின்னம்மா என்று அழைக்கப்படும் நந்தினி அந்த வீட்டின் இளவரசி. அவள் பிறந்த பிறகுதான் அந்த வீட்டின் செல்வநிலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது என்பதால் மிகவும் செல்லம்.

    மாடியில் நந்தினியின் அறைக்கதவைத் தட்டி விட்டு, உள்ளே சென்று, சின்னம்மா பால் கொண்டு வந்திருக்கிறேன்...

    போர்வைக்குள், இருந்து அங்க வைத்துட்டு போ.. என்ற குரல் வந்தது.

    சின்னம்மா மணி ஒன்பது ஆகப்போகுது... என்றவுடன்

    ஐயையோ! நம்ம வீட்டு பிரின்சிபல், இன்னும் கொஞ்ச நேரத்தில் டைனிங் ஹால் வந்திருமே.. என்று கூறி, ஒரே மடக்கில் பாலைக் குடித்து விட்டு குளியலறை நோக்கி பாய்ந்தாள்.

    R.C.S. குரூப்ஸ் ஆப் கம்பெனியின் சேர்மன், சந்திரசேகரன் எம்.டி ராஜலெட்சுமி அம்மாள். இவர்களின் சீமந்தபுத்திரன் ஷிவ்நந்தன், சீமந்தபுத்திரி நந்தினி, வீட்டில் எப்போதும் மீனாட்சி ஆட்சிதான்! சந்திரசேகர் எப்போதும் தர்மபத்தினியின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். காலேஜ் படிக்கும்வரை அவ்வாறு இருந்த ஷிவ்நந்தன், பி.இ. முடித்ததும் தனது முடிவுகளை தானே எடுக்கத் துவங்கினான். M.B.A. ஃபாரினில் போய் படித்து விட்டு வந்து, தனியாக கம்யூட்டர் கம்பெனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறான்,

    பரம்பரைத் தொழில்களான, மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பது பேப்பர் கப் தயாரிப்பது, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பெட்ரோல் பங்க் எல்லாவற்றையும் நிர்வகிப்பது, ராஜலெட்சுமியும், சந்திரசேகரும்தான்...

    நல்ல உயரம், எதிராளியை ஊடுறுவும் கண்கள், நல்ல செதுக்கினால் போன்று தோற்றம், மொத்தத்தில் யாரையும் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம், ஃபாரினில் படித்தபோதும், இங்கு படிக்கும்போதும் பெண்கள் தன்னைச் சுற்றியதால் எந்தப் பெண்ணிடமும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. மொத்தத்தில், துர்வாசர், சிடுமூஞ்சி, என்று ஆபிசில் அழைக்கப்படும் ஷிவ்நந்தன் ( நமக்கு இனி ஷிவா ) நல்ல சிரித்து பேசுவது ஒரு சிலரிடம் மட்டுமே! அதில் தங்கையும் அடக்கம்.

    சரியாக ஒன்பது மணிக்கு டைனிங் ஹாலில் நுழைந்த ராஜலட்சுமி காவேரி டிபன் ரெடியா...?

    ஆமாம்மா, டைனிங் டேபிளில் எடுத்து வைத்து விட்டேன் அம்மா…

    குட்மார்னிங்ம்மா...

    குட்மார்னிங் ஷிவா, டாடி எங்கே...?

    குட்மார்னிங் ஷிவா...

    டாடி குட்மார்னிங்...

    இரண்டு பேரும் உட்காருங்கள்... என்று டிபன் எடுத்து வைத்தார்.

    அம்மா நீங்களும் உட்காருங்க… சேர்ந்து சாப்பிடலாம்.

    இருக்கட்டும்.. ஆமாம் நந்தினி எங்கே...?

    இதோ வந்திட்டேம்மா... மாடிப்படிகளில் ஓடி வந்துகொண்டே பதில் கூறினாள்.

    தினம் இந்த மாதிரி அவசரமாக ஓடி வர்றதே உனக்கு வேலையாப் போச்சு, கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால்தான் என்ன...?

    சாரிம்மா... நாளை முதல் சீக்கிரம் கிளம்பிர்றேன்.. என்று கூறிவிட்டு அண்ணனைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

    வாலு, இதே டயலாக் தினமும் சொல்றே, உன்னை...

    ஏண்ணா, விநாயகர் இதே டயலாக் சொன்னா நாம ஓ.கே. சொல்றோம், நான் சொன்னால் தப்புங்கறீங்க...

