Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uthaya Nila
Uthaya Nila
Uthaya Nila
Ebook328 pages2 hours

Uthaya Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பழமொழி நமக்கு எத்தனையோ நினைவலைகளைத் தோற்றுவிக்கிறது.

உதய நிலா

சிறு உலகத்தில் உதயமாகி உலவி வரும் பெண்களின் நெஞ்சில் எத்தனை எத்தனை ஆசைகள்... கனவுகள்...

எல்லாம் நிறைவேறுகிறதா?

ஆண் பெண்ணைக் காதலிப்பதும், பெண் ஆணைக் காதலிப்பதும் இயற்கை. நினைப்பது நடப்பதில்லை என்பதை இங்கு தான் புரிந்து கொள்கிறோம்.

அதற்கு உதய நிலா கதாநாயகியும் விதி விலக்கல்ல. மாமன் மகனின் காதலை நிராகரித்து சிறு வயதில் காதல் என்று அறியாமல் பழகிய பாபுவின் நினைவு மறையாமல் நிற்கும் பொழுது - அதுதான் காதல் என்று உணருகிறாள்.

மாமன் மகன் குமாரின் காதலை உணராதவளாகி மறுத்துவிட்டு கிராமத்திற்குப் போகிறாள்.

பாபு ஆற்றுடன் போய்விட்ட செய்தி கிடைத்து துடிக்கிறாள்.

ஆனால் விதி

மீண்டும் பாபுவை டாக்டராக அவள் முன் நிறுத்துகிறது. ஆனால் அடைய முடியாத நிலை.

உதய நிலாவில் இன்னும் பல கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள்.

மீண்டும் கதாநாயகி ஹனி குமாரை மணக்கப் போகிறாளா?

- இது வாசகர்களுக்கு எழும் கேள்வி.

இதற்கு விடையை நான் சொல்லி விட்டால் எப்படி?

வாசகர்களே! நீங்களே படித்தால்தான் “நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்?” என்பது புரியும்.

படித்துப் பாருங்களேன்!

வாசகர்களாகிய உங்களுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- லட்சுமி ராஜரத்னம்

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580115704909
Uthaya Nila

Read more from Lakshmi Rajarathnam

Related to Uthaya Nila

Related ebooks

Reviews for Uthaya Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uthaya Nila - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    உதய நிலா

    Uthaya Nila

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    என்னுரை

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பழமொழி நமக்கு எத்தனையோ நினைவலைகளைத் தோற்றுவிக்கிறது.

    உதய நிலா

    சிறு உலகத்தில் உதயமாகி உலவி வரும் பெண்களின் நெஞ்சில் எத்தனை எத்தனை ஆசைகள்... கனவுகள்...

    எல்லாம் நிறைவேறுகிறதா?

    ஆண் பெண்ணைக் காதலிப்பதும், பெண் ஆணைக் காதலிப்பதும் இயற்கை. நினைப்பது நடப்பதில்லை என்பதை இங்கு தான் புரிந்து கொள்கிறோம்.

    அதற்கு உதய நிலா கதாநாயகியும் விதி விலக்கல்ல. மாமன் மகனின் காதலை நிராகரித்து சிறு வயதில் காதல் என்று அறியாமல் பழகிய பாபுவின் நினைவு மறையாமல் நிற்கும் பொழுது - அதுதான் காதல் என்று உணருகிறாள்.

    மாமன் மகன் குமாரின் காதலை உணராதவளாகி மறுத்துவிட்டு கிராமத்திற்குப் போகிறாள்.

    பாபு ஆற்றுடன் போய்விட்ட செய்தி கிடைத்து துடிக்கிறாள்.

    ஆனால் விதி

    மீண்டும் பாபுவை டாக்டராக அவள் முன் நிறுத்துகிறது. ஆனால் அடைய முடியாத நிலை.

    உதய நிலாவில் இன்னும் பல கதாபாத்திரங்கள் உலவுகிறார்கள்.

    மீண்டும் கதாநாயகி ஹனி குமாரை மணக்கப் போகிறாளா?

    - இது வாசகர்களுக்கு எழும் கேள்வி.

    இதற்கு விடையை நான் சொல்லி விட்டால் எப்படி?