    அது என்னம்மா கதை...?

    அப்பா, ஒரு முறை சனி பகவான். விநாயகரிடம் போய், இன்னேலர்ந்து உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகுது. அதனாலே நான் உங்களை பிடிக்க வந்திருக்கிறேன், என்றாராம். அப்படியா சரி, அப்ப ஒரு வேலை செய், இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வா என்றாராம். சரி, என்று சனி பகவான் கிளம்பினராம். போவதற்கு முன்னால் என் முதுகில், இன்று போய் நாளை வருகிறேன்... என்று எழுதி விட்டுச் செல், என்று கூறினாராம். சனி பகவான் அப்படியே செய்ய, மறுநாள் சனி பகவான் வந்தவுடன், என் முதுகில் எழுதி இருப்பதை படி, என்றாராம். சனி பகவான் எழுதியதை படித்தவுடன், சரி, இன்றுபோய் நாளை வா..." என்றாராம். இப்படியே ஏழரை ஆண்டுகளும் சனி பகவானால் விநாயகரை பிடிக்கவே முடியலையாம்

    இது எப்படி இருக்கு...? எப்பவுமே நாம நல்ல விஷயங்களை பாலோபண்ணறது வழக்கம்..." என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு கலகலத்து சிரித்தாள்.

    அவள் சொன்னதைக் கேட்டு அண்ணனும், அப்பாவும் ஹ்ஹ்ஹா என்று சேர்ந்து சிரித்தனர்.

    ராஜலெட்சுமி மட்டும் இப்படியே எல்லாரும் செல்லம் கொடுத்துட்டே இருங்க, போற இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும் என்றார்.

    ஆமாம்மா, காலேஜில் ஏற்கனவே நல்ல பெயர்தாம்மா. அதுவும் இந்த பி.ஜி.யில் நான் டிஸ்டிங்ஷன் வாங்குவேன், என்று எங்க ப்ரின்சி நம்பிகிட்டு இருக்கு.. என்றாள். வாயில் தோசையை அடைத்துக்கொண்டே. அப்படி மட்டும் நான் பர்ஸ்ட் வந்துட்டேன், என் ரேஞ்சே வேறம்மா..

    தேங்க்ஸ் பார் யுவர் அட்வான்ஸ் விஷ்ஷஸ்...

    போடி அரட்டை, ஒழுங்கா சாப்பிட்டுவிட்டு காலேஜுக்கு போற வழியைப் பார். ஷிவா, நீ இவளை காலேஜில் விட்டுட்டு உன் கம்பனிக்கு போ...

    சரிம்மா...

    நாம் போகலாம் என்று சந்திரசேகரும் ராஜலக்ஷ்மியும் கிளம்பினர்.

    3

    கலெக்டர் ஆபிஸ்

    வாழ்க்கை சிலருக்கு சிலவற்றை வரமாய் அளிக்கிறது

    அதை சரியாய் பயன்படுத்திக்கொண்டு சாதித்தவர் சிலரே"

    புது கலெக்டர் வந்தவுடன் ஆபிசில், மந்திரக்கோலை சுழற்றி விட்டதுபோல் சில விஷயங்கள் நடந்தேறியது. மோகன்குமார் கலெக்டரின் பி.ஏ பதறிக் கொண்டு ஓடி வந்தார்.

    சாரி மேம் நீங்க இன்னைக்கு வருகிறீங்கன்னு தெரியாது.

    இட்ஸ் ஓ. கே...

    வெல்கம் பார்ட்டி கொடுத்து இன்வைட் பண்ணனும்னு நினைத்து இருந்தோம்! பட், நீங்க திடீர்னு வருவீங்கன்னு எதிர்பார்க்கலை...!"

    நோ ப்ராபளம் ஈவ்னிங் ஒரு மீட்டிங் அரேன்ஜ் பண்னுங்க..."

    மீட்டிங்கில், முதலில் மோகன்குமார் பேசினார்

    I would like to take a moment to introduce our new collector MISS. PARVATHAVARTHINI I.A.S Mohan introduces the new collector And welcomes her to speak some words;

    I think, we will begin now; First I would like to welcome you all, and thank everyone for coming, Especially at such short notice. I want the best co-operation from you, do the best service to the People.

    மீட்டிங் முடித்தவுடன் மோகன் என்று அழைத்தாள்.

    எஸ் மேம்...

    எனக்கு சில டீடைல்ஸ் வேண்டும்...

    என்ன டீடைல்ஸ், மேம்...?

    அரசாங்கம், இந்த மாவட்டத்துக்கு ஒதுக்கி இருக்கிற திட்டங்கள், நிதிகள் இது பற்றிய பைல்ஸ், மேலும் இந்த மாவட்டத்தில் உள்ள முக்கியமான பெரிய பிசினெஸ் மனிதர்கள், மற்றும் அரசியல்வாதிகள் லிஸ்டும் வேண்டும்.

    ஓ கே. மேம்...

    நாளைக்கு கமிஷனர் ஆப் போலீஸ் கூட ஒரு அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணிடுங்க.. என்று கடகடவென்று கூறியவள், லேப்டாப்பில் அடுத்து செய்ய வேண்டிய வேலையில் இறங்கினாள்.

    மோகன் தயங்கி நிற்க, என்ன மோகன்...?

    கமிஷனர் கூட எதற்கு அப்பாயின்மென்ட் மேம்...?

    ஒரு ஸ்மால் டிஸ்கசன், அவ்வளவுதான்...

    ஓ கே மேம். நான் அர்றேஞ் பண்ணிடறேன்... என்றார்.

    4

    விநாயகா காலேஜ் பார் வீமேன்ஸ்

    சர்ரென்று காரை பிரேக் அடித்து நிறுத்தினான், ஷிவா..! நந்தினி இறங்கிக்கொண்டு, பை அண்ணா.. என்றாள்.

    பைம்மா.. ஈவ்னிங் காரை அனுப்பறேன், போய்டு ;

    ஓ.கேண்ணா...

    ஏய், நந்து...

    ஹாய், சரண்...

    என்ன வழக்கம்போல் இன்னைக்கும் லேட்டா...?

    ஆமாம் வழக்கம்போல்தான்...

    சரி, சரி, வா கிளாசுக்கு போகலாம் ஏய், சரண், இந்த வருஷம் காலேஜ்டே, பத்தி ஏதாவது தெரியுமா...? கல்சுரல்ஸ் ஆர்கனைஸ் பண்ணறது எந்த டிபார்ட்மெண்ட்ன்னு தெரியுமா...?

    தெரியலைடி..." பேசிக்கொண்டே கிளாசுக்குள் நுழைந்தனர்

    குட்மார்னிங் மேம்

    குட்மார்னிங், ஸ்டூடன்ட்ஸ்... லெட் அஸ் ஸ்டாட்ர்ட் அவர் கிளாஸ் டுடே...

    ப்யூன் வந்து நின்றான்.

    என்னப்பா..?

    மேம் நந்தினியை பிரின்ஸ்பால் கூப்பிடறாங்க...

    நந்தினி யூ கேன் கோ...

    எஸ், மேம்...

    பிரின்ஸ்பால் ரூம், எக்ஸ்க்யூஸ்மீ மேம்...

    கம் இன்..

    மேம், நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க...

    "எஸ் நந்தினி, இந்த வருஷம் காலேஜ்டே பங்க்ஷன்ல, கல்சுரல்ஸ் உங்க டிபார்ட்மென்ட்தான் பண்றாங்க, அதனாலே நான் உன்னை செலக்ட் பண்ணி இருக்கேன். யார், யார், ப்ரோக்ராம் பண்ணறது யாரை சீப் கெஸ்ட் இன்வைட் பண்ணுவது, இது எல்லாம், லெக்சரர் சைடு 2 மேம் இருப்பாங்க. அவங்ககூடச் சேர்ந்து நீங்க இந்த காலேஜ்டேயை சிறப்பா பண்ணனும்.

    ஓ. கே. மேம்...

    கிளாஸுக்கு வந்ததும், சரண்யாவைக் கட்டி பிடித்துக்கொண்டு குதித்தாள்.

    ஏய், என்னடி சொல்லிட்டுக் குதி...

    இந்த வருஷம் கல்சுரல்ஸ் நம்மகிட்ட வந்துருச்சுடி; நாமதான் ஆர்கனைஸ் பண்ணறோம்...

    அப்படியா...! தூள் கிளப்பறோம்...

    அப்ப, இது சம்பந்தமா உள்ள மேம்கிட்ட பேசிட்டு வந்திரலாம் வா...