    வாசகர்களே! நீங்களே படித்தால்தான் நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்? என்பது புரியும்.

    படித்துப் பாருங்களேன்!

    வாசகர்களாகிய உங்களுக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி ராஜரத்னம்

    *****

    1

    அருவி கொட்டியது. நீர்த்திரையில் தன்னை நனைத்துக் கொண்டு கூத்தாடினான் குமார். அருவி கரையின் விழுதை ஊஞ்சலாக்கி ஆடிய ஹனியைப் பார்க்கிறான். அவள் அறியாமல் பின்னால் போய் டமால் என்று தள்ள - கரையில் போட்ட மீனாகத் துள்ளி... ஐயையோ... அருவியில் விழுந்து,

    ஹனியைக் காப்பாத்துங்க... ஹனியைக் காப்பாத்துங்க!

    ஹனி குமாரைத் தட்டி எழுப்பினாள். குமார் எனக்கு என்ன வந்தது? என்னை எதுக்காகக் காப்பாத்தணும்? எழுந்திருங்க!

    மலங்க மலங்க விழித்துக் கொண்டு குமார் எழுந்து உட்கார்ந்தான். ஹனி உனக்கு ஒன்னும் இல்லையே?

    ஹனி கலகலவென்று சிரித்தாள். எனக்கு என்ன குமார்? நல்லாதானே உங்க முன்னாடி வந்து நிற்கிறேன்? கனவு கண்டீங்களா?

    ஆமாம் ஹனி என்றவன் கனவை விவரிக்கிறான்.

    கனவுதானே குமார்!

    விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் ஹனி.

    இப்ப மணி என்ன தெரியுமா? ஏழு... ப்ளீஸ் என்னை ஸ்கூட்டரில் கொஞ்சம் கல்லூரியில் விட்டுடறீங்களா?

    கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்து நின்று சோம்பல் முறித்தான் குமார். ஏன்? கார் என்னாச்சு?

    ஒரு கார் சர்வீசுக்குப் போயிருக்கு. இன்னொன்னை மாமா ஏர்போர்ட்டுக்கு எடுத்திட்டுப் போயிருக்கார். இன்னிக்கு கடைசி பரீட்சை குமார் ப்ளீஸ் கல்லூரியிலே ட்ராப் பண்ணிடுங்க.

    அதைவிட எனக்கு என்னம்மா வேலை? என்று நாடக பாணியில் கேலி செய்தவன் அடுத்து பத்து நிமிடங்களில் கிளம்ப தயாரானான்.

    இந்த ஜனக்புரி ஆனாலும் ரொம்ப தூரமாக இருக்கு குமார்.

    என்ன பண்றது ஹனி... அப்பா இங்கே பெரிசா வீட்டைக் கட்டிட்டார் நமக்கு என்னம்மா? ரெண்டு கார், மூணு ஸ்கூட்டர்னு இருக்கு. நான் எதுக்கு இருக்கேன்? உனக்கு, மாலா, லீலா, எல்லோருக்கும் வண்டியோட்டத்தானே?

    ஸ்கூட்டர் டெல்லி மிராண்டா கல்லூரியின் வாசலில் நின்றது. துள்ளி இறங்கிய ஹனி, தாங்க்யூ குமார்... என்றாள்.

    அதை நீயே வச்சுக்க. எத்தனை மணிக்கு ராணியம்மாவுக்கு வண்டியை எடுத்துட்டு வரணும்? என்று கேட்டான் குமார்.

    கார் வந்ததும் அனுப்பறதா அத்தை சொன்னாங்க... நீங்க சிரமப்பட வேணாம்.

    விஷ்யூ ஆல் த பெஸ்ட் ஹனி என்று கையை அசைத்துவிட்டு ஸ்கூட்டரை ஒரு வட்டமடித்துக் கொண்டு கிளம்பிப் போனான்

    கையை அசைத்துவிட்டுக் கல்லூரியினுள் போனாள் ஹனிராணி. காலையில் குமார் சொன்ன கனவை அவள் மனம் அசை போட்டது ஆனால் அன்று கடைசி பரீட்சை என்ற நினைப்பு வந்ததும் தன்னை உதறிக் கொண்டாள்.

    அன்றுடன் கல்லூரியின் கடைசி பரீட்சை முடிந்து விட்டது. கலகலவென்ற பேச்சொலி மரக்கிளையில் சல்லாபிக்கும் பறவைகளின் பூங்குரலாகக் கல்லூரி மைதானத்தை நிறைத்தது.

    வெண்புறாக்களாகப் பெண்கள் தரையில் கால்கள் படாமல் துள்ளிக் குதித்தார்கள்.

    அந்த ஆண்டுடன் படிப்பை முடித்துவிட்ட மாணவிகளுக்கு இனிமேல் என்ன செய்வது என்ற கவலைகள்... மற்றவர்களுக்கோ அந்த கவலை இல்லை அவர்கள் தான் தொடர்ந்து படிப்பார்களே! ஆனால் இந்தக் கவலைகள் எதுவும் இல்லாம நடந்து வந்து கொண்டிருந்தாள் ஹனிராணி. வேலைக்குப் போக வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இல்லை. சின்ன வயசில் பாட்டியுடன் இருந்து எட்டாம் வகுப்புவரை முடித்தவள். பிறகு டெல்லிக்கு மாமா வீட்டுக்கு வந்து விட்டாள்.

    மாமா நல்ல வசதி படைத்தவர் பல பெரிய கம்பெனிகளுக்கு டைரக்டராக - பங்குதாராக இருக்கிறார். மூன்று பையன்கள், இரண்டு பெண்கள். இவர்களுடன் ஹனியும் வளர்ந்து வருகிறாள். எதற்கும் கவலை இல்லாத வாழ்க்கைதான். இருந்தாலும் ஹனிராணியின் கண்களில் எப்பொழுதும் ஒரு ஏக்கம் நிழலாடிக் கொண்டே இருக்கும்.

    பரீட்சை நன்றாக எழுதிய திருப்தி ஹனிக்கு. ஹாய்... ஹனி, எங்கேடி ஓடுறே? ஓடி வந்து தோளை பிடித்து குதித்தாள் அனீதா. வெண்பற்கள் ஒளிவீச அவளைப் பார்த்த ஹனி, பரீட்சை எப்படி எழுதின அனீத்? என்று கேட்டாள்.

    நல்லா செஞ்சிருக்கேன். ஆனா உன்னை மாதிரி ராங்க் எதிர்பார்க்க முடியாது என்றாள் அனிதா.

    எங்கே ஓடறேனு கேக்கிறியே? உன்னை விட்டு எங்கே ஓட முடியும்?

    டூப் விடாதே. கொஞ்சம் விட்டா நீ ஓடிடுவே. நீ வெண்புறா. நல்ல காலம் நான் ஓடிவந்து புடிச்சிட்டேன் பேச்சின் அசைவில் குட்டையான இரட்டை சடைகள் குலுங்கின. பைஜமா குர்த்தா அவளுக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தது.

    ஆஷா எங்கே அனீத்?

    அவ எங்கே நிக்கிறாளோ? என்ற அனிதாவின் முகம் சிவந்தது நீ ஏன் அவளை தேடுற? ஹனி? உன் செல்வாக்கு என்ன? அந்தஸ்து என்ன? நீ ஏன் அந்த அனாதையைத் தேடிண்டு அலையறே? படபடத்தாள் அனிதா.

    ஹனி சிரித்தாள். உனக்கு ஏன் இந்தப் பொறாமை அனீத்? அவள் உனக்கு என்ன கொடுமையைச் செய்தாள்? நீ ஏன் இப்படிக் கரிக்கறே?

    நீயே அவளை கட்டிண்டு அழு...

    நீ பொறாமைப்படக் காரணமே இல்லை அனீத்! அவள் யாருமே இல்லாத அனாதை. அவளைப் பார்த்தா நீ பொறாமைப்படறே? அவள் நன்றாகப் படிக்கறளா? அது அவள் திறமை. சரி வா, காண்டீனுக்குப் போகலாம்.

    காண்டீன் உள்ளே நின்ற ஆஷா இவர்கள் கண்களில் பட்டுவிட்டாள். ஓடி வந்த ஆஷா பிரியப் போகும் துன்பத்தை எண்ணி நெகிழ்ந்து நின்றாள். இவர்கள் மூவரிவ் ஆஷாதான் அனாதை. அவள் அப்பா ஒரு மார்வாடி சேட்டிடம் வேலை பார்த்து வந்தார். சென்ற வருடம் திடீர் என்று மாரடைப்பால் இறந்து விட்டார். அவரின் சிறுசேமிப்பு அவளுக்குப் போதவில்லை.