    ஓ.கே... இருவரும் கிளம்பி ஸ்டாப் ரூம் வந்தனர். வித்யா மேமும் காயத்திரி மேமும் தான் நமக்கு ஆர்கனைஸர்ஸ்.

    ஆமாம்டி...

    எஸ்க்யூஸ்மீ மேம்...

    வாங்க, வாங்க... நானே, உங்களை வரச் சொல்லணும்னு நினைத்தேன்..

    மேம் நீங்களும், காயத்திரி மேமும் தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணறதா பிரின்சிபால் மேம் சொன்னாங்க...

    ஆமாம் அவங்க இப்ப வந்துருவாங்க,அது வரைக்கும் நாம டிஸ்கஸ் பண்ணலாம்...

    மேம், வழக்கம்போல் டான்ஸ், பாட்டு, நாடகம், கவிதை, எல்லாம் ஒரு, ஒரு, டிபார்ட்மென்ட் பண்ணிடுவாங்க. சீப் கெஸ்ட்தான் யாரை இன்வைட் பண்ணறது மேம்...?

    உடனே நந்தினி, எனக்கு ஒரு யோசனை...

    என்ன சொல்லு...

    "இது பெண்கள் கல்லுரிதானே... சொசைட்டில பெரிய பொறுப்புல உள்ள பெண்மணி, யாரையாவது இன்வைட் பண்ணலாமா..

    அப்படி யாரு இருக்கா...?

    மேம் இப்போ வந்திருக்கிற கலெக்டர் ஒரு லேடிதான் அவங்களை கேட்டுப் பார்க்கலாம். அப்புறம், ஒரு லேடி ஜட்ஜ்கூட இருக்காங்க, அவங்களையும் இன்வைட் பண்ணலாம்.

    அதற்குள் சரண்யா, மேம், நந்தினி அம்மா கூட ஒரு பெரிய கம்பெனி எம்.டி, அவங்களையும் இன்வைட் பண்ணலாம்..."

    ஓ. கே... முயற்சி பண்னுங்க.

    ஏதாவது இரண்டு தேதி குறிச்சிட்டு போங்க, அப்பதான் ஏதாவது ஒரு தேதி நமக்கு கன்பார்ம் பண்ணமுடியும். அவங்க வர்றதா இருந்தால் ப்ரோக்ராம் நன்றாக இருக்க வேண்டும்.

    ஓ. கே... மேம்

    5

    கமிஷனர் ஆபீஸ் ; சத்ய பிரகாஷ் ஐ. பி.எஸ். கமிஷனர் ஆப் போலீஸ்

    திருச்சியில் பொறுப்பேற்று 6 மாதம்தான் ஆகிறது. சிட்டி ஓரளவு கிளீன். சிறிய வயது, சுறுசுறுப்பு, சாதிக்கும் எண்ணம், போலீஸ் வேலைக்கு ஏத்த புத்திசாலித்தனம், யாரையும் திரும்பி பார்க்கவைக்கும் வசீகரம் கம்ம்பீரம்...இதுதான் சத்யா.

    குட்மார்னிங் சார்...

    எஸ்...

    கலெக்டர் ஆபிசில் இருந்து தகவல் வந்தது, உங்களை கலெக்டர் மீட் பண்ண ஒரு அப்பாயின்மென்ட் வேணுமாம்

    அப்படியா...! நானே சென்று பார்க்கிறேன்..

    "இப்போ ஏதாவது முக்கியமான அப்பாயின்மென்ட் உள்ளதா...?

    இல்லை சார்...

    ஓ.கே. நான் இப்போ மேடம் பார்க்கலாமான்னு கேளுங்க...?

    ஓ.கே.சார்...

    சார், வரலாம்னு சொல்லிட்டாங்க...

    ஓ.கே. நான் போயிட்டு வந்துடறேன். நீங்க இங்க ஏதாவது முக்கியம்னா கால் பண்னுங்க...

    கலெக்டர் ஆபிசில் மோகன் வந்து வர்த்தினியிடம் மேம் ,போலீஸ் கமிஷனர் வந்திருக்கிறார்...!

    ஓ. கே. அனுப்பி வைங்க...

    குட்மார்னிங் மேம்...

    குட்மார்னிங்...

    மோகன், கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது ஆர்டர் பண்னுங்க...!

    ஓ.கே. மேம்...

    கங்குராசுலேஷன்ஸ்... மேம்

    "தேங்க்யூ,

    Enjoying the preview?
    Page 1 of 1