    சேட் நல்லவராதலால் கல்லூரி படிப்பு முடியும்வரை பண வசதி செய்ய முன் வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்த ஆஷா ஓய்வு நேரங்களில் ஷேட் வீட்டிற்குப் போய் கணக்கு வழக்குகளைக் கவனித்து வந்தாள். இன்றுடன் படிப்பு முடிந்து விட்டது. ஹாஸ்டலை காலி செய்ய வேண்டும்.

    எங்கே போவது? வேலை கிடைக்கும் வரையில் சேட் வீட்டில் ஒரு அறையில் தங்கி கொள்ள சேட்டிடம் உத்தரவு பெற்றுக் கொண்டிருந்தாள்.

    அந்தக் கவலை ஹனியைத் தொற்றிக் கொண்டது.

    நீ மேலே என்ன செய்யப் போறே ஆஷா? என்று கனிவுடன் பார்த்தாள்.

    வேலை தேடற வேலையைச் செய்யப் போகிறேன் என்று வேடிக்கையாகச் சிரித்த ஆஷா, எனக்கென்ன உன்னை மாதிரி வசதியான மாமா இருக்கிறாரா என்று தமாஷாக சொன்னதில் மெல்லிய வேதனை இழையோடியது.

    *****

    2

    பரிவுடன் ஆஷாவை கண்களால் தழுவி அணைத்த ஹனி, நான் என் பாட்டி ஊருக்குச் சென்னை பக்கம் போகலாம்னு இருக்கேன், ஆஷா, நீ என்கூட... வர்றியா? என்று கேட்டாள்.

    உன்கூட அவள் வந்துட்டா... அவள் வேலை தேட வேண்டாமா! நீ அவளுக்கு வேலை தேடித் தருவியா? என்று பட்டென்று கேட்டாள் அனிதா.

    அனிதா சொல்வதும் சரிதான். இப்ப நான் உன்கூட வர முடியாது ஹனி. முதலில் ஒரு வேலையைத் தேடிக்கணும். சேட்டோட கடன்களை அடைக்கணும்; அப்புறம்தான் மற்ற வேலைகள் எல்லாம். என் கடன் எனக்கு சுமையா நிக்கிறது ஹனி! என்று பிரச்சினையின் பளுவைக் கூறினாள் ஆஷா.

    நீ என்ன பண்ணப் போறே? என்று அனிதாவைக் கேட்டாள் ஹனி.

    நான் நான்... வெட்கத்துடன் தலையைத் தொங்க போட்டுக் கொண்டாள் அனிதா.

    ஏய்... ஏய்... எப்படி? எங்களுக்குச் சொல்லவே இல்லை? பெரிய திருடி நீ... பையன் யாரு? என்று ஹனி அவள் கையைப் பிடித்து அமுக்கினாள்.

    என் அத்தை பையன் தான். நீ என்னோட கல்யாணத்துக்குள்ள டெல்லி வந்துடணும் என்றாள் அனிதா.

    கண்டிப்பாக தேன் நிலவு எங்கேம்மா? காஷ்மீரா? இல்லை... பாரீசா என்று கண்களைச் சிமிட்டினாள் ஹனி.

    அது தான் சஸ்பென்ஸ் ஹனி. நாங்கள் இரண்டு பேரும் மலை ஏறும் முயற்சியிலே ஈடுபடப் போகிறோம்! என்று சர்வ சாதாரணமாகக் கூறினாள்.

    என்ன மலை ஏற போகிறீர்களா? என்று ஹனியும், ஆஷாவும் வாயைப் பிளந்தார்கள்.

    ஏன் இப்படி வாயைப் பிளக்குகிறீங்க? என்றாள் அனிதா.

    மூவரும் தனித்தனி பிரச்சினைகளுடன் பிரிந்தார்கள்.

    தங்கள் வீட்டை அடைந்த பொழுதும் சரி, மாடி ஏறும்பொழுதும் ஹனிக்கு அனிதாவைப் பற்றியே நினைவாக இருந்தது. அன்றைக்கு என்றுமில்லாத அதிசயமாக அனைவரும் டிபன் மேஜை அடியில் ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.

    ஹனி வந்துட்டாளே... என்று அரவிந்தன் மாமாவின் மூத்த மகன் சொன்னான்.

    ஹேய்... ஹனி இன்னிக்கு எப்படி எழுதியிருக்கே! விநோத்குமார் மாமாவின் இரண்டாவது மகன் கேட்டான்.

    ரொம்ப சுலபமா இருந்தது குமார். நல்லா செஞ்சிருக்கேன் என்றவள், அவனருகே இருந்த மூன்றாவது பையனான ரங்க துரையை அலட்சியமாய் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்து உடையை மாற்றிக் கொண்டாள்.

    உடை மாற்றிக் கொண்டு உணவு மேஜைக்கு அவள் வந்த பின்புதான் மாமா சுப்பிரமணியம் பேசினார்.

    என்ன ஹனிக்குட்டி, பரீட்சை முடிஞ்சு போச்சு இல்ல?

    அவுத்து விட்டாச்சு மாமா பஸ்ட்க்ளாஸ் வரும்னு நினைக்கிறேன் என்று குதூகலமாக சொன்னவள் - ரங்க துரையின் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

    ஹனி, இன்னிக்குச் சினிமாவுக்குப் போகலாமா? மாமாவின் பெண்கள் மாலாவும், லீலாவும் கேட்டார்கள்.

    நாளைக்குப் போகலாம். நான் இன்று ஆர்.கே. புரத்திலே உள்ள உத்திரசுவாமி மலைக்கு போகப்போகிறேன். முருகனுக்கு அர்ச்சனை பண்றதா வேண்டிகிட்டு இருக்கேன்.

    பெண்கள் இருவருக்கும் முகம் சுண்டிப் போயிற்று.

    சமையற்கார அம்மாள் சிற்றுண்டிகளைக் கொண்டு வந்து வைத்தாள்.

    மாலு, ஒரு பழமொழி சொல்வார்களே... எதையோ குளிப்பாட்டி நடு வீட்டிலே வச்சான்னு... என்று ரங்கதுரை ஆரம்பித்தான். மாமா சுப்பிரமணியம் தன் பிஸினஸ் விஷயமாக அரவிந்தனிடம் பேசிக் கொண்டிருந்தார். விநோத்குமார் ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்த பாப் இசைக்கு ஏற்றவாறு தன் உடம்பை குலுக்கிக் கொண்டிருந்தான். துரை குறிப்பிட்டது தன்னை தான் என்று புரிந்து கொண்டாள் ஹனி.

    யார் நாய்... அது எந்தெந்த குப்பைமேட்டை தேடிண்டுப் போறதுனு நான் சரியா சொல்லட்டுமா துரை? என்று மெல்ல முணுமுணுத்தாள் ஹனி துரையின் காதருகில்.

    துரை விழித்துப் பார்த்தான். நான் உங்கிட்ட ஒண்ணும் பேசல்ல!

    மறைவா நீ பேசினத்துக்கு நான் உனக்கும் பதில் சொல்றேன்... அவ்வளவுதான் என்றாள் ஹனி.

    சமையற்கார அம்மா தொடர்ந்து பரிமாற வரவே, சுப்பிரமணியம் அரவிந்தனின் பேச்சை முடித்துக் கொண்டார்.

    சரி, எல்லோருக்கும் பரீட்சை முடிஞ்சு போச்சு இல்லையா? இப்படி ஒரு இரண்டு மாசம் ஜாலியா எங்கேயாவது போயிட்டு வரலாமா? பிஸினஸ்... பிஸினஸ்னு லைப் எந்திரமா போயிடுச்சு என்றவர், சிற்றுண்டியைச் சாப்பிடத் தொடங்கினார்.

    ஓ...கே... ஓ...எஸ்... நாங்க ரெடி என்று குரல்கள் சலசலத்தன. உடனேயே மாலாவும் லீலாவும் எங்கே போகலாம் என்று விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

    இந்தச் சலசலப்பு அடங்கியதும், மாமா, நான் எங்கேயும் வரப்போறதில்லை என்றாள் ஹனி.

    ஏன் ஹனி? ஏன் இப்படிச் சொல்றே? இத்தனை காலமாத்தான் பரீட்சை, காலேஜ்னு இருந்தாச்சு.

    எனக்கு ஒண்ணுமில்லே மாமா... இந்த தடவை சென்னை பக்கம் போகலாம்னு இருக்கேன். பாட்டியைப் பார்த்து எத்தனை வருடம் ஆச்சு?

    மாமாவால் தடை சொல்ல முடியவில்லை. அவள் ஆசைப்படுவதில் ஒன்னும் தப்பு இல்லை. பசலைப் பருவம் மாறாத வெள்ளை உள்ளம் கொண்ட சிறுமியாக தாவணியை இழுத்து செருகிக் கொண்டு கிராமிய மணம் வீசத் தன் கையைப் பற்றிக் கொண்டு... மிரண்டு பார்த்த, படி அந்த வீட்டில் நுழைந்த அந்த நாள்...

    அதற்குப் பிறகு அவள் பாட்டியைப் பார்க்கப் போனதே இல்லை. வாயைத் திறந்துகூட சொன்னதில்லை. எல்லாவற்றையும் மனத்தினுள் போட்டுக் கொண்டுவிட்டாள். ஆனால் இன்று வாயை விட்டுச் சொன்ன பிறகு - இது நியாயமான ஆசைதான்! தடை சொல்லக் கூடாது.

    அப்ப எல்லாருமா சவுத் போகலாமா? என்று சுப்பிரமணியம் கேட்டார்.

    வேண்டாம்... வேண்டாம்... என்று லீலாவும் மாலாவும் மறுத்தார்கள். நாங்க போன வருடம் எங்க காலேஜ் மூலமாக சுற்றுப்பயணம் போயிட்டு வந்தாச்சு! என்று காரணம் சொன்னார்கள்.

    சரி, நீ பாட்டியை போய் பார். பின்னாடி பார்த்துக்கலாம் என்றார் சுப்பிரமணியம் நிதானமாக!

    ஏன் ஹனி, நீ பாட்டியை அப்புறமா போய் பார்த்துக் கொள்ளக்கூடாதா? என்று கேட்டவன், அப்பா, இந்த வருஷம் காஷ்மீர் போகலாம் என்றான் குமார்.

    ஏன் ஹனி, அந்தக் குக்கிராமத்திலே போய் என்ன பண்ணப் போறே? என்று கேட்டாள் மாலு.

    உச்சுகுடுமி வச்சுண்டு மூணு வேளையும் தவறாமல் சந்தியாவந்தனம் பண்ற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா என்றான் ரங்கதுரை வெடுக்கென்று!

    பதினெட்டு முழப் புடவையை மடிசார் வச்சுக் கட்டிண்டு - இறுக்கப் பின்னிய பின்னலில் வைக்கோல் சுருளாகப் பூவை வச்சுண்ட பெண்ணாகப் பார்த்து வைக்கிறேன்; நீயும் வந்து கல்யாணம் பண்ணிக்கே என்றாள் ஹனி பதிலடியாக.

    இந்த தர்க்கம் இன்னிக்கு ஓயாது. நீ விஷயத்துக்கு வா ஹனி என்றான் குமார்.

    நான் தான் சொல்லிட்டேனே... நீங்க எல்லாம் காஷ்மீர் போங்க... நான் பழுவூர் போறேன் என்றாள் ஹனி முடிவாக.

    குமாரின் முகம் வெளிர்ந்து போயிற்று.

    சுத்த பட்டிக்காடு என்று முணுமுணுத்தான் துரை.

    நீ சொல்றது ரொம்ப சரி துரை. நவநாகரீக டெல்லியில் இருந்துண்டு இவ பட்டிக்காடாகவே இருக்கா பார். இவளுக்கு இருக்கிற அழகு எனக்கு இருந்தா நான் இந்த இந்தியாவையே விலைக்கு வாங்குவேன் என்றாள் லீலா.

    ஆட்டுக்கு வால் அளந்து தான் வச்சிருக்கு என்றான் குமார் குத்தலாக லீலாவைப் பார்த்து.

    *****

    3

    கோயிலுக்குப் போவதாகக் கிளம்பினாள் ஹனி!

    பஸ்சிலேயா போகப் போகிறே? என்று கேட்டார் சுப்பிரமணியம்.

    சர்வீசுக்குப் போய் வந்த காரை அத்தை கரோல் பார்க்கிற்கு எடுத்துப் போயிருந்தாள். மாமா பிசினஸ் விஷயமாக சாணக்யபுரி போகப் போகிறார். அதனால் தான் இப்படிக் கேட்டார்.

    இல்லை... அத்தானோட ஸ்கூட்டரிலேதான் போகப் போகிறேன்.

    நான் வரணுமா? என்று கேட்டான் குமார்.

    இல்லை... உங்க ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு நான் போறேன்னு சொல்றேன்.

    கூர்மையாகப் பார்த்த குமார், காலையிலே அப்படிப் பண்ணி இருக்கிறது தானே? ஏன் என் தூக்கத்தைக் கெடுத்தே? என்றான்.

    காலையிலே பரீட்சைக்குப் போகணும். அதனால் தான் எழுப்பினேன். சாவியைக் கொடுங்க என்ற ஹனி சாவியைப் பெற்றுக்கொண்டு சிட்டாகப் பறந்தாள்.

    படிப்பு என்ற சுமை இறங்கிய சுதந்திரத்தில் நகரமே புதிய கோணத்தில் காட்சியளித்தது. சென்ட்ரல் ஸ்கூல் மாணவர்களின் பள்ளிக்கூடம் விட்ட கூட்டத்தைப் பார்த்து மனம் ஏனோ பரபரத்தது.

    இரவு அவள் வீடு திரும்பி பொழுது, வீடு அமைதியாக இருந்தது. விளக்கை அணைத்துவிட்டு அனைவரும் படுக்கப் போய் விட்டிருந்தார்கள். மனத்தின் தாளா ஓட்ட எண்ணங்களின் எண்ணிக்கை பசியைத் தணித்து விட்டது மனம் துணையைத் தேடும் நைட்டிங்கேலாக மாறி கூவிக் கொண்டிருந்தது.

    கிராமத்துக்குப் போகப் போகிறோம் என்பதை நினைத்தாலே ஏன் இப்படி ஒரு தடுமாற்றம் ஏற்பட வேண்டும்? கண்களில் ஏன் இந்தக் கனவு மயக்கம்? சமையற்கார அம்மாள் தான் கதவைத் திறந்தாள். அவளுக்காகப் படுக்கப் போகாமல் காத்துக் கொண்டிருந்தாள்.

    பசிக்கல்லே... பால் மட்டும் போதும்.

    சமையற்கார அம்மாள் செல்லம்மா கொடுத்த பாலை வாங்கிக் குடித்தாள். கிராமத்துக்குப் போகப் போறியாமே ஹனி?

    உம் முனகினாள்.

    நீ காஷ்மீர் வரல்லேனு குமார் ரொம்ப குறைபட்டு கொண்டான்.

    என்ன பண்றது? பாட்டி ரொம்ப தள்ளாமையா இருக்குனு எழுதி இருக்கா. பார்த்து எத்தனை வருஷமாச்சு? எனக்கு என்னவோ போகணும்னு தோன்றது.

    எந்தக் காரணத்தினாலாவது தன் பிரயாணம் நின்று போய் விடக் கூடாதே என்ற பயம் கலக்கமாக எழுந்து அவளை வதைத்தது. காற்றில் தனித்தாடும் ஒற்றைக் கிளையாக மனக் குரல் ஒன்று 'நீ பாட்டியைப் பார்க்க மட்டுமா போறே' என்று கூவியது.

    தன் அறைக்கு போனாள் ஹனி. சமீபகாலத்தில் தான் அவர்கள் டெல்லியில் புறநகர்ப் பகுதியான ஜனகபுரிக்கு குடி புகுந்தார்கள். அந்தக் காலத்தில் காலூன்றிய காலத்திலேயே கரோல்பார்க்கில் ஒரு சிறிய வீட்டை வாங்கி இருந்தார். வியாபாரமும் வசதியும் பெருக பெருக இட நெருக்கடி ஏற்பட்டது. அதனால் ஜனக்புரியில் மிகவும் பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1